Overactive Bladder
Overactive Bladder
Listen to this article

What is Overactive Bladder Syndrome? மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி என்றால் என்ன?

Overactive bladder syndrome is a condition in which a person suddenly has an irresistible urge to urinate. This urge can appear suddenly at any time of the day. This syndrome is very common and can cause difficulty in one’s daily life and embarrassment in social situations.

What are the main effects and symptoms of the disease?

The following symptoms may be seen in overactive bladder syndrome:

Urgency to urinate: This urge is unavoidable and can be very difficult to put off. This can lead to involuntary leakage of urine known as urge incontinence.

Increased frequency of urination: Overactive bladder syndrome can cause you to urinate less frequently than usual. (Also read: Causes and Prevention of Frequent Urination).

Sleep disturbance: A person may wake up several times during the night due to the sudden urge to urinate. It can cause sleep disturbances.

Symptoms of overactive bladder syndrome can worsen if you are stressed or anxious.

What are the main causes of infection?

The underlying cause of overactive bladder syndrome is excessive contraction of the bladder muscle. It creates the urge to urinate. The cause of abnormal contraction of these muscles is not clear.

In people with this syndrome, the bladder sends a false signal to the brain that the bladder is full.

In some cases, overactive bladder syndrome can also be a result of the following brain-related diseases:

Parkinson’s disease.

Spinal cord disease.

Brain injury.

How is it diagnosed and treated?

To diagnose overactive bladder syndrome, a doctor will usually ask about symptoms and then perform a physical exam or urine test to look for signs of infection. A urine flow test may be done to assess the strength of the urine stream and to determine whether urine is completely emptying from the bladder.

Treatment for this disease includes bladder training. This exercise accustoms a certain degree of control over bladder movement and a delay in the urge to urinate. Medications may also be prescribed, but lifestyle changes, such as doing hip exercises, avoiding caffeine and alcohol, and reducing heavy lifting, play an important role in managing symptoms.

In some cases, surgery may be recommended.

Overactive Bladder

How to know types of Breast Pain?

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி என்றால் என்ன?

மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி ஒருவருக்கு திடீரென்று சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற தவிர்க்கமுடியாத ஒரு உணர்வு ஏற்படும் ஒரு நிலை ஆகும். ஒரு நாளின் எந்த நேரத்திலும் இந்த தூண்டுதல் திடீரென்று தோன்றக்கூடும். இந்த நோய்க்குறி மிகவும் பொதுவானது மற்றும் இது ஒருவரின் அன்றாட வாழ்வில் சிரமத்தையும் சமூக சூழ்நிலைகளில் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறியில் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:

சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற அவசர உணர்வு: இந்த அவசரம் தவிர்க்க முடியாதது மற்றும் தள்ளிப்போட மிகவும் கடினமாக இருக்கலாம். இது அவசர சிறுநீர் தற்கட்டுப்பாடின்மை என்று அறியப்படும் அனிச்சையான சிறுநீர்க் கசிவுக்கு வழிவகுக்கும்.

சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளி அதிகரித்தல்: மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி, வழக்கத்தைவிட குறைந்த இடைவெளிகளில் சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும். (மேலும் வாசிக்க: அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணங்கள் மற்றும் தடுப்புமுறைகள்).

தூக்கத் தொந்தரவு: சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற திடீர் தூண்டுதலின் காரணமாக, இரவுநேரங்களில் ஒருவர் பல முறை எழுந்திரிக்க வேண்டியிருக்கும். இது தூக்க தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம் அல்லது கவலை இருந்தால், மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறியின் அறிகுறிகள் மோசமடையலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறியின் அடிப்படை காரணம், சிறுநீர்ப்பை தசையின் அதிகப்படியான சுருக்கம் ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை உருவாக்குகிறது. இந்த தசைகள் அசாதாரணமாக சுருங்குவதன் காரணம் தெளிவாக தெரியவில்லை.

இந்த நோய்க்குறி உள்ள நபர்களில் சிறுநீர்ப்பை தனது மூளைக்கு சிறுநீர்ப்பை நிரம்பிவிட்டதாக தவறான சமிக்ஞையை அனுப்புகிறது.

சில சந்தர்ப்பங்களில் கீழ்வரும் மூளை தொடர்பான நோய்களின் விளைவாகவும் மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி இருக்கலாம்:

பார்கின்சன் நோய்.

தண்டுவட மரப்பு நோய்.

மூளைத்தண்டுவட காயம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறியைக் கண்டறியும் பொருட்டு மருத்துவர் வழக்கமாக அறிகுறிகளைப் பற்றி விசாரிக்கிறார், பின்னர் தொற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய உடல் பரிசோதனை அல்லது சிறுநீர் சோதனையை மேற்கொள்வார். சிறுநீர் ஓட்டத்தின் வலிமையை மதிப்பிடுவதற்காகவும் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் முற்றிலும் வெளியேறுகிறதா என்பதை அறியவும் சிறுநீர் ஓட்ட சோதனை செய்யப்படலாம்.

இந்த நோய்க்கான சிகிச்சையில் சிறுநீர்ப்பை பயிற்சி அடங்கும். இந்த பயிற்சி சிறுநீர்ப்பை இயக்கத்தின் மீது குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டையும் சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலில் தாமதத்தையும் பழக்கப்படுத்துகிறது. மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம் ஆனால் இடுப்பு பயிற்சிகள் செய்வது, காஃபின் மற்றும் மதுவை தவிர்ப்பது, மற்றும் அதிக எடை தூக்குவதைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள், அறிகுறிகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.