To Read this Post , Use Translator for Your language

How to know reason for excessive sweating - healthtamil.com
excessive sweating
excessive sweating
Listen to this article

The reason for excessive sweating to come: அதிக வியர்வை வர காரணம்

Hello friends, today’s public welfare. You can find out the cause of excessive sweating in the com post. Sweating normally is not a problem. But for some people it can be a problem if they sweat a lot without doing any work. And it is a matter of observation. Buy OK We can learn about the reasons for sweating.

Sweating is the only way to regulate body temperature. As the body temperature rises, the sweat glands are stimulated by the nervous system to expel sweat. There are two types of sweat glands in our body.

1. Ecrine glands

2. Apocrine glands.

  When the ecrine gland begins to function When we work harder, when we are exposed to more heat in our body, the ecrine gland begins to function to keep the body heat in balance during sweating which comes out in a state of stress, fear, anxiety etc.

• Apocrine glands secrete in parts such as the armpit causing sweat and bacteria to sweat together.

Apocrine glands also secrete in situations such as anger, fear, happiness, stress, and anxiety. It is noteworthy that the sweat that comes out when we work out or exercise does not smell.

Hyperhidrosis is the name given to excessive sweating. Sweating occurs on the palms, soles and face when in a tense situation. Otherwise a few people will be exposed to excessive sweating for traditional reasons as well.

 If a person sweats without engaging in any activity it may be due to some physical abuse. It is called Secondary Hyperhidrosis.

Causes such as diabetes, heart disease, cancer, thyroid problem, Menopause hot flashes, and neurological problem are also the reasons for excessive sweating. It is better to approach the doctor for those who have such reasons.

 Sweating can occur for different reasons for each person, such as those who are obese, the elderly, those who take the pill, and those with poor health. The health of the body is good if we eat the right diet to keep our body healthy.

excessive sweating

Read More:

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

அதிக வியர்வை வர காரணம்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் வியர்வை அதிகமாக வருவதற்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ளலாம். சாதாரணமாக வியர்வை வருவது பிரச்சனை அல்ல. ஆனால் ஒரு சிலருக்கு எந்த ஒரு வேலையும் செய்யாமல் அதிக வியர்வை வெளியேறினால் அது பிரச்சனைக்குரியது தான். மேலும் அது கவனிக்க கூடிய விஷயமாகும். சரி வாங்க நாம் வியர்வை வருவதற்க்கான காரணங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உடலின் வெப்ப நிலையை சீராக்குவதற்காக தான் வியர்வை வெளிப்படுகிறது. உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது வியர்வை சுரப்பிகள் (sweatglands) நரம்பு மண்டலத்தால் தூண்டப்பட்டு வியர்வை வெளியேறுகிறது. நம் உடம்பில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் உள்ளன.

1.         எக்ரின் சுரப்பிகள்

2.         அபோக்ரைன் சுரப்பிகள்.

 •எக்ரின் சுரப்பி எப்பொழுது செயல்பட ஆரம்பமாகும் என்றால் நாம் அதிகமாக வேலை செய்யும்பொழுது, அதிக வெயில் நம் உடம்பில் படும்பொழுது, மன உளைச்சல், பயம், பதட்டம் போன்ற நிலையில் வெளிவரும் வியர்வையின் போது உடல் சூட்டை சம நிலையில் வைத்திருப்பதற்காக எக்ரின் சுரப்பி செயல்பட ஆரம்பிக்கிறது.

அபோக்ரைன் சுரப்பிகள் Armpit போன்ற பாகங்களில் சுரப்பதால் வியர்வை மற்றும் பாக்டீரியா ஒன்று சேர்ந்து வியர்வை நாற்றம் வருவதற்கு காரணமாகிறது.

கோபம், பயம், மகிழ்ச்சி, மன உளைச்சல், பதட்டம் போன்ற சூழ்நிலைகளிலும் அபோக்ரைன் சுரப்பிகள் சுரக்கின்றன. நாம் அதிகமாக வேலை பார்க்கும்போதோ அல்லது Exercise செய்யும்பொழுது வெளிவரும் வியர்வையில் நாற்றம் வராது என்பது குறிப்பிடதக்கது.

அதிகமாக வியர்தலுக்கு Hyperhidrosis என்று பெயர். இந்த வியர்வை பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் போது உள்ளங்கையில், உள்ளங்கால் மற்றும் முகத்தில்  வியர்வை வருகிறது. இல்லையென்றால் ஒரு சிலருக்கு பாரம்பரிய காரணங்களாளும் அதிக வியர்வை வெளிப்படும்.

ஒரு சிலருக்கு எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் வியர்வை வந்தால் அது சில உடல் உபாதைகளால் வரலாம். அதற்கு Secondary Hyperhidrosis என்று பெயர்.

 நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய், தைராய்டு பிரச்சனை, Menopause hot flashes, நரம்பியல் பிரச்சனை போன்ற காரணங்களும் அதிக வியர்வை வெளி வருவதற்கான காரணங்களாகும். இது போன்ற காரணங்கள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

உடல் பருமனாக உள்ளவர்கள், வயதானவர்கள், மாத்திரை சாப்பிடுபவர்கள் மற்றும் உடல் நல குறைபாடு உள்ளவர்களுக்கு என வியர்வை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படும்.

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு முறையை சரியாக சாப்பிட்டு வந்தாலே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.