How to know symptoms Vitamin D Deficiency

Vitamin D Deficiency
Vitamin D Deficiency
Spread the love
Listen to this article

What are the main effects (வைட்டமின் டி குறைபாடு) and symptoms of the Vitamin D Deficiency disease?

What is vitamin D deficiency?

Vitamin D deficiency is also known as vitamin D deficiency. It is a condition where the body lacks or lacks vitamin D. Vitamin D is one of the most important vitamins that regulate calcium absorption.

It helps release hormones through the parathyroid glands. This deficiency is more common in India. It is estimated that 70%-100% of India’s population has this deficiency.

What are the main effects and symptoms of the disease?

Because it is asymptomatic, it is not diagnosed early in most people. Severe vitamin D deficiency can result in:

Rickets in children.

Osteoporosis in adults.

Muscle fatigue.

Deep bone pain.

Sensation of pain to touch.

Difficulty maintaining appearance.

What are the main causes of infection?

Vitamin D is found in very few food sources.Sunlight is its main source. Ultraviolet rays from the sun convert the inactive form of the vitamin into an active form in the skin. It is further processed in the liver and kidneys before performing its calcium-fixing function in the body.

There are many reasons that can trigger vitamin D deficiency. They are as follows,

Eating foods rich in vitamin D.

Inadequate absorption of vitamin D in the body due to lack of dietary fat.

Insufficient sunlight exposure.

Imbalance in vitamin D metabolism due to kidney or liver diseases due to vitamin D metabolism.

Drug interactions with vitamin D interfere with vitamin D’s active conformation and absorption.

These causes can lead to decreased bone density, brittle bones and early fractures.

Vitamin D Deficiency

How is it diagnosed and treated?

Vitamin D deficiency is diagnosed by measuring the level of vitamin D in the blood. Before that, the doctor will do a physical examination and ask about the medical history. Various tests are carried out for minerals especially calcium, phosphorus and thyroid electrolyte levels.

The recommended dietary intake (RDA) of vitamin D for adults is 15 mcg per day. Various supplements are available to correct vitamin D deficiency. Vitamin D2 and D3 are available in two forms, oral and injectable forms.

Dietary changes are the main means of managing vitamin D deficiency. Consume foods rich in vitamin D to meet the daily requirement, e.g. Liver, egg yolk and cottage cheese. Exercising and walking in the morning when there is enough sunlight is advised.

It helps to provide adequate sunlight exposure, which leads to the conversion of vitamin D in the body into its active form. Sunlight in the morning will not be as harsh on your skin, which will help compensate for the deficiency. Vitamin D deficiency is easily treatable if diagnosed on time.

How to Know tips to have a healthy delivery

How to know Age death by blood test!

How to know The Nervous System in body?

வைட்டமின் டி குறைபாடு என்றால் என்ன?

வைட்டமின் டி குறைபாடு, தாழுயிர்ச்சத்துவம் டி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலில்  வைட்டமின் டி குறைவாக இருத்தல் அல்லது இல்லாமல் இருக்கும் நிலைமையே ஆகும்.வைட்டமின் டி என்பது கால்சியம் உறிஞ்சுதலை சீர்படுத்தும் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாகும்.

இது இணைகேடயச் (பராதைராய்டு) சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் வெளியிட உதவுகிறது.இந்த குறைபாடு இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 70% -100% மக்களுக்கு இக்குறைபாடு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இது அறிகுறி ஆற்றதாக இருப்பதால், பெரும்பாலானவர்களில் இது ஆரம்ப காலத்தில் கண்டறியப்படுவதில்லை.கடுமையான வைட்டமின் டி குறைபாடு பின்வருவனவற்றை விளைவிக்கும்:

குழந்தைகளில் என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்).

பெரியவர்களில் எலும்புநலிவு நோய்.

தசை சோர்வடைதல்.

ஆழமான எலும்பு வலி.

தொடு வலி உணர்வு.

தோற்றப்பாங்கை பராமரிப்பதில் சிரமம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

வைட்டமின் டி மிக குறைந்த உணவு மூலப்பொருட்களில் காணப்படுகிறது.சூரிய ஒளியே இதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் உள்ள வைட்டமினின் செயலற்ற வடிவத்தை இயக்கத்திலுள்ள வடிவமாக மாற்றுகிறது. உடலில் கால்சியத்தை சீர்படுத்தும் செயல்பாட்டைச் செய்வதற்கு முன்னர் இது மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாட்டை தூண்டக்கூடிய பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு,

வைட்டமின் டி நிறைந்த உணவு உட்கொள்ளாதல்.

உணவில் கொழுப்பு சேர்த்துக் கொள்ளாததால் உடலில் வைட்டமின் டி உறிஞ்சுதல் போதுமானதாக இல்லாமை.

சூரிய ஒளிபடுதல் போதுமானதாக இல்லாதிருத்தல்.

வைட்டமின் டி பதப்படுத்தப்படுவதால் சிறுநீரக அல்லது கல்லீரல் நோய்களின் காரணமாக  வைட்டமின் டி இயக்கத்திலுள்ள வடிவமாக மாற்றமடைவதில் ஏற்படும் சமநிலையின்மை.

வைட்டமின் டி உடனான மருந்துகளின் இடைத்தாக்கம், வைட்டமின் டி இயக்கத்திலுள்ள வடிவமாக மாற்றமடைதல் மற்றும் உறிஞ்சுதல் ஆகியவற்றில் குறுக்கிடுகிறது.

இவ்வாறான காரணங்களினால் எலும்பு அடர்த்தி குறைந்து, எளிதில் உடையக்கூடிய எலும்புகள் மற்றும் விரைவில் எலும்பு முறிவதற்கு வழிவகுக்கும்.

Vitamin D Deficiency

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

வைட்டமின் டி குறைபாடு இரத்தத்தில் உள்ள வைட்டமின் டி அளவை அளவிடுவதன் மூலமாகக்  கண்டறியப்படுகிறது.அதற்கு முன், மருத்துவர் உடல் பரிசோதனை செய்து நோய் சார்ந்த வரலாற்றைப் பற்றி கேட்டறிவார். கனிமங்களுக்காக குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இணைகேடய இயக்குநீர் அளவுகள் போன்ற பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெரியவர்களுக்கு வைட்டமின் டி-இன் பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளல் (ஆர்.டி.ஏ) நாள் ஒன்றுக்கு 15 எம்.சி.ஜி ஆகும்.வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்ய பல்வேறு குறைநிரப்புகள் கிடைக்கின்றன. வைட்டமின் டி2 மற்றும் டி3 வாய்வழி மற்றும் உட்செலுத்தத்தக்க வடிவங்கள் என இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டை நிர்வகிப்பதற்கான முக்கிய வழிமுறைகள் உணவுமுறை மாற்றங்களே ஆகும். தினசரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைட்டமின் டி நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.எ.கா. கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாலாடைக்கட்டி.போதுமான சூரிய ஒளி இருக்கும் காலை நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது அறிவுறுத்தப்படுகிறது.

இது போதுமான சூரிய ஒளியின் வெளிப்பாட்டை வழங்க உதவுகிறது.இது உடலில் உள்ள வைட்டமின் டி-ஐ இயக்கத்தில் உள்ள வடிவமாக மாற்ற வழிவகுக்கிறது. காலை நேரத்தில் உள்ள சூரிய ஒளி உங்கள் சருமத்தின் மீது அவ்வளவு கடுமையானதாக இருக்காது இது, குறைபாட்டை ஈடுசெய்ய உதவும். வைட்டமின் டி குறைபாடு சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் எளிதில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

How to know symptoms of Wisdom Tooth Pain

கடைவாய்ப்பல் வலி என்றால் என்ன? 

herbal powders’ names and purposes

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.

What to do dark circles around the eyes?

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *