Nephrotic Syndrome
Nephrotic Syndrome
Listen to this article

What is nephrotic syndrome? நெஃப்ரோடிக் நோய்க்குறி

If your kidney doesn’t function properly it is called Renal Dysfunction Syndrome/Nephrotic Syndrome. It is characterized by the presence of a white protein called albumin in the urine. This type of protein is responsible for adding excess body water to the blood. This loss of protein causes water retention in the body and swelling of the body called oedema. Nephrotic syndrome is seen in both children and adults.

What are the main effects and symptoms of the disease?

The main symptoms of nephrotic syndrome include:

Too much protein in the urine (proteinuria).

Low protein levels in the blood (hypoalbuminemia).

High cholesterol levels in the blood (read more: Hypercholesterolemia Treatment).

Swelling (oedema) in the legs, knees and feet.

Rarely, swelling of the hands and face.

Fatigue.

Body weight gain.

loss of appetite

What are the main causes of infection?

Nephrotic syndrome is caused by the kidneys not being able to filter properly. There are two types of reasons for this namely primary and secondary.

Primary Causes: Nephrotic syndrome is caused by a disease directly affecting the kidney. For example: focal segmental glomerulosclerosis and minimal change disease.

Secondary causes: Nephrotic syndrome is caused by diseases affecting the whole body including the kidneys. For example: diabetes, HIV infection and cancer.

What are the main causes of infection?

Doctors will perform a physical exam to detect the presence of hydrocephalus. Recommended tests to diagnose nephrotic syndrome include:

Detection of protein in urine by dipstick test.

Determination of protein and lipid levels by blood test.

Kidney tissue examination (biopsy).

Acoustic test of hearing.

CT of kidney Scan.

Although nephrotic syndrome cannot be cured, managing its symptoms can prevent further kidney damage. If the kidney is not fully functioning, only kidney transplant or kidney dialysis can help to cure it. Your doctor may prescribe medication for the following:

Lowering blood pressure and controlling cholesterol.

Prevents the reduction of water swelling in the body by removing excess water.

Preventing blood clots that can lead to heart attack or stroke.

Nephrotic syndrome can be managed by proper management of diet in terms of salt reduction and cholesterol control.

Nephrotic Syndrome

நெஃப்ரோடிக் நோய்க்குறி (சிறுநீரகச் சிதைவு நோய்க்குறி) என்றால் என்ன?

உங்கள் சிறுநீரகம் அதன் இயக்கத்தை சரிவர செய்யாவிட்டால் அது சிறுநீரகச் சிதைவு நோய்க்குறி/நெஃப்ரோடிக் நோய்க்குறி என்று கூறப்படுகிறது. இது ஆல்புமின் எனப்படும் வெண்புரதம் சிறுநீரில் வெளிப்படுவதால் குறிப்பிடப்படுகிறது. இவ்வகைப் புரதம் உடலின் அதிகப்படியான நீரை இரத்தத்தில் சேர்க்கும் பொறுப்புடையது. இப்புரத இழப்பால் உடலில் நீர்சேர்ப்பு ஏற்பட்டு ஓடெமா எனப்படும் உடலில் நீர் வீக்கம் ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரிலும் நெஃப்ரோடிக் நோய்க்குறி காணப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நெஃப்ரோடிக் நோய்க்குறியின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

சிறுநீரில் அதிக புரதம் (புரோடீனூரியா).

இரத்தத்தில் குறைந்த புரத அளவு (ஹைப்போஆல்புமீனேமியா).

இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு (மேலும் படிக்க: அதிக கொழுப்புக்காண சிகிச்சை).

கால், முழங்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் (ஓடெமா).

அரிதாக கை மற்றும் முகத்தில் வீக்கம்.

சோர்வு.

உடல் எடை அதிகரிப்பு.

பசியின்மை.

நோய்தாக்குதலுக்கான முக்கிய கரணங்கள் என்ன?

நெஃப்ரோடிக் நோய்க்குறி என்பது சிறுநீரகங்களால் சரியாக வடிகட்ட முடியாததால் ஏற்படுகிறது. இதற்கு முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை என்று இரண்டு வகையான காரணங்கள் இருக்கின்றன.

முதல்நிலைக் காரணங்கள்: சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் ஒரு நோயினால் நெஃப்ரோடிக் நோய்க்குறி ஏற்படுகிறது. உதாரணமாக: ஃப்போக்கல் செக்மென்டல் க்ளோமெருளொஸ்க்ளீரோசிஸ் மற்றும் குறைந்தபட்ச மாற்றம் நோய்.

இரண்டாம்நிலைக் காரணங்கள்: சிறுநீரகத்தையும் சேர்த்து உடல் முழுவதும் தாக்கும் நோய்களால் நெஃப்ரோடிக் நோய்க்குறி ஏற்படுகிறது. உதாரணமாக: நீரிழிவு நோய், எச்.ஐ.வி நோய்த்தொற்று மற்றும் புற்றுநோய்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

நீர் வீக்கம் இருப்பதை கண்டறிய மருத்துவர்கள் ஒரு உடல் பரிசோதனையை மேற்கொள்வர். நெஃப்ரோடிக் நோய்க்குறியைக் கண்டறிய பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகள் பின்வருமாறு:

டிப்ஸ்டிக் பரிசோதனை மூலம் சிறுநீரில் உள்ள புரதத்தை கண்டறிதல்.

இரத்தப் பரிசோதனை மூலம் புரதம் மற்றும் லிபிட் அளவுகளை கண்டறிதல்.

சிறுநீரக திசுப் பரிசோதனை (பயாப்சி).

கேளா ஒலிவரைவி சோதனை.

சிறுநீரகத்தின் சி.டி. ஸ்கேன்.

நெஃப்ரோடிக் நோய்க்குறியை குணப்படுத்த முடியாவிட்டாலும் அதன் அறிகுறிகளை சமாளிப்பதன் மூலம் சிறுநீரகம் மேலும் பாதிப்படைவதை தடுக்க முடியும். சிறுநீரகம் முழுமையாக வேலை செய்யாமல் போனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது சிறுநீரக தூய்மிப்பு ஆகியவை மட்டுமே இதனை குணப்படுத்த உதவும். உங்கள் மருத்துவர் கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்கு மருந்துகளை பரிந்துரைக்கலாம்:

இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்துதல் குறைத்தல்.

அதிகப்படியான நீரை அகற்றுவது மூலம் உடலில் நீர் வீக்கத்தை குறைத்தல் தடுத்தல்.

மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் குருதி உறைவை தடுத்தல்.

உப்பைக் குறைத்தல் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்துதல் போன்ற முறைகளில் உணவை சரியாக கையாளுதல் மூலம் நெஃப்ரோடிக் நோய்க்குறியை சமாளிக்கலாம்.