Jaundice
Jaundice
Listen to this article

Jaundice is a disease in which the total bile lymph (TSP) level rises above 3 mg/dL. These symptoms include yellowing of your skin, whites of the eyes, and mucous membranes (the lining of internal soft organs like the mouth).

Jaundice is usually present in newborns, but adults can also be affected. In adults, abdominal pain, loss of appetite, weight loss, etc., other symptoms may also be seen.

In children, radiation therapy and blood transfusions are required, while in adults, it involves elimination of the underlying cause, medication, and sometimes, surgery. If left untreated, it can affect the baby’s brain and lead to complications such as blood abscesses, liver and kidney disease or failure.

Metabolism of bilirubin

Our body is constantly producing new red blood cells (RBCs) and discarding old ones. During this process, the hemoglobin inside the old RBCs is broken down into globin, iron, and biliverdin.

When globin and iron are re-used by our bone marrow to make new hemoglobin, biliverdin is broken down again into a by-product called bilirubin. Our liver takes this bilirubin for further metabolism.

The bilirubin that undergoes this process flows through the gallbladder and enters the intestine. The intestine also divides it into uropilinogen and stercopilinogen.

Uropilinogen is reabsorbed to be released into the bloodstream, with a small amount reentering our liver and the rest being eliminated by our kidneys. Stercophilinogen is excreted in the feces.

What are the symptoms of jaundice?

Neonatal or physiological jaundice:

For the most part, healthy children have mild to no symptoms of jaundice. But if your newborn is underweight or premature, your baby will definitely show the distinctive features of jaundice.

These symptoms may take up to a week to appear on your baby’s body and last for three weeks to a month. Your baby’s skin; The soft inside of the mouth, the whites of the eyes, the palms of the hands, the soles of the feet turn yellow,

Urine becomes dark yellow and stool pale. Within a few days the yellowing of the skin starts from your baby’s head and face and spreads to other parts of the body. Your baby may also experience problems with feeding, feeling weak and drowsy, and may cry loudly.

Hemolytic Jaundice

If an Rh-positive (refers to a protein called Rhesus present on RBCs. If a person has this protein, he/she is Rh-positive) baby is born to an Rh-negative (absence of Rh protein on RBCs) mother, destruction of excess RBCs occurs. Rh-positive blood contains D-antigen, which acts as a foreign substance to the mother’s immune system.

The mother’s immune system recognizes this antigen and produces anti-T antibodies (proteins that recognize T-antigens and kill similar RBCs). These antibodies cross her placenta (or umbilical cord) and begin to destroy the fetal RBCs that bind to T-antigens.

Jaundice occurs because hemolysis increases DSP levels in the lymph. This condition is also known as hemolytic disease of the newborn or erythroblastosis fetalis. Its symptoms are similar to those of neonatal jaundice. Other symptoms your baby may experience include:

Abdominal pain.

A decrease in the amount of hemoglobin in the blood that can cause anemia.

Congestive heart failure (heart failure).

Adults also have typical symptoms such as yellowing of the skin, whites of the eyes, and mucous membranes. In addition to these, pain in the upper right side of the abdomen that spreads to the right side of the back, right shoulder, right abdomen, itching, pale palms and soles, weight loss, loss of appetite, fever, dark yellow urine and pale stools occurs in adults. Other symptoms of jaundice are:

Treatment of Jaundice

Depending on the type of jaundice, various methods are followed to treat it. Some of the treatment methods are described below;

For children

Jaundice in newborns

Your baby’s symptoms may subside by 2-4 weeks, when the liver is fully developed and able to take up and metabolize the excess bilirubin. However, if your baby has severe jaundice and high levels of DSP in the baby’s lymph, treatment may be needed. Treatment includes radiation therapy and blood transfusions, among others.

ray of light

In phototherapy, your child is exposed to an excessive amount of light for as long as possible. Light and oxygen combine with bilirubin to cause photo-oxidation.

So it’s water-soluble, making it easier for your baby’s liver to break it down and flush it out of the body. Treatment is stopped for 30 minutes every 3-4 hours for the mother to nurse the baby. If your child’s DSP level does not decrease within 1-2 days, phototherapy should be continued without a break.

Transfusion of blood

If your child’s bilirubin level is too high for phototherapy to be ineffective, a blood transfusion may be recommended. Blood is drawn from a suitable donor (with the same blood group and free of any blood disorders or infections) and is transfused into the baby’s blood.

Because fresh blood does not contain high levels of bilirubin, the baby’s lymph bilirubin levels drop rapidly. The child is monitored throughout the procedure. Bilirubin levels are also checked two hours after the blood transfusion.

Hemolytic disease of the newborn (erythroblastosis fetalis)

Mild cases usually do not require any treatment. In severe cases, blood transfusions may be recommended along with radiation therapy, or injections of immunoglobulins (proteins produced by the body’s immune system to fight foreign substances) are sure to improve the child’s condition. It prevents further breakdown of the baby’s RBCs and helps reduce TSP levels.

For adults

In adults, the treatment of jaundice depends on the underlying cause and its elimination. The following are examples of causes behind jaundice and associated treatments:

Anemia

Your doctor may prescribe iron supplements to prevent RBCs from breaking down.

Jaundice

Infection (eg, hepatitis)

It can be treated with antiviral drugs or antimicrobial drugs.

Liver damage caused by chronic liver disease or alcoholic liver inflammation

Your doctor will advise you to stop drinking alcohol to improve your liver function and prevent further damage. In very severe cases, liver transplantation is necessary.

Gallbladder obstruction

Obstruction can be caused by tumors in the gallbladder, pancreatic cancer pressing on the gallbladder, tumors, etc. Treatment involves surgical removal of the blockage.

Jaundice due to hereditary diseases

Treatment involves injecting the deficient factors responsible for the jaundice.

Self protection

Self-care is just as important as treatment. It is important to take a moderate, balanced, low-fat diet, plenty of water, pure fruit juices, medications, and adequate rest. You are advised not to eat excessive, spicy and street food. Do not drink water from unknown water bodies and maintain personal hygiene.

How to Know tips to have a healthy delivery

How to know Age death by blood test!

How to know The Nervous System in body?

Jaundice is a disease (மஞ்சள்காமாலை அறிகுறிகள் என்ன ?) in which the total bile lymph (TSP) level rises above 3 mg/dL. These symptoms include yellowing of your skin, whites of the eyes, and mucous membranes (the lining of internal soft organs like the mouth).

மஞ்சள்காமாலை, மொத்த பித்த நிணநீரின் (டீஎஸ்பி) அளவு 3 மி.கி/டிஎல்-க்கு மேல் உயரும் ஒரு நோய். இந்த அறிகுறிகள், உங்கள் தோல், கண்களின் வெள்ளைப்பகுதி, சளி சவ்வுகள் (வாய் போன்ற உள்புற மென்மையான உறுப்புகளின் உட்பகுதிகள்) போன்றவை மஞ்சள் நிறமடைதலை உள்ளடக்கியவையாகும்.

வழக்கமாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை இருக்கிறது, ஆனால் வயது வந்தவர்களும் கூட இதனால்  பாதிக்கப்படக் கூடும். வயது வந்தவர்களுக்கு, வயிற்று வலி, பசியின்மை, எடைக் குறைவு, இன்ன பிற., மற்ற அறிகுறிகளும் காணப்படலாம்.

குழந்தைகளுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் இரத்தம் ஏற்றுதல், வயது வந்தவர்களுக்கு ஏற்படும் பொழுது இது, நோய்க்காரணியை நீக்குதல், மருந்து கொடுத்தல் மற்றும் சிலநேரங்களில், ஒரு அறுவை சிகிச்சை. சிகிச்சை அளிக்காமல் விட்டால், அது, குழந்தையின் மூளையை பாதிக்கக் கூடும், மேலும் இரத்தத்தில் சீழ் பிடித்தல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் அல்லது செயலிழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

நமது உடல் தொடர்ந்து புதிய இரத்த சிகப்பு அணுக்களை (ஆர்பிசீக்கள்) உற்பத்தி செய்கிறது மற்றும் பழையனவற்றை வெளியேற்றுகிறது. இந்த நடைமுறையின் போது, பழைய ஆர்பிசீக்களின் உள்ளேயுள்ள ஹீமோகுளோபின், குளோபின், இரும்புச்சத்து மற்றும் பிலிவெர்டின் ஆக உடைக்கப்படுகிறது.

குளோபின் மற்றும் இரும்புச்சத்து நமது எலும்பு மஜ்ஜைகளால், புதிய ஹீமோகுளோபின்களை உருவாக்க மறு-பயன்படுத்தப்படும் நேரத்தில், பிலிவெர்டின், பிலிருபின் எனப்படும் துணைப் பொருளாக மறுபடி உடைக்கப்படுகிறது. நமது கல்லீரல் அதன் அடுத்தகட்ட வளர்சிதை மாற்றத்துக்காக இந்த பிலிருபினை எடுத்துக் கொள்கிறது.

இந்த செயல்முறைக்கு உள்ளான பிலிருபின் பித்தப்பையின் வழியாகப் பாய்ந்து குடற்பகுதிக்குள் நுழைகிறது. குடற்பகுதியும் இதனை, யூரோபிலினோஜென், ஸ்டெர்கோபிலினோஜென் என இரண்டாகப் பிரிக்கிறது.

யூரோபிலினோஜென் இரத்த சுழற்சியில் வெளியிடப்படுவதற்காக மீண்டும் திரும்ப உறிஞ்சப்பட்டு, சிறிதளவு நமது கல்லீரலுக்குள் மறுபடி நுழையும் பொழுது, அதன் மீதி  நமது சிறுநீரகங்களால் நீக்கப்படுகிறது. ஸ்டெர்கோபிலினோஜென் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு அல்லது உடலியல் மஞ்சள்காமாலை:

பெரும்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் லேசாக தோன்றுவதிலிருந்து தோன்றாத நிலை வரை உண்டு. ஆனால், உங்கள் பிறந்த குழந்தை எடை குறைவாக இருந்தால் அல்லது குறைப்பிரசவம் ஆகியிருந்தால், உங்கள் குழந்தை மஞ்சள்காமாலையின் தனித்துவமான அம்சங்களைக் கண்டிப்பாக காட்டும்.

இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தையின் உடலில் தோன்றுவதற்கு ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் மூன்று வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும். உங்கள் குழந்தையின் தோல்; வாயின் உட்புற மென்மையான பகுதி, கண்களின் வெள்ளை நிறப் பகுதி, உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மஞ்சளாக மாறும்,

சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் மலம் வெளிறிய நிறமாகும். சில நாட்களில் தோலின் மஞ்சள் படலம், உங்கள் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் இருந்து தொடங்கி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது. உங்கள் குழந்தை பால் அருந்துவதில் சிரமம், பலவீனமான மற்றும் தூக்க உணர்வு போன்ற பிரச்சினைகளையும் சந்திக்கலாம், மேலும் அதிகமான சத்தத்தில் அழுகையும் இருக்கக் கூடும்.

ஒரு ஆர்எச்- பாசிட்டிவ் (ஆர்பிசீக்களில் இருக்கும் ரெசுஸ் என்ற ஒரு புரதத்தைக் குறிக்கிறது. ஒரு நபருக்கு இந்தப் புரதம் இருந்தால் அவர்/அவளுக்கு ஆர்எச்- பாசிட்டிவ்) குழந்தை, ஒரு ஆர்எச்-நெகடிவ் (ஆர்பிசீக்களில் ஆர்எச் புரதம் இல்லாதவர்) தாய்க்குப் பிறந்தால், அதிகப்படியான ஆர்பிசீக்களின் அழிவு இடம்பெறும். ஆர்எச்- பாசிட்டிவ் இரத்தம் , தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பில் ஒரு அந்நியமான பொருள் போல் செயல்படுகிற டி-ஆன்டிஜென்- ஐ கொண்டிருக்கிறது.

தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த ஆன்டிஜென்னை உணர்ந்து, ஆன்ட்டி-டி ஆன்டிபாடிகளை (டி-ஆன்டிஜென்களை கண்டறிந்து அது போன்ற ஆர்பிசீக்களை கொல்லும் புரதங்கள்) உற்பத்தி செய்கிறது. இந்த ஆன்டிபாடிகள் அவளது நஞ்சுக்கொடியை (அல்லது தொப்புள்கொடி) கடந்து டி-ஆன்டிஜென்களோடு இணைந்திருக்கும் கருவின் ஆர்பிசீக்களை அழிக்கத் துவங்குகிறது.

ஹீமோலிசிஸ் நிணநீரில் உள்ள டீஎஸ்பி அளவை அதிகரிக்கிற காரணத்தால் மஞ்சள்காமாலை ஏற்படுகிறது. இந்த நிலை, பிறந்த குழந்தைக்கு ஏற்படும் ஹீமோலிடிக் வியாதி அல்லது எரித்ரோபிளாஸ்ட்டோசிஸ் ஃபெட்டாலிஸ் எனவும் அறியப்படுகிறது. இதன் அறிகுறிகள், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள்காமாலையின் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு ஏற்படக் கூடிய மற்ற அறிகுறிகள்:

வயிற்று வலி.

இரத்த சோகையை உண்டாக்கக் கூடிய வகையில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைதல்.

இரத்த சேர்க்கை இதய பாதிப்பு (இதய செயலிழப்பு).

வயது வந்தவர்களுக்கும் தோல், கண்களின் வெள்ளைப் பகுதி, சளி சவ்வுகள் ஆகியவை மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற வழக்கமான அறிகுறிகள் தோன்றும். இவை தவிர, மேல்புற வலது பக்க வயிற்றில் வலி ஏற்பட்டு முதுகின் வலது பக்கம், வலது தோள்பட்டை, வலது அடிவயிறுப் பகுதி,இன்ன பிற பகுதிகளுக்குப் பரவுதல், அரிப்பு, வெளிறிய உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள், எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல், அடர் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வெளிறிய மலம் ஆகியன வயது வந்தவர்களுக்கு வரும் மஞ்சள்காமாலையின் மற்ற அறிகுறிகள் ஆகும்.

மஞ்சள்காமாலையின் வகையைப் பொறுத்து, அதற்கு சிகிச்சையளிக்க பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில சிகிச்சை முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன;

பிறந்த குழந்தைக்கு வரும் மஞ்சள்காமாலை

உங்கள் குழந்தையின் அறிகுறிகள் 2-4 வாரங்களில், கல்லீரல் முழுமையாக வளர்ந்து, அதிகப்படியான பிலிருபினை எடுத்துக் கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த இயலும் போது குறையக் கூடும். ஆயினும், உங்கள் குழந்தைக்கு கடுமையான மஞ்சள்காமாலை இருந்து, குழந்தையின் நிணநீரில் டீஎஸ்பியின் அளவு அதிகமாக இருந்தால், சிகிச்சை தேவைப்படலாம். சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் இரத்தம் ஏற்றுதல், இன்ன பிறவற்றை உள்ளடக்கியது.

Jaundice

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர் சிகிச்சையில், உங்கள் குழந்தை முடிந்த வரை அதிகப்படியான ஒளியின் நேரே காட்டப்படுகிறது. ஒளியும் ஆக்ஸிஜனும் இணைந்து பிலிருபின் உடன் சேர்ந்து போட்டோ-ஆக்ஸிடேசனுக்கு காரணமாகிறது.

ஆகவே அது நீரில் கரைந்து, உங்கள் குழந்தையின் கல்லீரல் அதை உடைப்பதற்கும், உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும் எளிமையாக இருக்கிறது. தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக, சிகிச்சை ஒவ்வொரு 3-4 மணி நேரங்களுக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. உங்கள் குழந்தையின் டீஎஸ்பி அளவு 1-2 நாட்களுக்குள் குறையா விட்டால், ஒளிக்கதிர் சிகிச்சை எந்த இடைவெளியும் இன்றி தொடரப்பட வேண்டும்.

இரத்தம் ஏற்றுதல்

ஒளிக்கதிர் சிகிச்சை பயனற்றதாக, உங்கள் குழந்தையின் பிலிருபின் அளவு மிகவும் அதிகமாக இருந்தால், இரத்தம் ஏற்றுதல் பரிந்துரைக்கப்படலாம். ஒரு பொருத்தமான தானமளிப்பவரிடம் (அதே ரத்தப் பிரிவுடனும் எந்த வித இரத்தக் கோளாறுகள் அல்லது தொற்றுகள் இல்லாமலும்) இருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, குழந்தையின் இரத்தத்திற்கு பதிலாக ஏற்றப்படும்.

புதிய இரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாக இல்லாமலிருப்பதால், குழந்தையின் நிணநீர் பிலிருபின் அளவு வேகமாகக் குறைகிறது. இந்த நடைமுறை முழுவதும் குழந்தை கண்காணிக்கப்படுகிறது. மேலும் இரத்தம் ஏற்றப்பட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு பிலிருபின் அளவும் பரிசோதிக்கப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் ஹீமோலிடிக் நோய் (எரித்ரோபிளாஸ்ட்டோசிஸ் ஃபெட்டாலிஸ்)

வழக்கமாக லேசான நிலைகளில் எந்த சிகிச்சையும் தேவைப்படாது. கடுமையான நிலைகளில், ஒளிக்கதிர் சிகிச்சையோடு,இரத்தம் ஏற்றுவதும் பரிந்துரைக்கப்படலாம், அல்லது இம்முனோக்ளோபுலின்ஸ் (அந்நியமான பொருட்களை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு உற்பத்தி செய்யும் புரதங்கள்) ஊசி செலுத்துவதன் மூலம் குழந்தையின் நிலைமை கண்டிப்பாக முன்னேற்றமடைகிறது. அது குழந்தையின் ஆர்பிசீக்கள் மேலும் உடைவதைத் தடுத்து டீஸ்பி அளவுகளைக் குறைக்க உதவுகிறது.

வயது வந்தவர்களுக்கு, மஞ்சள்காமாலையின் சிகிச்சை பின்னால் இருக்கும் காரணத்தையும், அதை நீக்குவதையும் பொறுத்து இருக்கிறது. பின்வருவன மஞ்சள் காமாலையின் பின்னால் இருக்கும் காரணங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய சிகிச்சைக்கான உதாரணங்கள்:

இரத்தசோகை

உங்கள் மருத்துவர் ஆர்பிசீக்கள் உடைவதைத் தடுக்க இரும்பு சத்து மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

Jaundice

நோய்த்தொற்று (எ.கா., கல்லீரல் அழற்சி)

வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.

நாள்பட்ட கல்லீரல் நோய் அல்லது குடியினால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு

உங்கள் மருத்துவர் உங்களை, உங்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மேலும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,மது அருந்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்துவார். மிக அதிக மோசமான நிலைகளில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

பித்தப்பையில் அடைப்பு

பித்தப்பையில் கட்டிகள், கணைய புற்றுநோய் பித்தப்பையை அழுத்துவது, கட்டிகள், இன்ன பிறவற்றால் அடைப்பு ஏற்படக் கூடும். சிகிச்சை, அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதோடு தொடர்புடையது.

மரபுவழி நோய்களால் ஏற்படும் மஞ்சள்காமாலை

சிகிச்சை, மஞ்சள்காமாலைக்கு காரணமான குறைபாடுள்ள காரணிகளை உள்ளே செலுத்துவதை உள்ளடக்கியது.

சிகிச்சையைப்  போன்றே சுய பாதுகாப்பும் முக்கியமானது. மிதமான, சரிவிகித, குறைந்த கொழுப்புள்ள உணவு, அதிகமான தண்ணீர், சுத்தமான பழச்சாறுகள், மருந்துகள், போதுமான ஓய்வு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது முக்கியமானது. அளவுக்கு அதிகமான, காரமான மற்றும் தெருவோர உணவுகளை சாப்பிட வேண்டாமென நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். தெரியாத நீர்நிலைகளில் தண்ணீர் அருந்தக் கூடாது மற்றும் சுய சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும்.

Read More:

How to know symptoms of Chickenpox?

சின்னம்மை அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Stomach Cancer?

வயிற்று புற்றுநோய் அறிகுறிகள் என்ன?