How to know Symptoms of Facial nerve pain?

Trigeminal Neuralgia
Trigeminal Neuralgia
Spread the love
Listen to this article

What are the main effects (முக்கிளை நரம்புவலி) and symptoms of the [Facial nerve pain]Trigeminal Neuralgia disease?

What is trigeminal neuralgia?

Trigeminal neuralgia/sciatica is a sudden, intense pain in the face that can last from a few seconds to a few minutes. It can occur on one or both sides of the face.

What are the main effects and symptoms of the disease?

Trigeminal nerve pain is more common in people over the age of fifty.

The pain associated with trigeminal neuralgia is often a sharp, intense pain that comes on suddenly. It can also be accompanied by a burning sensation.

The pain may start suddenly and stop suddenly.

Even everyday activities such as eating, shaving, washing your face and brushing your teeth can trigger pain.

This pain can suddenly strike even when one is sleeping.

Although this condition is not life threatening, it can cause discomfort to the sufferers. Its symptoms are progressive. Therefore, its attack may intensify day by day.

What are the main causes of infection?

The primary cause of trigeminal nerve pain is pressure on the trigeminal nerve, which is located inside the human skull and is responsible for sending touch and pain sensations of the face, teeth and mouth to the brain.

This pressure can be caused by dilation of a nearby blood vessel. Symptoms of this condition can occur in people with a type of multiple sclerosis called multiple sclerosis because the disease affects the sciatic nerve.

Rarely, this can also be caused by pressure on a tumor growing on the side of the nerve.

Trigeminal nerve pain can also occur due to injury to the trigeminal nerve due to any trauma or medical surgery.

How is it diagnosed and treated?

Trigeminal nerve pain can be diagnosed with the help of direct physical and neurological examination. Other scanning methods such as cranial X-rays, CT scans and MRIs may be done to rule out other causes of facial pain.

Treatment of trigeminal nerve pain includes anticonvulsants that prevent the nerve from being stimulated. Sometimes, surgery is done to relieve the pain.

ட்ரைஜீமினல் நரம்பு வலி (முக்கிளை நரம்புவலி) என்றால் என்ன?

ட்ரைஜீமினல் நரம்பு வலி/முக்கிளை நரம்புவலி என்பது சில நொடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை நீடிக்கக்கூடிய முகத்தில் ஏற்படும் திடீர் தீவிர வலி ஆகும். இது முகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் அல்லது இரு பக்கங்களிலும் வரலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் ட்ரைஜீமினல் நரம்பு வலி பொதுவாக காணப்படுகிறது.

ட்ரைஜெமீனல் நியூரால்ஜியாவுடன் சம்பத்தப்பட்ட வலி அனேக நேரங்களில் திடீரென்று ஏற்படும் கூர்மையான தீவிர வலியாக இருக்கும். இதனுடன் எரியும் உணர்வும் ஏற்படலாம்.

வலி திடீரென துவங்கி திடீரென நிற்கக்கூடும்.

உண்பது, சவரம் செய்வது, முகம் கழுவுதல் மற்றும் பல் தேய்த்தல் போன்ற தினந்தோறும் செய்யும் செயல்களால் கூட வலி தூண்டப்படலாம்.

ஒருவர் உறங்கும் போதும் திடீரென இந்த வலி தாக்கலாம்.

இந்நிலையினால் உயிருக்கு அபாயம் இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டோருக்கு அசௌகரியத்தை தரும். இதன் அறிகுறிகள் வளரும் தன்மை கொண்டவை. எனவே நாள்பட இதன் தாக்குதல் தீவிரம் அடையலாம்.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மனித மண்டை ஓட்டுக்குள் இருக்கும், முகம், பல் மற்றும் வாயின் தொடுதல் மற்றும் வலி உணர்வை மூளைக்கு அனுப்பும் பொறுப்புடைய முக்கிளை நரம்பில் அழுத்தம் ஏற்படுதலே ட்ரைஜீமினல் நரம்பு வலி ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம் ஆகும்.

இந்த அழுத்தம் அருகில் இருக்கும் இரத்த நாளம் விரிவடைந்ததால் ஏற்படலாம். இந்நிலையின் அறிகுறிகள்  மல்டிபிள் ஸ்க்ளீரோசிஸ் எனப்படும் திசு பன்முகக் கடினமாதல் உள்ள மனிதர்களுக்கு ஏற்படலாம் ஏனெனில் இந்த நோய் முக்கிளை நரம்பை பாதிக்கிறது.

அரிதாக, நரம்பின் பக்கம் வளரும் கட்டி மீது அழுத்தம் ஏற்படுவதாலும் இந்நிலை ஏற்படலாம்.

ஏதேனும் அதிர்ச்சி அல்லது மருத்துவ அறுவைச் சிகிச்சை காரணமாக முக்கிளை நரம்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் ட்ரைஜீமினல் நரம்பு வலி ஏற்படலாம்.

Facial nerve pain

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

ட்ரைஜீமினல் நரம்பு வலியை நேரடி உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனையின் உதவியுடன் கண்டறியலாம். முகத்தில் வலி உண்டாக்கும் மற்ற காரணிகளை வெளியேற்ற வேறு ஸ்கேனிங் முறைகளான மண்டையோட்டு எக்ஸ்-கதிர்கள் சோதனை, சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஆகியவற்றை செய்யலாம்.

ட்ரைஜீமினல் நரம்பு வலி சிகிச்சையில் நரம்பை தூண்டப்படுவதில் இருந்து தடுக்கும் வலிப்பு தடுப்பு மருந்துகளும் அடங்கும். சில நேரங்களில், வலியில் இருந்து நிவாரணம் பெற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

How to know symptoms of Wheezing?

மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?

Useful tips for hair growth

 தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாமா?

Tamil Medicine PDF download page

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *