symptoms of Foot Pain
Listen to this article

The foot is an important part of the human body that helps us walk and stay upright.( பாத வலி அறிகுறிகள் என்ன?)The structure of the feet greatly helps in balancing the weight of the body while walking and standing. According to some research articles from the American Podiatric Medical Association, it is said that a man walks about 75,000 miles by the age of 50.

பாதம் என்பது நாம் நடப்பதற்கும் மற்றும் நிமிர்ந்த தோற்றத்திக்கும் உதவும், மனித உடலின் முக்கிய அங்கமாகும். கால்களின் கட்டமைப்பானது நடக்கும் போதும் மற்றும் நிற்கும் போதும் உடலின் எடையை சமநிலையாக வைக்க பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவின் பாதக் கோளாறுக்கான மருத்துவ சங்கத்தின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, ஒரு மனிதன் தனது 50 வயதில் சுமார் 75,000 மைல்கள் வரை நடப்பதாக கூறப்படுக்கிறது.

இதன் விளைவாக, பாதமானது, நீண்ட காலமாக தேய்மானம், காயங்கள், மற்றும் உடல் அழுத்தம் போன்ற முக்கிய காரணங்களினால் பாத வலி ஏற்படுகிறது. தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில், ஆண்களை விட பெண்களுக்கு பாத வலியானது அதிகமாக உள்ளது.

பாத பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். இருப்பினும், குதிகால் மற்றும் கணுக்கால் (கால் குதிகால் மற்றும் கால்விரல்களுக்கு இடையில் உள்ள எலும்புகள்) மிகவும் பொதுவான பாதிக்கப்பட்ட பகுதிகளாக கருத்தப்படுக்கிறது, ஏனெனில் அவைகள் கால்களின் முக்கியமான உடல் எடையை தாங்கும் பகுதிகளாகும்.

பாத வலியை மருத்துவர் உடல் பரிசோதனை, உருவமாக்கம் பரிசோதனைகள், இரத்த பரிசோதனைகள் மற்றும் பிற கருவிகளை அடிப்படையாகக் கொண்டு கண்டறியப்படுக்கிறது. ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தல், நல்ல பொருத்தமான மற்றும் அதிர்ச்சி தாங்கும் காலணிகளை அணித்தல், குதிக்கால் பட்டைகள், எடை கட்டுப்பாடு, கால்நீட்டு பயிற்சிகள் போன்ற சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பாத வலியை குறைக்கலாம். வலி நிவாரணி மற்றும் பிசியோதெரபி பயிற்சிகள் போன்ற மருந்துவ சிகிச்சைகளும் பாத வலியை குறைக்க உதவுகின்றது.

குதிகால் வலி

தற்போது பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் குதிகால் வலி.குதிவாதம் என்பது பாதத்திலிருந்து கால்விரல்களில் உள்ள நீண்ட மெல்லிய தசைநார் வீக்கம் ஆகும். குதி முள் (கால்சியம் குறைப்பாட்டின் காரணமாக எலும்பு வளர்ச்சி) அல்லது தசைநாரில் ஏற்படும் அதிக அழுத்தம் மற்றும் காயங்களினால் பாத வலி ஏற்படுக்கிறது. பின்வரும் அறிகுறிகளும் ஏற்படலாம்:

குதிகால் அல்லது பாதத்தின் நடுபகுதியிலும் வலி ஏற்படலாம்.

நீண்ட நேரமாக உட்கார்ந்து அல்லது படுக்கை நிலையில் இருந்து எழுந்து சில தூரம் நடக்க ஆரம்பிக்கையில் (எ.கா. தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு) குதிகாலில் ஒரு கடுமையான தாங்க முடியாத வலியை உணரலாம்.

சிறிது நேரம் நடந்த பிறகு வலி குறையும்.

உடற்பயிற்சி மற்றும் நீண்ட தூர நடைப்பயிற்சி அல்லது இது போன்ற பிற செயல்களுக்கு பின்னரே வலி ஏற்படலாம்.

வலியுடன் சேர்ந்த சோர்வு அல்லது உணர்வின்மை இருக்கலாம்.

குதிகால் தசைநார்

இது குதிகாலிருந்து காலை இணைக்கும் தசைநாரில் ஏற்படும் வீக்கமாகும். காலின் பின் பகுதி சதைப்பற்றின் இறுதி முனையில் குதிகால் தசைநார் அமைக்க மேல்நோக்கி விரிவடைவதினால் நடைபயிற்சி, குதித்தல், ஒடுத்தல் போன்ற செயல்கள் செய்ய உதவுகிறது.

தசைநாரானது மிகுந்த நடைபயிற்சி அல்லது ஓடுதல், காலின் பின் பகுதியில் இறுக்கம், கடுமையான மேற்பரப்பில் ஒடுத்தல், குதித்தல் மற்றும் இது போன்ற பிற நடவடிக்கையின் காரணமாக அழற்சி ஏற்படுக்கின்றது. பிளாட் ஃப்ட், குதிமுள் மற்றும் கீல்வாதம் ஆகியவை குதிகாலின் தசைநார் வீக்கங்களை விளைவிக்கிறது. பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்:

குதிகால் மற்றும் குதிகால் தசைநாரின் மேலே வலி ஏற்படும்.

நடைபயிற்சி அல்லது ஒடுத்தல் போன்ற உடற்பயிற்சிகளினால் விறைப்பு மற்றும் வலி அதிகரிப்பு ஏற்படலாம்.

நிற்பதில் சிரமம்.

குதிகாலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுதல்.

பாத நடுபகுதியின் வலி

மெட்டாடாலெல்கியா என்பது நடுப்பகுதி பாதத்தில் ஏற்படும் ஒரு வலியாகும். ஒழுங்கற்ற காலணி, கீல்வாதம் மற்றும் அதிகப்படியான விளையாட்டு நடவடிக்கையின் விளைவினால் கணுக்காலிருந்து கால்விரல்களை இணைக்கும் பாத எலும்புகளில் வலி ஏற்படுகின்றன.

உடல்பருமன்,சமமான பாதம்,உயர் வளைந்த பாதம்,கீல்வாதம், கீல்வாத வீக்கம்,கால் பெருவிரல் வீக்கம் (காலின் முதல் விரலில் வலியுடன் வீக்கம்),சுத்தி கால்(விரல்களில் ஒன்று நிரந்தரமாக வளைந்திருப்பது), மார்டோனின் நரம்பு மண்டலம் (புற்றுநோயற்ற வளர்ச்சியைக் குறைத்தல்), எலும்புமுறிவு, மற்றும் நீரிழிவு முதுமை நோயாளிகளுக்கு மெட்டாடாலெல்கியானது  அதிகரிக்கிறது. இது தொடர்புடைய அறிகுறிகள்:

ஒன்று அல்லது இரு கால்களிலும், குறிப்பாக கால்விரல்களுக்கு அருகில், பாத எரிச்சல் மற்றும் வலி உணர்வு ஏற்படுதல்.

பாதத்தற்கு கீழ் கல் போன்ற உணர்வு ஏற்படும்.

வலியுடன் சேர்ந்த் சோர்வு மற்றும் உணர்வின்மை.

நடக்கும் போதும் மற்றும் நிற்கும் போதும் வலி அதிகரிக்கும்.

வளரும் கால் நகங்கள், மருக்கள், நகம் மற்றும் தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் (தடகளத்தின் கால்), கால் ஆணி மற்றும் தடிப்புகள் (தடிமனாக அல்லது கடினமான தோல்), கால் விரல் வீக்கம், நகச்சுத்தி, கீல்வாதம் மற்றும் வளைந்த நகங்கள் இது போன்ற காரணங்களினால் முன்னங்கால் வலி ஏற்படுக்கின்றது. பொதுவாக அனுபவிக்கும் அறிகுறிகள் பின்வருமாறு:

நகம் மற்றும் கீல்வாததின் தொடர்புடைய, சோர்வு மற்றும் வீக்கத்துடன் சேர்ந்த விறுவிறுப்பு ஏற்படும். கீல்வாதம் என்பது குறிப்பாக பெருவிரல் எலும்பில் ஏற்படும் வீக்கமாகும்.

பாத வலியானது கால்விரல் குறைபாடாக எழுகிறது:

நகச்சுத்தி

விரல் குறைப்பாட்டினால் (இரண்டாம், மூன்றாவது அல்லது நான்காவது) பாதத்தில் உள்ள நகங்கள் சுத்தி போன்று தோன்றும்.

வளைந்த நகம்

கால்விரல்களின் குறைபாடு காரணமாக வளைந்த பாதமாக ஒரு தோற்றம் போல தோன்றுகிறது.

பெருவிரல்

எலும்பில் கடினமான கட்டி உருவாவதினால் பெருவிரல்  இரண்டாவது விரலை விட மெல்லிந்து இருக்கும்.

சுருங்கிய விரல் தசையின் காரணமாக முன்னங்காலில் எரிச்சல் மற்றும் வலி ஏற்படல்.

நரம்புகள் சம்பந்தப்பட்ட, சோர்வு மர்றும் உணர்வின்மை வலி ஏற்படுதல்.

கால்விரல் மற்றும் உள்ளங்கால்களில் தொடர்ந்து அழுத்தம் காரணமாக கடுமையான மற்றும் தடித்த தோல் (கால் ஆணி அல்லது தடுப்பு) வருகின்றது.

வலி மற்றும் வேதனையுடன் சேர்ந்த கட்டிகள், வறட்சியான சரும தோலை உருவாக்கி மற்றும் தோல் பூஞ்சை நோய்த்தாக்கதையும் ஏற்படுத்துகிறது. நகங்கள் உடையக்கூடியதாகவும் மற்றும் நிறமாற்றம் உடையதாகவும் காணப்படும்.

பாத வலியானது நீர்க்கட்டு, முறிவு, மற்றும் பனிவெடிப்புகளையுடன் (நீடித்த குளிர்ந்த வெப்பநிலையின்காரணமாக வீக்கம் ஏற்படுவது) தொடர்புடையது.

பாதத்தில் மருக்கள்,கால் ஆணி மற்றும் தடுப்புகள் போன்றவற்றின் மூலம் வலி ஏற்படலாம்.

பனிவெடிப்பானது கடுமையான வலி மற்றும் வேதனையை தரவல்லது. தோலில் வீக்கம் மற்றும் இருண்ட சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாற்றும்.

எலும்பு முறிவு மற்றும் எலும்புகளில் வீக்கம் போன்றவற்றின் மூலம், முடக்குவாதம், கீல்வாதம், தடிப்பு தோல் அழற்சி மற்றும் கால்விரலில் வேதனையுடன் கூடிய வலி. வலியுடன் கூடிய வீக்கம் மற்றும் கால் அசைவின்மையும் குறிப்பிடத்தக்கது.

பாத வலிகளுக்கான சிகிச்சைகள் மருந்துகள் மற்றும் சுய நடத்தைகள் மாற்றங்கள் ஆகும்.

Foot Pain

குறைந்த பாதவாலிகளுக்கு பாராசிட்டமால் போன்ற வலிநிவாரணி மாத்திரைகள் (வில்லைகள்).

வீக்கம் குறைக்கும் மருந்துகளான புரூபின் வலியின் வீரியத்தை குறைக்கும்.

மற்ற மருந்துகள் செயல்படவில்லை எனில் வலியுள்ள இடங்களில் பயன்படுத்தப்படும் கார்டிகோஸ்டெராய்டு மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகள் உடனடி வலி நிவாரணி மருந்துகளாக பயன்படுகிறது.

கௌட் எனப்படும் கீள்வாதம் யூரிக் ஆசிட் குறைப்பு மருந்துகள் மூலம் குறைக்கப்படுகிறது.

சாலிசிலிக் அமிலம் கிரீம் அல்லது ஜெல் அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மருக்களை அழிக்க உதவுகிறது.

கால் பாத குறைபாட்டிற்கு பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன, இது நரம்புகளின் சிக்கல்களினால் ஏற்படும் கடுமையான கால் வலியுடன் கூடிய கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை விளைவை போக்க உதவும்.

காஸ்ட்ரோசிநிமியஸ் ரிஷிசியன் அறுவை சிகிச்சைமூலம் இறுகிய சதைப்பிடிப்புகளை நெகிழ வைத்தல். இது பிளண்டர் பேசியாவின் அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது மேலும் இது சதை பிடிப்புகளுக்கான பயிற்சியினால் மாற்றம் நிகழாது.

பிளண்டர் பேசியா எனப்படும் ஒரு சிறிய தசை கிளிப்பின் மூலம் பிளண்டர் பேசியா தசை நெகிழும் தன்மை அடைதல்.

ஒரு சில வாழ்க்கை முறை மேலாண்மை நடவடிக்கைகள் மோசமான நிலையில் இருந்து வலியைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது, அவை:

கிரோனிக் அல்லது நீண்ட நேர நிற்பதினால் வரும் வலியை வெதுவெதுப்பான வெப்பத்தை வலியுள்ள இடங்களில் ஒத்தனம் கொடுப்பதின் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் மற்றும் வழியை குறைக்கவும் உதவும்.

ஐஸ் பையை பயன்படுத்துவதன் மூலம் வீக்கம் மற்றும் மரத்துப்போகும் தன்மையினால் ஏற்படும் வலி குறையும். மாற்றாக குடுவையில் அடைக்கப்பட்ட குளிர்ந்த ஐஸ் நீர்யை வலியுள்ள பகுதியில் உருட்டுவதின் மூலமும் வலியை குறைக்கலாம்.

அதிகபட்ச குறைந்த உடல் எடையை பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்து மிருதுவாக அழுதிடுவதின் மூலம் வலியை குறைக்கலாம்.

மிருதுவான கால் பட்டைகள் கொண்ட காலணிகள் பயன்படுத்தவும் அல்லது ஹீலீங் பேட்ஸ் மூலம் காலில் வலியுள்ள இடங்களில் வலியின் வலிமையை குறைக்கலாம்.

கடினமான தரைகளில் வெறும்கால்களில் அல்லது காலணிகள் இல்லாது நடப்பதை தவிர்க்கவும்.

குதிங்கால் சதை, உள்ளங்கால் (பாதம்) சதைகளுக்கான சதைஇ ழுவை பயிற்சிகளை தொடர்வதின் மூலம் சதைப்பிடிப்பு வலிகளை குறைத்து சதைகளின் நெகிழும் தன்மையை அதிகப்படுத்துதல்.

இரவு நேரங்களில் தூக்கத்தின் போது சிபிலின்ட் ஸ்ட்ரெட்ச் தசை பிடிப்புகளான பிளான்டெர் பேசிஸ்ட் வலி நிவாரணியான பிளான்டெர் பேசியா உபயோகம் வலியை குறைக்கிறது.

உடல் எடை அதிகமாக இருப்பின் மிதமான உடற்பயிற்சி செய்வதின் மூலம் உடல் எடை குறைதல்.

கால் ஆணி நீட்டிப்பைத் தவிர்ப்பதற்காக, கால் விரல் நகங்களை சுத்தமாக வைத்து, ஒழுங்காக அவற்றை பராமரிக்கவும்.

பாத வலிக்கு ஓய்வு எடுப்பது மிகமுக்கிய காரணியாகும்.

தினந்தோறும் சதைகளுக்கான சதை நெகிழும் பயிற்சியை பாதம் மற்றும் குதிங்கால் செய்வதின் மூலம் பாத வலியை குறைக்கவும்.

கடினமான / இறுக்கமான காலணிகளை தவிர்த்து மிருதுவான காலணிகளை பயன்படுத்தவும்.

ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை அன்றாட வழக்கமாக்குவத்தின் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் தேவையான சத்துக்களை பெறமுடியும்.

Read More:

How to Know symptoms of Acidity?

அமிலத்தன்மை (அசிடிட்டி) அறிகுறிகள்!

How to know Causes of breast pain?

Causes of Breast Pain?

How to know Common Breastfeeding Problems

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்!