What is Narcolepsy Sleep -Tuile Anesthesia? துயில் மயக்க நோய் என்றால் என்ன?
A disorder that affects your brain’s ability to control your sleep-wake cycle is called sleep apnea. In this case, a person may feel rested upon waking up, but may remain sleepy throughout the day. The disorder is known to affect one in 2,000 people and affects both men and women equally. It can interfere with daily activities, and a person may fall asleep during activities such as eating, talking, and driving while falling asleep.
What are its main signs and symptoms?
Dementia is a lifelong condition that does not improve with age but symptoms may improve over time for:
Excessive daytime sleepiness.
Sudden loss of muscle control (cataplexy).
Hallucinations.
A temporary loss of the ability to walk or speak (sleep paralysis).
The least common symptoms are:
Taking a short nap between any activity.
Incomplete sleep.
mental stress.
Insomnia.
Restless sleep.
Headaches.
Memory problems (Read more: Causes of memory loss)
What are its main causes?
Although the exact cause of Tuile Anesthesia is unknown, several factors are thought to be responsible for the condition. Almost all people with cataplexy have low levels of a chemical called hypocreatin, which induces wakefulness. People with epilepsy who do not have cataplexy have normal levels of hypocreatin.
Apart from low levels of hypocreatinine, other factors that can cause hypoglycemia include:
brain injury
A family history of epilepsy.
Autoimmune disorders.
What is its diagnosis and treatment?
After a physical examination and taking a person’s medical history, a doctor may recommend two specific diagnostic measures to diagnose and confirm the condition:
Polysomnogram: This provides an overview of breathing, eye movements, and brain and muscle activity throughout the night.
Multiple Sleep Latency Test: This test is used to determine how many times a person falls asleep during the day while doing certain activities.
Although there is no cure for epilepsy, lifestyle changes and medications can help control symptoms and manage the condition. Commonly prescribed drugs by doctors are antidepressants, stimulants like amphetamine, etc. and some other drugs.
The following lifestyle changes can help fight dementia:
Regular exercise.
Little grief sleeps at short intervals.
Avoiding alcohol and caffeine before going to bed.
Avoiding smoking.
Relaxing yourself before going to bed.
Avoid eating too much before going to bed.
துயில் மயக்க நோய் என்றால் என்ன?
தூக்கம்-விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் உங்கள் மூளை திறனில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கோளாறே துயில் மயக்க நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஒருவர் தூங்கி எழுந்தவுடன் ஓய்வெடுத்துவிட்டதாக உணரலாம், ஆனால் அதன் பின்னர் அவர் நாள் முழுவதும் தூக்கம் வருவது போன்ற உணர்விலேயே இருக்கக்கூடும்.
இந்த கோளாறு 2,000 நபர்களில் ஒருவரை பாதிப்பதோடு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சமமான பாதிப்பினை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இது தினசரி வேலைகளில் இடையூறு ஏற்படுத்தக்கூடியது, அத்துடன் ஒருவர் ஏதேனும் செயல்பாடுகள் செய்துகொண்டிருக்கும் போது தூங்கிவிடக்கூடும் அதாவது உணவருந்தும் போது, பேசும்போது, வண்டி ஓட்டும் போது போன்ற செயல்களை செய்துகொண்டிருக்கும் போதே தூக்கத்தில் வீழ்வது இந்நிலையை குறிக்கின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
துயில் மயக்க நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய நிலை, இது வயதின் காரணமாக முன்னேற்றமடையாது ஆனால் காலப்போக்கில் இதற்கான அறிகுறிகளை மேம்படுத்தக்கூடியது:
பகல் நேரத்தில் ஏற்படும் அதிகமான தூக்க உணர்வு.
திடீரென தசை கட்டுப்பாட்டில் ஏற்படும் இழப்பு (கேடபக்ஸி).
ஹலூஸினேஷன்ஸ்.
இயங்கும் திறனிலோ அல்லது பேசும் திறனிலோ ஏற்படக்கூடிய தற்காலிக இழப்பு (ஸ்லீப் பராலிசிஸ்).
மிக குறைவாகவும் பொதுவாகவும் காணப்படக்கூடிய அறிகுறிகள்:
எந்தவொரு செயல்பாட்டின் இடையேயும் சிறிது நேரம் தூங்குதல்.
முழுமையற்ற தூக்கம்.
மன அழுத்தம்.
இன்சோம்னியா.
அமைதியற்ற தூக்கம்.
தலைவலிகள்.
நினைவக பிரச்சினைகள் (மேலும் வாசிக்க: நினைவக இழப்பிற்கான காரணங்கள்).
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
துயில் மயக்க நோயிக்கான சரியான காரணம் அறியப்படாமல் இருப்பினும், பல காரணிகள் இந்நிலை ஏற்படுவதற்கு பொறுப்புடையதாக கருதப்படுகிறது. கேடபக்ஸியுடன் துயில் மயக்க நோயினைக் கொண்டிருக்கும் நபர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே விழிப்புத்தன்மையை தூண்டக்கூடிய ஹைபோகிரேட்டின் என்றழைக்கப்படும் இரசாயனம் குறைந்த அளவில் இருக்கின்றது.
துயில் மயக்க நோயுடன் கேடபக்ஸி இல்லாதவர்கள் ஹைபோகிரேட்டினின் இயல்பான அளவுகளைக் கொண்டுள்ளனர்.ஹைபோகிரேட்டினின் குறைந்த அளவுகளைத் தவிர, துயில் மயக்க நோயினை ஏற்படுத்தக்கூடிய பிற காரணிகள் பின்வருமாறு:
மூளை காயம்.
துயில் மயக்க நோயிக்கான குடும்ப வரலாறு.
ஆட்டோ இம்யூன் கோளாறுகள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவ சோதனை மற்றும் ஒருவரின் மருத்துவ வரலாற்றை எடுத்துக்கொண்ட பிறகு, இந்நிலையை கண்டறிந்து உறுதிப்படுத்த மருத்துவர் இரண்டு குறிப்பிட்ட நோயறிதல் நடவடிக்கைகளை பரிந்துரைக்கலாம்:
பாலிசோம்னோக்ராம்: இது சுவாசித்தல், கண் இயக்கங்கள் மற்றும் மூளை மற்றும் தசைகளின் செயல்பாடுகளை ஒரு இரவில் கண்காணித்து அதனைப்பற்றிய கருத்தினை காட்டுகின்றது.
பல ஸ்லீப் லேடென்சி டெஸ்ட்: இந்த சோதனை ஒருவர் சில செயல்களை செய்துக்கொண்டிருக்கையிலும் மற்றும் ஒரு நாளின் இடையே எத்தனை முறை தூங்குகிறார் என்றும் தீர்மானிக்க பயன்படுகிறது.
துயில் மயக்க நோய்க்கு எந்த சிகிச்சை இல்லை என்றாலும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் இதற்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், இந்நிலையை நிர்வகிக்கவும் உதவுகின்றன. மருத்துவர்கள் பொதுவாக பரிந்துரைக்கும் மருந்துகள் ஆன்டிடிப்ரஸென்ட்கள், ஆம்பெட்டமைன் போன்ற ஊக்கிகள், முதலியன மற்றும் மேலும் சில மருந்துகள் ஆகும்.
பின்வரும் வாழ்க்கை முறை மாற்றங்கள் துயில் மயக்க நோய் எதிர்த்து போராட உதவக்கூடியவை:
வழக்கமான உடற்பயிற்சி.
சிறிது நேர இடைவெளியில் குட்டி துக்கம் தூங்குதல்.
படுக்கைக்கு செல்லும் முன் மது மற்றும் காஃபினை தவிர்த்தல்.
புகைப்பிடிப்பதை தவிர்த்தல்.
படுக்கைக்கு செல்லும் முன் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்தல்.
படுக்கைக்கு செல்லும் முன் அதிகமான உணவருந்துதலை தவிர்த்தல்.