To Read this Post , Use Translator for Your language

How to know Body Benefits of Nutmeg Herbal - healthtamil.com
Nutmeg Herbal
Nutmeg Herbal
Listen to this article

Nutmeg Herbal Powder Benefits: ஜாதிக்காய் மூலிகை பொடி பயன்கள்

we are going to know the benefits of folk medicine nutmeg herbal powder in a useful way for everyone

Benefits of Nutmeg

A chemical called “macine” derived from nutmeg is used in pharmaceuticals, perfumes, face paints, toothpastes and mouthwashes.

The chemical substance “myristicin” contained in nutmeg oil is used to cure various diseases and as an aphrodisiac. A fat called “oleoresin” extracted from nutmeg is used as a remedy for rheumatism and muscle spasm and as a bactericide and roach killer.

Medicinal properties of nutmeg

The body is active

Mix nutmeg powder with a little milk and eat it 3 times a day to cure diarrhoea. Semen hardens, body cools, stomach and liver are strengthened. Digestive capacity is increased and the body becomes more active.

Relieves diarrhea

Eating nutmeg powder mixed with banana will cure the problem of diarrhea caused by indigestion.

Vomiting will stop

Break a nutmeg in half and put it in a bucket of water and mix it with one ounce of water to drink it to cure cholera, vomiting, dysentery etc.

Solving marital problems

Nutmeg increases sperm count and prevents premature ejaculation. Nutmeg is an excellent remedy for various marital problems.

Solves skin problems

Grind nutmeg with sandalwood and apply it on the face to get rid of scars caused by acne and black spots.

Treats measles blisters

Measles blisters appear on the body. Even if the measles goes away, the scars will not disappear immediately. At that time, if you take powder of nutmeg, cumin, suku before meals, the measles blisters will decrease.

Solves dental problems

Some people can’t bear a toothache. At that time, if you apply 2 drops of nutmeg oil on the toothache, the toothache will go away.

Indigestion is cured

If people suffering from indigestion take 100 grams of nutmeg, 100 grams of suku, and 300 grams of cumin powder and take 2 grams before meals, the problem of indigestion will be cured.

Gives good sleep

People suffering from insomnia can take half a spoonful of nutmeg powder and mix it with warm milk to get better sleep.

Nervousness is relieved

Eating nutmeg and brandy salt fried in ghee can cure chronic nervousness problem.

Reduces the throat flesh

A few develop a lump in the throat. Such people should take some nutmeg and take equal amount of mustard seeds, siddartha, thippili and add two parts of pepper to it and grind it into powder. 2 or 3 pinches of that powder taken in honey and eaten in 2 or 3 months

Flesh growth will heal.

Eyesight will be clear

People who have poor vision can grind nutmeg before going to sleep and apply it around their eyes and wash their face in the morning to clear their vision.

Beautify the face:

Grinding nutmeg with sandalwood and applying it on pimples and dark spots on the face will eventually disappear; Siddha medicine says that the face will glow. A paste prepared by grinding nutmeg is used in skin diseases like eczema and scabies.

Measles blisters heal.

Siddha medicine says that in case of measles, powder of nutmeg, cumin, and suku and taken before meals will relieve the blisters of measles.

It should also be considered that consuming too much nutmeg can cause constipation.

Relieves muscle spasms:

Nutmeg seeds can prevent vomiting. Does not stimulate digestion. Relieves muscle pain. The oil extracted from the seed is used for arthritis and paralysis. As a top dressing, it helps to relieve muscle spasms during cholera. Its water cures the thirst of cholera patients. If you soak nutmeg powder in a little water and drink it, you will get relief from dryness.

The red tissue surrounding the nutmeg seeds is called jatipadri. Nutmeg and Jatibatri help relieve diarrhea, flatulence, colic. Nutmeg seeds are ground and given to newborn babies to prevent colic. Nutmeg, sukku and omum powder are good for digestion.

Nutmeg Herbal

ஜாதிக்காய் மூலிகை பொடி பயன்கள்:

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய tamilhealthytips –ல் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நாட்டு மருந்து ஜாதிக்காய் மூலிகை பொடி  பயன்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்

 ஜாதிக்காய் பயன்கள்

ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்என்னும் கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

உடல் சுறுசுறுப்பாகும்

ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். விந்து கெட்டிப்படும், உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.

வயிற்றுபோக்கு தீரும்

ஜாதிக்காய் தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.

வாந்தி பேதி நிற்கும்

ஜாதிக்காயை பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.

தம்பத்திய பிரச்சனை தீர்க்கும்

ஜாதிக்காய் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, விந்து முந்துதலை தடுக்கும். தாம்பத்தியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் சிறந்த தீர்வாகும்.

சரும பிரச்சனைகள் தீர்க்கும்

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.

அம்மை கொப்பளங்களை சரிசெய்யும்

அம்மை நோய் ஏற்பட்டால் உடல் முழக்க கொப்பளங்கள் தோன்றும். அம்மை நோய் மறைந்தாலும் தழும்புகள் உடனடியாக மறையாது. அந்த சமயத்தில் ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும்.

பல் பிரச்சனைகள் தீர்க்கும்

சிலருக்கு பல் வலி ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த சமயத்தில் பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை தடவினால் பல் வலி பறந்தோடும்.

அஜீரணம் குணமாகும்

அஜீரண பிரச்னையால் அவதிபடுபவர்கள் ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம் எடுத்து நன்றாக தூள் செய்து உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பிரச்சனை சரியாகும்.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

நரம்பு தளர்ச்சி நீங்கும்

ஜாதிக்காய் மற்றும் பிரண்டை உப்பை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நரம்பு தளர்ச்சி பிரச்சனை தீரும்.

தொண்டை சதையை குறைக்கும்

ஒரு சிலருக்கும் தொண்டையில் சதை வளரும். அப்படிப்பட்டவர்கள் ஜாதிக்காய் சிறிது எடுத்து கொண்டு அதனுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் மிளகு இரண்டு பங்கு சேர்த்து தூளாக அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் 2 அல்லது 3 சிட்டிகை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் 2 அல்லது 3 மாதங்களில்

சதை வளர்ச்சி குணமாகும்.

கண் பார்வை தெளிவடையும்

பார்வை திறன் சரியாக இல்லாதவர்கள் இரவில் தூங்கும் முன்பு ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி பற்றுப் போட்டு விட்டு காலையில் எழுந்தவுடன் முகம் கழுவி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்.

அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி  செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தசைப்பிடிப்பை நீக்கும்:

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

How to know benefit of Aloe vera?

How to know health benefits of figs?

How to know health benefits of Pistachio

How to know the rules on eating food?

How to know health the nut foods?