To Read this Post , Use Translator for Your language

How to know the Neuro endocrine tumour? - healthtamil.com
neuroendocrine tumor
neuroendocrine tumor
Listen to this article

What is Neuro endocrine tumour ? நியூரோஎண்டோகிரைன் கட்டி என்றால் என்ன?

Neuroendocrine tumor, also known as carcinoids, are tumors that arise in neuroendocrine cells that have the properties of hormone-releasing cells and nerves. These tumors are slow growing. They can grow on any part of the body. These can be cancerous tumors or non-cancerous tumors.

What are the main effects and symptoms of the disease?

Symptoms may vary depending on the location of the tumors. Some of the symptoms that occur regardless of the location of the tumors include:

Hot flushes (appearance without sweat on the face or neck).

diarrhea

Difficulty breathing.

High blood pressure.

Fatigue, weakness.

Abdominal pain, abdominal cramps, feeling full.

Unexplained weight gain or loss.

Shortness of breath, cough.

Swelling in feet and ankles.

Skin lesions and discolored patches on the skin.

High or low sugar levels.

What are the main causes of infection?

The exact causes of neuroendocrine tumors have not yet been identified. The presence of any of the following hereditary factors increases the likelihood:

Multiple endocrine neoplasia – type 1.

Neurofibromatosis – type 1.

Von Hippel-Lindau syndrome.

How is it diagnosed and treated?

Neuroendocrine disease can be diagnosed with the following tests:

Blood tests.

Tissue test (biopsy).

Genetic testing and counseling.

The following scans:

Ultrasound.

Computer scan (CT scan).

Magnetic resonance imaging (MRI scan).

Positron emission tomography (PET scan).

Octreotide scans – in which a radioactive liquid is injected into a vein and a camera looks for cancer cells.

Laparoscopy.

Nuclear Medicine Imaging.

Treatment of neuroendocrine tumors varies depending on the location of the tumor, its severity, and the patient’s health. The following treatments are offered:

Surgery: Tumors in one location can be removed surgically. This is the first step in treatment.

Chemotherapy, hormone therapy, targeted therapy, etc. are given for aggressive tumors.

Medications: Somatostatin analog (octreotide or lanreotide) medications stop the growth of hormones and prevent the spread of the disease.

Radiotherapy: Using X-rays or gamma-rays to shrink the tumor or stop it from growing by cutting off blood flow to the tumor.

Neuroendocrine tumor

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

நியூரோஎண்டோகிரைன் கட்டி என்றால் என்ன?

கார்சினாய்டுகள் எனப்படும் நியூரோஎண்டோகிரைன் கட்டிகள், ஹார்மோன்களை வெளியிடும் அணுக்கள் மற்றும் நரம்புகளின் குணங்களை உடைய நியூரோஎண்டோகிரைன் அணுக்களில் ஏற்படும் கட்டிகள் ஆகும். இந்த கட்டிகள் மெதுவாக வளரக்கூடியவை. இவை உடலின் எந்த பாகத்திலும் வளரக்கூடும். இவை புற்று நோய் கட்டிகளாகவும் இருக்கலாம் அல்லது புற்று நோய் இல்லாத கட்டிகளாகவும் இருக்கலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கட்டிகள் உண்டாகும் இடத்தைப் பொருத்து அறிகுறிகள் மாறுபடலாம். கட்டிகளின் இடத்தை பொருட்படுத்தாமல் ஏற்படும் சில அறிகுறிகள் பின்வருமாறு:

உஷ்ண வெளியேற்றம் (முகம் அல்லது கழுத்தில் வியர்வை இல்லாமல் வெளிப்படும்).

வயிற்றுப்போக்கு.

சுவாசிப்பதில்  சிரமம்.

உயர்ந்த இரத்த அழுத்தம்.

சோர்வு, பலவீனம்.

அடிவயிற்று வலி, வயிற்றுப் பிடிப்புகள், வயிறு நிறைந்தது போன்ற உணர்வு.

காரணமில்லாமல் உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.

மூச்சுத்திணறல், இருமல்.

பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம்.

தோல் புண்கள் மற்றும் தோலில் ஏற்படும் நிறம் மாறிய திட்டுக்கள்.

அதிக அல்லது குறைந்த சர்க்கரை அளவு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளின் சரியான காரணிகள் இன்னும் கண்டறியப்படவில்லை. கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு மரபுவழி காரணி இருப்பது இதன் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது:

மல்டிபிள் எண்டோகிரைன் நியோபிளாசியா – வகை 1.

நியுரோஃபைப்ரோமடோசிஸ் – வகை 1.

வான் ஹிப்பேல் – லிண்டாவு சிண்ட்ரோம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நியூரோஎண்டோகிரைன் நோயை பின்வரும் சோதனைகளின் மூலம் கண்டறியலாம்:

இரத்தப் பரிசோதனைகள்.

திசுச்சோதனை (பயாப்சி).

மரபியல் பரிசோதனை மற்றும் ஆலோசனை.

பின்வரும் ஸ்கேன்கள்:

அல்ட்ராசவுண்ட்.

கணிப்பொறி பருவரைவு (சி.டி ஸ்கேன்).

காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஸ்கேன்).

பாஸிட்ரான் வெளியேற்ற வரைவி (பி.இ.டி ஸ்கேன்).

ஆக்ட்ரியோட்டைட் ஸ்கேன்கள் – இதில் ஒரு கதிரியக்க திரவம் நரம்புகளில் செலுத்தப்பட்டு கேமரா மூலம் புற்று நோய் அணுக்கள் கண்டறியப்படுகிறது.

லேப்ரோஸ்கோபி.

நூக்லியர் மெடிசின் இமேஜிங்.

கட்டி இருக்கும் இடம், அதன் தீவிரம் மற்றும் நோயாளியின் உடல் நலத்தைப் பொறுத்து நியூரோஎண்டோகிரைன் கட்டியின் சிகிச்சை மாறுபடும். பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன:

அறுவை சிகிச்சை: ஒரு இடத்தில மட்டும் இருக்கும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். இது சிகிச்சையின் முதல் படி ஆகும்.

கீமோதெரபி, ஹார்மோன் தெரபி இலக்கு தெரபி போன்றவை தீவிரமான நிலையில் உள்ள கட்டிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

மருந்துகள்: சோமாடோஸ்டேட்டின் அனலாக் (ஆக்ட்ரியோட்டைட் அல்லது லேன்ரியோட்டைட்) மருந்துகள், ஹார்மோன்களின் வளர்ச்சியை நிறுத்தி நோய் பரவுவதை தடுக்கின்றன.

ரேடியோதெரபி: எக்ஸ்-கதிர்கள் அல்லது காமா-கதிர்களின் மூலம் கட்டிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுத்து கட்டியின் அளவைக் குறைப்பது அல்லது வளருவதைத் தடுப்பது.