Myoclonus Convulsions
Myoclonus Convulsions
Listen to this article

What is Myoclonus Convulsions? மின்னதிர் வலிப்பு என்றால் என்ன?

Seizures are movement disorders caused by sudden, twitch-like, involuntary movements of one or more muscles in the body. It may start in one part of the body and spread to other parts. The condition affects men and women equally. Epilepsy is not a disease.

In general, 1.3 people in 100 are affected in a year in the world.

What are the main effects and symptoms of the disease?

The symptoms depend on the cause of the condition. Common symptoms in people without any neurological disease include:

Twitching movements during sleep.

Hiccups.

Difficulty sleeping.

Difficulty speaking, behaving and eating.

A wobbly gait.

Memory loss.

The frequency at which a person experiences epileptic seizures will vary depending on the cause of the seizure.

What are the main causes of infection?

Involuntary, sudden movements can have two causes:

A muscle contraction called positive Myoclonus Convulsions convulsion.

Abnormalities of muscle movement known as negative resonance convulsions.

Positive epileptic seizures are more common than negative epileptic seizures.

Myoclonus Convulsions seizures can be caused by:

Liver and kidney failure.

Epilepsy.

Head injury.

Oxygen deficiency.

Infection.

Imbalances in sodium, potassium, and calcium levels.

Taking medications such as opioids, anti-Parkinson’s, antidepressants and antihistamines.

Neurological disorders like Alzheimer’s disease, epilepsy.

Paralysis.

brain tumor

How is it diagnosed and treated?

First, your doctor will try to diagnose the cause of the seizure by doing a physical exam and taking a detailed medical history. A blood test will be done to look for abnormalities in electrolyte levels. Your doctor may recommend a magnetic resonance imaging (MRI) test, such as a normal brain scan, if there is suspicion of an abnormal structure in the brain, and an electroencephalogram (EEG) test if there are seizures. Rarely, genetic testing and skin biopsy are required for diagnosis.

It is not necessary to treat every seizure. If the underlying cause of Myoclonus Convulsions seizures is corrected, the symptoms will subside without further treatment. For example, if the seizure is caused by a drug, withdrawal of that drug or kidney cleansing if the cause is kidney disease can relieve jerking movements.

Myoclonus Convulsions

மின்னதிர் வலிப்பு என்றால் என்ன?

மின்னதிர் வலிப்பு என்பது உடலில் ஒன்று அல்லது பல தசைகளின் திடீர், இழுப்பது போன்ற, அனிச்சையானஅசைவினால் ஏற்படும் இயக்கக் கோளாறு ஆகும்.  இது உடலின் ஒரு பகுதியில் துவங்கி மற்ற பாகங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. இந்நிலை ஆண்களையும் பெண்களையும் சமமாக பாதிக்கும். மின்னதிர் வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல.

பொதுவாக, உலகில் ஒரு வருடத்தில் 100-ல் 1.3 நபர்கள் இதனால் தாக்கப்படுகின்றனர்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் அறிகுறிகள், இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்களை பொறுத்து அமையும். எந்த வித நரம்பு சம்பத்தப்பட்ட நோயும் இல்லாதவர்களுக்கு இருக்கும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

உறங்கும் போது வெட்டி இழுப்பது போன்ற அசைவுகள் ஏற்படுதல்.

விக்கல்கள்.

தூங்குவதில் சிரமம்.

பேசுதல், நடத்தல் மற்றும் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படுதல்.

தள்ளாடுகிற நடைப்பாங்கு.

நினைவக இழப்பு.

ஒருவருக்கு மின்னதிர் வலிப்பு வரும் இடைவெளியும், தாக்கமும் எதனால் வருகிறது என்ற காரணங்களுக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் வேறுபடும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

அனிச்சையான, திடீர் அசைவுகள் இரண்டு காரணங்களால் வரலாம்:

நேர்மறை மின்னதிர் வலிப்பு எனப்படும் தசை சுருக்கம்.

எதிர்மறை மின்னதிர்வு வலிப்பு எனப்படு தசை இயக்கத்தடை.

எதிர்மறை மின்னதிர்வு வலிப்பை விட நேர்மறை மின்னதிர் வலிப்பு பொதுவாக அதிகம் காணப்படுகிறது.

பின்வரும் காரணங்களால் மின்னதிர் வலிப்பு வரலாம்:

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு.

கால்-கை வலிப்பு.

தலையில் ஏற்படும் காயம்.

ஆக்சிஜன் குறைபாடு.

நோய்த்தொற்று.

சோடியம், பொட்டாசியம், மற்றும் கால்சியம் அளவுகளில் காணப்படும் சமநிலையின்மை.

ஒபியோய்ட்ஸ், ஆன்டி பார்கின்சன், ஆன்டிடிப்ரஸண்ட்ஸ் மற்றும் ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகளை உட்கொள்தல்.

ஆல்சைமர் நோய், நடுக்குவாதம் போன்ற நரம்பு கோளாறுகள்.

பக்கவாதம்.

மூளை கட்டி.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

முதலில் உங்கள் மருத்துவர், உடல் பரிசோதனை மற்றும் விரிவான மருத்துவ பின்புலத்தை அறிவதன் மூலம் மின்னதிர்வு வலிப்பின் காரணத்தை கண்டறிய முற்படுவர். அதற்கு மின்பகுளிகளின் அளவுகளில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய இரத்தப்பரிசோதனை செய்யப்படும். உங்கள் மருத்துவர் மூளையில் அசாதாரண அமைப்பு பற்றி சந்தேகம் இருந்தால் இயல்நிலை வரைவு போன்ற காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) சோதனை மற்றும் வலிப்பு தாக்கங்கள் இருக்கும் பட்சத்தில் மூளைமின்னலை வரவு (ஈ.ஈ.ஜி) சோதனையை பரிந்துரைப்பார். அரிதாக, மரபணு சோதனை மற்றும் தோல் திசுப்பரிசோதனையை நோய் கண்டறிதலுக்கு தேவைப்படுகிறது.

ஒவ்வொரு முறை மின்னதிர் வலிப்பு வரும்பொழுதும் அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் இல்லை. மின்னதிர் வலிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை சரி செய்தால், இதன் அறிகுறிகள் வேறு சிகிச்சைக்கு இடமின்றி குறையும். உதாரணமாக, மின்னதிர் வலிப்பு ஏற்படுவதற்கான காரணம் ஏதேனும் ஒரு மருந்து என்றால், அந்த மருந்தை நிறுத்துதல் மூலம் அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக இருந்தால் சிறுநீரக சுத்திகரிப்பு மூலமாக வெட்டி இழுத்தல் போன்ற அசைவுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty