How to know symptoms of Pus?

Pus
Pus
Spread the love
Listen to this article

What is pus? சீழ் என்றால் என்ன?

Pus consists of non-living tissues, white blood cells and bacteria. If any bacteria enters the body, white blood cells fight against it. This leads to the destruction of nearby tissues and the formation of a pus-filled cavity. This can occur in any organ or internal organ of the body.

What are the main effects and symptoms of the disease?

Symptoms vary depending on the organ affected. Common symptoms associated with abscess include:

the pain
fever
Chilling.
Swelling of the affected area.
Swelling and inflammation.
The affected part is red and warm.
Depending on the part affected, it can cause a disruption in the function of that tissue or organ.

What are the main causes of infection?

Abscess can be caused by:

A skin abscess can occur when bacteria enter the skin and cause inflammation. It usually occurs on the genitals, armpits, arms, legs, buttocks, and trunk. Bacteria can enter the body through cuts, sores, and abrasions. Clogged oil glands can also cause a pus-filled lump on the skin.
An internal pus-filled tumor forms inside the body due to surgery, injury, or infection that spreads from nearby tissues.


How is it diagnosed and treated?

The doctor will carefully examine the affected organ, prescribe other tests, identify the cause of the abscess and provide appropriate treatment. The following diagnostic methods are used:

Blood tests to check the body’s reaction to bacterial attack and to identify key details of the infection.
Tissue examination.
A urine test to detect the amount of sugar in the urine, an indicator of diabetes.
If a tumor develops inside one’s body, an X-ray is taken to get a clear picture of the affected area.
Treatment for abscesses depends on the cause. Pus from a small nodule on the skin does not require treatment. Applying a warm compress to a small nodule seems to help. Depending on the cause, the doctor may prescribe one of the following treatments:

Antibiotics to break up the infection.
Method of complete drainage of pus, through deep incision.
Surgery is recommended for those with internal organ abscesses.

Pus

How to know types of Breast Pain?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

சீழ் என்றால் என்ன?

சீழ் என்பது உயிரற்ற திசுக்கள், வெள்ளணுக்கள், பாக்டீரியா ஆகியவை அடங்கியதாகும்.உடலில் ஏதாவது பாக்டீரியா புகுந்தால், அதனை எதிர்த்து இரத்தத்திலுள்ள வெள்ளணுக்கள் போரிடும்.இது அருகில் உள்ள திசுக்கள் அழிந்து சீழ்படிந்த கட்டியான சீழ் நிறைந்த உட்குழிவு உண்டாவதற்கு வழிவகுக்கிறது.இது உடலின் எந்த உறுப்பிலும் உள்ளுறுப்பிலும் ஏற்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட உறுப்பின் அடிப்படையில் வேறுபடும். சீழுடன் சம்பந்தப்பட்ட பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

வலி.

காய்ச்சல்.

சில்லிட்டுப் போகுதல்.

பாதிக்கப்பட்ட பகுதி வீங்கி காணப்படுதல்.

வீக்கம் மற்றும் அழற்சி.

பாதிக்கப்பட்ட உறுப்பு வெதுவெதுப்புடன் சிவந்து காணப்படுதல்.

பாதிக்கப்பட்ட பாகத்தை பொறுத்து, இது அந்த திசுக்கள் அல்லது உறுப்பின் செயல்பாட்டில் தடை ஏற்படுத்தும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பின்வரும் காரணங்களால் சீழ் உண்டாகலாம்:

சருமத்தில் பாக்டீரியாக்கள் நுழைந்து அதன் காரணமாக வீக்கம் ஏற்படும் போது சருமத்தில் சீழ்படிந்த கட்டி ஏற்படக்கூடும்.இது பொதுவாக பிறப்புறுப்பு, அக்குள், கைகள், கால்கள், பிட்டம், உடற்பகுதி ஆகியவற்றில் ஏற்படுகிறது.பாக்டீரியா வெட்டு, புண்கள் மற்றும் சிராய்ப்பு மூலம் உடலுக்குள் நுழையும். எண்ணெய்ச் சுரப்பிகள் அடைப்படுவதாலும் சருமத்தில் சீழ்படிந்த கட்டி உண்டாகலாம்.

அறுவை சிகிச்சை, காயம், அல்லது அருகில் உள்ள திசுக்களில் இருந்து பரவும் நோய்த்தொற்று முதலியவற்றால் உடலுக்குள் உட்புற சீழ் படிந்த கட்டிஉண்டாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பாதிக்கப்பட்ட உறுப்பை மருத்துவர் தீவிரமாக பரிசோதித்து, வேறு பரிசோதனைகளை பரிந்துரை செய்து, சீழ் உண்டாகும் காரணத்தை கண்டறிந்து, அதற்கு சரியான சிகிச்சை அளிப்பார் பின்வரும் கண்டறியும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:

பாக்டீரியா தாக்குதலுக்கு உடலின் எதிர்ச்செயலை சரிபார்க்க மற்றும் நோய்த்தொற்றின் முக்கிய விவரங்களை அடையாளம் காண இரத்தப் பரிசோதனைகள்.

திசு பரிசோதனை.

நீரிழிவு நோயின் குறியீடான சிறுநீரில் இருக்கும் சர்க்கரை அளவைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை.

ஒருவரின் உடலின் உள்ளே சீழ்படிந்த கட்டி ஏற்படின், பாதிக்கப்பட்ட பகுதியின் தெளிவான படம் காண எக்ஸ்ரே பெறக்கூறுவர்.

சீழ்க்கான சிகிச்சை அதன் காரணத்தை பொறுத்து அமையும்.சருமத்தில் ஏற்படும் சிறிய சீழ் படிந்த கட்டியில் இருந்து வரும் சீழ்க்கு சிகிச்சை தேவையில்லை.சிறிய சீழ் படிந்த கட்டிக்கு மிதமான சூட்டில் ஒற்றடம் தருவது பலனளிப்பதாகத் தெரிகிறது.காரணத்தின் அடிப்படையில் மருத்துவர் பின்வரும் நோயாற்றும் முறையினில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைப்பர்:

நோய்த்தொற்றை முறிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.

ஆழமான கீறல் மூலம், சீழை முழுமையாக வடிக்கும் முறை.

உடலின் உள்ளுறுப்பில் சீழ் இருப்பவருக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *