To Read this Post , Use Translator for Your language

How to know Neuroleptic Malignant Syndrome - healthtamil.com
Neuroleptic Malignant Syndrome
Neuroleptic Malignant Syndrome
Listen to this article

What is neuroleptic malignant syndrome? நியூரோலெப்டிக் மாலிகன்ட் நோயின் ஆபத்து

Neuroleptic malignant syndrome (NMS) is a potentially life-threatening condition caused by the use of anti-psychotic drugs. Anti-psychotics are drugs used in the treatment of Alzheimer’s, Parkinsonism, bipolar disorder, depression, and anxiety.

It is a rare condition that usually occurs in males. If not treated properly, it can lead to death. Therefore, the first symptom of NMS should be admitted to the hospital immediately.

The incidence of NMS in the Indian population is 1.40 – 0.41 per 1000 people using anti-psychotics.

What are the main effects and symptoms of the disease?

Symptoms may begin when anti-psychotics are taken or the dosage is increased. Symptoms experienced within 1 to 2 weeks include:

Fever with temperature above 38ºC but below 40ºC.

Muscle stiffness.

Trembling

Difficulty in movement.

Difficulty speaking.

confusion.

Increased heart rate.

Increased respiratory rate.

Mental disturbances.

Abnormal blood pressure.

Sweat.

Involuntary urination.

Presence of elevated creatine kinase.

Protein in urine.

What are the main causes of infection?

NMS is caused by anti-psychotic drugs blocking dopamine receptors. Dopamine means. Nerves help in the transmission of messages in our body. When there is no dopamine in the nerve receptors it leads to NMS. The exact cause of this mechanism is yet to be identified.

Other factors that may increase the risk of NMS include:

Use of 2 or more anti-psychotics.

Sudden increase in dosage of anti-psychotics.

Anti-psychotics are not administered orally.

Drainage.

Use of sedatives.

Exclusion of dopamine receptor activating drugs.

Antiemetics.

Previous history of NMS.

How is it diagnosed and treated?

There are no specific tests to diagnose NMS. Therefore, your doctor may recommend several tests, including blood tests, electrolyte tests, and urine tests. Sometimes, your doctor will also recommend imaging tests or an electroencephalogram (EEG).

As NMS is an emergency condition, immediate medical intervention is required. First, your doctor will advise you to stop all medications that cause NMS.

Then, the symptoms are treated. Measures to restore lost fluid and electrolytes and promote cooling are taken to correct hyperthermia (high body temperature).

Your doctor may prescribe newer medications that have a lower risk of developing NMS, but still require regular monitoring. Generally, healing takes 7-14 days.

Neuroleptic Malignant Syndrome

Read more:

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

நியூரோலெப்டிக் மாலிகன்ட் நோய்க்குறி என்றால் என்ன?

நியூரோலெப்டிக் மாலிகன்ட் நோய்க்குறி (என்.எம்.எஸ்) என்பது ஆண்டி-சைகாடிக் மருந்துகளின் பயன்பாடு காரணமாக ஏற்படக்கூடிய ஒரு அபாயகரமான நிலை ஆகும். அல்சைமர்ஸ், பார்கின்சனிசம், இருமுனை சீர்குலைவு, மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆண்டி-சைகாடிக்ஸ் ஆகும்.

இது ஒரு அரிய நிலை, இது பொதுவாக ஆண்களில் காணப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது மரணத்திற்கு வழிவகுக்கும். எனவே என்.எம்.எஸ் நோயின் முதல் அறிகுறி தோன்றியவுடனேயே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும்.

இந்திய மக்கள்தொகையில் என்.எம்.எஸ் நோயின் நிகழ்வு, ஆண்டி-சைகாடிக்ஸ் பயன்படுத்தும் 1000 பேரில் 1.40 – 0.41 பேருக்கு ஏற்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதோ அல்லது மருந்தளவு அதிகரிக்கப்படும்போதோ அறிகுறிகள் தொடங்கலாம்.1 முதல் 2 வாரங்களுக்குள் அனுபவிக்கக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:

38ºC க்கும் அதிகமான ஆனால் 40ºC க்கும் குறைவான வெப்பநிலையில் காய்ச்சல்.

தசை இறுக்கம்.

நடுக்கம்.

இயக்கத்தில் சிரமம்.

பேசுவதில் சிரமம்.

குழப்பம்.

அதிகரித்த இதய துடிப்பு.

அதிகரித்த சுவாச விகிதம்.

மன தொந்தரவுகள்.

அசாதாரண இரத்த அழுத்தம்.

வியர்வை.

உணர்வற்ற சிறுநீர் வெளியேற்றம்.

கிரியேட்டினின் கைனேஸ் உயர்த்தப்பட்ட அளவில் இருத்தல்.

சிறுநீரில் புரதம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகள் டோபமைன் வாங்கிகளைத் தடுப்பதன் காரணமாக என்.எம்.எஸ் ஏற்படுகிறது. டோபமைன் என்னும் பொருள். நமது உடலில் நரம்பு செய்தி பரிமாற்றத்தில் உதவுகிறது. நரம்பு வாங்கிகளில் டோபமைன் இல்லாதபோது அது என்.எம்.எஸ் நோய்க்கு வழிவகுக்கிறது. இந்த இயங்குமுறைக்கு சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

என்.எம்.எஸ் நோயின் ஆபத்துக்கு இடமளிக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:

2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகளின் பயன்பாடு.

ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகளின் திடீர் மருந்தளவு அதிகரிப்பு.

ஆண்டி-சைகாடிக்ஸ் மருந்துகள் வாய்வழி நிர்வகிக்கப்படாமல் இருப்பது.

நீர்ப்போக்கு.

மயக்க மருந்துகளை உபயோகித்தல்.

டோபமைன் வாங்கியைச் செயல்படுத்தும் மருந்துகளின் விலக்கு.

வாந்தி எதிர்ப்பு மருந்துகள்.

என்.எம்.எஸ் இன் முந்தைய வரலாறு.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

என்.எம்.எஸ் நோயை உறுதிப்படுத்த எந்த குறிப்பிட்ட சோதனைகளும் இல்லை. எனவே, உங்கள் மருத்துவர் இரத்த சோதனை, எலக்ட்ரோலைட் சோதனை மற்றும் சிறுநீர் சோதனை உட்பட பல சோதனைகளை பரிந்துரைக்க கூடும். சில நேரங்களில், தோற்றமாக்கல் சோதனைகள் அல்லது எலக்ட்ரோஎன்சேபலோகிராம் (EEG) ஆகியவற்றையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

என்.எம்.எஸ் நோய் ஒரு அவசர நிலை என்பதால், உடனடி மருத்துவ தலையீடு தேவைப்படுகிறது. முதலில், உங்கள் மருத்துவர், என்.எம்.எஸ் நோயை ஏற்படுத்தும் அனைத்து மருந்துகளையும் நிறுத்துமாறு ஆலோசனை கூறுவார். பின்னர், அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிவெப்பத்துவ நிலையை சீர்செய்ய (உயர் உடல் வெப்பநிலை) இழந்த திரவம் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றை மீண்டும் பெறச்செய்யும் நடவடிக்கைகள் மற்றும் குளிர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. என்.எம்.எஸ் நோயை உருவாக்கும் அபாயம் குறைவாக உள்ள புதிய மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார், ஆனாலும் வழக்கமான கண்காணிப்பு தேவைப்படுகிறது. பொதுவாக, குணமடைவதற்கு 7-14 நாட்கள் தேவைப்படுகிறது.