symptoms of Acidity
symptoms of Acidity
Listen to this article

Acidity is a common phenomenon (அமிலத்தன்மை (அசிடிட்டி) அறிகுறிகள் என்ன?) experienced by many people worldwide irrespective of age and gender. It can be detected by a characteristic irritation sensation in the chest and adjacent areas. Sometimes it causes stomach irritation and bloating with mild or moderate pain.

அமிலதன்ம்மை (அசிடிட்டி) என்பது வயது மற்றும் பாலினம் கருதாமல் உலகளாவிய ரீதியில் பல மக்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான நிகழ்வு. மார்பு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், ஒரு பிரத்யேகமாக எரிச்சல் உணர்வு மூலம் இதை கண்டறியலாம். சில சமயங்களில்  அதனால் லேசான அல்லது மிதமான வலியுடன், வயிற்றில் எரிச்சல் மற்றும் உறுத்தல் ஏற்படுகிறது.

ஆராய்ச்சியின்படி அமிலத்தன்மைக்கு  முக்கிய காரணிகளில் ஒன்று ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆகும். ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது வயிற்று அமிலங்களின் திரும்பி உணவுக்குழாய்க்குள் (ஈசொபாகஸ்) செல்வதாகும்.

அமிலத்தன்மைக்கு முக்கிய காரணம் வயிற்றிலுள்ள அமிலங்கள் ஆகும். ஹைட்ரோகுளோரிக் அமிலம் (வயிற்றின் உள்ளே உற்பத்தி ஆகுகிறது) செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும், இது உட்கொள்ளும் உணவு துகள்களை முறிக்க உதவுகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து உடலை பாதுகாக்கிறது. வயிற்றில் இருக்கும் தோல் அடுக்கு கடுமையானது, அது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் செயல்பாட்டை எதிர்க்கும். ஆனால் உணவு குழாயில் (இசோபாகஸ்) உள்ள அடுக்கு மென்மையானது, இதனால்  ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அரிக்கும் செயல்பாட்டை எதிர்த்து நிற்க முடியாது, அதனால் எரிச்சல்  உணர்வும், ஆசிட் ரிஃப்ளக்சி நிகழ்வுகளும் அடிக்கடி தோன்றும். அதற்கு GERD (காஸ்ட்ரோரொபோபல் ரிஃப்ளக்ஸ் நோய் ) என்று பெயர்.

  • அமிலத்தன்மை (அசிடிட்டி) அறிகுறிகள் என்ன

அமிலத்தன்மை இருக்கும் போது அமிலத்தன்மை இருக்கும்போது எதிபார்க்க வேண்டியவை :

உணவுக்குழாய்யில்  ஆசிட் ரிஃப்ளக்ஸ் நிகழும்  பொது மார்பில் எரிச்சல் தோன்றும் ,இது குனிந்தாலோ அல்லது படுத்தாலோ மோசமடைகிறது. இது ஒரு சில மணி நேரம் தொடர்ச்சியாக நடக்கலாம் , சாப்பிட்ட  பிறகு மோசமடையலாம்.

கழுத்து மற்றும் தொண்டை வலி உண்டாகும், இது ஆசிட் ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படும்

வாயில் புளிப்பு சுவை கொண்ட ஏப்பம் அடிக்கடி வரலாம்

பெரும்பாலும் குமட்டல் ஏற்படும் மற்றும் வாந்தியும் வரலாம்

நிறைந்த அல்லது வீங்கியது போல் தோன்றலாம்

விடாத வறட்டு இருமல்  வரலாம்

மூச்சு இழுப்பு வருவது மிகவும் பொதுவானது

தொண்டையில், தொண்டை புண் அல்லது கரகரத்த குரல் போன்ற சிறு உபாதைகள் வரலாம்

நீண்ட காலத்திற்கு தொண்டை வலி

விழுங்குவது சிரமபடலாம், அதனுடன்  வலியையும் கூட அனுபவிக்கலாம்

மார்பு மற்றும் மேல் அடிவயிற்றில் வலி

ஆசிட் ரிஃப்ளக்ஸ் பல் பற்சிப்பியை சேதப்படுத்தலாம்

சிலருக்கு வாய் துர்நாற்றம் வரலாம்

மலத்தில் சிறுது இரத்தத்தை காணலாம் அல்லது வழக்கத்தைவிட கருமையாக இருக்கலாம்

சிலருக்கு விடாமல் விக்கல் வரலாம்

எந்தவொரு வெளிப்படையான காரணமின்றி எடை இழப்பு ஏற்படலாம்

அமிலத்தன்மைக்கு மருத்துவரைப் எப்பொழுது அணுகவேண்டும்

பின்வரும் அறிகுறிகளை அமிலத்தோடு சேர்த்து அனுபவித்தால்  மருத்துவரைப் பார்க்கவேண்டும் :

அடிக்கடி வரும் நெஞ்செரிச்சல்

விழுங்குவதில் சிரமம், குறிப்பாக திட உணவுகள்

அறியாத காரணங்களால் கணிசமான, விரைவான எடை இழப்பு

நீண்ட காலமாக மூச்சுத்திணறல், மூச்சு அடைப்பு மற்றும் இருமல்

15 நாட்களுக்கு மேலாக அமில-எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் கூட, நிவாரணம் இல்லாமல் இருப்பது

ஆஸ்த்துமா மற்றும் பதட்டத்துடன் கரகரத்த குரல் வந்தால் , உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

அமிலத்தன்மையின் காரணமாக தினசரி செயல்களைச் செய்வதில் சிரமம்

மார்பு, தாடைகள், கழுத்து மற்றும் வாயினுல் வலி

ஒழுங்கற்ற துடிப்பு, சுவாசமுட்டல், பலவீனம் மற்றும் அதிகமான வியர்த்தல்.

அதிகப்படியான வயிற்று வலி.

மலத்தில் இரத்தம், கறுப்பு மலம் அல்லது வயிற்றுப்போக்கு

அமிலத்தன்மை (அசிடிட்டி) சிகிச்சை – Treatment of Acidity in Tamil

அமிலத்தன்மையின் சிகிச்சையானது சிக்கலான செயல்முறை அல்ல, மிக குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கே அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. சிகிச்சையில் முக்கியமாக உணவு பழக்கவழக்க மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இசொபாகல் சேதத்தை (ஏதாவது இருந்தால்) சரிசெய்ய கவனம் செலுத்துகிறது.

அண்டாசிட்ஸ்: உங்களுக்கு அருகில் உள்ள எல்லா மருந்து கடைகளிலும் பொதுவாக கிடைக்கும். வயிற்றுப்போக்கு அதிக அமிலம் உற்பத்தியை குறைப்பதில் மற்றும் அசிட்டிக் ரிஃப்ளக்ஸ் நிகழ்வுகளைத் தடுப்பதில் அண்டாசிட்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அமிலம் குறைக்கும் மருந்துகள்: வயிற்றில் அமில உற்பத்தியை குறைக்க முக்கியமாக இரண்டு வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. a) புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் b) ஹிஸ்டமைன் 2 ஏற்பி எதிர்ப்பாளர். இந்த மருந்துகள் உணவுக்குழாய் சுவரை சரிசெய்து அதிகப்படியான அமில உற்பத்தியை தடுக்கின்றன

ப்ரோகிநேடிக் ஏஜென்ட்கள்: இந்த மருந்துகள் உணவு துகள்கள் மற்றும் அமிலங்களை உணவு குழாய் மற்றும் வயிற்றில் இருந்து பாய்ச்சுவதில் உதவுகின்றன, இதனால் ஆசிட் ரீஃப்ளக்ஸ் வாய்ப்புகள் குறையும் அல்லது நிகழாது

மியூசோஸால் பாதுகாப்பு முகவர்கள்: இந்த மருந்துகள், ஒரு பாதுகாப்பான அடுக்கு உருவாக்குவதன் மூலம் சளி சவ்வுகளை பாதுகாப்பதில் உதவுகின்றன, இது ஆசிட்-ரிஃப்ளக்ஸ் நிகழ்வுகளின் போது உணவுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் உணர்வையும் தடுக்கிறது.

Acidity
  • அறுவை சிகிச்சை எப்பொழுது அவசியம்?

நீண்டகால மருந்துகள் இருப்பினும் எந்த நிவாரணத்திற்கு அறிகுறிகளில் இல்லாதபோது அறுவை சிகிச்சை தேவைப்படும். சில சமயம் நீண்டகாலமாக எடுத்துக்-கொண்டிருக்கும் மருந்துகள், தேவையற்ற பக்க விளைவுகளைத் உண்டாக்கும்

நீண்ட காலத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்பாதபோது, ​​அறுவை சிகிச்சை என்பது ஒரு வழியாக இருக்கலாம்.

அறுவை சிகிச்சை மூலம், சுழற்சியின் அளவு மற்றும் அழுத்தம் (உணவுக்குழாயில் உள்ள வால்வு) சரிசெய்யப்படுகிறது, இதனால்  ஆசிட் ரிஃப்ளக்ஸ் குறைகின்றது. உணவு விழுங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்

உணவு மாற்றங்கள் மட்டுமல்லாமல், அமிலத்தன்மையை சமாளிப்பதற்கு வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கொண்டு வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

மருந்துகள் (அமில-எதிர்ப்பிகள்) சரியான நேரத்தில்  (குறைந்தபட்சம் 30-60 நிமிடங்களுக்கு சாப்பிடுவதற்கு முன்னர்) எடுத்துக்கொள்ளவேண்டும், இதனால் உணவை உட்கொள்ளுவதற்கு முன் வயிற்றில் அதிகமான அமில உற்பத்தி குறையும் 

ச்சிவிங்கம் (புதின சுவையை தவிர்க்கவும்)

எந்த உணவு சாப்பிட்டதும்  குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு படுகக்கூடாது

படுக்கைக்கு 2-3 மணிநேரம் முன்பு இரவு உணவு சாப்பிட வேண்டும் 

அதிகப்படியான உணவு சாப்பிடுவதில் தவிர்க்க வேண்டும்

ஆசிட் ரிஃப்ளக்ஸ் நிகழ்வுகளை குறைப்பதற்கு பெரிய அளவு உணவுக்குப் பதிலாக சிறிய  அளவில் உணவு சாப்பிட வேண்டும்

தூங்கும் போது தலையை ஒரு தாங்கி (தலையணை)  மூலம்  உயர்த்தி கால்கலுடன் நேர் கோட்டில் வைக்க வேண்டும். இந்த நிலை ஆசிட் ரிஃப்ளக்ஸ் நிகழ்வுகளை குறைப்பதில் உதவுகிறது

குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு (ஏதேனும் படிவத்தில்)  நடைபயிற்சி, ஓட்டம் , யோகா, ஏரோபிக்ஸ், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்யவும்.

Read More:

How to know pain symptoms Shoulder Pain

தோள்பட்டை வலி காரணங்கள் என்ன?

How to know symptoms of Malnutrition?

.ஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன?

How to Know symptoms of Fatty Liver?

கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன?