What is Skin Insecticide Poison -(organophosphate poisoning)? இரசாயனங்களின் பூச்சிக்கொல்லி விஷம்
Organophosphate poisoning (Skin Insecticide Poison) is caused by the presence of organophosphates in causative amounts in the body. It occurs due to accidental or intentional exposure to these chemicals. Organophosphate is a chemical compound commonly found in pesticides. These drugs are used to prevent pests on plants, crops and microbes. Toxins can enter the body in a variety of ways: orally, nasally (inhaled), intravenously (injected), and through skin contact. This toxin is commonly found in rural areas of India.
What are the main effects and symptoms of the disease?
Depending on the way organophosphate enters the body and the amount of organophosphate, its effects and symptoms are classified according to the severity of the condition as follows:
Symptoms of mild poisoning:
headache
Physical weakness.
Nausea and vomiting.
Cough.
Runny nose.
Decreased blood pressure.
Low heart rate.
Symptoms of moderate poisoning:
Breathing problem:
confusion.
Abdominal pain.
Pale appearance.
Muscle contractions.
Symptoms of acute poisoning:
Loss of self-memory.
convulsions.
Paralysis.
Uncontrollable urination and defecation.
On average, the above symptoms appear within 30 minutes to 3 hours after exposure to organophosphate poisoning.
What are the main causes of infection?
Organophosphate exposure can inhibit certain enzymes in the body and lead to mild, moderate, or severe symptoms. Poisoning can occur due to self-harm or accidental exposure. Accidental exposure to this toxin can occur in people who work with pesticides or through consumption of contaminated food or water.
Organophosphates are cholinesterase inhibitors, meaning they stop the activity of the cholinesterase enzyme. This enzyme breaks down acetylcholine, a chemical that sends messages along nerves. By stopping the activity of enzymes, organophosphates lead to:
Severe life-threatening cholinergic syndrome.
A transitional syndrome characterized by paralysis of cranial nerves, muscles of respiration and other skeletal muscles etc.
Delayed nerve damage.
How is it diagnosed and treated?
The diagnosis of organophosphate poisoning is based on the symptoms of a person admitted to the hospital and his clinical features from close relatives or eyewitnesses. The doctor will perform a blood test to determine the levels of enzymes inhibited by organophosphate poisoning.
As a first step, the doctor will remove the organophosphate from the patient’s body by gastric lavage. If an organophosphate toxin is spilled on one’s clothing, it is recommended to first remove the clothing and clean it with clean water and soap. By giving artificial oxygen to prevent suffocation and then giving appropriate drugs and treatments according to its symptoms, its venom can be prevented from increasing. Perhaps if one has ingested naksha (poison) one should clean out the stomach completely before the poison spreads through the body.

How to know Diets for Kidney Stones Patients?
What are benefits in breast milk?
How to know Common Breastfeeding Problems
ஆர்கனோபாஸ்பேட் நச்சு என்றால் என்ன?
ஆர்கனோபாஸ்பேட் நச்சு என்பது ஆர்கனோபாஸ்பேட் உடலில் உண்டாக்கும் அளவுகளில் இருத்தலே ஆகும். இது தற்செயலாக அல்லது வேண்டுமென்றே இந்த இரசாயனங்களின் வெளிப்பாடு காரணமாக ஏற்படுகிறது.
ஆர்கனோபாஸ்பேட் என்பது பொதுவாக பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஒரு இரசாயன கலவை ஆகும். இம்மருந்துகள் செடிகள், பயிர்கள், நுண்ணுயிர்களுக்கு பூச்சி வராமல் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
நச்சு உடலுக்குள் வாய்வழியாக, நாசி வழியாக (சுவாசிக்கும் போது), நரம்பு வழியாக (ஊசிகள்) மற்றும் தோல் தொடர்புகள் மூலம் பலவிதமான வழிகளில் ஏற்படக்கூடும். இந்த நச்சு பொதுவாக இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆர்கனோபாஸ்பேட் உடலுக்குள் செல்லும் வழி மற்றும் ஆர்கனோபாஸ்பேட்டின் அளவினைப் பொறுத்து, இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள், நிலைமையின் தீவிரத்தின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
லேசான நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்:
தலைவலி.
உடல் பலவீனம்.
குமட்டல் மற்றும் வாந்தி.
இருமல்.
மூக்கு ஒழுகுதல்.
இரத்த அழுத்தம் குறைதல்.
இதய துடிப்பு குறைவு.
மிதமான நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்:
சுவாச பிரச்சனை:
குழப்பம்.
வயிற்று வலி.
வெளிர் தோற்றம்.
தசை சுருக்கங்கள்.
கடுமையான நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்:
சுய நினைவு இழப்பு.
வலிப்பு.
பக்கவாதம்.
சிறுநீர், மலம் கழித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாதது.
ஆர்கனோபாஸ்பேட் நச்சின் வெளிப்பாட்டிற்கு பின் சராசரியாக 30 நிமிடமிலிருந்து 3 மணி நேரத்துக்குள் மேற்குறப்பட்ட அறிகுறிகள் தெரியப்படும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஆர்கனோபாஸ்பேட் வெளிப்பாடு உடலின் சில என்சைம்களைத் (நொதியம்) தடுக்கும் மற்றும் லேசான, மிதமான, அல்லது கடுமையான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். சுய தீங்கு அல்லது தற்செயலான வெளிப்பாடு காரணமாக நச்சு ஏற்படலாம். பூச்சிக்கொல்லிகள் கொண்டு வேலை செய்பவர்களிடத்தில் அல்லது அசுத்தமான – உணவு அல்லது தண்ணீரின் நுகர்வு காரணமாக இந்த நச்சு தற்செயலாக வெளிப்படக்கூடும்.
ஆர்கனோபாஸ்பேட் கோலினெஸ்டெரஸ் எதிர்ப்பிகளாகும், அதாவது இது கோலினெஸ்டெரஸ் என்சைமின் செயல்பாட்டை நிறுத்துகிறது. இந்த என்சைம் நரம்புகள் வ்ழியாக செய்திகள் அனுப்பும் அசிட்டில்கோலின் எனும் இரசாயனத்தை உடைக்கிறது. என்சைம்களின் செயல்பாட்டை நிறுத்துவதால், ஆர்கனோபாஸ்பேட்கள் பின்வருவனவற்றிற்கு வழிவகுக்கும்:
கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கோலினெர்ஜிக் இக்கட்டு நிலை.
மூளை நரம்புகள், சுவாசத்தின் தசைகள் மற்றும் பிற எலும்பு தசைகள் முதலியவை முடக்கப்படுவதால் குறிக்கப்படும் ஒரு இடைநிலை நோய்க்குறி.
தாமதமான நரம்பு சேதம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஆர்கனோபாஸ்பேட் நச்சால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவரிடம் தோன்றும் அறிகுறிகளை வைத்தும், அவருடைய மருத்துவ குறிப்பிகளை அவருடைய நெருங்கிய உறவினர்களிடம் இருந்தோ அல்லது நேரில் பார்த்தவர்களிடம் இருந்தோ கேட்டு அறிவதன் மூலமாக இந்நோய் கண்டறியப்படுகிறது. மருத்துவர் இரத்த பரிசோதனை மூலம் ஆர்கனோபாஸ்பேட் நச்சால் தடைப்படும் என்சைம்களின் அளவுகளை கண்டறிவார்.
மருத்துவர் முதல் கட்ட சிகிச்சையாக நோயாளியின் உடலில் உள்ள ஆர்கனோபாஸ்பேட்டை இரைப்பை கழுவுதல் மூலம் அகற்றுவார். ஒருவேளை ஆர்கனோபாஸ்பேட் நச்சு ஒருவரின் உடைகளில் சிந்திவிட்டால், முதலில் உடைகளை கழற்றிவிட்டு சுத்தமான நீரும் சோப்பும் கொண்டு சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
மூச்சு திணறலை தடுக்க செயற்கை ஆக்ஸிஜன் கொடுத்து பின் அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சரியான மருந்துகளையும் சிகிச்சைகளையும் கொடுப்பதன் மூலம் அதனுடைய நச்சின் வீர்யம் அதிகமாகாமல் தடுக்கமுடியும். ஒருவேளை ஒருவர் நச்சை (விஷம்) உட்கொண்டிருந்தால் அந்த நச்சு உடலில் பரவுவதற்கு முன்பு அவருடைய வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும்.