symptoms of Migraine
symptoms of Migraine
Listen to this article

Migraine is a persistent (ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் என்ன?)severe headache of neurological origin. Severe pains especially on one side of the head. A person with migraine symptoms should rest completely in a dark and quiet place.

ஒற்றைத் தலைவலி (மைகிரேன்) என்பது நரம்பியல் சம்பந்தமான தொடர் கடுமையான தலைவலியாகும். குறிப்பாக தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுகடுப்பான வலிகள் ஏற்படும். ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகளைக் கொண்ட ஒரு நபர் இருண்ட மற்றும் அமைதியான இடத்தில் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.

சிலருக்கு, ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்கள் ஓளி சுடர் மூலம் அல்லது இருண்ட பகுதிகளை பார்க்கும்போது மற்றும் குமட்டல் வாந்தியுடன் சேர்ந்த கைக்கால் கடுகடுப்புகளாகும். ஒற்றை தலைவலியை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒற்றைத் தலைவலி மற்றும் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.

  • ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் என்ன?

ஓற்றைத் தலைவலியானது குழந்தை பருவத்திலோ அல்லது இளம் பருவத்திலோ அல்லது முதுமை பருவத்திலோ கூட ஆரம்பிக்கலாம். ஓற்றைத் தலைவலி உள்ள  நபர்களுக்குகான அறிகுறிகள். சில பொதுவான அறிகுறிகள்:

ஒற்றை தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்:

மிதமான வலியிலிருந்து கடுமையான ஓரு பக்க அல்லது இரு பக்க வலியாக இருக்கலாம்.

வலியானது ஏறி இறங்கும் அல்லது கடு கடுப்பாகவும் இருக்கும்.

உடல் ரீதியான வலியாகவும் இருக்க கூடும்.

அன்றாட செயல்களில் வலி ஏற்படலாம்.

குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல்.

ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறனில் கூச்சம் ஏற்படலாம்.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்

தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் கடு கடுப்பு இருக்கும்.

வெளிச்சம், ஒலி மற்றும் வாசனைகளில் வெறுப்பு உண்டாகும்.

மிகவும் சோர்வாக (fatigue) உணரப்படும்.

குமட்டல் மற்றும் வாந்தி.

எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள்.

வேலையில் கவனம் செலுத்த இயலாமை.

மோசமான இயக்க நிலை.

உன்னதமான ஓற்றைத் தலைவலியின் அறிகுறிகள்

ஒளிரும் விளக்குகள் அல்லது மங்கலான இடங்களை பார்வையிடும்போது ஏற்படலாம்.

உணர்வின்மை அல்லது விருவிருப்பு இருக்கும்.

பேசும்பொழுது குழப்பம் மற்றும் சிரமம் ஏற்படும்.

ஒரு விநோதமான வாசனை அல்லது காதுகளில் ஏதேனும் சப்தம் ஓலித்தல்.

குமட்டல் மற்றும் பசியின்மை.

தீவிர நிலையில் முழுமையாக அல்லது பகுதியளவு பார்வை இழப்பு ஏற்படலாம்.

நாள்பட்ட ஒற்றை தலைவலிக்கான அறிகுறிகள்

நாள் முழுவதும் தாங்க முடியாத தலைவலியாக நீடிக்கும்.

தொடர்ச்சியான குமட்டல் மற்றும் வாந்தி.

பார்வை இழப்பு மற்றும் பசியின்மை.

 ஃப்மிலியல் ஃஎமிப்லெகிக் தலைவலிக்கான அறிகுறிகள்

உடலின் ஒரு புறத்தில் பக்கவாதம் ஏற்படல்.

திடீரென தலைச்சுற்றல் (வெர்டிகோ).

ஊசி அல்லது கத்தி குத்துவதுப்போல உணர்தல்.

மங்கலான பார்வை மற்றும் தெளிவற்ற பேச்சு.

பக்கவாதம் (வலி, வாந்தி, அறியாமை) போன்ற அறிகுறிகள்.

பசலிர் அரிடரி தலைவலியின் அறிகுறிகள்

தலையில்  ஒரு பக்கத்தில் அல்லது இரண்டிலும்  திடீரென வலி மற்றும் கடு கடுப்பு ஏற்படும்.

முழுமையாக அல்லது பாதியான பார்வை இழப்பு.

குமட்டல் மற்றும் வாந்தி.

தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் நிலைத்தடுமற்றம்.

பேச்சில் சிரமம்.

தசைகளில் குறைப்பாடு.

Migraine

தலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும். நீங்கள் எப்போதாவது ஒற்றைத் தலைவலியைப் பெற்றிருந்தால், அதன் அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தற்காத்துக்கொள்ளவது மிக முக்கியமானதாகும். அதனால் தான் ஒற்றைத் தலைவலியை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

தடுப்பு (அவர்கள் தொடங்குவதற்கு முன்பாக தலையிடுவது)

கடுமையான / தோல்வியடைந்த நிலை (விரைவாக தலைவலியை நிறுத்த வேண்டும்).

தடுப்பு சிகிச்சைகள்

வாழ்க்கை முறை மாற்றங்கள்

மருந்துகள்

மருந்து அல்லாத தீர்வுகள் (உடல் சிகிச்சை, மசாஜ், குத்தூசி மருத்துவம் அல்லது ஒரு சிஓராப்டோகிராஃபர் போன்றவை).

ஊட்டச்சத்துக்கள் (மெக்னீசியம், கோக் 10, அல்லது வைட்டமின் B2 அல்லது பி 12)

கடுமையான மற்றும் தோல்வியடைந்த நிலை சிகிச்சை

சில அடிப்படை வலி நிவாரணிகள் மூலம் சரி செய்யலாம் (ஆஸ்பிரின், இபுப்ரோஃபென், நபிரக்சன் மற்றும் அசெட்டமினோஃபென் போன்றவை) மற்றும் கலப்பு மருந்துகள் (எக்ஸ்டிரினிக் மைக்ரேன், உதாரணமாக, அசெட்டமினோஃபென், ஆஸ்பிரின் மற்றும் காஃபின் கலவையாகும், மற்றும் அல்கா செல்டெர் ஆஸ்பிரின்).

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

நீரேற்றம் செய்தல் (இருண்ட அமைதியான அறைக்குள் தண்ணீர் அருந்திவிட்டு, பின்னர் தூங்க முயற்சிகவும்)

எப்போது மருத்துவரை தொடர்பு கொள்ளாம்:

மருந்துகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களுக்கு பின்பும் நிவாரணம் பெறவில்லை எனில் மருத்துவரை அனுக்கலாம்.

நீங்கள் மாதத்திற்கு 10 முதல் 15 க்கும் அதிகமான முறை மருந்துகள் எடுத்துக் கொண்டும், தலைவலியில் மாற்றம் இல்லையெனில்  மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.

பல வகையான தலைவலிகள் உள்ளன, அவற்றினால் உடல் உபாதைகள் மற்றும் வலிகள் ஏற்படும்.  குறிப்பாக ஓற்றைத் தலைவலி கடுமையான வலிகளை ஏற்படுத்துவதால், அது உடலை பலவீனமாக்கும் தலைவலியாக கருதப்படுகிறது.

ஓற்றைத் தலைவலி நோயாளிகளுக்கான  ஆய்வில், ஆண்களை விட  பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக ஓற்றைத் தலைவலியால்  பாதிக்கப்படுவதாக கூறப்படுக்கிறது.  சில நேரங்களில் கடுமையான  தலைவலியால் காட்சி குறைப்பாடு அறிகுறிகளும் ஏற்படலாம்.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் ,அடிக்கடி ஏற்படும் தலைவலி மற்றும் அதன் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதன் மூலம்  மருத்துவர் உங்களை எந்த வகை ஓற்றைத்  தலைவலியை சேர்ந்தவர் என வகைப்படுத்த இயலும். ஒற்றைத் தலைவலியின் எண்ணிக்கையை பொறுத்து அதை வகைப்படுத்துகின்றன. சில ஒற்றைத் தலைவலியானது வருடத்திற்கு ஒரு முறை அல்லது வாரங்களுக்கு பல  முறை  என ஏற்படுகின்றன.

அறிந்து கொள்ளக:

சிலருக்கு மன அழுத்தம்,ஒவ்வாமை, ஒளி சுடர் மற்றும் சில குறிப்பிட்டத்தக்க உணவுகள் போன்றவற்றின் தூண்டுதல் மூலம் அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

பெருப்பாலான ஒற்றைத் தலைவலி நோயாளிக்களுக்கு, தலைவலி ஆரம்பிக்கும் முன்பாக சிலஅறிகுறிகளை உணரலாம். உதாரணமாக வாந்தி, குமட்டல், அல்லது விளக்குகளிருந்து வரும் ஒளிச்சுடரை உற்று பார்க்கும்போது ஏற்படலாம்.

பலர் இந்த  ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அதன் அறிகுறிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளவதினால் அதன்  தீவிர தாக்குதலை தடுக்க முடியும்.

கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளனாவர்கள் அதற்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் அதன் நிகழ்வுகள்  குறைந்து உள்ளதா என  உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

How to know symptoms of high Fever disease?

காய்ச்சலின் நிலைகள்-காய்ச்சல் கண்டுபிடித்தல்?

How to know symptoms of Sciatica?

அடிமுதுகு (நரம்புவலி)அறிகுறிகள் என்ன ?

How to know Irritable Bowel Syndrome?

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்ன?