What is Polio போலியோ
Poliomyelitis, commonly known as polio, is a neuromuscular disorder. It is caused by a virus belonging to the Picornaviridae family. It affects horn motor neurons found in the spinal cord and brainstem; Motor neuron activity is lost, and associated skeletal muscle changes in shape.
It is a serious infection; However, most people do not experience any symptoms. In some cases, the virus affects the central nervous system. This can cause headache, severe neck spasm, discomfort etc. in patients. This disease can even lead to paralysis.
What are the main effects and symptoms of the disease?
The patient has a history of mild fatigue, sore throat, fever, or gastric irritation (a) pain.
Mild fatigue can progress to muscle cramps and severe pain.
The joints become weak, with one joint more affected than the other, and the lower limb more affected than the upper joint.
Muscles become lax, and functions are reduced and they become completely impaired.
Paralysis can last for several weeks.
It takes years for patients to recover from this condition.
In some cases, even after they have recovered from childhood polio without any symptoms, symptoms may reappear 10 – 20 years later. They are called post-polio syndrome (post-polio syndrome), the disease is progressive, but it is not contagious. There is no cure for this disease.
What are the main causes of infection?
Poliovirus, a member of the Picornaviridae family, is the causative agent of this disease. It spreads through the faeces or mouth throat. This risk increases in immunocompromised patients and people living in unsanitary conditions. Ingestion of contaminated food and water is the main route of entry of microorganisms into the body.
How is it diagnosed and treated?
Polio may be suspected based on clinical signs and symptoms. A standard procedure called polymerase chain reaction test is done to detect the polymerase to confirm the diagnosis. Diagnosis can be made with stool, throat swabs, blood, and cerebrospinal fluid (CSF) samples.
There is no recovery from poliomyelitis. This treatment includes rehabilitation of the affected joint, physical therapy (physiotherapy), occupational therapy (occupational therapy), and recreational therapy. Pain relievers are given to relieve the pain.
The only effective treatment is to prevent polio through immunization. More vaccination is needed to prevent polio.
How to know symptoms of Breast Cancer
How to know symptoms of Vaginal Cancer?
How to know about kidney stone pain?
போலியோ (இளம்பிள்ளை வாதம்) என்றால் என்ன?
பொதுவாக போலியோ என்று அறியப்படும் போலியோமைலிடிஸ், ஒரு நரம்புத்தசைக் குறைபாடு ஆகும். பிக்கோர்னாவிரிடே குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் இதற்கு காரணமாகும். இது முதுகெலும்பு மற்றும் மூளை தண்டு முனையின் காணப்படும் ஹார்ன் மோட்டார் நரம்பணுக்களை தாக்குகிறது; மோட்டார் நரம்பணுக்களின் இயக்கம் மீட்க முடியாமல் போகிறது, மேலும் இதனுடன் தொடர்புடைய எலும்பு தசைகளின் வடிவம் மாற்றமடைகிறது..
இது ஒரு கடுமையான தொற்றுநோயாகும்; இருப்பினும், பெரும்பாலான மக்களிடையே எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில், வைரஸ் நரம்பு மண்டலத்தின் மைய பகுதியை பாதிக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு தலைவலி, கடுமையான கழுத்து பிடிப்பு, அசௌகரியம் முதலியவை ஏற்படலாம். இந்த நோய் பக்கவாதம் நிலைக்குக் கூட வழிவகுக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நோயாளிக்கு லேசான உடல் சோர்வு, தொண்டை வலி, காய்ச்சல் அல்லது இரைப்பை எரிச்சல் (அ) வலி ஆகியவற்றின் வரலாற்றைக் கொண்டிருப்பர்.
லேசான உடல் சோர்வு, தசை பிடிப்பு மற்றும் கடுமையான வலிக்கு முன்னேறும்.
மூட்டுகள் பலவீனமடையும், ஒரு மூட்டு மற்றொன்றைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுகிறது, மற்றும் கீழ் மூட்டு மேல் மூட்டை காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
தசைகள் தளர்வாக மாறிவிடும், மேலும் செயல்பாடுகள் குறைந்து அவை முற்றிலும் பாதிக்கப்படும்.
பக்கவாதம் சில வாரங்களுக்குத் தொடரும்.
நோயாளிகள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகளாகும்.
சில சமயங்களில் சிலருக்கு சிறுவயதில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படும் போலியோவிலிருந்து அவர்கள் குணமடைந்த பிறகும் கூட, 10 – 20 வருடங்கள் கழித்து மீண்டும் அதன் அறிகுறிகள் தென்படலாம். அவை பிந்தைய போலியோ நோய்க்குறி (போஸ்ட் போலியோ நோய்க்குறி) என்று அழைக்கப்படுகிறது, இந்த நோய்தாக்கமானது முற்றிக்கொண்டே செல்கின்ற தன்மை கொண்டது, ஆனால் அது தொற்று நோய் கிடையாது. இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் அளிக்க முடியாது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பிக்கோர்னாவிரிடே குடும்பத்தைச் சார்ந்த போலியோ வைரஸ், இந்த நோயை ஏற்படுத்தும் கிருமியை ஆகும். இது மலவாய் அல்லது வாய் தொண்டை வழியாக பரவுகிறது. குறைவான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நோயாளிகளுக்கும் சுகாதாரமற்ற நிலைமைகளில் வாழும் மக்களுக்கும் இந்த ஆபத்து அதிகரிக்கிறது. அசுத்தமான உணவு மற்றும் நீர் உட்கொள்ளல் என்பது உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் நுழைவுக்கான முக்கிய வழி.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவ அடையாளங்களையும் அறிகுறிகளையும் சார்ந்து போலியோ சந்தேகிக்கப்படலாம். நோய் கண்டறிதலை உறுதிப்படுத்துவதற்கான பாலிமரேஸை கண்டறிய பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை சோதனை என்ற நிலையான செயல்முறை செய்யப்படும். மலம், தொண்டை மாதிரி, இரத்தம், மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (சி.எஸ்.எஃப்- மூளைத்தண்டு வட திரவம்) மாதிரி ஆகிய ஆதாரங்களை கொண்டு நோய் கண்டறியப்படலாம்.
முடக்குவாத போலியோமைலிடிஸிலிருந்து இருந்து மீள்வது சாத்தியம் இல்லை. இந்த சிகிச்சையானது, பாதிக்கப்பட்டட மூட்டுப்பகுதிக்கு புனர்வாழ்வளிப்பு, உடலியக்க மருத்துவம் (பிசியோதெரபி), தொழில் வழி நோய் நீக்கல் (ஆக்குபேஷ்னல் சிகிச்சை) மற்றும் பொழுதுபோக்கு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது. வலியை போக்க வலி நிவாரணிகள் வழங்கப்படுகின்றன.
நோய்த்தடுப்பு (தடுப்பூசி) மூலம் போலியோவை தடுப்பது மட்டுமே இதற்கான மிகவும் சரியான சிகிச்சை ஆகும். போலியோவை தடுப்பதற்க்கு அதிகமான தடுப்பூசி தேவைப்படுகிறது.