Skin Itching
Skin Itching
Listen to this article

Skin Itching is the feeling (தோல் அரிப்பு அறிகுறிகள் என்ன?)of having to scratch anywhere on the skin. Itchy skin can be a symptom of an allergic reaction to nerves, problems with the immune system, side effects of certain medications, or underlying health conditions.

தோல் அரிப்பு என்பது தோலில் எங்கு வருகிறதோ அங்கு சொறிய வேண்டும் என்ற உணர்வு ஆகும். தோல் அரிப்பு நரம்புகளில் ஏற்படும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான பிரச்சினைகள், சில மருந்துகளின் பக்க விளைவு அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள், உடல் நல கோளாறு ஆகியவற்றின் அறிகுறியாகும்.

பல்வேறு வகையான அரிப்புகள் உள்ளன. அவற்றை பொதுவாக அதன் தோற்றத்தை அல்லது அதை ஏற்படுத்தும் காரணத்தின் அடிப்படையில் அடையாளம் காணலாம். தோல் அரிப்பு வகையில் மிகவும் பொதுவானது வெடிப்பு, படை நோய், பூஞ்சைத் தழும்புகள், மற்றும் பூச்சிக் கடி. அரிப்பு வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் பொதுவானது.

இது கண் கூட தெரியக் கூடிய தோல் சிவந்திருத்தல், வீக்கம், கொப்புளங்கள் மற்றும் வெடிப்பு போன்ற தோற்ற விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அரிப்பு பொதுவாக ஒரு ஆபத்தான அறிகுறி அல்ல, ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடித்தால் அது சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற சில கடுமையான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்பட்ட பின் அதை சரி செய்ய  தொடங்குவதற்கு பல பயனுள்ள சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் தோல் மேற்பூச்சு களிம்புகள் அல்லது வாய்வழி உட்கொள்ளும் மருந்துகளின் பயன்பாடு ஆகிய சிகிச்சை முறைகள் அடங்கும். வீட்டு வைத்தியம் தற்காலிக நிவாரணத்தையும் வழங்கலாம்.

மிகவும் பொதுவான அரிப்பு உணர்வு எளிதில் அடையாளம் காணக்கூடியது. இது நீண்ட காலமாக நீடித்து நாள் பட்டதாகவும்  இருக்கலாம் அல்லது அரிப்பு ஏற்படும் இடத்தில் சொறிந்தால் குறைந்துவிட கூடியதாகவும் இருக்கலாம். எனினும், அரிப்பு வேறு ஆரோக்கிய குறைபாடு தொடர்பாக ஏற்பட்டு இருந்தால், வெறுமனே சொறிதல் மட்டுமே போதாது.

பின்வருவம் அறிகுறிகள் அரிப்புடன் சேர்ந்து கொள்ளலாம்:

தோல் சிவத்தல்

அழற்சி

குறிப்பிட்ட இடத்தில் எரிதல் உணர்வு

புடைப்புகள் தோற்றம்

உலர்ந்த சருமம்

பெயர்ந்த தோல்

செதில் செதிலான தோல் தோற்றம்

தோல் உரிதல்

கொப்புளங்கள்

கழுத்து, உச்சந்தலையில், பின்புறம் அல்லது பிறப்பு உறுப்பு மண்டலம் போன்ற உடலின் பல்வேறு பகுதிகளிலும் நமைச்சல் ஏற்படலாம்.

Skin Itching

அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்பட்ட பின்பு,  பின்வரும் சிகிச்சை முறைகளை முயற்சிக்கலாம்:

கார்டிகோஸ்டிராய்ட் கிரீம்கள்

இந்த கிரீம்மானது தோலில் பூசும் பொழுது ஆறுதலாக மற்றும் குணமளிக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் வறட்சியைத் தடுத்து, தோல் அரிப்பை குணப்படுத்த உதவுகிறது. இதில் 1% ஹைட்ரோ கார்டிசோனை கொண்டு இருக்கிறது. ஸ்டீராய்டு கிரீம், மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து பரிந்துரைக்கப்பட்ட சீட்டு  இல்லாமல் பயன்படுத்தப்படக் கூடாது.

கால்சினைன் இன்ஹிபிடர்கள்

இந்த மருந்தானது தோல் நமைச்சலின் குறிப்பிட்ட பகுதிகளை சரி செய்ய உதவுகிறது.

ஆன்டி டெப்ர்ஸ்சன்ஸ்

உடலில் உள்ள ஹார்மோன்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் தோல் அரிப்பிலிருந்து விடுபட முடிகிறது.

கூழ்க் களிமங்கள்(Gel)

தோல் ஏரிச்சல் மற்றும் உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்க அலோ வேரா ஜெல் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆண்டி ஹிஸ்டமைன்கள்

ஆண்டி ஹிஸ்டமைன் மருந்துகள் (வழக்கமாக நோயாளிகள் எடுத்துக்கொள்ளவது) ஒவ்வாமை நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கும். அவை வீக்கத்தையும் மற்றும் நமைச்சலையும் தடுக்கிறது.

Skin Itching

ஒளி சிகிச்சை

ஒளி சிகிச்சையில், நன்கு அறியப்பட்ட அலைநீளத்தில் யு.வி.ஒளி கதிர்களை அரிப்பு ஏற்படும் பகுதிகளின் மீது செலுத்தி அந்த கதிர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தோல் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இது தற்காலிக நிவாரணத்தையே அளிக்கிறது. அதனால் பிறகு வராமல் இருக்க மற்றும் நிரந்தர தீர்வு வேண்டுமெனில் பல முறை இந்த ஒளி சிகிச்சையினை செய்ய வேண்டும். இது போட்டோ தெரப்பி என்றும் அழைக்கப்படுகிறது.

அரிப்பை ஏற்படுத்தும் அடிப்படை நேய்கான சிகிச்சை

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் அல்லது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு தொடர்பான உடல் நல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலைமை சரி செய்யப்படுவதால், நமைச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த நோய்களுக்கான சிகிச்சையானது அரிப்பின் அறிகுறிகளையும் நீக்குகிறது.

முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது நமைச்சலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்:

தோலில் அரிப்பு ஏற்பட காரணமாக இருக்கும் பொருட்களை பயன்படுத்துவதையும் உண்ணுவதையும் தவிர்க்கவும்.

எரிச்சலூட்டும் பகுதி மீது மருந்திட்ட திரவ களிம்புகளை (lotions) பயன்படுத்துங்கள். அந்த திரவ களிம்பு மருந்தகத்தில் எளிதாக கிடைக்கூடியது. மேலும், உலர்ந்த மற்றும் எரிச்சலுடைய தோலை குணப்படுத்த இந்த திரவ களிம்பு மிகவும் உதவுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொறிவதை தவிர்க்கவும். இது ஒரு பூஞ்சை (fungal infection) தொற்று என்றால், அந்த இடத்தில் அரிப்பது தோலை சேதப்படுத்தவும் அரிப்பு மேலும் பரவவும் வழிவகுக்கும். சொறிவதினால் கூட நகங்கலிருந்து கிருமிகள் பரவி மேலும் வீக்கங்களை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தை குறைக்கவும். மன அழுத்தம் அதிகரித்தால்   நோய் எதிர்ப்பு அமைப்புனாது (immune system) தூண்டப்பட்டு மீண்டும் நமைச்சல் மற்றும் ஒவ்வாமைகள்  போன்றவை ஏற்படலாம்.

மருத்துவ ரீதியில் நமைத்தல் (ப்ருரிடுஸ்) என்றும் அழைக்கப்படும் அரிப்பு, அசௌகரியமான உணர்வைக் குறிக்கிறது, இது தோலில் பாதிக்கப்பட்ட பகுதியை சொறிய மற்றும் தேய்க்க ஊக்கப்படுத்துகிறது. அரிப்பு பல காரணங்களால் ஏற்படலாம். எனினும், இதற்க்கு மிகவும் பொதுவான காரணம் வறண்ட தன்மை கொண்ட சருமம் ஆகும்.

ஒரு வறண்ட தன்மை கொண்ட மற்றும் சீரற்ற தோலில் அரிப்பு ஏற்படும் போது சொறிவதாலும் உராய்வு ஏற்படுவதாலும் அந்த இடத்தில் ஒரு எரியும் உணர்வை ஏற்படுத்தும். நமைச்சல் ஏற்படும் காரணங்களைப் பொறுத்து, சிவப்பு, கொப்புளங்கள், துர்நாற்றம், சில நேரங்களில் இரத்தப்போக்கு (பெரும்பாலும் அதிகப்படியான அரிப்பு மற்றும் சிராய்ப்பு காரணமாக) போன்ற பிற விளைவுகள் ஏற்படலாம்.

சிலருக்கு, தொடர்ச்சியான அரிப்பு, தோல் நோய், தடிப்புத் தோல் அழற்சி, கர்ப்பம், மற்றும் மிகவும் அரிதாக, புற்றுநோய் போன்ற அடிப்படை உடல்நல கோராளுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நீரிழிவு, ஒவ்வாமை, மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகள் கொண்ட மக்கள், இன்னும் அதிக அளவில் அரிப்பினை அனுபவிக்க நேரலாம். வயது முதிர்ச்சி காரணமாக, தோல் ஈரப்பதத்தை இழந்து சருமம் வறண்டு போவதால் வயதானவர்களுக்கு இயற்கையாகவே அரிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

Read more:

How to know symptoms of High Cholesterol?

 Pain in penis