What is neonatal respiratory distress syndrome? பிறந்த குழந்தைகள் சார்ந்த சுவாச பாதிப்பு நோய்த்குறி
Neonatal respiratory distress syndrome (RDS) is a condition, particularly seen in premature infants and newborns, that causes difficulty breathing. The disease rarely occurs in adults and is a short term respiratory distress syndrome (ARD). .S) which typically occurs within 24 to 48 hours of illness and injury.
What are the main effects and symptoms of the disease?
Symptoms of RDS can appear within hours or hours after birth. Symptoms include:
Rapid and/or shallow breathing/shallow breathing.
Shortness of breath or apnea (stopping of breathing).
Grunting sound while breathing.
Abnormal respiratory movement.
Nasal irritation.
Diminished urination.
Blue tinge (cyanosis) of the skin and mucous membranes.
What are the main causes of infection?
RDS causes RDS in newborns whose lungs are not fully developed and the disease is mainly caused by underproduction of alveoli (a slippery protective substance present in mature and developed lungs). These air sacs help fill the lungs with air and protect the lungs from contracting. A gene that occurs during lung development. RDS can also develop due to deficiency. Generally, this disease is more common in preterm babies than in full-term babies. Meconium aspiration, ie, accidental ingestion of waste while the baby is still in the womb, can also lead to RDS.
How is it diagnosed and treated?
Tests that are recommended after the doctor performs a thorough physical examination include:
A blood test to check for infection.
Chest X-rays are done to detect a specific condition called icterus in the lungs, which appears 6 to 12 hours after birth.
Blood gas analysis is done to detect abnormal oxygen levels and acid levels in body fluids.
Newborns with this condition are at high risk and require intensive care and specialist monitoring. A baby needs gentle handling and a quiet environment while maintaining a constant body temperature, where the baby’s fluids and nutrients are well administered and any other infections are treated. .Management methods for different cognitive types of this disease include:
Provide warm, humidified oxygen to newborns under careful supervision and monitor them regularly.
By supplemental or artificial airways, it is usually delivered directly through the infant’s airway.
Occasional use of ventilators:
Advised when blood carbon dioxide levels are high and oxygen levels are low.
Indicated when there is low blood pH level (acidity).
Recommended when there is frequent breathlessness in breathing.
Continuous positive airway pressure, or CPAP, is another form of therapy that responds to ventilatory therapy in that it forces air into the nose and does not require ventilatory assistance.

How to know Breast pain prevention?
How to know Causes of breast pain?
How to know types of Breast Pain?
பிறந்த குழந்தைகள் சார்ந்த சுவாச பாதிப்பு நோய்த்குறி என்றால் என்ன?
புதிதாக பிறந்த குழந்தைகள் சார்ந்த சுவாச பாதிப்பு நோய்த்குறி (ஆர்.டி.எஸ்) என்பது, குறிப்பாக குறை பிரசவ குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளில் காணப்படும் ஒரு நிலை ஆகும், இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.இந்நோய் பெரியவர்களில் அரிதாக தோன்றும் மற்றும் இது ஒரு குறுகிய சுவாச பாதிப்பு நோய்த்குறி (எ.ஆர்.டி.எஸ்) ஆகும்.இது குறிப்பாக நோய் மற்றும் காயம் ஏற்பட்ட 24 மணி நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்குள் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆர்.டி.எஸ் நோயின் அறிகுறிகளானது குழந்தை பிறந்த சில நேரங்களில் அல்லது பல மணி நேரங்கள் கழித்து காணப்படுகிறது.இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
விரைவான மற்றும்/அல்லது ஆழமற்ற சுவாசம்/மேலோட்டமான சுவாசம்.
குறுகிய சுவாசம் அல்லது மூச்சு நிறுத்தம் (சுவாசம் நின்று விடுதல்).
சுவாசிக்கும்போது உறுமல் சத்தம் வருதல்.
அசாதாரண சுவாச இயக்கம்.
நாசி எரிச்சல்.
சிறுநீர்ப் போக்குக் குறைதல்.
சருமம் மற்றும் சளி சவ்வுகளில் நீலம் பாய்தல் (சயனோசிஸ்).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முழுமையாக வளர்ச்சி அடையாத நுரையீரல் பிறந்த குழந்தைகளில் ஆர்.டி.எஸ் நோயை உருவாக்குகிறது மற்றும் இந்நோய் முக்கியமாக பற்றாக்குறையுள்ள பறப்பியங்கிகளின் (முதிர்ந்த மற்றும் வளர்ந்த நுரையீரலில் இருக்கும் வழுகும் தன்மையுள்ள காப்புப் பொருள்) உற்பத்தி குறைவு காரணமாக ஏற்படுகிறது.இது நுரையீரலில் காற்றை நிரப்ப உதவி காற்று பைகள் சுருங்குவதிலிருந்து நுரையீரலை பாதுகாக்கிறது.நுரையீரல் வளர்ச்சியின் போது ஏற்படும் மரபணு குறைபாடு காரணமாகவும் இந்த ஆர்.டி.எஸ் நோய் உருவாகலாம்.பொதுவாக இந்நோய் நிறைமாத குழந்தைகளில் காணப்படுவதை விட குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது.மெகோனியம் ஆஸ்ப்பிரஷன், அதாவது., குழந்தை கருப்பையில் இருக்கும் போது தற்செயலாக அதன் கழிவை உட்கொள்ளல் கூட இந்த ஆர்.டி.எஸ் நோய் ஏற்பட வழிவகுக்கும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் ஒரு முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொண்ட பிறகு பரிந்துரைக்கப்படும் சோதனைகள் பின்வருமாறு:
நோய் தொற்றினை அறிய செய்யப்படும் இரத்தப்பரிசோதனை.
மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை, நுரையீரலில் பனியோட்டம் போல் படர்ந்திருக்கும் பிரத்தியேகமான நிலையைக் கண்டறிய செய்யப்படுகிறது, இது குழந்தை பிறந்த 6 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு தோன்றுகிறது.
இரத்த வாயு பகுப்பாய்வு, உடல் திரவங்களில் உள்ள அசாதாரண ஆக்சிஜன் நிலைகள் மற்றும் அமில அளவுகளைக் கண்டறிய செய்யப்படுகிறது.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைகள் அதிக ஆபத்தில் இருப்பதால் இவர்களுக்கு முக்கிய கவனிப்பு மற்றும் ஒரு நிபுணரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது.ஒரு குழந்தைகளை சீரான உடல் வெப்பநிலையில் வைத்திருக்கும் போது அவர்களை மென்மையாக கையாளுவதுடன் ஒரு அமைதியான சூழ்நிலையும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
அங்கு குழந்தைக்கு தேவையான திரவங்கள் மற்றும் ஊட்ட சத்துக்கள் நன்றாக நிர்வகிக்கிக்கப்பட்டு வேறு ஏதேனும் தொற்று இருந்தால் அவற்றிக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இந்நோயின் பல்வேறு புலனுணர்வு வகை மேலாண்மை முறைகள் பின்வருமாறு:
கவனமான மேற்பார்வையின் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான, ஈரப்பதமுள்ள ஆக்ஸிஜன் வழங்குதல் மற்றும் அவர்களை தொடர்ந்து கண்காணித்தல்.
கூடுதலாக அல்லது செயற்கைப் பறப்பியங்கிகள் அளிப்பது, இது பொதுவாக குழந்தையின் சுவாச பாதையின் வழியாக நேரடியாக வழங்கப்படுகிறது.
சில சமயங்களில் சுவாச இயந்திரம் பயன்பாடு:
இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாகவும், ஆக்ஸிஜன் அளவு குறைவாகவும் உள்ள போது அறிவுறுத்தப்படுகிறது.
குறைந்த இரத்த பி.எச் அளவு (அமிலத்தன்மை) உள்ள போது அறிவுறுத்தப்படுகிறது.
சுவாசத்தில் அடிக்கடி மூச்சுத் தடை இருக்கும்போது அறிவுறுத்தப்படுகிறது.
தொடர் நேரிய காற்றுப்பாதை அழுத்தம் அல்லது சி.பி.எ.பி என்பது சுவாச இயந்திரம் சிகிச்சை முறைக்கு பதில் கொடுக்கப்படும் மற்றோரு சிகிச்சை முறை ஆகும்.இதன் மூலம் காற்று மூக்கிற்குள் செலுத்தப்படுவதால் இதற்கு சுவாச இயந்திர உதவி தேவைப்படுவதில்லை.