Parasitic Infection
Parasitic Infection
Listen to this article

What are parasitic infection ? ஒட்டுண்ணி தொற்றுநோய்கள்

A parasite is defined as an organism that not only lives inside the human body but also has the ability to obtain the necessary nutrients from it.

Parasites are the causative agents of infections in the human body, and these are called parasitic infections. A variety of parasites, ranging from unicellular to multicellular, are responsible for infection in humans.

What are its main signs and symptoms?

Parasites can infect any part of the body. Depending on the organism involved and the route of infection, signs and symptoms may vary and include:

Some infections can manifest as stomach discomfort, abdominal cramps and abdominal pain.

Nausea, vomiting and diarrhea may also occur along with loss of appetite.

Sexually transmitted parasitic infections can cause genital discharge, pain when urinating, foul odor, and an itchy or irritated feeling.

In addition to the above-mentioned symptoms, a person may also develop fever or skin rashes.

Parasitic infections in the brain can lead to seizures and loss of consciousness.

What are the main reasons for this?

Some of the parasites that can cause infection include protozoa (single-celled organisms) and helminths (worms).

Parasites enter the body in various ways. The most common way humans can become infected is by eating contaminated food or drinking contaminated water.

The infection can also be spread through sexual intercourse with an infected person.

Infection can also occur through contaminated blood and contaminated clothing or contaminated household items.

The infection is more common in poor sanitation, overcrowded areas and rural areas.

Migrants from underdeveloped countries and frequent travelers are at greater risk.

Mosquitoes and other insects transmit these diseases to humans, which is how things like malaria occur.

People with a weakened immune system due to some other disease are at a higher risk of developing this infection. Examples are conditions like cancer, HIV and diabetes.

What is its diagnosis and treatment?

When your body is infected, a blood test can reveal changes in the number of blood cells and other signs of infection.

Additionally, urine and stool samples are collected and tested for parasites under a microscope.

Imaging procedures are performed to detect any damage to internal organs or tissues. These include X-rays, CT scans, ultrasounds and MRIs.

Tests such as endoscopy or colonoscopy may be performed to check the health of the gastrointestinal tract.

Medicines are the first line of treatment for infection. These are:

Specific antimicrobials are prescribed to eliminate parasites. Depending on the organism causing the infection, the types of drugs are advised.

Fluid replacement is indicated if fluid loss occurs with severe weakness.

Infected persons are advised to maintain personal hygiene and consume well-cooked food in clean conditions.

Parasitic Infection

How to know Symptoms of Skin Infections?

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Strep Throat?

ஒட்டுண்ணி தொற்றுநோய்கள் என்றால் என்ன?

ஒட்டுண்ணி என்பது மனித உடலுக்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உயிரினம் மட்டுமின்றி தேவையான ஊட்டச்சத்தை அதுவே பெறக்கூடியத்திறன் கொண்ட உயிரினம் என்று வகையறுக்கப்படுகிறது.

மனித உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கான காரணிகள் ஒட்டுண்ணிகளே ஆகும், இவையே ஒட்டுண்ணி தொற்றுநோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்களில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு யுனிசெல்லுலாரிலிருந்து மல்டிசெல்லுலார் வரை உள்ள பல்வேறு வகைகளான ஒட்டுண்ணிகள் காரணிகளாக இருக்கின்றன.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

உடலின் எந்த பாகத்திலும் ஒட்டுண்ணிகள் நோய்த்தொற்றினை ஏற்படுத்தலாம். நோய்த்தொற்றில் ஈடுபட்டிருக்கும் உயிரினம் மற்றும் அது ஏற்பட்டிருக்கும் வழியை பொறுத்து, அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் வேறுபடலாம், அவை பின்வருமாறு:

சில நோய்த்தொற்றுகள் இரைப்பை அசௌகரியம், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்றவற்றை வெளிப்படுத்தக்கூடியவை.

குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் பசியின்மை போன்றவைகளும் ஏற்படலாம்.

பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் பிறப்புறுப்பு வெளியேற்றம், சிறுநீர் கழிக்கும் போது வலி, துர்நாற்றம் மற்றும் அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வு ஆகியவை ஏற்பட காரணமாக இருக்கின்றன.

மேல்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுடன் கூடுதலாக ஒருவருக்கு காய்ச்சல் அல்லது தோல் தடிப்புகள் போன்றவைகளும் ஏற்படலாம்.

மூளையில் ஏற்படும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் வலிப்பு மற்றும் விழிப்புணர்வு இழப்பு போன்றவைக்கு வழிவகுக்கும்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

நோய்த்தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய சில ஒட்டுண்ணிகளுள் அடங்குபவை புரோட்டோசோவா (ஒற்றை செல் கொண்ட உயிரினங்கள்) மற்றும் ஹெல்மின்த்ஸ் (புழுக்கள்) ஆகியவை ஆகும்.

ஒட்டுண்ணிகள் உடலினுள் பல்வேறு வழிகளில் நுழைகின்றது. மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய மிக பொதுவான வழி மாசுபட்ட உணவு உட்கொள்தல் அல்லது மாசுபட்ட தண்ணீர் அருந்துதல் ஆகும்.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாலும் இந்த தொற்று பரவலாம்.

பாதிக்கப்பட்ட இரத்தம் மற்றும் மாசுபட்ட உடை அல்லது மாசுபட்ட வீட்டு பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலமும் இந்த தொற்று ஏற்படலாம்.

மோசமான சுகாதாரம், கூட்ட நெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் ஆகியவைகளில் இந்த நோய்த்தொற்று மிக பொதுவாக ஏற்படக்கூடியது.

இன்னும் வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து இடம்பெயர்பவர்களுக்கும், அடிக்கடி பயணிப்பவர்களுக்கும், அதிக ஆபத்தில் உள்ளனர்.

கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகள் மனிதர்களுக்கு இந்நோய்களை பரிமாற்றுகின்றன, அதாவது மலேரியா போன்ற நிகழ்வுகள் இவ்வாறே ஏற்படுகின்றன.

வேறு சில நோய்களால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு இந்த தொற்றுநோய் வளர்வதற்கான அதிக அபாயம் உள்ளது. உதாரணத்திற்கு புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் நீரிழிவு போன்ற நிலைகள் ஆகும்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

உங்கள் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் போது, இரத்த சோதனை மேற்கொள்வதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் நோய்த்தாக்கத்துக்கான மற்ற அடையாளங்களையும் வெளிப்படுத்துகின்றது.

கூடுதலாக, சிறுநீர் மற்றும் மலத்தின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு நுண்ணோக்கியில் மூலம் ஒட்டுண்ணிகளுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள் உறுப்புகள் அல்லது திசுக்களிள் ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை கண்டறிய இமேஜிங் செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை எக்ஸ்-கதிர்கள், சிடி ஸ்கேன்கள், அல்ட்ராசவுண்ட்ஸ் மற்றும் எம்ஆர்ஐ ஆகியவை ஆகும்.

இரைப்பைக் குழாயின் ஆரோக்கியத்தை சரிபார்க்க, எண்டோஸ்கோபி அல்லது கொலோனாஸ்கோபி போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

தொற்றுநோய்க்கான சிகிச்சையின் முதலில் பங்குவகிப்பது மருந்துகளே ஆகும். இவை:

ஒட்டுண்ணிகளை நீக்க குறிப்பிட்ட ஆண்டிமைக்ரோபையல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தொற்றினை ஏற்படுத்திய உயிரினத்தை பொறுத்து மருந்து வகைகள் அறிவுறுத்தப்படுகின்றன.

கடுமையான பலவீனத்துடன் திரவ இழப்பு ஏற்பட்டால் திரவ மாற்றம் செய்யுமாறு குறிப்பிடப்படுகிறது.

நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் சுய ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் சுத்தமான சூழ்நிலைகளில் நன்கு சமைக்கப்பட்ட உணவை உட்கொள்ளமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.