What are its main signs ( பெண்களின் இனப்பெருக்க யோனி புற்று நோய்) and symptoms of Vaginal Cancer?
What is vaginal cancer?
Vaginal cancer is a rare type of cancer found in the female reproductive system, accounting for less than 0.2% of all cancers. Generally, this condition occurs when women over 60 years of age stop having sexual activity.
This cancer starts in the vagina and causes changes in healthy normal cells, causing tumors to grow out of control. The most common type of this condition is squamous cell carcinoma.
Cancer that starts in the glands is called adenocarcinoma. Adnexal carcinoma is very rare and is also called sarcoma.
What are its main signs and symptoms?
It is uncommon to have early symptoms, however, signs and symptoms that one may notice include:
Abnormal vaginal bleeding during or after menstruation.
Pain during urination.
Pain during intercourse.
Pain in the pelvic region.
Vaginal swelling.
Pain or spotting during vaginal discharge.
Vaginal itching.
Back pain.
Pain in legs.
Swelling of the legs.
Constipation.
What are the main reasons for this?
The exact cause of vaginal cancer is still unknown, but risk factors that trigger the development of this cancer include:
Age: The risk increases with age, most commonly in women over 60.
Human papillomavirus (HPV infection).
Diethylstilbestirol (DES): A drug given to prevent miscarriage in the first trimester.
Effect of previous radiation therapy.
Cervical cancer.
Human immunodeficiency virus (HIV) infection.
Systemic Lupus Erythematosus (SLE).
Smoking.
Alcohol addiction.
What is its diagnosis and treatment?
If you have any of the above symptoms or factors, it is best to consult a doctor as soon as possible. The doctor will ask about a complete medical history and any symptoms and may perform a physical examination, including a pelvic exam and a Pap smear test:
Colposcopy: Examining a sample of tissue collected from the vagina under a microscope.
Biopsy: Biopsy is the only definitive test that confirms the diagnosis when other tests show only a hint of cancer.
Chest X-rays: A test to check if cancer has spread to the lungs.
Pelvic and abdominal ultrasound sonography (USG).
Computed tomography (CT scan).
Magnetic resonance imaging (MRI).
Positron Emission Tomography (PET scan): It helps to find cells containing malignant tumors in the body with the help of radiation sugars.
Cystoscopy: Helps examine the inside of the bladder and urethra.
Urethroscopy: A tool used to examine the inside of the ureters.
Proctoscopy: Helps to examine the inside of the rectum.
There are three standard treatments for vaginal cancer.
surgery:
Laser surgery: Tumors are cut and removed with the help of a laser beam.
Wide local excision: The cancerous lesion is excised along with some healthy tissue surrounding it.
Vaginectomy/vaninectomy: Removal of the vagina.
Complete hysterectomy: In this treatment, both the uterus and the cervix are removed.
Radiation therapy: High-powered X-rays or other radioactive materials are used.
Chemotherapy: Uses drugs to kill cancer cells to stop the growth of cancer, or to stop those cells from dividing and spreading.
Most treatments have various side effects such as pain and other symptoms such as discomfort, nausea, loss of appetite, diarrhea, vomiting, hair loss, depression etc.
யோனி புற்று நோய் என்றால் என்ன?
பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் காணப்படும் ஒரு அரிய வகை புற்றுநோய் யோனி புற்று நோய் ஆகும், அனைத்து புற்றுநோய்களை காட்டிலும் யோனி புற்றுநோய் 0.2% க்கும் குறைவாக ஏற்படக்கூடியது. பொதுவாக, 60 வயதிற்கு மேற்பட்ட பெண்ககளுக்கு பாலியல் செயல்பாடுகள் நின்று போகும் போது இந்நிலை ஏற்படுகின்றது.
இந்த புற்று நோய் வஜினாவில் துவங்கி ஆரோக்கியமாக இருக்கும் சாதாரண அணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்டிகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ச்சியடைய செய்கின்றது. இந்நிலையின் மிக பொதுவான வகை ஸ்குமஸ் செல் கார்சினோமாவாகும்.
சுரப்பிகளில் துவங்குக்கூடிய புற்றுநோய் அடினோக்கார்சினோமா என்று அழைக்கப்படுகிறது. இணைப்பு கார்சினோமா என்பது மிகவும் அரிதானதாகவும் சர்கோமா என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் என்ன?
இந்நிலையில் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஏற்படுவது என்பது அசாதாரணமானது, இருப்பினும், ஒருவருக்கு ஏற்படும் கவனிக்கப்படக்கூடிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
மாதவிடாயின் போதோ அல்லது மாதவிடாய் ஏற்பட்ட பிறகோ ஏற்படும் அசாதாரண வஜினல் இரத்தப்போக்கு.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி.
உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் வலி.
இடுப்பு மண்டலத்தில் ஏற்படும் வலி.
யோனியில் ஏற்படும் புடைப்பு.
யோனி வெளியேற்றத்தின் போது ஏற்படும் வலி அல்லது இரத்தக் கறை.
யோனியில் ஏற்படும் அரிப்பு.
முதுகில் ஏற்படும் வலி.
கால்களில் ஏற்படும் வலி.
கால்கள் ஏற்படும் வீக்கம்.
மலச்சிக்கல்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
யோனி புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் புலப்படவில்லை, ஆனால் இந்த புற்றுநோயின் வளர்ச்சியை தூண்டுவதற்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
வயது: வயது அதிகரிக்கும் போது அபாயமும் அதிகரிக்கிறது, இது பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடத்திலேயே ஏற்படுகின்றது.
மனித பாபிலோமா வைரஸ் (ஹெச் பி வி தொற்று).
டைஎதில்ஸ்டில்பெஸ்டிரால்(டிஇஎஸ்): முதல் ட்ரீம்ஸ்ட்டரில் கருச்சிதைவு ஏற்படாமல் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்து.
முன்பு செய்த ரேடியேஷன் தெரபியின் விளைவு.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.
மனித நோயெதிர்ப்புத் திறன் வைரஸ் (எச்.ஐ.வி) தொற்று.
சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் (எஸ் எல் இ).
புகைப்பிடித்தல்.
மது பழக்கம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மேற்கூறியவாறு ஏதேனும் அறிகுறிகள் அல்லது காரணிகள் இருந்தால், விரைவில் மருத்துவரைத் கலந்தாலோசிப்பது சாலச்சிறந்தது. மருத்துவர் முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் ஏற்பட்டிருக்கும் அறிகுறிகள் ஆகியவற்றை பற்றி விசாரிப்பதோடு, இடுப்பு பரிசோதனை மற்றும் பிஏபி ஸ்மியர் டெஸ்ட் ஆகியவைகளை கொண்ட உடல் பரிசோதனை மேற்கொள்ளக்கூடும்:
கோல்போஸ்கோபி: வஜினாவிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி திசுவை நுண்ணோக்கியின் கீழ் ஆய்வு செய்வது.
திசுப்பரிசோதனை: மற்ற சோதனைகள் புற்றுநோயினை அறிவதற்கான அடையாளத்தை மட்டும் காட்டும்போது, திசுப்பரிசோதனை மட்டுமே உறுதியான சோதனையாக இருந்து கண்டறிதலை உறுதிப்படுத்துகிறது.
மார்பு எக்ஸ்-கதிர்கள்: புற்றுநோய் நுரையீரலிலும் பரவியிருக்கிறதா என்பதை சரிப்பார்க்க உதவும் சோதனை.
இடுப்பு மற்றும் அடிவயிற்றில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் சொனோகிராபி (யு எஸ் ஜி).
கம்ப்யூட்டேட் டோமோகிராபி (சிடி ஸ்கேன்).
காந்த அதிர்வு விம்பங்கள் (எம் ஆர் ஐ).
பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பிஇடி ஸ்கேன்): இது ரேடியேஷன் சர்க்கரைகளின் உதவியுடன் உடலில் வீரியம் மிக்க கட்டிகளை கொண்ட அணுக்களை கண்டறிய உதவுகிறது.
சிஸ்டோஸ்கோபி: சிறுநீர்ப்பை மற்றும் யூரித்ராவின் உள்ளே சோதனை செய்ய உதவுகிறது.
யுரெட்ரோஸ்கோபி: யூரேட்டர்களின் உள்ளே சோதனை செய்ய பயன்படுத்தும் கருவி.
ப்ரோக்டோஸ்கோபி: மலக்குடலின் உள்ளே பரிசோதனை செய்ய உதவுகிறது.
யோனி புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய மூன்று நிலையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
அறுவை சிகிச்சை:
லேசர் அறுவை சிகிச்சை: லேசர் பீம்மின் உதவியால் கட்டிகள் வெட்டி அகற்றப்படுகின்றன.
வைட் லோக்கல் எக்ஸிஷன்: புற்று நோய் காயத்துடன் அதை சுற்றியுள்ள சில ஆரோக்கியமான திசுக்களும் வெட்டி அகற்றப்படுகின்றன.
வஜினெக்டோமி/வனீனெட்டோமி: வஜினா அகற்றப்படுதல்.
முழுமையான ஹிஸ்டெரெக்டமி: இந்த சிகிச்சை முறையில் கருப்பை மற்றும் கருப்பை வாய் ஆகிய இரண்டும் அகற்றப்படுகின்றன.
ரேடியேஷன் தெரபி: உயர்ந்த சக்தி வாய்ந்த எக்ஸ் கதிர்கள் அல்லது மற்ற கதிரியக்க பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கீமோதெரபி: மருந்துகளை பயன்படுத்தி புற்றுநோய் தாக்கிய அணுக்களை கொள்வதன் மூலம் புற்றுநோயின் வளர்ச்சி நிறுத்தப்படுகிறது, அல்லது அந்த அணுக்கள் பிரிந்து பரவுவதை நிறுத்த உதவுகிறது.
பெரும்பாலான சிகிச்சைகளுக்கு பல்வேறு பின்வளைவுகள் இருக்கின்றன அதாவது வலிகள் மற்றும் பிற அறிகுறிகளான அசௌகரியமான உணர்ச்சிகள், குமட்டல், பசியிழப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி, முடி இழப்பு, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்படக்கூடும்.
Read More:
green tea is equivalent to apple juice
ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்: கிரீன் டீயின் மகத்துவம்?
Age death can be determined by blood test
ரத்த பரிசோதனை மூலம் மரணிக்கும் வயது கண்டுபிடிக்கலாம்:லண்டன் விஞ்ஞானிகள்?
Some tips to have a healthy delivery
சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்?