liver disease
liver disease
Listen to this article

Worsening liver disease-PBC- மோசமடையும் ஒரு நாள்பட்ட கல்லீரல் நோய்

What is primary biliary cholangitis?
Primary biliary cholangitis is a chronic liver disease that worsens over time, progressing to end-stage liver disease and leading to liver failure.
It is commonly known as primary pylori. It is considered an autoimmune disease. It mostly affects women. It first appears in the fourth to sixth decades.

What are the main effects and symptoms of the disease?

Primary biliary cholangitis is a disease with no formal symptoms. Foot patients are diagnosed with the disease incidentally during a blood test. Patients may have preexisting problems such as stomach upset and fatigue.
Fatigue is a very significant problem as it leads to depression and obsessive compulsive disorder. Jaundice due to accumulation of bile is a common phenomenon.

On clinical examination, the following symptoms may be observed:

Enlarged liver and spleen.
A patchy skin found on the nose, under the eyes and on the cheeks. This is called the yellow plate.
Jaundice – yellowing of the retina and yellowing of the skin. In advanced stages, the disease progresses to hepatitis. This involves the destruction of liver cells (liver cells). In advanced stages, symptoms include poor appetite, nosebleeds, jaundice, small spider-like veins under the skin, weight loss, loss of appetite, and itchy skin. , weakness are

What are the main causes of infection?

The exact cause of this disease is not known. However, this disease is considered to be an autoimmune disease. Because of the collapse of the small bile ducts, it cannot be completely repaired.
Thus, there is a chronic obstruction in the flow of bile from the liver cells to the gallbladder. Inefficient functioning of these bile ducts leads to accumulation of bile, leading to inflammation and cell death.
These may additionally lead to loss of liver cells. Apart from a possible genetic origin, patients with primary biliary cholangitis may be more prone to urinary tract infections.

How is it diagnosed and treated?

A medical report, physical exam, and regular liver function tests are done to determine the cause of the disease. Abdominal X-rays, ultrasound, and liver tissue tests are also needed to determine the cause. In some cases, a CT scan of the abdomen may be necessary.

The aim of first-line treatment of the disease is to prevent disease progression and provide relief from symptoms.Eventually, liver transplantation is necessary.
In advanced stages of the disease, liver transplantation is the only treatment option. Liver transplantation is a common treatment option as the liver is the second most commonly transplanted organ in the body.
Postoperative precautions include immunosuppressants and motility stimulants to minimize the possibility of infection and to keep the affected area of the patient’s body sterile.

liver disease

What are causes undeveloped breasts?

How to Know about on kidney problem?

How to know Breast pain prevention?

முதன்மைப் பிலாரி கோலங்கிடிஸ் நோய் என்றால் என்ன?

முதன்மைப் பிலாரி கோலங்கிடிஸ் நோய் என்பது காலப்போக்கில் மோசமடையும் ஒரு நாள்பட்ட கல்லீரல் நோயாகும்.இது இறுதி கட்ட கல்லீரல் நோயாக முன்னேறி, கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

இது பொதுவாக முதன்மை பிலாரி அழற்சி என அழைக்கப்படுகிறது.இது தன்னுடல் தாக்கு நோயாகக் கருதப்படுகிறது.இது பெரும்பாலும் பெண்களை பாதிக்கிறது.இது முதலில் நான்காவது முதல் ஆறாவது தசாப்தங்களில் தோன்றியது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

முதன்மை பிலாரி கோலங்கிடிஸ் நோயானது முறையான அறிகுறியற்ற ஒரு நோய் ஆகும்.கால் வாசி நோயாளிகள் இரத்த பரிசோதனை செய்யும் போது இந்நோய் இருப்பதை தற்செயலாக அறிகிறார்கள்.நோயளிகள் வயிற்று கோளாறு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை முன்னரே கொண்டிருக்கலாம்.

சோர்வு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சனை என்பதால் அது மனஅழுத்தம் மற்றும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.பித்த நீர் குவியலின் காரணமாக மஞ்சள்காமாலை நோய் ஏற்படுவது என்பது ஒரு பொதுவான நிகழ்வு ஆகும்.

மருத்துவ பரிசோதனை செய்தால், பின்வரும் அறிகுறிகள் கவனிக்கப்படலாம்:

விரிவடைந்த கல்லீரல் மற்றும் மண்ணீரல்.

மூக்கு மீது, கண்களின் கீழ் மற்றும் கன்னத்தின் மீது காணப்படும் கருத்த சருமம்.இது மஞ்சள் தட்டு என்று அழைக்கப்படும்.

மஞ்சள் காமாலை – விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் மஞ்சள் நிறமுடைய சருமம். நோய் முற்றிய நிலையில், இந்நோய் கல்லீரல் அழற்சியாக முன்னேற்றம் அடைகிறது.இது கல்லீரல் உயிரணுக்களின் (கல்லீரல் செல்) அழிவையும் உள்ளடக்குகிறது.நோய் முற்றிய கட்டத்தில் காணப்படும் அறிகுறிகளாவன, குறைந்த பசியார்வம், மூக்கில் இரத்தக் கசிவுகள், மஞ்சள் காமாலை, சருமத்தின் அடிப்பகுதியில் சிறிய சிலந்தி போன்ற தமனிகள், எடை இழப்பு, பசியின்மை, தோல் அரிப்பு, பலவீனம் ஆகியவை ஆகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை.எனினும், இந்நோய் தன்னுடல் தாக்கு நோயாக கருதப்படுகிறது.இங்கே சிறிய பித்தநீர் நாளங்களில் தகர்வு இருப்பதால், இதனை முழுமையாக சரிசெய்ய இயலாது.

இவ்வாறு, கல்லீரல் உயிரணுக்களில் இருந்து பித்தபைக்கு பாயும் பித்தநீர் ஓட்டத்தில் நாள்பட்ட அடைப்பு ஏற்படுகிறது.இந்த பித்த நீர் நாளங்களின் திறன் அற்ற செயல்பாட்டினால் பித்தநீர் குவிதல் ஏற்பட்டு வீக்கம் மற்றும் உயிரணு இறப்பிற்கு வழிவகுக்கிறது.

இவை கூடுதலாக கல்லீரல் உயிரணுக்களின் இழப்பிற்கு வழிவகுக்கலாம்.சாத்தியமான மரபணு தோற்றத்தை தவிர, முதன்மைப் பிலாரி கோலங்கிடிஸ் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு சிறுநீர் பாதை நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்படுவதை காணலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவ அறிக்கை, பரிசோதனை, மற்றும் தொடர்ச்சியான கல்லீரல் செயல்பாடு பரிசோதனைகள் போன்ற சோதனைகள் நோய் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய செய்யபடுகிறது.அடிவயிற்றில் எக்ஸ் கதிர் சோதனை, அல்ட்ராசவுண்ட் (மீயொலி) சோதனை மற்றும் கல்லீரல் திசு பரிசோதனை போன்ற சோதனைகளும் நோய் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய தேவைப்படுகிறது.சில நிகழ்வுகளில், அடிவயிற்று பகுதியில் சிடி ஸ்கேன் சோதனை தேவைப்படலாம்.

இந்நோயின் முதல் நிலை சிகிச்சையின் நோக்கமானது நோய் முன்னேற்றத்தை தடுப்பதும், நோய் அறிகுறியிலிருந்து நிவாரணம் அளிப்பதுமாகும்.இறுதியில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறை அவசியம் ஆகும்.

நோய் முற்றிய கட்டத்தில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறை மட்டுமே சிகிச்சைக்கான ஒரே வழி ஆகும்.உடலில் கல்லீரல் மிகவும் பொதுவாக மாற்றப்படும் இரண்டாவது இடமாற்ற உறுப்பு என்பதால் கல்லீரல் மாற்று அறுவை சிச்சை என்பது ஒரு பொதுவான சிகிச்சை முறையாகும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடங்கும் பாதுகாப்பு முறைகளாவன, நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கிகள் மற்றும் இயக்க ஊக்கி மருந்துகள் ஆகும்.நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க வேண்டும் மற்றும் நோயாளியின் உடலில் பாதிக்க பட்ட பகுதி சீழ்ப்பிடிக்காத நிலையில் வைக்க வேண்டும்.