Prostatitis
Prostatitis
Listen to this article

What is prostatitis? சுக்கிலவழற்சி

Prostatitis is a common condition characterized by inflammation (inflammation) of the prostate, often caused by an infection. Prostatitis can affect any age group due to unhygienic environment.

What are the main effects and symptoms of the disease?

The effects and symptoms of prostatitis are often similar to those of prostate cancer or prostatic hyperplasia, but it is a completely different condition. Some of its effects and symptoms are as follows:

Difficulty urinating, painful or obstructed urination.
Pain in the pelvic area or around the prostate, which can also include pain in the rectum.
Urgent passing of urine at frequent intervals, occasionally with blood in the urine.
If the infection is bacterial, fever, nausea and other flu-like symptoms may occur.
What are the main causes of infection?

Prostatitis is classified into different types depending on its cause. They are:

Chronic prostatitis:
In this case, the symptoms start slowly and persist for a period of time. Chronic prostatitis is not caused by an infection and is often very easily treated. The main causes of developing chronic prostatitis are:
Prostatitis has appeared earlier.
Chronic prostatitis is more common among middle-aged to older men.
Intestinal tension band.
Damage during surgery.
Acute prostatitis
Acute prostatitis is a sudden and serious condition caused by an infection. This requires immediate medical attention. The main reasons for this condition are as follows:
Sexual assault can lead to severe prostatitis.


A history of urinary tract infection (UTI) or sexually transmitted infections (STI) or urinary tract or prostate infection such as HIV infection or AIDS.
In some cases, an infection can develop after a biopsy of the pre-ovarian tissue.
How is it diagnosed and treated?

After looking at the effects and symptoms of prostatitis, the doctor will prescribe some tests to know if the condition is prostatitis. The most common and definitive tests for prostatitis include:

A physical examination that includes a digital rectal exam.
A urine test to check for a urinary tract infection.
Rectal ultrasound (ultrasound) test to detect any swelling or abnormal growth in the placenta.
A urologist will perform a semen analysis each time to measure the amount of semen and seminal fluid released and to look for signs of infection in the blood.
Bladder biopsy, which examines the bladder and collects tissue samples from the prostate to check for signs of inflammation.


Prostatitis is usually easily treatable if detected early. Antibiotics are essential to treat bacterial infections. Pain relievers and anti-inflammatory drugs are prescribed to the individual.
If the disease is mild, the most common drugs prescribed are paracetamol and ibuprofen. However, if the condition is severe or the pain is severe, stronger drugs such as amitriptyline are prescribed.
Other medications that may be prescribed include muscle relaxants. For pain relief, the doctor may prescribe warm baths or warm exercises for the patient.

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

சுக்கிலவழற்சி என்றால் என்ன?

பெரும்பாலும் நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் முன்னிற்குஞ்சுரப்பியின் வீக்கத்தினால் (அழற்சி) வகைப்படுத்தப்படும் ஒரு பொதுவான நிலைமையே சுக்கிலவழற்சி ஆகும். அசுத்தமான சூழலின் காரணமாக எந்த வயது ஆணையும் சுக்கிலவழற்சி பாதிக்கலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சுக்கிலவழற்சியின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பெரும்பாலும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பி விரிவடைதல் போன்றவற்றின் அறிகுறிகளை ஒத்ததாகவே இருக்கும், ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட நிலைமையே ஆகும். இதன் சில தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலியுடன் கூடிய அல்லது தடைப்பட்ட சிறுநீர் வெளியேற்றம்.

இடுப்புப் பகுதி அல்லது முன்னிற்குஞ்சுரப்பியை சுற்றி உள்ள பகுதியில் வலி, இது மலக்குடலில் ஏற்படும் வலியையும் உள்ளடக்குகிறது.

சிறுநீர் அவசரமாக தொடர்ச்சியான இடைவெளியில் கழிப்பது, எப்பொழுதாவது சிறுநீருடன் இரத்தம் கலந்திருக்கலாம்.

பாக்டீரியா நோய்த்தொற்றாக இருப்பின், காய்ச்சல், குமட்டல் மற்றும் பிற சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சுக்கிலவழற்சி அதன் காரணத்தை பொறுத்து வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகிறது. அவை:

நாள்பட்ட சுக்கிலவழற்சி:

இந்த நிகழ்வில், அறிகுறிகள் மெதுவாகவே உருவாகத் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து நீடிக்கிறது. நாள்பட்ட சுக்கிலவழற்சி நோய்த்தொற்றினால் வருவதில்லை, பெரும்பாலும் இது மிகவும் எளிதாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வளரும் நாள்பட்ட சுக்கிலவழற்சி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

சுக்கிலவழற்சி இதற்கு முன்னரே தோன்றியருத்தல்.

நடுத்தர முதல் முதுமை வயதை அடைந்த ஆண்கள் மத்தியில் நாள்பட்ட சுக்கிலவழற்சி பொதுவாக காணப்படுகிறது.

குடற் பதற்றப் பிணிக்கூட்டு.

அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சேதம்.

கடுமையான சுக்கிலவழற்சி

கடுமையான சுக்கிலவழற்சி நோய்த்தொற்றினால் ஏற்படடும் ஒரு திடீர் மற்றும் தீவிர நிலைமையாகும். இதற்கு உடனடியான மருத்துவ கவனிப்பு அவசியமாகும். இந்த நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

பாலியல் வன்புணர்வு கடுமையான சுக்கிலவழற்சிக்கு வழிவகுக்கும்.

சிறுநீரக பாதை நோய்த்தொற்று (யூ.டி.ஐ) அல்லது பால்வினை நோய்கள் (எஸ்.டி.ஐ) அல்லது எச்.ஐ.வி தொற்று அல்லது எய்ட்ஸ் போன்ற சிறுநீர்க்குழாய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பியில் ஏற்படும் நோய்த்தொற்று இதற்கு முன்னரே தோன்றியருத்தல்.

சில சந்தர்ப்பங்களில், ஒரு நோய்த்தொற்றுனது முன்னிற்குஞ்சுரப்பி திசுப் பரிசோதனை செய்த பின் உருவாகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

சுக்கிலவழற்சியின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை பார்த்து, மருத்துவர் இந்த நிலை சுக்கிலவழற்சி தானா என்பதை அறிய சில சோதனைகளை பரிந்துரை செய்வார். சுக்கிலவழற்சியின் மிகவும் பொதுவான மற்றும் உறுதியான சோதனைகள் பின்வருமாறு:

டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை உள்ளடக்கிய உடல் பரிசோதனை.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை அறிய சிறுநீர் பரிசோதனை.

முன்னிற்குஞ்சுரப்பியில் ஏதேனும் வீக்கம் அல்லது அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிய குதந்தாண்டு மீயொலி (அல்ட்ராசவுண்ட்) சோதனை.

ஒவ்வொறு முறை வெளியேறும் விந்து மற்றும் விந்துநீரின் அளவுகளை அறிய மற்றும் இரத்தத்தில் தொற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கணடறிய விந்தணு ஆய்வை சிறுநீரக மருத்துவர் மேற்கொள்கிறார்.

சிறுநீர்ப்பையைப் ஆய்வு செய்து, முன்னிற்குஞ்சுரப்பியிலிருந்து திசு மாதிரிகளை சேகரித்து வீக்கத்திற்கான அறிகுறி உள்ளதா என்பதை அறிய உதவும் சிறுநீர்ப்பையின் திசுப்பரிசோதனை.

ஆரம்ப காலகட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டால், சுக்கிலவழற்சிக்கு பொதுவாக சுலபமாக  சிகிச்சை அளிக்கலாம். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா நோய்தொற்றிற்கு சிகிச்சையளிக்க அவசியமானதாகும். வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் தனி நபருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

நோய் மிதமாக இருந்தால், அதற்கு பரிந்துரைக்கப்படும் மிகவும் பொதுவான மருந்துகள் பராசிட்டமால் மற்றும் ஐப்யூபுரூஃபன் ஆகும். எனினும், இந்த நிலை கடுமையானதாக இருந்தால் அல்லது வலி மோசமாக இருந்தால், அமிற்றிப்ட்டிளின் போன்ற வலுவான மருந்துக்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்படும் பிற மருந்துகளில் தசை தளர்த்திகள் அடங்கும். வலி நிவாரணத்திற்காக நோயாளிகளுக்கு சூடான குளியல் அல்லது சூடான ஒத்தடம் முதலியவற்றை மருத்துவர் பரிந்துரை செய்வார்.