What is Mumps disease? பொன்னுக்கு வீங்கி என்றால் என்ன?
Mumps disease is a contagious viral infection commonly seen in children. It is a condition that affects the salivary glands under the ears on both sides of the face. This causes painful swelling.
What are the main effects and symptoms of the disease?
Symptoms appear 14 to 25 days after infection with mumps virus. Some of the symptoms are mentioned below:
Swollen, soft jaw.
headache
Muscle pain.
joint pain
Swelling in jaw area.
Dry mouth.
loss of appetite
fever
Weakness.
Pain in the scrotum.
confusion.
Irritability.
What are the main causes of infection?
A virus belonging to the Paramyxovirus family causes golden bloat. The virus enters the body through airborne droplets that enter through the nose or mouth. Thus, the disease spreads through the air. People infected with this disease can prevent the spread of the disease by covering their nose and mouth when they sneeze and cough.
How is it diagnosed and treated?
Diagnosis:
Ponn has a remarkable history of vaccinations against distemper.
Physical examination, especially examination of the throat and ears.
A blood test to detect the virus and anti-virus antibodies.
Testing of oral/oral swab sample for virus.
Urine test.
Treatment methods:
Antibiotics are ineffective because the disease is caused by a virus. Treatment focuses on getting relief from symptoms until the body’s immune system is able to fight off the virus. Steps to ease discomfort include:
Isolation from others to prevent the spread of infection.
Paracetamol for fever.
Ibuprofen for swelling.
Hot or cold compresses for swelling.
Avoiding chewable foods; Soft foods are recommended.
Consuming more fluids.
Prevention methods:
Measles, Mumps, Rubella (MMR) vaccine is recommended. According to the CDC recommendation, all children should receive two doses of the MMR vaccine: once at 15 months of age and once at 4-6 years of age. This medicine is given after 28 days of birth because antibodies (antibodies) passed from the mother to the baby protect the baby from certain diseases.
பொன்னுக்கு வீங்கி என்றால் என்ன?
பொன்னுக்கு வீங்கி என்பது குழந்தைகளில் பொதுவாக காணப்படும் ஒரு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். இது முகத்தின் இரு பக்கங்களிலும் உள்ள காதுகளுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் ஒரு நிலை. இதனால் வலிமிகுந்த வீக்கம் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொன்னுக்கு வீங்கி வைரஸ் (மம்ப்ஸ் வைரஸ்) காரணமாக தொற்று ஏற்பட்ட 14 முதல் 25 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதில் ஒரு சில அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
வீங்கிய, மென்மையான தாடை.
தலைவலி.
தசை வலி.
மூட்டு வலி.
தாடைப் பகுதியில் வீக்கம்.
வாய் உலர்தல்.
பசியின்மை.
காய்ச்சல்.
பலவீனம்.
விந்தணுப்பையில் வலி.
குழப்பம்.
எரிச்சலூட்டும் தன்மை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பாராமிக்ஸோவைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் காரணமாக பொன்னுக்கு வீங்கி நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் மூக்கு அல்லது வாய் மூலமாக உள்ளே நுழையும் காற்று துளிகள் வழியாக உடலுக்குள் நுழைகிறது. இவ்வாறு, காற்று வழியாக இந்த நோய் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களுக்கு தும்மல் மற்றும் இருமல் ஏற்படுகையில் அவர்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்வதனால் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவுவதை தடுக்கலாம்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
நோய்கண்டறிதல்:
பொன்னுக்கு வீங்கி நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் போட்ட வரலாறு குறிப்பிடத்தக்கது.
உடல் பரிசோதனை, குறிப்பாக தொண்டை மற்றும் காதுகளின் பரிசோதனை.
வைரஸ் மற்றும் வைரஸை எதிர்க்கும் எதிர்ப்புரதத்தை கண்டறிய ரத்தப் பரிசோதனை.
வைரஸை கண்டறிய வாய்/வாய்க்குழி பஞ்சுருட்டு மாதிரியை சோதித்தல்.
சிறுநீர்ப் பரிசோதனை.
சிகிச்சை முறைகள்:
இந்த நோய் வைரஸ் காரணமாக ஏற்படுவதால் ஆன்டிபயாடிக்ஸ் பயனற்றதாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வரை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதில் சிகிச்சை கவனம் செலுத்துகிறது. அசௌகரியத்தை எளிதாக்குவதற்காக நடவடிக்கைகள் பின்வருமாறு:
தொற்று பரவுவதை தடுக்க மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல்.
காய்ச்சலுக்கு பாராசிட்டமல்.
வீக்கத்திற்கு இப்யூபுரூஃபன்.
வீக்கத்திற்கு சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம்.
மெல்ல வேண்டிய உணவுகளை தவிர்த்தல்; மென்மையான உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.
அதிகமாக திரவங்களை உட்கொள்ளுதல்.
தடுப்பு முறைகள்:
மீசில்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா (எம்.எம்.ஆர்) தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. சி.டி.சி பரிந்துரையின் படி, அனைத்து குழந்தைகளும் இரண்டு தடவை எம்.எம்.ஆர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்: குழந்தையின் 15 மாதங்களில் ஒரு முறை மற்றும் 4-6 வயதில் ஒரு முறை. குழந்தை பிறந்து 28 நாட்களுக்கு பிறகு இந்த மருந்து கொடுக்கப்படுகிறது ஏனென்றால், தாயிடமிருந்து குழந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள ஆன்டிபாடிகள் (எதிர்ப்புரதங்கள்) சில நோய்களில் இருந்து குழந்தைகக்கு பாதுகாப்பு அளிக்கிறது.