Intestinal motility
Intestinal motility
Listen to this article

What is Intestinal motility? Paralytic Ileus குடல் அசைவிழப்பு என்றால் என்ன?

Paralysis of the intestinal muscles affects digestion. This pathological condition is also known as paralytic ileus (intestinal immobility) or ileus. As a result, there is a blockage in the esophagus and the passage of food into the colon is obstructed. The condition is more common in adults, although it is sometimes seen in children. This is life-threatening and requires immediate medical attention.

What are the main effects and symptoms of the disease?

Its common effects and symptoms include:

Nausea.

vomiting

loss of appetite

diarrhea

Lack of gas.

Abdominal pain.

Stomach salt.

Bad breath.

Severe constipation.

In some cases, this can lead to jaundice, infection or intestinal rupture.

What are the main causes of infection?

Paralytic ileus is caused by various causes:

Family history of intestinal or stomach disorders.

An imbalance of electrolytes in the body.

Intestinalinjury during abdominal surgery.

Gallstones.

Intestinalcancer.

Intestinal injuries.

Intestinal obstruction by tumors.

Rapid weight loss.

Foreign substances swallowed with food.

Parkinson’s disease.

Twisting of the Intestinal(volvulus).

Diverticulitis.

Decreased blood supply to the intestines (Strangulated hernia).

How is it diagnosed and treated?

The doctor will perform a physical exam to check for an abdominal hernia or hernia. Some of the tests used for this are:

Abdominal X-rays test.

Abdominal CT scan.

Barium enema – This is a special X-ray test of the colon, rectum and colon.

Abdominal and pelvic ultrasound.

Endoscopy of the upper digestive tract.

After the diagnosis, the patient is given various treatments such as the following:

Surgery – helps to remove obstructions that cause intestinal immobility.

A tube is inserted through the rectum to repair the volvulus in the colon.

A nasogastric tube is placed through the nose into the stomach to remove contents of the stomach and small intestine.

Intestinal motility

How to know types of Breast Pain?

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

குடல் அசைவிழப்பு என்றால் என்ன?

குடல் தசைகளில் செயல் முடக்கம் ஏற்பட்டு அது செரிமானத்தை பாதிக்கிறது. இந்த நோய்க்குரிய நிலை பராலிடிக் இலியஸ் (குடல் அசைவிழப்பு) அல்லது இலியஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பாதையில் தடை ஏற்பட்டு பெருங்குடலுக்குள் உணவு செல்வது தடைபெருகிறது. இந்நிலை பெரியவர்களில் மிகவும் அதிகமாக காணப்படுகிறது, எனினும் குழந்தைகளிடமும் சில சமயங்களில் காணப்படுகிறது. இதனால் உயிருக்கு அபாயம் உள்ளது, எனவே உடனடியான மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

குமட்டல்.

வாந்தி.

பசியின்மை.

வயிற்றுப்போக்கு.

வாயு பிரியாமலிருத்தல்.

வயிற்று வலி.

வயிறு உப்பல்.

துர்நாற்றமான மூச்சு.

கடுமையான மலச்சிக்கல்.

சில சமயங்களில், இது மஞ்சள் காமாலை, நோய்த்தொற்று அல்லது குடல் கிழிதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பல்வேறு காரணங்களால் பராலிடிக் இலியஸ் ஏற்படுகிறது:

குடும்ப வரலாறு குடல் அல்லது வயிற்று கோளாறுகள்.

உடலில் மின்பகுளிகளின் சீரற்ற நிலை.

வயிற்று அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் குடல் காயம்.

பித்தப்பை கற்கள்.

குடல் புற்றுநோய்.

குடல் காயங்கள்.

கட்டிகள் மூலம் குடலில் ஏற்படும் தடுப்பு.

அதிவேக எடை இழப்பு.

உணவுடன் விழுங்கப்படும் அயல் பொருட்கள்.

பார்கின்சன் நோய்.

குடல் முறுக்கிக்கொள்ளுதல் (வால்வுலஸ்).

டைவர்டிகுலைடிஸ்.

குடல்களுக்கு இரத்த விநியோகக் குறைவு (ஸ்ட்ராங்குலேடட் ஹெர்னியா).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

வயிற்று உப்பல் அல்லது ஹெர்னியா உள்ளதா என்று மருத்துவர் ஒரு உடல் பரிசோதனை செய்வார். இதற்காக பயன்படுத்தப்படும் சோதனைகள் சில:

வயிற்று எக்ஸ்-கதிர்கள் சோதனை.

அடிவயிற்று சி.டி ஸ்கேன்.

பேரியம் எனீமா – இது கோலான், மலக்குடல் மற்றும் பெருங்குடல் ஆகியற்றிற்கான சிறப்பு எக்ஸ்-கதிர்கள் சோதனை ஆகும்.

வயிறு மற்றும் இடுப்பிற்கான அல்ட்ராசவுண்ட்.

மேல் செரிமான பாதைக்கான எண்டோஸ்கோபி.

நோயறிதலுக்குப் பின், நோயாளிக்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றைப் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன:

அறுவை சிகிச்சை – குடல் அசைவிழப்பை விளைவிக்கும் இடையூறுகளை அகற்ற உதவுகிறது.

மலக்குடல் வழியாக ஒரு குழாயை நுழைத்து பெருங்குடலில் உள்ள வால்வுலஸ் சரி செய்யப்படுகிறது.

வயிறு மற்றும் சிறுகுடலின் உள்ளிருக்கும் பொருட்களை அகற்ற, மூக்கு வழியாக நாஸ்ட்ரோகாஸ்ட்ரிக் குழாய் வயிற்றில் வைக்கப்படும்.