To Read this Post , Use Translator for Your language

How to know Benefits of Cucumber fruits - healthtamil.com
Cucumber fruits
Cucumber fruits
Listen to this article

Benefits of Cucumber fruits: வெள்ளரிக்காய் பயன்கள்

Vegetables are rich in nutrients, which is why we use a variety of vegetables in our meals. Among the vegetables that we eat like that, we can eat a variety of vegetables only if they are cooked to perfection.

However, some vegetables can be eaten raw by children and adults alike. Cucumber is one such vegetable. Cucumber is rich in water content. Well, in today’s health post, let’s read about the benefits of eating cucumber.

Nutrients in Cucumber:

Cucumber is rich in essential nutrients like vitamins, minerals and fiber. From children to adults, everyone eats cucumber, so the body gets the necessary nutrients easily.

To maintain skin health:

Generally, everyone’s skin looks radiant at a young age. However, the skin starts to wrinkle with age. Hence, regular consumption of water-rich cucumbers keeps the skin moisturized, prevents wrinkles and gives a youthful appearance.

Uterine problems:

During menstruation, some women experience shedding due to which the nutrients in their body are reduced and they look very tired. Therefore, eating more cucumbers during these times will cure all menstrual and uterine related problems in women.

To increase vision:

Due to the high heat in summers, the moisture in the eyes dries up. The nutrients in cucumber promote the development of the irises of the eyes and protect the moisture in the eyes from drying out due to extreme heat.

Helps boost metabolism:

Cucumber helps in burning the calories of daily food. Also increasing the metabolism by consuming more cucumber. So the body will be healthy without increasing calories.

To get rid of bad breath:

Some people have problems with bad breath. Such people can eat cucumber daily, it will destroy the germs in the mouth, strengthen the gums and also control the bad breath.

Cucumber

How to know benefit of Aloe vera?

How to know health benefits of figs?

How to know health benefits of Pistachio

How to know the rules on eating food?

வெள்ளரிக்காய் பயன்கள்

காய்கறிகளில் தான் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, இதன் காரணமாகவே நாம் சாப்பிடும் உணவுகளில் பலவகையான காய்கறிகளை பயன்படுத்துகின்றோம். அப்படி சாப்பிடும் காய்கறிகளில் பலவகையான காய்கறிகளை பக்குவமாக சமைத்தால் மட்டுமே நம்மால் சாப்பிட முடிகிறது.

இருப்பினும் சில காய்கறிகளை பச்சையாகவே சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை சாப்பிடமுடியும். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் நிறைய நீர்ச்சத்து நிறைந்துள்ளது. சரி இன்றைய ஆரோக்கியம் பதிவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

வெள்ளரிக்காய் நன்மைகள்

வெள்ளரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

வெள்ளரிக்காயில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.

சருமம் ஆரோக்கியத்தை பாதுகாக்க:

பொதுவாக இளம் வயதில் அனைவருக்குமே சருமம் பொலிவுடன் காணப்படும். இருப்பினும் வயதாக வயதாக சருமத்தில் சுருக்கம் வர ஆரம்பித்துவிடும். ஆகவே நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தன்மையை கொடுக்கிறது.

கருப்பை பிரச்சனைகள்:

மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு ஏற்படும் இதன் காரணமாக அப்பெண்களின் உடலில் சத்துகள் குறைந்து மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். ஆகவே இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

பார்வை திறனை அதிகரிக்க:

கோடைகாலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் இதன் காரணமாக கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்:

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காயை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க:

சிலருக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.