How to know Symptoms of Immune system disorder?

Toxic Epidermal Necrolysis
Toxic Epidermal Necrolysis
Spread the love
Listen to this article

What are the main effects (மரணம் விளைவிக்கக்கூடிய தடுப்பாற்றல் கோளாறு) and symptoms of the Toxic Epidermal Necrolysis [Immune system disorder] disease?

What is toxic epidermal necrolysis?

Toxic epidermal necrolysis is a rare and potentially fatal immune disorder in which the skin peels off due to the use of certain drugs or infection.

It can affect people of all ages. However, the elderly and those with weakened immune systems are at greater risk. Also, toxic epidermal necrolysis is more common in women than in men. Immediate medical attention is needed to deal with this.

What are the main effects and symptoms of the disease?

Symptoms of toxic epidermal necrolysis can be divided into the following.

Early symptoms.

Cough.

the pain

Eyes are irritated.

headache

fever

Late symptoms.

A red or purple rash on the body, including the face.

Swelling of the tongue and face.

Blisters around the mouth, eyes and genitals.

Burnt appearance due to skin peeling.

What are the main causes of infection?

Drugs that commonly cause toxic epidermal necrolysis include:

Sulfonamides.

Allopurinal.

Nonsteroidal anti-inflammatory drugs.

Anticonvulsants such as phenytoin, lamotrigine, carbamazepine.

Other diseases such as human immunodeficiency virus (HIV) and herpes simplex can cause toxic epidermal necrolysis.

How is it diagnosed and treated?

The first step in diagnosing toxic epidermal necrolysis is a direct physical examination. Skinned body parts are examined to detect the possibility of Stevens-Johnson syndrome (SJS). 33% of cases are diagnosed with SJS. Diagnosis can be confirmed by skin biopsy and histological examination.

The immediate action required to overcome this condition is to stop taking the recently prescribed drugs. Other methods include:

Getting support and care from professionals.

A non-sticky burn dressing on the affected area.

Pain relievers.

Administer intravenous antibiotics to prevent infection.

Intravenous antibody loading to stop cytotoxic activity.

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் என்றால் என்ன?

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் என்பது சில மருந்துகள் உபயோகிப்பதால் அல்லது நோய்த்தொற்று காரணமாக தோல் உரியும் ஒரு அரிய மற்றும் மரணம் விளைவிக்கக்கூடிய தடுப்பாற்றல் கோளாறு ஆகும்.

இது அனைத்து வயதினரையும் பாதிக்க வல்லது. எனினும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இதனை பெரும் அபாயம் அதிகமாக  உள்ளது. மேலும் நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் ஆண்களை விட பெண்களில் அதிகமாக காணப்படுகிறது. இதனை சமாளிக்க உடனடி மருத்துவ கவனம் தேவை.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் நோயின் அறிகுறிகள் பின்வருவனவாக பிரிக்கப்படலாம்.

முற்காலத்திய அறிகுறிகள்.

இருமல்.

வலி.

கண்கள் எரிச்சல்.

தலைவலி.

காய்ச்சல்.

தாமதமான அறிகுறிகள்.

சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் முகம் உட்பட உடலில் வேனற்கட்டி வருதல்.

நாக்கு மற்றும் முகம் வீங்குதல்.

வாய், கண் மற்றும் பிறப்புறுப்பை சுற்றி கொப்புளம்.

தோல் உரிபட்டதால் எரிந்த தோற்றம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் உண்டாக பொதுவாக காரணமாகும் மருந்துகள் பின்வருமாறு:

ஸல்ஃபோனமைட்ஸ்.

ஆலோபியூரினல்.

ஸ்டீராய்ட் இல்லாத வீக்க நீக்கி மருந்துகள்.

ஃபெனிடாயின், லாமோட்ரைஜின், கார்பமாசிபைன் போன்ற வலிப்பு தடுப்பு மருந்துகள்.

மற்ற நோய்களான மனித ஏமக்குறைப்பு நச்சுயிரி (எச்ஐவி) மற்றும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் எனப்படும் அக்கி நச்சுயிரி போன்றவை நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் நோயை உண்டாக்கலாம்.

Immune system disorder

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் நோயைக் கண்டறிய முதல் படி ஒருவரின் நேரடி உடல் பரிசோதனை. ஸ்டீவன்ஸ்-ஜான்சன் சிண்ட்ரோம் (எஸ்ஜேஎஸ்) இருக்கக்கூடிய சாத்தியத்தை கண்டறிய தோல் உரியப்பட்ட உடல் பாகங்கள் பரிசோதிக்கப்படும். இது 33% மேல் இருப்பின் எஸ்ஜேஎஸ் இருப்பது கண்டறியப்படுகிறது. தோல் திசுப்பரிசோதனை மற்றும் திசுத்துயரியல் சோதனை மூலம் நோய் கண்டறிதலை உறுதி செய்யலாம்.

இந்நிலையை சமாளிப்பதில் தேவைப்படும் உடனடி நடவடிக்கை, அண்மைக் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உட்கொள்ளுதலை நிறுத்துவதாகும். மற்ற வழிமுறைகளில் பின்வருவன அடங்கும்:

வல்லுனர்களிடமிருந்து ஆதரவும் அக்கறையும் பெறுதல்.

பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டுதல் இல்லாத தீக்காய கட்டு.

வலி நிவாரணி மருந்துகள்.

நோய்த்தொற்றை தவிர்க்க சிரை வழி  நுண்ணுயிர்க்கொல்லிகள் ஏற்றுதல்.

சைட்டோடாக்ஸிக் செயலை நிறுத்த சிரைவழி எதிர்ப்புப்புரதங்கள் ஏற்றுதல்.

மேற்பூச்சு இலேபனம் குழைமம்.

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

Way and Mode of Breastfeeding

தாய்(ப்)பால் புகட்டும் முறை:

How to know symptoms of Throat Cancer?

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *