(Collapsed lungs) Pneumothorax-நுரையீரலைச் சுற்றி காற்று சூழ்ந்திருக்கும் நிலை/சிதைந்த நுரையீரல்
What is pneumothorax (a condition in which air surrounds the lungs / collapsed lung)?
The inner and outer walls of the lungs are covered by a membrane called pleura. Between these two walls is a space called the pleural cavity, which is filled with air or fluid, but it is usually stagnant and contains a small amount of pleural fluid.
When air enters this cavity, i.e., between the two pleurae, pneumothorax occurs. Secondary pneumothorax is a consequence of underlying lung pathology. In the absence of any disease, primary pneumothorax occurs and is spontaneous.
In some cases, trapped air can alter the heart and other structures such as the esophagus and affect blood flow. This condition is called tension pneumothorax. It can be life-threatening and requires emergency medical treatment.
What are the main effects and symptoms of the disease?
The symptoms of this disease vary according to the type of pneumothorax. Unless the condition is a tension pneumothorax, patients will experience minimal discomfort and may not realize they have a pneumothorax. Shortness of breath and chest pain are the most common symptoms.
These may appear days before patients seek medical attention. Low oxygen, increased respiratory rate and low blood pressure are some of the symptoms. The symptoms of tension pneumothorax are very obvious. It occurs in patients with severe trauma, respiratory movement, and ventilation. The patient is short of breath due to lack of oxygen. Initially, palpitations and dyspnea occur, followed by hypoxia (lack of oxygen), cyanosis and hypoventilation. The trachea is pushed to one side. Rarely, the patient may experience abdominal pain.
What are the main causes of infection?
Air can enter a space called the pleural cavity due to a rupture or injury of a pleura. The lungs are affected internally, resulting in difficulty breathing. Tissue injury allows air to enter the pleural cavity and prevents air from escaping, causing tension pneumothorax. Thus, the lungs become more and more stagnant with each breath.
Diseases like smoking, asthma, tall-thin body type, COPD, cystic fibrosis increase the incidence rate of pneumothorax.
How is it diagnosed and treated?
The diagnosis is confirmed by a physical exam, X-rays, or a CT scan. Treatment depends on the nature and extent of the pneumothorax. In cases of minor pneumothorax, patients may be discharged on the same day after prompt treatment and follow-up medical monitoring is required.
In some serious cases or cases of tension pneumothorax, the needle should be immediately inserted into the chest to allow air to escape. Also, a chest tube must be inserted. This is likely to happen again; Therefore, security must be ensured.
How to know symptoms of Breast Cancer
How to know symptoms of Vaginal Cancer?
How to know about kidney stone pain?
நியூமோதோராக்ஸ் (நுரையீரலைச் சுற்றி காற்று சூழ்ந்திருக்கும் நிலை / சிதைந்த நுரையீரல்) என்றால் என்ன?
நுரையீரலின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் புளூரா என்ற ஜவ்வினால் மூடப்பட்டிருக்கிறது. காற்று அல்லது திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த இரண்டு சுவர்களுக்கு இடையில் பூளூரல் கேவிட்டி எனப்படும் இடைவெளி உள்ளது, ஆனால் இது வழக்கமாக நிலைக்குலைந்து ஒரு சிறிய அளவு பூளூரல் திரவத்தைக் கொண்டுள்ளது.
இந்த குழிக்குள் காற்று நுழையும்போது, அதாவது, இரண்டு புளூராக்களுக்கு இடையில், நியூமோதோராக்ஸ் ஏற்படுகிறது. இரண்டாம் நிலை நியூமோதோராக்ஸ் என்பது அடிப்படை நுரையீரல் நோயியலின் ஒரு விளைவாகும். எந்தவொரு நோயும் இல்லாத நிலையில், முதன்மை நியூமோதோராக்ஸ் ஏற்படுகிறது மற்றும் இது தன்னிச்சையானது.
சில சமயங்களில், அடைப்பட்ட காற்று, இதயத்தையும், உணவு குழாய் போன்ற மற்ற அமைப்பையும் மாற்றி அமைப்பதோடு இரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. இந்த நிலை டென்ஷன் நியூமோதொராக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த நோய்க்கான அறிகுறிகள் நியூமோதொராக்ஸின் வகைக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இந்த நிலை டென்ஷன் நியூமோதொராக்ஸ் நிலையாக இல்லாத பட்சத்தில், நோயாளிகள் குறைந்த அசௌகரியத்தை மட்டுமே அனுபவிப்பார்கள் மற்றும் அவர்களுக்கு நியூமோதொராக்ஸ் நிலை இருப்பதாக உணரமாட்டார்கள். மூச்சடைப்பு மற்றும் மார்பு வலி ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகள்.
நோயாளிகள் மருத்துவ உதவியை நாடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இவை தோன்றலாம். குறைந்த ஆக்ஸிஜன், அதிகரித்த சுவாச விகிதம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை சில அறிகுறிகள் ஆகும். டென்ஷன் நியூமோதொராக்ஸின் அறிகுறிகள் மிக தெளிவாக இருக்கும். கடுமையான காயம், மூச்சு இயக்கம், காற்றோட்டம் ஆகியவற்றோடு தொடர்புடைய நோயாளிகளில் இது நிகழ்கிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தொடக்கத்தில், இதயமிகைத்துடிப்பு மற்றும் மூச்சிரைப்பு ஆகியவை ஏற்படும், இதனைத் தொடர்ந்து ஹைபோக்சியா (ஆக்ஸிஜன் குறைபாடு), நீலம் பாய்தல் மற்றும் ஹைபோவென்டிலேஷன்ஆகியவை ஏற்படும். மூச்சுக்குழல், ஒரு பக்கமாக தள்ளபடுகிறது. அரிதாக, நோயாளிக்கு அடிவயிற்றில் வலி ஏற்படலாம்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஒரு குமிழியின் முறிவு அல்லது காயம் ஏற்படுவது காரணமாக பிளூரல் குழி (கேவிட்டி) என்று அழைக்கப்படும் இடைவெளியில் காற்று நுழையலாம். நுரையீரல் உட்புறமாக பாதிப்புக்குள்ளாக நேரிடும், இதன் விளைவாக மூச்சுவிடும் திறனில் கோளாறு ஏற்படுகிறது. திசுக்களில் காயம் ஏற்படுவதால் பூளூரல் கேவிட்டியில் காற்று ஊடுருவுவதை அனுமதிக்கிறது மற்றும் அது காற்று வெளியேறுவதை தடுக்கிறது இதுவே டென்ஷன் நியூமோதொராக்ஸ் ஏற்படக் காரணமாகும். இவ்வாறு, ஒவ்வொரு முறை சுவாசிக்கும் பொழுதும் நுரையீரல் மேலும் மேலும் நிலைக்குலைந்து போகும்.
புகைபிடித்தல், ஆஸ்துமா, உயரமான-மெல்லிய உடல் பாங்கு, சி.ஓ.பி.டி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் போன்ற நோய்களால் நியூமோதொரக்ஸின் பாதிப்பு விகிதம் அதிகரிக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவ பரிசோதனை, எக்ஸ்-கதிர்கள் சோதனை, அல்லது சி.டி ஸ்கேன் மூலம் நோயறிதல் உறுதி செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையானது நியூமோதொரக்ஸின் இயல்பு மற்றும் அளவைப் பொறுத்தது. சிறிய நியூமோதொரக்ஸ் நிலையில், நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளித்த பின்னர் அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் மற்றும் பின்தொடர்ந்து மருத்துவ கண்காணிப்புதேவைப்படும்.
சில தீவிரமான சந்தர்ப்பங்களில் அல்லது டென்ஷன் நியூமோதொரக்ஸ் நிகழ்வுகளில், உடனடியாக ஊசியை மார்பில் செலுத்தி காற்றை தப்பிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், ஒரு மார்பு குழாய் செருகப்பட வேண்டும். இது மீண்டும் சம்பவிக்க வாய்ப்பு உள்ளது; அதனால், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.