To Read this Post , Use Translator for Your language

How to know about Cure Toothache? - healthtamil.com
Cure Toothache
Cure Toothache
Listen to this article

Cure Toothache- பல் கூச்சம் குணமாக

We can bear any pain in our body. But this toothache, tooth decay, toothache etc. is very difficult to bear. We will have a hard time not being able to eat our favorite foods.

 It is difficult to drink ice cream, ice water, coffee, tea, etc. even if the toothache does not cause any serious damage. Let’s see in this post how to fix toothache in a simple way.

tooth sensitive:

• The main cause of tooth sensitivity is tooth decay, worn away enamel on the top of the tooth, broken tooth, toothpaste used while brushing or not brushing the tooth properly.

• Tooth receding from the gums can also be caused by gum disease and dentures.

• It can also be caused by high acid paste and using the same brush for a long time.

For Toothache – Coconut Oil:

• Before brushing teeth in the morning, take a handful of coconut oil and swish it around the gums.

• Antioxidants present in coconut oil cure gum infection and prevent tooth decay.

Salt water:

• To kill germs in the mouth, add a little rock salt to warm water and swish it for about 1 minute, it not only kills the germs in the mouth but also helps prevent toothache.

• Use this salt water only after brushing your teeth. And this should be done in both morning and evening jobs.

Hydrogen Peroxide:

• 3% hydrogen peroxide should be purchased from the stores if you want to treat itchy teeth. It can also be used in 1 tablespoon or less. Take the same amount of water as you take hydrogen peroxide.

• Then add hydrogen peroxide to the water and swish it around the gums for half a minute or less. Rinse mouth with warm water immediately after blowing.

Clove oil for itchy teeth:

• Clove oil should be massaged on the teeth and gums. Then gargle with warm water.

• By doing this method you can cure toothache. This should be done twice a day.

Guava Leaf:

• Take two guava leaves and wash them with water and chew them in your mouth to reduce toothache and remove yellow plaque from the teeth.

• Guava leaves contain anti-oxidants which help to keep the mouth free of germs, strengthen teeth and cure tooth decay.

Toothache – Foods to Avoid:

• People with toothache should eat less fruits like oranges.

• It is better to avoid acidic soft drinks and prolonged brushing. Otherwise there is a chance of enamel disintegration.

Cure Toothache

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

How to know of Rheumatic Heart Disease?

பல் கூச்சம் குணமாக |

நம் உடலில் எந்த வலியை வேணாலும் தாங்கி கொள்ளலாம். ஆனால் இந்த பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்றவற்றை தாங்கி கொள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும். நமக்கு பிடித்த உணவை சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்படுவோம்.

 பல் கூச்சம் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படுத்தாமல் இருந்தாலும் ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர், காபி, தேநீர் போன்றவற்றை குடிப்பது கஷ்டமாகும். நாம் இந்த பதிவில் பல் கூச்சத்தை எளிய முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

பல் கூச்சம்:

•          பல் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பல் சிதைவுற்று இருந்தாலோ, பல்லின் மேற்புறத்தில் இருக்கும் எனாமல் தேய்ந்திருந்தாலோ, பல் உடைந்திருந்தாலோ, பல் துலக்கும் போது பயன்படுத்தும் பேஸ்ட் அல்லது முறையாக பல்லை தேய்க்காமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும்.

•          பல் ஈறுகளை விட்டு விலகி வருவது, ஈறுகளில் ஏதும் தொற்று கிருமிகள் இருந்தால் மற்றும் செயற்கை பல் பொருத்துவது போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.

•          அதிக அமிலம் உள்ள பேஸ்ட் மற்றும் நீண்ட நாள் ஒரே Brush-பயன்படுத்துவது போன்ற காரணங்களாலும் வரலாம்.

பல் கூச்சம் நீங்க – தேங்காய் எண்ணெய்:

•          காலையில் பல் துலக்குவதற்கு முன்னர் ஒர் கையளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதை ஈறுகளில் பரவுவது போல கொப்பளிக்க வேண்டும்.

•          தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஈறுகளில் இருக்கும் தொற்றை குணப்படுத்தி பல் கூச்சத்தை தடுக்கிறது.

உப்பு நீர்:

•          வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கு வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சுமார் 1 நிமிடம் கொப்பளித்து வர வாயில் உள்ள கிருமிகளை அளிப்பது மட்டுமல்லாமல் பற்கூச்சத்தை தடுக்கவும் உதவுகிறது.

•          பல் துலக்கியதற்கு பின்னரே இந்த உப்பு நீரை பயன்படுத்த வேண்டும். மேலும் இதனை காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் செய்ய வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைட்:

•          பற்கூச்சத்தை குணப்படுத்த நினைப்பவர்கள் 3% அளவு ஹைட்ரஜன் பெராக்ஸைட் கடைகளில் வாங்க வேண்டும். அதை 1 டேபிள் ஸ்பூன் அல்லது அதற்கு குறைவாகவும் பயன்படுத்தலாம். எந்த அளவிற்கு ஹைட்ரஜன் பெராக்ஸைட் எடுத்து கொள்கிறீர்களோ அதே அளவிற்கு தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும்.

•          பின் தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சேர்த்து வாயில் அரை நிமிடம் அல்லது அதற்கும் மிக குறைவான நேரம் ஈறுகளில் படுமாறு கொப்பளித்து விட வேண்டும். கொப்பளித்த பின்னர் உடனடியாக வெந்நீரில் வாயை கழுவி விடவும்.

பல் கூச்சம் குணமாக – கிராம்பு எண்ணெய்:

•          கிராம்பு எண்ணெயை பல் மற்றும் ஈறுகளில் படுமாறு மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான வெந்நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

•          இந்த முறையை செய்வதன் மூலம் பற்கூச்சத்தை சரி செய்யலாம். இதனை ஒரு நாளில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

கொய்யா இலை:

•          கொய்யா இலை இரண்டு எடுத்து கொன்டு அதனை நீரில் கழுவி விட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர பற்கூச்சம் சரியாவதுடன் பல்லில் உள்ள மஞ்சள் கரை நீங்கும்.

•          கொய்யா இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் வாயில் கிருமிகள் அண்டாமல் பார்த்து கொள்வதற்கும், பல்லை உறுதிபடுத்தவும் மற்றும் பற்கூச்சத்தை சரி செய்யவும் உதவுகிறது.

பல் கூச்சம் நீங்க – சாப்பிடக் கூடாதவைகள்:

•          பற்கூச்சம் உள்ளவர்கள் ஆரஞ்சு போன்ற பழங்களை குறைவாக சாப்பிட வேண்டும்.

•          அமிலம் உள்ள குளிர்பானங்கள் மற்றும் அதிக நேரம் பல் விளக்குவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் எனாமல் சிதைவடைவதற்கான வாய்ப்பு உள்ளது.