Bending of penis
Bending of penis
Listen to this article

Symptoms of Bending of penis Peyronie’s disease-பெய்ரோனி நோய் / ஆண்குறி வளைந்து காணப்படுதல் என்றால் என்ன?

What is Peyronie’s disease / penile curvature?

Peyronie’s disease is a connective tissue disease of the penis. Inelastic (non-elastic) fibrous tissue forms in the inner part of the penis, causing the penis to bend. A person with this disease experiences stiffness and pain during intercourse, causing sexual dissatisfaction. Dealing with this problem psychologically can be challenging. .So, it is important to consult a urologist for its treatment.

What are the main effects and symptoms of the disease?

The effects and symptoms of Peyronie’s disease, also known as curved penis, include:

Plaque (lump) or hard tissue on the penis.
Bending of the penis upwards or downwards.
An hourglass-like appearance of the penis.
The penis is small.
the pain
What are the main causes of infection?

The main causes of Peyronie’s disease are:

Repetitive injury to the penis: Injury to the penis during sports, accidents and frequent intercourse can cause inflammation in the area and lead to plaque formation. Stress can worsen the condition.
The second cause of this disease is genetic transmission.
How is it diagnosed and treated?

The disease is diagnosed by a urologist by examining the penis. Knowing the time of penile injury and improvement in penile stability and how the disease affects your sex life is helpful in diagnosing this disease.

Sensing the penis in a relaxed state helps identify the location and extent of penile plaque growth.
Measurement of penile curvature while erect.
Duplex Doppler test to determine calcium formation, location, and amount in tissues.
Ultrasonography examination of the penis.
A blood test may be recommended for people with diabetes or hormone fluctuation problems.
If penile curvature is not affecting your sex life, your doctor may not recommend any treatment. Treatment options include:

Medication:

Drugs that reduce the size of fibroids are given topically, orally, or through wounds or iontophoretically (using electricity) through the skin.
Drugs that reduce oxidative stress.
Non-surgical treatment options include:

Penile twitching.
Vacuum erection device.
Radiation therapy.
Treatment of hyperthermia.
Treatment of stone breaking by shock vibration waves.
surgery

Peyronie’s disease can be treated in many ways. With proper counseling from a physical therapist and psychological counselor, the psychological stress caused by this disease can be overcome. It is better to consult your doctor immediately to get proper treatment for this disease.

Bending of penis

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

பெய்ரோனி நோய் / ஆண்குறி வளைந்து காணப்படுதல் என்றால் என்ன?

பெய்ரோனி நோய் என்பது ஆண்குறியின் இணைப்பு திசு நோயாகும்.ஆண்குறியின் உட்பகுதியில் மீள்தகவற்ற (நான்- எலாஸ்டிக்) நார் திசு உருவாகி, ஆண்குறி வளைவதற்கு வழிவகுக்கின்றது.இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடலுறவு கொள்ளும் போது ஆண்குறியில் விறைப்பு ஏற்பட்டு வலி உண்டாகிறது, இதனால் உடலுறவில் அதிருப்தி ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை உளவியல் ரீதியாக கையாள்வது என்பது  சவாலான ஒன்றாக இருக்கலாம்.எனவே, இதன் சிகிச்சைக்கு சிறுநீரக மருத்துவரை அணுகுவது முக்கியமான ஒன்றாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

வளைந்த ஆண்குறி என குறிப்பிடப்படும் பெய்ரோனி நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

ஆண்குறி மீது பிளேக் (கட்டி) அல்லது கடுமையான திசுக்கள்.

ஆண்குறி கீழ்நோக்கி அல்லது மேல்நோக்கி வளைந்து காணப்படுதல்.

ஆண்குறியின் மணற்கடிகை போன்ற தோற்றம்.

ஆண்குறி சிறிதாவது.

வலி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெய்ரோனி நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

ஆண்குறியில் மீண்டும் மீண்டும் காயம் ஏற்படுதல்: விளையாட்டு, விபத்து மற்றும் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல் போன்ற நிகழ்வின் போது ஆண்குறியில் ஏற்படும் காயம் அப்பகுதியில அழற்சியினை ஏற்படுத்தி பிளேக் உருவாக வழிவகுக்கிறது.இதனால் ஏற்படும் மனஅழுத்தம் இந்நிலையை மேலும் மோசமடைய செய்கிறது.

இந்த நோய்க்கான இரண்டாவது காரணம் மரபணு பரிமாற்றமாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஆண்குறியை பரிசோதனை செய்வதன் மூலம் இந்நோய் சிறுநீரக மருத்துவரால் கண்டறியப்படுகிறது.ஆண்குறியில் காயம் ஏற்பட்ட நேரம் மற்றும்  ஆண்குறி ஸ்திரத்தன்மை முன்னேற்றம் மற்றும் இந்நோய் உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதனை அறிதல் இந்நோயாரித்தலை கண்டறிய பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்குறியை தளர்வு நிலையில் உணர்தல் ஆண்குறியில் உள்ள பிளேக் வளர்ச்சியின் இடத்தையும் அளவையும் அடையாளம் காண உதவுகிறது.

விறைப்பாக இருக்கும் நிலையில் ஆண்குறி வளைவு அளவீடு.

திசுக்களில் உள்ள கால்சியம் உருவாக்கம், இருப்பிடம், மற்றும் அளவு முதலியவற்றை அறிய டியூப்ளக்ஸ் டாப்ளர் சோதனை.

ஆண்குறியில் அல்ட்ராசோனோகிராபி பரிசோதனை.

நீரிழிவு நோய் அல்லது ஹார்மோன் ஏற்ற இறக்க பிரச்சனை போன்றவை உள்ளவர்களுக்கு இரத்த ஆய்வு சோதனை பரிந்துரைக்கப்படலாம்.

ஆண்குறிகுறியில் காணப்படும் வளைவ தன்மை உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கவில்லை எனில், உங்கள் மருத்துவர் எந்த சிகிச்சையும் பரிந்துரைக்காமல் இருக்கலாம்.இதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

மருந்து:

நார்த்திசுக்கட்டியின் அளவைக் குறைக்கும் மருந்துகள் மேற்பூச்சாக, வாய்வழியாக அல்லது காயங்களின் வழியாக அல்லது அயன்டோஃபோரெட்டிக் (மின்சாரம்  பயன்படுத்தி) சருமத்தின் வழியாக வழங்கப்படும்.

ஆக்ஸிஜனேற்ற அயற்சியைக் குறைக்கும் மருந்துகள்.

அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

ஆண்குறி இழுக்கை.

வெற்றிட விறைப்பு சாதனம்.

கதிர்வீச்சு சிகிச்சை.

அதிவெப்பத்துவம் சிகிச்சை.

அதிர்ச்சி அதிர்வு அலைகள் மூலம் கல் உடைத்தல் சிகிச்சை.

அறுவை சிகிச்சை

பெய்ரோனி நோய்க்கு பல வழிகளில் சிகிச்சை அளிக்கலாம்.உடலுறவு ஆலோசகர் மற்றும் உளவியல் ஆலோசகரின் முறையான ஆலோசனைகள் மூலம் இந்த நோயின் காரணமாக ஏற்படும் உளவியல் அழுத்தங்களை எதிகொள்ள முடிகிறது.இந்நோய்க்கு முறையான சிகிச்சையை பெற உடனடியாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையை அணுகுவது நல்லது.