To Read this Post , Use Translator for Your language

How to know symptoms of Paget’s Disease? - healthtamil.com
Paget's Disease
Paget's Disease
Listen to this article

What is Paget’s disease? பேஜெட்டின் நோய் என்றால் என்ன?

Paget’s disease is a medical condition that leads to abnormal bone formation due to an inherited genetic mutation or mutation. Due to unbalanced bone remodeling, abnormal bone is placed incorrectly in the skeleton. In this disease, the new bone is weak and brittle. Next to osteoporosis, this disease is the second most common disease. A common bone growth defect. If someone with this disease sustains a fracture, the healing time is increased due to the defect in bone growth. This is most common in the bones of the legs, skull, pelvis, and spine.

What are the main effects and symptoms of the disease?

The effects and symptoms of this disease include:

Bone or joint pain.

Skin redness.

Softness or smoothness.

Swelling in the bones or joints.

Bone fracture.

Abnormally large bones.

Cartilage damage.

Presence of bones and joints.

The expansion of the bones puts pressure on the nerves, causing loss of movement and loss of sensation in other parts of the body.

Abdominal pain.

Constipation.

Weakness.

Fatigue.

loss of appetite

What are the main causes of infection?

The exact cause of this is still unknown. However, the following factors are believed to cause this disease:

Abnormal activity of osteoclasts (cells that resorb old bone) and osteoblasts (cells that make new bone).

Certain types of infections in bone cells caused by the rubella virus.

If the condition runs in families, tradition is another factor.

Age is another important factor, as the disease rarely occurs in people under 40 years of age.

How is it diagnosed and treated?

This condition can be diagnosed in various ways:

Physical examination

It helps detect differences in bone shape and size.

Blood tests

The presence of phosphatase in the blood is a sign of Paget’s disease.

X-rays test

It helps confirm disease and detect fractures and low bone density.

Although a complete cure is not possible, treatments can slow bone loss and limit the effects of the disease. Treatments include:

If Paget’s disease has caused severe fractures or bone damage or degeneration, surgery is the treatment of choice.

Anti-inflammatory drugs.

Analgesics (pain relievers).

Biophosphonate drugs that help inhibit the activity of osteoclasts.

Paget’s Disease

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

பேஜெட்டின் நோய் என்றால் என்ன?

பேஜெட்டின் நோய் என்பது மரபுவழி மரபணு மாற்றம் அல்லது பிறழ்வு காரணமாக தவறான எலும்பு உருவாவதற்கு வழிவகுக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும்.சமநிலையற்ற எலும்பு மறுவடிவமைப்பு காரணமாக, எலும்புக்கூட்டில் தவறான முறையில் அசாதாரண எலும்பு வைக்கப்படுகிறது.

இந்த நோயில் புதிதாக உள்ள எலும்பு, பலவீனம் மற்றும் உடையும் தன்மையைக் கொண்டது.ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு அடுத்ததாக, இந்த நோய் இரண்டாவது மிகவும் பொதுவான எலும்பு வளர்ச்சி குறைபாடாகும்.இந்த நோயால் பாதிக்கபட்ட ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் எலும்பு மருவளர்ச்சியில் இருக்கும் குறைபாட்டின் காரணமாக நோயின் குணமடையும் காலம் அதிகரிக்கும்.இது கால்கள், மண்டைஓடு, இடுப்பெலும்பு மற்றும் முதுகுத் தண்டுவட எலும்பில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்த நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

எலும்பு அல்லது மூட்டு வலி.

தோல் சிவப்பு நிறமாதல்.

மிருதுத்தன்மை அல்லது மென்மையாதல்.

எலும்புகள் அல்லது மூட்டுகளிள் வீக்கம்.

எலும்பு முறிவு ஏற்படுதல்.

அசாதாரணமான பெரிய எலும்புகள்.

குருத்தெலும்பு சேதம்.

எலும்புகள் மற்றும் மூட்டுகள் இருகுதல்.

எலும்புகளின் விரிவடைவதால் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, உடம்பின் பிற பகுதிகளிள் அசையும் தன்மை இழப்பு மற்றும் உணர்வு இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

வயிற்று வலி.

மலச்சிக்கல்.

பலவீனம்.

களைப்பு.

பசியின்மை.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.ஆனாலும், கீழே குறிப்பிட்டுள்ள காரணிகள் இந்த நோயை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது:

ஆஸ்டியோக்லாஸ்ட்ஸ் (பழைய எலும்பை உறிஞ்சும் செல்கள்) மற்றும் ஆஸ்டியோப்லாஸ்ட்ஸ் (புதிய எலும்பை உருவாக்கும் செல்கள்) ஆகியவற்றின் அசாதாரண செயல்பாடு).

ருபெல்லா வைரஸ் காரணமாக எலும்பு செல்களில் ஏற்படும் சில வகையான நோய்த்தொற்றுகள்.

குடும்பங்களில் இந்த நிலை நீடித்திருந்தால், பாரம்பரியம் என்பது மற்றொரு காரணியாகும்.

40 வயதிற்கு உட்பட்ட நபர்களில் இந்த நோய் அரிதாக காணப்படுவதால், வயது மற்றொரு முக்கிய காரணியாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

இந்த நிலையை பல்வேறு முறைகளில் கண்டறியலாம்:

உடல் பரிசோதனை

இது எலும்பின் வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றில் ஏற்படும் வேறுபாடுகளை கண்டுபிடிக்க உதவுகிறது.

இரத்த பரிசோதனைகள்

இது இரத்தத்தில் பாஸ்படேஸ் இருப்பது பேஜெட்’ஸ் நோய்க்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.

எக்ஸ்-கதிர்கள் சோதனை

இது நோயை உறுதிப்படுத்தவும் முறிவுகள் மற்றும் குறைந்த எலும்பு அடர்த்தியை கண்டறியவும் உதவுகிறது.

முழுமையாக குணமடைவது சாத்தியமில்லை என்றாலும், சிகிச்சைகள் எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்தலாம் மற்றும் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.இதன் சிகிச்சைகள் பின்வருமாறு:

பேஜெட்டின் நோய் காரணமாக கடுமையான எலும்பு முறிவுகளோ அல்லது எலும்பு சேதமோ அல்லது சிதைவோ ஏற்பட்டிருந்தால், அறுவை சிகிச்சையே சரியான சிகிச்சையாகும்.

அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.

அனால்ஜசிக்ஸ் (வலி நிவாரணிகள்).

ஆஸ்டியோக்லாஸ்ட்ஸின் நடவடிக்கைகளை தடுப்பதில் உதவும் பையோபாஸ்போனேட் மருந்துகள்.