Whitening Discharge(leucorrhoea) (வெள்ளைப்படுதல் அறிகுறிகள் என்ன?) is a common and normal condition in women. In this condition the vagina (the passage from the uterus to the genitals) is always wet and smooth due to the discharge of a pale mucus-like fluid.
வெள்ளைப்படுதல்(லுகோர்ஹொயா) என்பது பெண்களுக்கு காணப்படும் பொதுவான மற்றும் சாதாரணமான ஒரு நிலை. இந்த நிலையில் வெளிறிய சளி போன்ற திரவம் வெளிவருவதால், எப்போதும் யோனி(கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதை) ஈரமாக மற்றும் வழவழப்பாகவும் இருக்கும்.
இதனால் யோனியில் நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. வெள்ளைப்படுதல் பருவமடைந்த ஒரு வயது வந்த பெண்ணின் வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக ஏற்படுகிறது.
வெள்ளைப்படுதலின் அறிகுறிகள், அரிப்பு இல்லாத வெள்ளை படல வெளியேற்றம், ஈரப்பத உணர்வு போன்றவை. இது பொதுவாக பாதிப்பில்லாதது மேலும் இது எந்த சிக்கல்களும் இல்லாமல் சரிசெய்யப்பட கூடியது. வெள்ளைப்படுதலின் பிற காரணங்களில் பாலியல் முறையினால் பரவக்கூடியதும், பாலியல் ரீதியினால் பரவாத நோய்த்தாக்கங்களும் அடங்கும்.
இந்தச் சூழல்களில், அரிப்பு, சிவத்தல், கெட்ட நாற்றம் மற்றும் அசௌகரியம் அல்லது வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இத்தகைய தொற்றுநோய்களை அல்லது இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களின் வளர்ச்சியை, மருந்துகள் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்க இயலும். அதிகப்படியாக அல்லது அசாதாரணமானதாக வெள்ளைப்படுதல் இல்லாதவரையில், அதற்கு எந்தவகையான சிகிச்சையையும் தேவையில்லை.
பொதுவாக, வெள்ளைப்படுதல் என்பது ஒரு மெல்லிய, வெளிப்படையான நீரின் வெளியேற்றமாகும். நோய்த்தொற்றுகளை பொறுத்து, வெளியீட்டின் அளவு, தடிமன் மற்றும் நிறம் போன்றவை மாறுபடுகின்றன. இது பின்வறும் மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து இருக்கலாம்:
கெட்டியான, வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறமான திரவ வெளியேற்றம்.
வலுவான மணம் மந்தமான துற்நாற்றம்.
பிறப்புறுப்பு மண்டலத்தில் சிவத்தல் மற்றும் அரிப்பு.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி
உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு.
இரத்தப்போக்கு அல்லது மாதவிடாயின்போது தென்படுதல். (மேலும் படிக்க – யோனி இரத்தப்போக்கு காரணங்கள் மற்றும் சிகிச்சை)
பெண்கள் பருவமடையும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் சுழற்சி, கர்ப்ப காலம், மாதவிடாய் நிற்கவிருக்கும் காலம் ஆகிய காரணங்களினால் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். மேலும் இது பின்வரும் ஏதேனும் ஒரு காரணங்களாலும் கூட ஏற்படலாம்:
பிறப்புறுப்பை கழுவ பயன்படும் சோப்பு திரவம், டம்போன்ஸ், பேட்ஸ் மற்றும் பேன்ட்டி லைனர்ஸ் போன்ற பெண்களின் சுகாதார பொருட்களின் பயன்பாடு.
கருத்தடைக்காக பயன்படுத்தப்படும் ஸ்பெர்மிசிடல் ஜெல்லீஸ் மற்றும் களிம்புகள்
உடலுறவு கொள்ளும் போது கருப்பை வாய் மற்றும் யோனியில் காயம் ஏற்படுதல்.
நீரிழிவு நோய் மற்றும் இரத்த சோகை போன்ற உடல் நல குறைகள்.
பின்வரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளால் கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்:
பாக்டீரியல் வஜினோசீஸ்
பாக்டீரியா வஜினோசீஸ் (பி.வி), யோனியில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்போது ஏற்படுகிறது. 15 முதல் 44 வயது வரையிலான பெண்களுக்கு குறிப்பாக பாலியல் செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடும் பெண்களுக்கு இது மிகவும் பரவலாக காணப்படும் ஒரு யோனி தொற்று ஆகும்.
த்ரஷ்
த்ரஷ், காண்டிசியாஸ் என்றும் அழைக்கப்படும். இது ஒரு ஈஸ்ட் வகை பூஞ்சை தொற்று ஆகும். கேண்டிடா மனித உடற்கூறின் சாதாரண ஒரு பகுதியாகும். இது வாய், தொண்டை, குடல் மற்றும் யோனி ஆகியவற்றில் இது இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் காணப்படுகிறது.
ட்ரைக்கொமோனியாஸிஸ்
ட்ரைக்கொமோனியாஸிஸ் என்பது ட்ரைக்கொமோனாஸ் வஜினலிஸ் ஏற்படும் ஒட்டுண்ணியால் பாலின உறவு மூலம் பரவும் ஒரு நோயாகும். இது ஒரு குணப்படுத்த கூடிய நோயாகும். மேலும் இது ஆண்களைவிட பெண்களுக்கே மிகவும் அதிகமாக ஏற்படுகிறது. ட்ரைக்கொமோனியாஸிஸ் நோய் தொற்றுகள் வயதான பெண்களுக்கு அதிகமாக ஏற்படும்.
கிளமீடியா
கிளமீடியா என்பது பாலின உறவு மூலம் பரவும் ஒரு நோயாகும். இது ஆபத்து, யோனி வழி, ஆசன வாய் வழி, செக்ஸ் மற்றும் வாய்வழி செக்ஸ் ஆகியவற்றால் அதிகமாக பரவ கூடியது. அதிகமாக பாலியல் செயலில் ஈடுபடும் இளம் பெண்களுக்கு இந்த தொற்று ஏற்படக்கூடிய அதிகப்படியான ஆபத்தில் உண்டு.
மேக வெட்டை நோய் (கோநோர்ஹோயா)
கோநோர்ஹோயா என்பது பாலின உறவு மூலம் பரவும் ஒரு நோயாகும். இது 15-24 வயதுக்குட்பட்ட இளம் பெண்களைப் பாதிக்கும்.
ஜெனிட்டல் ஹெர்பெஸ் (அக்கிகள் – ஒரு வகை தோல் அழற்சி)
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் I (HSV-I) மற்றும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் II (HSV-II), என ஜெனிட்டல் ஹெர்பெஸை ஏற்படுத்தும் இரண்டு வகை வைரஸ்கள் உள்ளன. HSV – I கிருமி, காய்ச்சல் fever அல்லது ஜலதோஷம் common cold ஏற்படுவதற்கு முன்னர் அல்லது அதற்குப் பின் வாய்வழி ஹெர்பெஸ்-ஐ ஏற்படுத்துவதால், ஜலதோஷ புண்களை (உதடுகளில் அல்லது அதை சுற்றியுள்ள பகுதியில் கொப்புளங்களை) ஏற்படுத்துகிறது.
பெல்விக் அழற்சி நோய்:
பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், அவை பெல்விக் அழற்சி நோய் (PID) எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கலாம். இந்த நோய் பெண்களின் இனப்பெருக்க உறுப்பின் பாதையை பாதிக்கிறது. பலருடன் உடலுறவு கொள்ளுதல், ஏற்கனவே PID நோய் இருந்திருத்தல், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது போன்ற காரணிகள் PID ஏற்படக்கூடிய அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.
செர்விசிட்டிஸ் (கர்ப்பப்பை வாய் அழற்சி).
முதுமை காரணமாக மாதவிடாய் செயல் முழுவதும் நின்ற பிறகு மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களினால் யோனியில் உள்ள திசுக்கள் முறிவு அடைந்துவிடும் (வஜினல் அட்ரோபி).
ரெக்டோவஜினல் ஃபிஸ்துலா (யோனி மற்றும் மல குழாய்க்கு இடையே ஒரு அசாதாரண ஓட்டை ஏற்பட்டு, மலம் மலகுடல் பாதையை விட்டு யோனிக்குள் நுழைந்து விடலாம்).
யோனி புற்றுநோய்..
வஜினிடிஸ் (யோனி தொற்று அழற்சி).
மாதவிடாயின் போது டம்போனை (tampon) நீண்ட நேரம் யோனியினுள் வைத்திருத்தல்.
ரசாயன பொருட்களை கொண்டு யோனியை கழுவுதல் மற்றும் வாசனை திரவிய ஸ்ப்ரேக்களின் பயன்பாடு.
வெள்ளைபடுதலுக்கான எந்த நோய் அறிகுறிகளும் இல்லாமல் இந்த நோய்க்கான ஆபத்து பெண்களின் வயது, கல்வித் தகுதி, குடும்ப பின்னணி, கர்ப்பத்தின் எண்ணிக்கை, கருத்தடை சாதனங்களின் பயன்பாடு மற்றும் பிரசவத்தின் முறை போன்ற பல காரணிகளை சார்ந்திருக்கிறது. அசாதாரண யோனி வெளியேற்றங்களின் ஆபத்து பின்வரும் காரணங்களால் அதிகரிக்கிறது.
பாலியல் உடலுறவில் அதிகமாக ஈடுபடுதல்.
பலருடன் பாலியல் உடலுறவு கொள்ளுதல்.
கடந்த காலத்தில் சிகிச்சை அளிக்கப்படாமால் விடப்பட்ட நோய் தொற்றுக்கள்.
பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு.
25 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
பாலின செயல்பட்டால் பரவும் நோய்களின் முந்தைய வரலாறு.
எச்ஐவி தொற்று.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி.
அடிக்கடி ஆணுறைகளைப் பயன்படுத்தாமலிருத்தல்.
கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துதல்.
சில நட்களுக்கு ஆன்டிபயாடிக் மருத்துகள் எடுத்துக்கொள்வதால் இதற்கு சிகிச்சையளிக்க முடியும். அசாதாரணமான யோனி வெளியேற்றங்களுக்கு, கண்டறியப்பட்ட தொற்றுநோய் வகையை பொருத்து சிகிச்சைகள் மாறுபடும். வழக்கமாக கொஏண்டிடா நோய்த்தொற்றுக்களுக்கு, குறிப்பிட்ட சில நட்களுக்கு ஆன்டிபங்கல்(பூஞ்சை எதிர்ப்பு) மருத்துகள் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும்.
எந்த சிகிச்சையும் இல்லாமலேயே B.V. அறிகுறிகள் தானாக குறையும். ஒரு வகை வைரஸினால் உண்டாகும் தோல் அழற்சியான ஹெர்பெஸுக்கு எந்த மருந்தும் இல்லை. வைரஸ் தடுப்பு மருந்துகள் அவற்றை குறைக்கக்கூடியவை. நோய்த்தொற்று பரவாமல் குறைப்பதற்காகவும் வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. தற்போது, ஹெர்பெஸுக்கு எந்த வகை தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை, இருப்பினும் பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. உணவுகளில் வெந்தயம், உலர்ந்த கொத்தமல்லி, பழுத்த வாழைப்பழங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுதல் லேசான வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தலாம். “பீப்பல்” மரம், ஃபிகஸ் ரஸ்மோசா மற்றும் தெஸ்பியா வில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் வெள்ளைப்படுதலை குறைப்பதில் உதவி செய்கின்றன.
மருத்துவ மற்றும் மூலிகை மருந்துகளுடன் சேர்த்து சரியான சுகாதார முறைகளையும் கையாளுதல் முக்கியமானது ஆகும்.
செயற்கை இழைகளால்(சின்தடிக்) ஆன உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும். பருத்தி அல்லது மெல்லிய உள்ளாடைகளை அணியுங்கள். பிறப்புறுப்பு மண்டலத்தை அதிகப்படியாக கழுவி விடாதீர்கள், இது pH சமநிலையை சீர்குலைப்பதோடு அதிகப்படியான பாக்டீரியாக்களின் வளர்சியை தூண்டும். அவற்றை எரிச்சலூட்டாத சோப்பு மூலம் கழுவ வேண்டும்.
யோனி நோய்த்தொற்றை தடுக்க ஒரு திணிப்பு எடுத்து பிறகு முன் புறமிருந்து பின்நோக்கிய திசையில் சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவறைக்கு ஒவ்வொரு முறை சென்று வந்த பிறகும் யோனி பகுதியை சுத்தம் செய்யவும்.
ஒரு சீரான உணவு முறையில் சாப்பிடுங்கள்.
நாளோன்றிற்க்கு 10 முதல் 12 டம்லர் தண்ணீரை நச்சுத்தன்மையை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கு குடிக்க வேண்டும்.
கடுமையான நடைபயிற்சி, ஜாகிங், யோகா ,தியானம் போன்ற உடற்பயிற்சிகள் அதிகப்படியான வெள்ளைப்படுதலுக்கு காரணமாகலாம்.
எப்பொழுதும் ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமே பாலியல் உறவு கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாலியல் செயல்பாட்டின் போதும் லேட்டக்ஸ் ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்.
உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, இனப்பெருக்க வயதுக்குட்பட்ட பெண்கள் உள்ளனர். இந்தியாவில், 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த வயதில் 19% பெண்கள் உள்ளனர். வெள்ளைப்படுதல் இந்திய பெண்களால், அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பெண்களிடத்தில் பொருட்படுத்தப்படாத பிரச்சினையாக உள்ளது.
பெண் இனப்பெருக்க உறுப்பின் நோய்தொற்றுகள் இந்தியா, பங்களாதேஷ் உட்பட பல வளரும் நாடுகளில் பொது சுகாதார கவலையாக இருக்கின்றன, அங்கு இனப்பெருக்க உறுப்பின் அமைப்பில் நோய்தொற்றுகள் 52-92% என்ற அளவில் உள்ளது. வெள்ளைப்படுதல் ஒரு இயற்கை யோனி வெளியேற்றமாக இருந்தாலும், இது இன்னும் ஒரு நோயாகக் கருதப்படுகிறது.
வெள்ளைப்படுதல் வயது வந்த பெண்களுக்கு ஏற்படும் ஒரு அறிகுறியாக இருந்தாலும், 3 முதல் 10 வயதுக்கு உட்பட்ட முன்கூட்டியே முதிர்ச்சியடைந்த இளம் பெண்களுக்கும் ஏற்படுகிறது.
வெள்ளைப்படுதல் என்பது எந்த அடிப்படை மருத்துவ கவலையும் தேவை இல்லாத யோனியில் இருந்து வெள்ளையான திரவத்தை வெளியேற்றுவதாகும். மருத்துவ நடைமுறையில், அனைத்து வகையான அதிகப்படியான, வெள்ளை அல்லது மஞ்சள் நிறமான, ஆனால் இரத்தத்தின் கலப்பில்லாத வெள்ளை நிற திரவ வெளியேற்றமும் வெள்ளைப்படுதல் என அழைக்கப்படுகின்றது.
இயல்பான யோனி திரவம் ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் கட்டத்தை பொறுத்து வண்ணம், அளவு மற்றும் நீர்ப்பு தன்மையில் வேறுபடுகிறது. வெள்ளைப்படுதல் நிறமற்ற மற்றும் மணமற்றது, ஆனால் பச்சை அல்லது சிவப்புடன் கூடிய மஞ்சள் திரவ சுரப்பு, அரிப்பு மற்றும் ஒரு வித வாசனையயும் உண்டாக்கினால், அது ஒரு இனப்பெருக்க உறுப்பு நோய் தொற்றுக்கான (RTI) அடையாளம் ஆகும்.
Read More:
How to Know symptoms of Asthma?
ஆஸ்துமா அறிகுறிகள் என்ன?
How to know symptoms of Pain in penis?
ஆண்குறி வலி அறிகுறிகள் என்ன?
How to know pain symptoms Shoulder Pain
தோள்பட்டை வலி காரணங்கள் என்ன?