To Read this Post , Use Translator for Your language

How to know symptoms of Myocarditis? - healthtamil.com
Myocarditis
Myocarditis
Listen to this article

What is Myocarditis infarction? இதயத்தசையழல் என்றால் என்ன?

Myocarditis is an inflammation of the heart muscle known as the myocardium. Unlike other heart diseases, lifestyle does not play a role in causing this condition. There is still no way to prevent it. Many times, people with this disease recover without further problems. Rarely, it can cause damage to the heart. However, this only occurs in people with severe inflammation.

What are the main effects and symptoms of the disease?

The following symptoms may appear within a week or two of infection:

Difficulty breathing in general due to physical exercise or strenuous activities.

Tightness and stabbing pain in the chest that spreads throughout the body.

Difficulty breathing while resting.

Irregular heart beat. (Also read: Causes of Heart Palpitations).

Swelling in legs.

Flu-like symptoms, eg: tiredness, fatigue and high body temperature.

Sudden loss of consciousness.

What are the main causes of infection?

Although the causes are unknown in most cases, some of the known factors that cause this disease include:

Common causes: Viruses. Eg: A virus that causes respiratory tract infections.

Less common causes: Infectious diseases such as Lyme disease.

Rare causes: Cocaine use, exposure to toxic substances such as snake bite, spider bite, metal poisoning.

How is it diagnosed and treated?

In most cases, it goes undiagnosed as there are no symptoms. If symptoms are present, the following tests can be done:

Electrocardiogram (recording of heart rhythm): done to study the electrical current of the heart.

Echocardiogram: An echocardiogram is taken to monitor blood flow.

Chest X-rays (X-ray) test: The structure of the heart and lungs are examined to detect structural changes.

Cardiac Magnetic Resonance Imaging (MRI): Examining the heart map.

Cardiac biopsy – occasionally done to confirm the diagnosis.

The following treatments are recommended:

Medicines to treat heart failure.

Low salt foods.

rest

Steroids that reduce inflammation.

Counseling helps provide psychosocial support for people with cardiomyopathy.

Myocarditis

இதயத்தசையழல் என்றால் என்ன?

மயோகார்டியம் எனப்படும் இதயத்தசையில் ஏற்படும் அழற்சியே இதயத்தசையழல் ஆகும்.பிற இதய நோய்களைப் போல் அல்லாமல் வாழ்க்கை முறை இந்த நிலை ஏற்படுவதற்கு எந்த பங்கும் வகிப்பதில்லை. இதைத் தடுக்கும் முறையும் இதுவரை எதுவும் இல்லை.பல தருணங்களில், இந்நோய் உள்ளவர்கள் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் குணமடைகின்றனர்.அரிதாக, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். ஆனால், இது தீவிர வீக்கம் உடையவர்களுக்கு தான் ஏற்படும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நோய்த்தொற்று ஏற்பட்டு ஓரிரு வாரங்களில் பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:

உடற் பயிற்சி அல்லது உடல் உழைப்பு மிகுந்த செயல்களில் ஈடுபடும் பொது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.

நெஞ்சில் இறுக்கம் மற்றும் குத்துவது போன்ற வலி ஏற்பட்டு உடல் முழுவதும் பரவுதல்.

ஓய்வு எடுக்கும் பொழுது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.

சீரில்லாத இதயத்துடிப்பு.(மேலும் வாசிக்க: இதயத் துடிப்பு மிகைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்).

கால்களில் வீக்கம்.

சளிக்காய்ச்சல்-போன்ற அறிகுறிகள், எ.கா: சோர்வு, அயர்ச்சி மற்றும் அதிக உடல் வெப்பம்.

திடீரென உணர்வு நிலை இழத்தல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெரும்பாலான சமயங்களில் இதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், இந்நோய் ஏற்படுத்தும் சில தெரிந்த காரணிகள் பின்வருமாறு:

பொதுவான காரணங்கள்: வைரஸ்கள். எ.கா: மூச்சுமேற்சுவடு நோய்த்தொற்றுக்கு காரணமான வைரஸ்.

பொதுவாக சற்று குறைவாக காணப்படும் காரணங்கள்: லைம் நோய் போன்ற தொற்று நோய்கள்.

அரிய காரணங்கள் : கோக்கைன் பயன்படுத்துதல், பாம்புக் கடி, சிலந்திக் கடி, உலோக விஷம் போன்ற நச்சுப் பொருள்களுக்கு வெளிப்படுதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் தென்படாததால், இது கண்டறியப்படுவதில்லை.அறிகுறிகள் தென்பட்டால் பின்வரும் பரிசோதனைகளை செய்து பார்க்கலாம்:

எலக்ட்ரோகார்டியோகிராம் (இதய மின்துடிப்புப் பதிவு) : இதயத்தின் மின்னோட்டத்தை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படுகிறது.

எக்கோகார்டியோகிராம்: இதய வரைபடம் எடுத்து இரத்த ஓட்டத்தை கண்காணிக்க மேற்கொள்ளப்படுகிறது.

மார்பு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் – ரே) சோதனை: அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கண்டறிய இதயம் மற்றும் நுரையீரலின் அமைப்பு ஆய்வு செய்யப்படுகிறது.

இதய காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ): இதய வரைபடத்தை ஆராய்தல்.

இதயத் திசுப்பரிசோதனை – எப்போதாவது கண்டறிதலை உறுதிசெய்யும் பொருட்டு செய்யப்படுகிறது.

பின்வரும் சிகிச்சைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன:

இதய செயலிழப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள்.

குறைந்த உப்புள்ள உணவுகள்.

ஓய்வு.

வீக்கத்தைக் குறைக்கும் ஸ்டீராய்டுகள்.

இதயத்தசையழல் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவது உளவியல் ரீதியான ஆதரவை அளிக்க உதவுறது.

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

How to know symptoms of Low Sperm Count?

How to know symptoms of Wheezing?