What is Multiple Cord Sclerosis? தண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என்றால் என்ன?
Spinal cord disease is a long-term disease that affects the brain, spinal cord and nerves of the eyes. Because the disease is caused by the body’s immune system attacking its own tissues, it is an autoimmune disease. In this condition, the body damages its nerve sheath – a fatty substance that surrounds nerve fibers in the brain and spinal cord. This damage leads to altered or interrupted message transmission within the nervous system.
What are the main effects and symptoms of the disease?
The symptoms are categorized as primary, secondary and tertiary as below:
Main symptoms:
Common symptoms:
Numbness and tingling.
itching
Irritable feeling.
Difficulty walking (caused by fatigue, weakness, disorientation, loss of control, or tremors).
Vision problems.
Constipation and bladder dysfunction.
Dizziness.
Sexual problems.
Rare symptoms:
Difficulty swallowing.
Speech disorders.
Difficulty breathing.
Deafness of hearing.
Seizures.
headache
Secondary Symptoms:
Urinary tract infections.
Inactivity of the body.
Loss of movements.
Third Symptoms:
Social anxiety.
Professional issues.
Learning disabilities.
Depression.
What are its main causes?
The cause of sciatica is still unknown. However, environmental and genetic factors may be a cause of this disease.
Risk factors that contribute to spinal cord injury include:
People between the ages of 15 and 60 are usually affected by this disease.
Spinal cord disease is more common in women than men.
Family history of spinal cord disease.
Viruses such as the Epstein-Barr virus have been associated with meningitis.
People with thyroid disease, diabetes or inflammatory bowel disease are more likely to suffer from this disease.
Low vitamin D levels in the blood.
People who live far from the equator.
obesity
smoking
How is it diagnosed and treated?
Because the symptoms of sciatica can resemble many other neurological disorders, it can be difficult to diagnose.
Your doctor will ask about your medical history and signs of nerve damage in your brain, spinal cord, and optic nerves.
The following can help diagnose spinal cord paralysis:
Blood tests to detect diseases that have similar symptoms.
Tests of balance, coordination, vision, and other functions to determine nerve function.
A magnetic resonance imaging (MRI) test to see the structure of the body.
Cerebrospinal fluid testing to detect any abnormalities in proteins.
Tests that measure electrical activity in your brain.
There is no specific treatment for sciatica, but several treatments can help improve physical function. They are as follows:
Medicines are prescribed to slow down the course of diseases, prevent or treat the effects and ease the symptoms. Steroids can help reduce the severity of attacks of spinal meningitis. Muscle relaxants and sleeping pills can ease muscle cramps.
Physiotherapy can help maintain balance and strength and help with fatigue and pain.
A cane, walker, or crutch can help you walk more easily.
Exercise and yoga can help reduce fatigue or stress.
தண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என்றால் என்ன?
தண்டுவட மரப்பு நோய் என்பது மூளை, முதுகுத் தண்டு மற்றும் கண்களின் நரம்புகள் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு நீண்ட கால நோயாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த திசுக்களை தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இது ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும்.
இந்த நிலையில், உடல் தனது நரம்பு காப்புறை – மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பு தசைநார்களை சுற்றி உள்ள ஒரு கொழுப்பு பொருளில் சேதம் ஏற்படுத்துகிறது. இந்த சேதம், நரம்பு மண்டலத்திற்குள் மாற்றியமைக்கப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட செய்தி பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அறிகுறிகள் கீழே உள்ளவாறு, முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:
முதன்மை அறிகுறிகள்:
பொதுவான அறிகுறிகள்:
உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு.
அரிப்பு.
எரிச்சல் உணர்வு.
நடப்பதில் சிரமம் (சோர்வு, பலவீனம், சுவையற்ற தன்மை, கட்டுப்பாடு இழப்பு அல்லது நடுக்கம் காரணமாக ஏற்படுகிறது).
பார்வை பிரச்சினைகள்.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீர்ப்பை செயலிழப்பு.
தலைச்சுற்றல்.
பாலியல் பிரச்சினைகள்.
அரிதான அறிகுறிகள்:
விழுங்குவதில் சிரமம்.
பேச்சு தொந்தரவுகள்.
மூச்சு விடுவதில் சிரமம்.
காது கேளாமை.
வலிப்புத்தாக்கங்கள்.
தலைவலி.
இரண்டாம் நிலை அறிகுறிகள்:
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்.
உடலின் செயலற்ற தன்மை.
இயக்கங்களின் இழப்பு.
மூன்றாம் அறிகுறிகள்:
சமூக பதட்டம்.
தொழில்சார் சிக்கல்கள்.
கற்றல் குறைபாடுகள்.
மனச்சோர்வு.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
தண்டுவட மரப்பு நோயின் காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் இந்த நோய்க்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
தண்டுவட மரப்பு நோய்க்கு பங்களிக்கும் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
15 மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ளவர்கள் பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்களை விட பெண்களில் தண்டுவட மரப்பு நோய் அதிகமாக காணப்படுகிறது.
தண்டுவட மரப்பு நோயின் குடும்ப வரலாறு.
எப்ஸ்டீன்-பார் வைரஸ் போன்ற வைரஸ்கள் தண்டுவட மரப்பு நோயுடன் தொடர்புடையது.
தைராய்டு நோய், நீரிழிவு அல்லது குடல் அழற்சி நோய் உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படைவதாக காணப்படுகிறது.
இரத்தத்தில் குறைந்த வைட்டமின் டி அளவுகள்.
பூமத்திய ரேகையில் இருந்து தூரமாக வாழ்கின்றவர்கள்.
உடல்பருமன்.
புகை பிடித்தல்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
தண்டுவட மரப்பு நோயின் அறிகுறிகள் பல நரம்பு சீர்குலைவுகளை ஒத்திருக்கும் என்பதால், இந்த நோயை கண்டறிவது கடினம்.
உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் மூளை, தண்டுவட எலும்பு மற்றும் பார்வை நரம்புகளில் உள்ள நரம்பு சேதங்களின் அறிகுறிகள் ஆகியவற்றை உங்கள் மருத்துவர் கேட்பார்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட மரப்பு நோயை கண்டறிய உதவும்:
இதே போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நோய்களை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
நரம்பு செயல்பாட்டைக் கண்டறிய சமநிலை, ஒருங்கிணைப்பு, பார்வை, மற்றும் பிற செயல்பாடுகளில் சோதனை.
உடலின் கட்டமைப்பைக் காண காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) சோதனை.
புரதங்களில் எந்த அசாதாரணங்களைக் கண்டறிய செரிபஸ்ரோஸ்பைனல் திரவம் சோதனை.
உங்கள் மூளையில் மின் நடவடிக்கையை அளவிடும் சோதனைகள்.
தண்டுவட மரப்பு நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் உடல் செயல்பாடுகளை மேம்படுத்த பல சிகிச்சைகள் உதவும். அவை பின்வருமாறு:
நோய்களின் பாதையை மெதுவாக்க, தடுக்க அல்லது தாக்கங்களை சிகிச்சை அளிக்கவும் அறிகுறிகளை எளிதாக்கவும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தண்டுவட மரப்பு நோயின் தாக்குதல்களை சிறிதாக்க மற்றும் தீவிரத்தை குறைக்க ஸ்டீராய்டுகள் உதவும். தசை தளர்த்திகள் மற்றும் தூக்க மருந்துகள் தசைப்பிடிப்புகளை எளிமையாக்கலாம்.
சமநிலை மற்றும் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் சோர்வு மற்றும் வலியை சமாளிக்கவும் முடநீக்கியல் சிகிச்சை (பிசியோதெரபி) உதவும்.
ஒரு பிரம்பு, வாக்கர் அல்லது பிடிப்புகோள் நீங்கள் எளிதாக நடக்க உதவும்.
சோர்வு அல்லது மன அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்க உடற்பயிற்சி மற்றும் யோகா உதவும்.
Read More: