What is a bone canal infection? Osteomyelitis எலும்புக் குழல் தொற்று என்றால் என்ன?
A bone canal infection is caused by an infection in the bone. It is caused by bacteria. The disease can be acute or chronic. Osteoarthritis leads to inflammation of the bone.
What are the main effects and symptoms of the disease?
The main symptoms of this disease are as follows:
Pain in the bones.
Excessive sweating.
fever
Cooling down.
Discomfort.
inflammation
Sensation as if the body were hot.
Pain in the infected area.
What are the main causes of infection?
The most common cause of bone infection is bacteria.However, bone infection can also be caused by fungi and other germs. Staphylococcus is the most common bacterial species known to cause bone canal infections.
The bacteria can also spread to nearby bones through infected skin or muscles.
However, any other medical conditions also put a person at risk of developing this bone canal infection.
Risk factors for this disease include:
Diabetes.
Low blood flow.
A recent injury.
Recent orthopedic surgery.
Weak immunity.
How is it diagnosed and treated?
There are several tests that can be done to diagnose the cause of a sinus infection. Tests for this disease include:
Bone tissue examination.
Bone disease scans such as CT scan and TEXA.
Taking an X-ray scan of the affected area.
Check for symptoms.
Total blood cell count (CBC).
Magnetic resonance imaging (MRI) of bone.
These tests help determine the severity of the bone infection.
The treatment of bone canal infection also includes the use of antibiotics. These drugs are of great help in eliminating the bacteria causing the infection. Once these antibiotics are used it takes 4-6 weeks to work in the body and the treatment must be continued to clear the infection completely.
If the antibiotics given do not work well in the body or if the bone damage is severe, surgery may be needed to remove the dead tissue in the bone to prevent the infection from spreading further.
People with diabetes are at a higher risk of developing bone infections, and removal of the affected part of the body in patients with this condition is essential to avoid complications.

How to know symptoms of Strep Throat?
How to know symptoms of Breast Cancer
How to know about kidney stone pain?
What are causes undeveloped breasts?
எலும்புக் குழல் தொற்று என்றால் என்ன?
எலும்பில் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படுவது எலும்புக் குழல் தொற்று ஆகும். இது பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய் தீவிரமான அல்லது நீண்டகால நோயாக இருக்கலாம். இந்த எலும்பழற்சி எலும்பில் வீக்கம் உண்டாவதற்கு வழிவகுக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நோயினால் ஏற்படும் முதன்மையான அறிகுறிகள் பின்வருமாறு:
எலும்புகளில் வலி.
அதிகமாக வியர்த்தல்.
காய்ச்சல்.
குளிர்தல்.
அசௌகரியம்.
வீக்கம்.
உடல் சூடாக இருப்பது போல் உணர்தல்.
தொற்றுநோய் ஏற்பட்டுள்ள பகுதியில் வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எலும்பு நோய்தொற்று ஏற்பட மிகவும் பொதுவான காரணியாக இருப்பது பாக்டீரியா ஆகும்.இருப்பினும், எலும்பு நோய்த் தொற்றானது பூஞ்சை மற்றும் பிற கிருமிகள் மூலமாகவும் ஏற்படலாம். ஸ்டாஃபிலோகாக்கஸ் என்பது எலும்புக் குழல் தொற்று உருவாக்குவதற்கான பொதுவான பாக்டீரியா இனமாக அறியப்படுகிறது.
எலும்புக் குழல் தொற்று ஏற்பட்டுள்ள தோல் அல்லது தசைகளின் வழியாக அருகில் உள்ள எலும்புகளுக்கும் இந்த பாக்டீரியா பரவக் கூடும்.
எனினும், வேறு ஏதேனும் மருத்துவ நிலைமைகளின் காரணமாகவும் ஒருவர் இந்த எலும்புக் குழல் தொற்று நோய் வருவதற்கான ஆபத்தில் தள்ளப்படுகிறார்.
இந்நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
நீரிழிவு.
குறைந்த இரத்த ஓட்டம்.
சமீப காலத்தில் ஏற்பட்ட காயம்.
சமீப காலத்தில் செய்து கொண்ட எலும்பு அறுவை சிகிச்சை.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
எலும்புக் குழல் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவதற்குப் பல சோதனைகள் உள்ளன. இந்நோய்க்கான சோதனைகள் பின்வருமாறு:
எலும்பு திசு பரிசோதனை.
சி டி ஸ்கேன் மற்றும் டெக்ஸா போன்ற எலும்பு நோய் சார்ந்த ஸ்கேன்கள்.
பாதிக்கப்பட்ட பகுதியில் எக்ஸ்-ரே ஸ்கேன் எடுத்தல்.
அறிகுறிகளை பரிசோதித்தல்.
மொத்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை (சி.பி.சி).
எலும்பின் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
இந்த பரிசோதனைகள் எலும்பு நோய்த்தொற்றின் தீவிர நிலையை தீர்மானிக்க உதவுகின்றன.
எலும்புக் குழல் தொற்று நோய்க்கான சிகிச்சை முறையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடும் அடங்கும்.இந்த மருந்துகள் தொற்றினை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அகற்றுவதில் பெரும் உதவி புரிகின்றன.இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உபயோகித்தவுடன் இது உடலில் வேலை செய்ய 4-6 வாரங்கள் எடுத்து கொள்கிறது மற்றும் இந்த தொற்றினை முற்றிலும் அகற்ற இதற்கான சிகிச்சை முறையை தொடர்ந்து மோற்கொள்ள வேண்டும்.
கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் உடலில் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது எலும்பின் சேதம் கடுமையானதாக இருந்தாலோ எலும்பில் உள்ள இறந்த திசுவை நீக்கி இந்த தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க அறுவை சிகிச்சை முறை தேவைப்படலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எலும்புத் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.மேலும் இந்நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளின் பாதிக்கப்பட்ட பகுதியை உடலிலிருந்து அகற்றுதல் மேலும் இதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க தேவையான ஒன்றாகும்.