Benefits of dry grapes -உலர் திராட்சை நன்மைகள்
Raisins are rich in energy and nutrients. Especially those who want to gain weight will start gaining weight if they eat the required amount every day.
Well, here we will know about the benefits of eating these dry grapes daily.
Since raisins contain a lot of nutrients, if pregnant women boil a glass of raisins with milk and drink them daily, their baby will be very healthy.
Raisins are the best fruit for growing children. Calcium is the nutrient required for strong bones, teeth and body growth. Raisins are rich in this nutrient.
So if growing children drink a glass of 10 raisins with milk every night before going to bed, they will be healthy and active.
Those who suffer from body aches daily, drink a decoction with a little aloe vera and dry grapes to get relief from body aches.
Dry grapes are used as an excellent remedy for stomach ache during menstruation in some women. If 10 dried grapes are soaked in water and boiled well, this problem of stomach ache will be cured.
Some people have a very fast heart rate. They always look nervous. If they put these fruits in milk and brew it after cooling it again, if they eat the milk and fruit, the heartbeat will be normal.
Good for stomach
It acts as a natural laxative and provides relief from constipation.
It loosens stool and regulates bowel movements.
It improves digestion.
It has cooling properties. Hence it helps in controlling acidity.
Its anti-inflammatory properties improve bowel function.
Reduces anemia
Raisin water is rich in iron which helps in curing anemia. Raisins contain vitamin-B which is essential for the production of red blood cells. There is not enough information for this. Therefore, more researches are needed to study the effect of dried grapes in controlling blood related problems in humans. You should consult your doctor for best advice regarding this.
Good for skin and hair problems
Raisins contain vitamin-C and antioxidants, which help in keeping the skin glowing and healthy. Its antioxidant properties fight bacterial infections. Also, it helps prevent acne breakouts.
Vitamin-C obtained by drinking grape juice daily can make hair shiny and thick. Also, its anti-inflammatory properties work against dandruff and itching.
Dry grape water strengthens teeth and bones
Raisin water contains calcium, which helps strengthen and remineralize tooth enamel. And calcium is an important component of bones. For proper bone formation and better absorption of calcium, the nutrient boron is essential.
Raisins contain potassium, which helps in increasing the growth of bones, thus the potassium, boron and calcium in dry grapes are beneficial for osteoporosis in women.
Dry grape water helps in weight gain
If you are very thin and want to gain more weight, dry grapes are a natural remedy for this. Weight gain pills are sold in stores, but if you want to opt for an Ayurvedic way to gain weight, you can drink grape juice. Dry raisins mixed with milk and eaten daily will not only increase the digestive power but also increase the body weight.
How to know benefit of Aloe vera?
How to know health benefits of figs?
How to know health benefits of Pistachio
How to know the rules on eating food?
உலர் திராட்சை நன்மைகள்
உலர் திராட்சையில் ஏராளமான ஆற்றலும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் தேவையான அளவு சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
சரி இந்த உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வருவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து கால்சியம் தான்.இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.
எனவே வளரும் குழந்தைகள் தினமும் இரவு உறங்குவதற்கு முன் 10 உலர்திராட்சை பழத்தை பாலுடன் காய்ச்சி ஒரு கிளாஸ் அருந்திவர குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.
சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும்.
சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
வயிற்றுக்கு நல்லது
இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
இது மலத்தை தளர்த்தி குடல் இயக்கத்தை சீராக்கும்.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இது குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே அசிடிட்டியை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
இரத்த சோகையை குறைக்கும்
உலர் திராட்சை நீரில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்த சோகையை போக்க உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின்-B உலர் திராட்சையில் உள்ளது. இதற்கான போதுமான அளவுத் தகவல்கள் இல்லை. ஆகையால், மனிதர்களுக்கு ஏற்படும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதில் உலர் திராட்சையின் விளைவுகுறித்து ஆய்வு செய்யக் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. இது தொடர்பான சிறந்த ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு நல்லது
உலர் திராட்சையில் வைட்டமின்-C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், முகப்பரு வருவதை தடுக்கவும் உதவுகிறது.
தினமும் உலர் திராட்சை நீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் வைட்டமின்-C , முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றக்கூடியது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பொடுகு மற்றும் அரிப்புக்கு எதிராக செயல்படுகின்றன.
பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் உலர் திராட்சை நீர்
உலர் திராட்சை நீரில் கால்சியம் உள்ளது, இது பற்களின் பற்சிப்பியை வலுப்படுத்தவும், மறுகனிமமயமாக்கவும் உதவுகிறது. மேலும் கால்சியம் எலும்புகளின் முக்கிய அங்கமாகும். சரியான எலும்பு உருவாக்கம் மற்றும் கால்சியத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு, போரான் எனும் ஊட்டச்சத்து மிகவும் அவசியமானதாகும்.
உலர் திராட்சையில் பொட்டாசியம் உள்ளது, இது எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, இதனால் உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம், போரான் மற்றும் கால்சியம் பெண்களின் எலும்பு மெலிவுறல் நோய்க்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை நீர்
நீங்கள் மிகவும் ஒல்லியாக இருந்தால், மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், இதற்கு உலர் திராட்சை ஒரு இயற்கையான தீர்வாக இருக்கும். கடைகளில் எடை அதிகரிக்க உதவும் மாத்திரைகள் விற்கப்படுகின்றன, ஆனால் நீங்கள் உடல் எடையை அதிகரிக்க ஆயுர்வேத வழியைத் தேர்வு செய்ய விரும்பினால், உலர் திராட்சை நீரை குடிக்கலாம். உலர் திராட்சையை பாலுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடல் எடையும் அதிகரிக்கும்.