How to know symptoms of Throat Cancer?

symptoms of Throat Cancer
symptoms of Throat Cancer
Spread the love
Listen to this article

Throat cancer is a type of cancer (தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்ன?) that occurs in the head and neck region , and this type of cancer causes the uncontrolled growth of cells (cells) in different parts of the throat. Throat cancer is known by different names, depending on where it affects the throat.

தொண்டை புற்றுநோயானது தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக் கூடிய புற்று நோயின் ஒரு வகை ஆகும், இந்த புற்று நோய் வகையில்  தொண்டைப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள செல்களில்  (உயிரணுக்களின்) கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்படுகிறது. தொண்டை புற்றுநோய் தொண்டையில் பாதிக்கப்படும் இடங்களைப் பொறுத்து, வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

அதன் முக்கியமான அறிகுறிகளானது: உண்பதில் அல்லது விழுங்குவதில் சிரமம், தொண்டை வலி, பேசுவதில் கஷ்டங்கள் மற்றும் தொடர் இருமல் போன்றவை. வயது, பாலினம் மற்றும் மரபணு பாதிப்புகள் போன்ற பல ஆபத்து காரணிகள், தொண்டை புற்றுநோயை உருவாக்குகிறது.

புகையிலை உபயோகம் மற்றும் அதிக அளவு மது அருந்துதல் ஆகியவை தொண்டை புற்றுநோயை உருவாக்குவதில் முக்கியமாக தொடர்பு உடையவை ஆகும். தொண்டை புற்றுநோய் ஒரு உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனைகள், இமேஜிங் சோதனைகள் மற்றும் மாதிரி செல்களை சேகரித்து செய்யப்படும் பரிசோதனைகள் (பயாப்ஸி) ஆகியவற்றால் கண்டறியப்படுகிறது.

தொண்டை புற்றுநோய்க்கு கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியேஷன் தெரபி), இலக்கு சிகிச்சை (டார்கெட்டட் தெரபி) மற்றும் அறுவை சிகிச்சை தலையீடு( சர்ஜிக்கல் இன்டெர்வேன்ஷன்) போன்ற பல வகை சிகிச்சைகள் உள்ளன.

பொதுவாக புற்றுநோய் சிகிச்சை பல பக்க விளைவுகளுடன் தொடர்புடையது. இந்த பக்க விளைவுகள் மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் நிர்வகிக்கப் படலாம். புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப் பட்டுவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

  • தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்ன ?

தொண்டை புற்றுநோயின் அறிகுறிகள் புற்றுநோய் உள்ள இடத்தையும், அது தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் சார்ந்துள்ளது. தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளில் சில பின்வருமாறு:

குரலில் மாற்றங்கள் (பேச்சு தெளிவின்மை அல்லது தெளிவாக பேச இயலாமை).

நாட்பட்ட இருமல்.

தொண்டை புண்.

தொண்டை வலி.

விழுங்குவதில் சிரமம் .

தொண்டையில் கட்டி.

திடீர் எடை இழப்பு.

கண்கள், தாடை மற்றும் தொண்டையில் ஏற்படும் வீக்கம்.

சளியில் இரத்தம்.

காது வலி.

காதுகளில் ரீங்கார சத்தம் கேட்பது.

தொண்டைக்குள் ஏதோ சிக்கியிருக்கும் ஒரு உணர்வு.

இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை பொதுவான தொண்டை தொற்று நோய்களின் அறிகுறிகளுடன் நம்மை குழப்பப்படக்கூடும். இருப்பினும், தொண்டை புற்றுநோயானது நீண்டகால அறிகுறிகளை கொண்டிருக்கிறது, இது புற்றுநோய் முன்னேற்றமடையும் போது மட்டுமே தெறிய வருகிறது.

தொண்டை புற்றுநோயின் சிகிச்சை, புற்றுநோய் உள்ள இடம், புற்றுநோயின் வகை மற்றும் புற்றுநோயின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. அந்த சிகிச்சைகள் பின்வருமாறு:

கதிர்வீச்சு சிகிச்சை

புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையில் குறிப்பிட்ட நோய் தாக்கப்பட இடங்களில், புற்றுநோய் உயிரணுக்களை தாக்கி அழிக்க கட்டுப்பாட்டிற்குரிய குறிப்பிட்ட அளவு காமா கதிர்கள் போன்ற கதிர்களை பயன்படுத்துகிறது.

கீமோ தெரபி

கீமோ தெரபியில் சில மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் செல்களை நீக்குவதில் உதவுகிறது. புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்க சிகிச்சையுடன் இந்த கீமோதெரபி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை மூலம், புற்றுநோய் கட்டிகளை நீக்க முடியும். ஒரு கட்டியை அகற்றுவதற்காக, மற்ற திசுக்கள் அல்லது தைராய்டு போன்ற பகுதிகளை அகற்ற வேண்டி வரலாம். இது வளரும் கட்டியின் அளவை பொறுத்தது. புற்றுநோய் மேலும் பரவுவதை தடுக்க அயல் நிணநீர் சுரப்பிகளயும் அகற்ற வேண்டி வரலாம்.

மல்டி மோடலிடி சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் கதிரியக்க சிகிச்சை அல்லது கீமோதெரபியை பயன்படுத்துவதாகும். இந்த சிகிச்சை பொதுவாக பெரிய அளவிலான கட்டிகளுக்கு வழங்கப்படுகிறது.

மறுவாழ்வு சிகிச்சை

மறுவாழ்வு சிகிச்சை புற்றுநோய் சிகிச்சையுடன் இணைந்து செய்யப்படுகிறது. இது உணவு பழக்கம், பேச்சு பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றம் அளிக்க உதவுகிறது. ஆலோசகர்கள், சமூகத் தொழிலாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் தீவிரமாக சிகிச்சை பெறும் மனநல அழுத்தத்தில் உள்ள ஒருவரை மீட்டெடுக்க உதவ முடியும்.

சிகிச்சை நடைமுறைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் பின்வருமாறு:

குமட்டல் மற்றும் வாந்தி

கீமோ தெரபி மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது.

பேசுவதில் கஷ்டங்கள்

தொண்டை அறுவை சிகிச்சை என்பது பேசுவதில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். குரலில் மாற்றங்கள் போன்ற பக்க விளைவுகள் இருக்கலாம், இது நாள் போக்கில் சரி ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்

வடுக்கள்

தொண்டையின் மற்ற பகுதிகளில் திசுக்கள் நீக்கப்பட்டிருப்பின், அதனால் வடு அல்லது சில குறைபாடுகள் ஏற்படலாம்.

வாழ்க்கை மேலாண்மை

சில சந்தர்ப்பங்களில், புற்றுநோய் முற்றியிருக்கலாம் மற்றும் ஒரு திட்டவட்டமான சிகிச்சைக்கு சாத்திய கூறுகள் இருக்காது. இது போன்ற சந்தர்ப்பங்களில், வலி மற்றும் அறிகுறிகளை நிர்வகிக்கும் பொருட்டு நோய்த்தடுப்பு பாதுகாப்பு பயன்படுத்தப்படுகிறது. நோய்த் தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் சில பின்வருமாறு:

வலியை கையாளுதல்

இது நோயாளியின் தேவைகள் மற்றும் சிகிச்சையின் தீவிரம் ஆகியவற்றை மனதில் வைத்து திட்டமிட்டப்படுகிறது. வலியை குறைக்க வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு

குடும்ப உறுப்பினர்களாலும் நண்பர்களாலும் வழங்கப்பட்டும் ஆதரவு சிகிச்சையைப் பெறுவதில் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால், இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

Throat Cancer

புற்றுநோயாளிகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்முறை உளவியலாளரின் ஆலோசனையானது மனோரீதியாக ஆறுதல் வழங்குவதில் மிகவும் உதவியாக இருக்கும்.

தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் அக்கரையான பாதுகாப்பு மற்றும் கையாளுதல் தேவைப்படுகிறது:

புற்றுநோய் சிகிச்சையுடன் வரும், களைப்பை சமாளிக்க வெளியே சென்று சிறிய தூரம் நடந்துவிட்டு வருவது போன்ற சிறிய உடற் பயிற்சிகளில் ஈடுபடலாம். மேலும் பிற எளிய செயல்களைச் செய்யலாம்.

புற்றுநோய் சிகிச்சை ஞாபக மறதியை ஏற்படுத்தக்கூடும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், செய்ய வேண்டிய பணிகளை அல்லது விஷயங்களை எழுதி வைத்துக்கொள்ளலாம், ஒரு சரிபார்ப்பு பட்டியல் அல்லது நினைவூட்டல்களையும் எழுதி வைக்கலாம். ஷாப்பிங் அல்லது வாகனம் ஓட்டுதல் போன்ற பணிகளை செய்வதற்கு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உதவி பெறலாம்.

தொண்டை புற்றுநோய்க்கு சிகிச்சையின்போது தொடர்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. முன்னேற்றத்தை கண்காணிக்கும் மற்றும் வேறு எந்த அறிகுறிகளையும் நிர்வகிக்கவும் ஒவ்வொரு சில மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரை சென்று சந்திக்க வேண்டும்.

தொண்டை புற்றுநோய் என்றால் என்ன?

தொண்டை புற்றுநோயானது, தொண்டையில் புற்றுநோய் செல்களின் பெருக்கம் அல்லது அசாதாரண செல்களை கொண்டுள்ளதைக் குறிக்கிறது, இது பேசுவதிலும் மற்றும் உணவு உட்கொள்வதிலும் கஷ்டங்கள் உட்பட பல சிக்கல்களை விளைவிக்கிறது.

இது பொதுவாக ஒரு சிறிய அளவிளான வளர்ச்சியாக தொடங்கி, பின்பு ஒரு சில நாட்களில் அதன் அளவில் அதிகரிக்கும். இதன் வளர்ச்சி திடீரென முடுக்கிவிடப்படலாம் அல்லது பல மாதங்கள் கூட ஆகலாம். தொண்டை புற்றுநோயானது குரல் பெட்டி (larynx), குரல்வளை (pharynx) அல்லது தொண்டைப் பகுதியின் மற்ற பகுதிகளை பாதிக்கக்கூடும்.

Read More:

How to Know symptoms of Fatty Liver?

கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன?

How to know symptoms Bradycardia?

குறை இதயத் துடிப்பு (மெதுவான இதயத் துடிப்பு) என்றால் என்ன?

How to know symptoms of ovarian cancer?

கருப்பை புற்றுநோய் என்றால் என்ன? 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *