symptoms of Depression
symptoms of Depression
Listen to this article

Depression is one of the most common problems (மனச்சோர்வு அறிகுறிகள் என்ன?) in the world. In ancient times, depression was called melancholia. And it’s not just a mental health issue that everyone knows about. Depression has increased over the past few decades.

மனச்சோர்வு என்பது உலகெங்கும் உள்ள பொதுவான பிரச்சினைகளில் ஒன்று. பண்டைய காலங்களில், மனச்சோர்வு மெலன்கொலியா என்று அழைக்கப்பட்டது. மேலும் அது  எல்லோருக்கும் தெரிந்த ஒரு மனநல பிரச்சினையாக  இருக்கவில்லை. கடந்த சில தசாப்தங்களாக மனச்சோர்வு அதிகரித்துள்ளது.

அதனால் நோயைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாயிற்று. சமீபத்திய ஆண்டுகளில், மன அழுத்ததினால் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது. மனச்சோர்வு நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்குரிய  சிகிச்சைய அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

மருத்துவ சொற்களில் மனச்சோர்வு மனநிலை கோளாறு என விவரிக்கப்படுகிறது. மனசோர்வின் அறிகுறிகள்- எதிர்மறையான எண்ணங்கள், சமூகத்திலிருந்து ஒதிங்கிகொள்ளுதல் மற்றும் தொடர்ந்து சோகமாகவே இருப்பது ஆகியவை ஆகும்.

மனச்சோர்வின் பல்வேறு வகைகள் உள்ளன அவை – மனத் தளர்ச்சி (குழந்தை பிறப்புக்குப் பின்), டிஸ்த்திமியா (விடாத ஆனால் லேசான மனச்சோர்வு), பருவகால பாதிப்புக் குறைபாடு மற்றும் இருமுனை சீர்குலைவு. மருத்துவரீதியாக, மன அழுத்தம் நான்கு கட்டங்களாக உள்ளது. இந்த பிரச்சினை முன்னேற்றம் அடைகையில் ஒருவரின் திறம்பட செயல்பாட்டு திறனைக் பாதிக்கலாம்.

அத்தகைய சூழ்நிலையில், பல தலையீடு நுட்பங்கள் உதவம். ஒரு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடம் இருந்து இதற்கான உதவியை நாடுவது மன அழுத்தத்தை சமாளிக்க ஒரு சிறந்த வழி ஆகும். பல தன்னியக்க உதவிக் குறிப்புகள் உள்ளன, அவை இந்த குறைபாட்டை சமாளிக்க உதவுகிறது.

மனநல சிக்கல்கள் என்றாலே சமூகக் களங்கம் ஆகும் என்பதால், மன அழுத்தம் உள்ளவர்கள் சிக்கலை எதிர்கொள்ளுவதர்க்கும் உதவியை பெருவதர்க்கும் சிரமப்படலாம். மனச்சோர்வு விழிப்பு உணர்வு அதிகரிப்பதனால் மக்கள் அதை தனியாக எதிர்கொள்ள முயற்சிக்காமல், தயக்கம் இன்றி முன்வர வேண்டும்.

மன அழுத்தத்திற்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளன, அவை தன்னிடதிலோ அல்லது அடுதவர்ககளிடமோ மனசோர்வு உள்ளது என்று கண்டறிய உதுவும். இரூந்தாலும், இந்த அறிகுறிகள் மட்டும் மன அழுத்தம் இருப்பதை உறுதிப்படுத்தாது. இந்த அறிகுறிகள் பல்வேறு மக்களில் சுபாவத்தில் வெவ்வேறு தீவிரத்தில் தோன்றுகிறது.

  • நடத்தை கண்டறிய கூடிய அறிகுறிகள் :

பொழுதுபோக்குகளில் ஆர்வம் இழப்பு

தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் ஆர்வம் இழப்பு

நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோடு கூட தொடர்பு குறைவு

கவனம் செலுத்துவதில் சிரமம்

தொடர்ந்து ஒரு வேலைய செய்யவோ அல்லது முடிக்கவோ தடுமாற்றம்

தனிமை விரும்புதல்

விஷயங்களை நினைவு கூருவதில் சிரமம்

தூங்குவதில் சிக்கல். (மேலும் வாசிக்க – இன்சோம்னியா சிகிச்சை)

அதிகமான தூக்கம்.

உடலில் கண்டறிய கூடிய அறிகுறிகள்:

ஆற்றல் குறைவு.

விடாத சோர்வு

குறைவான பேச்சு அல்லது மெதுவாக பேசுதல்

பசியிழப்பு

அதிகமான தூக்கம்.

திடீரென எடை இழப்பு (இது ஒரு உணவு உண்ணும் அறிகுறியாகும்).

தலைவலி

குறிப்பிட்ட உடல் ரீதியான காரணமின்றி செரிமான பிரசின்னை 

சதை பிடிப்புகள் அல்லது உடல் வலிகள். (மேலும் வாசிக்க – தசைப்பிடிப்பு)

உளவியல் கண்டறிய கூடிய அறிகுறிகள்:

நிரந்தரமான சோகம்.

அதிகப்படியான குற்ற உணர்வு.

பதற்றம் தோன்றுவது.

நம்பிக்கையற்ற அல்லது மதிபற்றதாக உணர்வு

தற்கொலை அல்லது சுய-தீங்கு பற்றிய எண்ணங்கள்.

எரிச்சலூட்டுவதாகவோ அல்லது தூண்டிவிடப்பட்டதாகவோ உணர்வு

சந்தோஷமான நடவடிக்கைகளில் ஆர்வம் இழப்பு

மனச்சோர்வு சிகிச்சை – Treatment of Depression in Tamil

மனசொர்வின் தீவிரத்தை பொருத்து, வெவ்வேறு சிகிச்சைகள் வழங்கப்படும்

லேசான மனசோர்வு

  • ஆரம்ப கட்ட மனசொர்வின் சிகிச்சைகள் :

உடற்பயிற்சி

மனச்சோர்வின் அறிகுறிகளை சரிசெய்ய வழக்கமான உடற்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். தினசரி உடற்பயிற்சி மனநிலையை மேம்படுத்த்துவது மட்டுமல்லாமல், ஒருவரின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். இது மிதமான மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிகிச்சையாளர் குறைந்தது வாரத்திற்கு மூன்று முறை, 30 நிமிடங்கள்ளிருந்து ஒரு மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கலாம். முதியோர்களுக்கு, 15 நிமிட மாலை நடை உதவியாக இருக்கும்

சுய உதவி குழுக்கள்

லேசான மன அழுத்தம், குறிப்பாக சில துயரமான  நிகழ்வுடன் தொடர்புடையதாக இருந்தால், சுய உதவி குழுவின் ஆலோசகர் அவரை அந்த குழுவின் ஒரு அங்கமாக, பரிந்துரைக்க கூடும். சுய உதவிக் குழுவில் ஒரு உறுப்பினராக இருப்பதன் மூலம், ஒரு நபர் தான் தனியாக இல்லை என்று தெரிந்துகொள்ள்வார். அங்கு அவரது / அவளது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் பற்றி பேசுவதற்கு எளிதாக இருக்கும்.

லேசிலிருந்து மிதமான மனசோர்வு

மிதமான மனசொர்விர்க்கு பல விதமான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. புலனுணர்வு நடத்தை சிகிச்சை ஒருவரின் எண்ணம் மற்றும் நோக்கம் குறித்த அவருடைய  சிந்தனைகளை மாற்றுவதற்கும், இன்னும் சாதகமானதாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதற்கும் உதவுகிறது. மிதமான        மனசோர்வு சிகிச்சையின் மற்றொரு வழி ஆலோசனையாகும். ஒவ்வொரு ஆலோசனை அமர்வு மன அழுத்தம் கையாள்வதில் நோயாளிக்கு உதவும்; அவரது உணர்ச்சிகள் வெளியீடுவதற்கு  ஒரு வடிகாலாக அமையும்.

  • மிதமானதிலுருந்து தீவிரமான மனசோர்வு

மிதமானதிலுருந்து தீவிரமான மனசோர்வுக்கு பலவிதமான சிகிச்சைகள் உள்ளன அவை :

ஆண்டி- டிப்றசண்ட்ஸ்                                            

பொதுவாக ஆண்டி-டிப்றசண்ட்ஸ் மருந்துகள் மாத்திரை-களாக கிடைக்கின்றன. இந்த மருந்துகள் கவலை உணர்வுகளை குறைத்து ஒருவரை மகிழ்ச்சியாக்க உதவும். வெவ்வேறு விதமான மனச்சோர்வின் சிகிச்சைக்கு பல்வேறு வகையான ஆண்டி-டிப்றசண்ட்ஸ் இருக்கின்றன.

மன அழுத்தம் கொண்ட நபர்களுக்கு இந்த மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உடனடி நிவாரணம் வழங்கும். எனினும், இந்த மருந்துகளுக்கு சில பக்க விளைவுகள் இருக்கலாம். இவையினால்  மலச்சிக்கல், தலைச்சுற்றல், குமட்டல், வயிற்று வலி, தோல்-அரிப்பு  ஆகியவை வரலாம். இதன் பெரிய பக்கவிளைவு- ஒதுங்கிபோவதற்கான அறிகுறி. ஒருவர் மருந்துகளை நிறுத்திவிட்டால் இந்த அறிகுறி ஏற்படலாம்.

பிணைப்பு  சிகிச்சை

லேசானதிலுருந்து மிதமான மன அழுத்தத்தை கொண்டிருப்பவர்களுக்கு பிணைப்பு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆண்டி-டிப்றசண்ட்சுடன் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சையை (CBT) இது பயன்படுத்துகிறது.

கடுமையான மனச்சோர்வு ஏற்பட்டால், உளவியலாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மனநல சுகாதாரக் குழுவை ஒருவருக்கு பரிந்துரைக்கலாம். இந்த குழு பல்வேறு சிகிச்சைகள் மற்றும் செயல்பாடுகளை பற்றி விவாதித்து மருந்துகளுடன் தீவிர சிகிச்சையை வழங்குகின்றன. தீவிர மனச்சோர்வுடேன் சைகொசிஸ் அறிகுறிகள் இருந்தால் , ஈ.சி.டி.க்கள் (எலெக்ட்ரோகான்வல்சிவ்  தெரபி) மற்றும் மூளை தூண்டுதல் நுட்பங்கள் ஆகியவை பரிந்துரைக்கப்படலாம்.

மன அழுத்ததிற்காக மருத்துவர் உதவி கோரும் போது நினைவில் வைக்கவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

சிகிச்சை அல்லது ஆலோசகருடன் பகிரப்படும் தகவல்கள் ரகசியமானது. யாரும் மூன்றாவது நபருடன் பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது என்பதால், அவர்களது ஆலோசகரிடம் தனிப்பட்ட தகவலை வெளிப்படுதுவதில்  பயப்பட வேண்டாம்

ஒப்புதல் என்பது மருத்துவ உதவியை நாடும்போது ஒரு முக்கிய அம்சம்.ஒரு நபரின் அனுமதி இன்றி அவருக்கு  மருந்துகள் எதுவும் வழங்கப்பட முடியாது. உளரீதியான மனத் தளர்ச்சி இதற்க்கு ஒரு விதிவிலக்காகும்

குடும்ப உறுப்பினர்களின் உதவி மற்றும் துணை ஒருவரின் சிகிச்சையை வெற்றிகரமாகுவதில் பெரும் உதவியாக இருக்கும்.

Depression

ஒருவர்  மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டு அதற்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அதனை குணப்படுத்துவதற்கு பல காரணிகள் உள்ளன. உடல்நலம் சார்ந்த நோய்களின் ​​மருந்துகள் பயன்பாடு நீண்ட காலத்திற்கு தொடரும், ஆனால் மனசொர்விர்க்கு அது சரிப்பட்டுவராது.                                            இதில் எந்த வித சிகிச்சையானாலும், ஒருவர் அவரது சிக்கலான எண்ணங்களை தனிச்சையாக கையாளுவதை உதவுகிறது. ஒரு நேர்மறையான முறையில் மன அழுத்தத்தை சமாளிக்க பல வழிமுறைகள் உள்ளன:

தனிமைபடுத்தி கொள்ளாதீர்கள்

சிகிச்சை முன்னேற்றம் பற்றி நண்பர்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் அதிகம் பேசுங்கள்.

சிகிச்சை அளிப்பவருடன் நேர்மையாக இருங்கள்

குணமாவதற்கு தக்க நேரம் குடுங்கள்.

பொழுதுபோக்கு மற்றும் பயிற்சிகள் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

உங்கள் மனச்சோர்வை ஒரு களங்கம் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள். அதினுள் இருக்கும் சர்க்கரை, மருந்துகளுடன் தலையிட்டு, மனநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம்

உங்கள் எண்ணங்களை ஆராய்ந்து பாருங்கள்

ஒரு புத்தகத்தில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் அறிகுறிகளை நீக்குவதற்கு மது அல்லது போதை மருந்துகளை நாடாதீர்கள், ஏனெனில் அது சிகிச்சைகளுக்கு  எதிர்மறையாக தலையிட்டு, மன நிலையை இன்னும் மோசமாக்கிவிடும்.

Read More:

How to know pain symptoms Shoulder Pain

தோள்பட்டை வலி காரணங்கள் என்ன?

How to know symptoms of Malnutrition?

.ஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன?

How to Know symptoms of Fatty Liver?

கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன?