symptoms of Testicular Pain
symptoms of Testicular Pain
Listen to this article

Testicular pain refers to pain (விரைச்சிரை வலி அறிகுறிகள் என்ன? )in the testis, an important organ of the male reproductive system. Testicular pain can be caused by an infection or injury to the testicle, rarely by a tumor. Pain in the testicles is usually a symptom of an underlying problem.

விரைச்சிரை வலி என்பது, ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பான விரைச்சிரையில் ஏற்படும் வலியைக் குறிக்கிறது. விரைச்சிரை வலி, விரைச்சிரையில் ஏற்படும் ஒரு நோய்த்தொற்று அல்லது காயத்தினால், அரிதாக ஒரு கட்டியினால் ஏற்படக் கூடும். வழக்கமாக விரைச்சிரைகளில் ஏற்படும் வலி, மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கிறது.

அது போன்ற நிலைகளில், விரைப்பை சிவந்து போதல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் மற்றவையோடு இணைந்து காணப்படுகின்றன. பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பான உடலுறவு கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால், முறையே காயங்களை மற்றும் நோய்த்தொற்றுக்களைத் தவிர்ப்பதன் மூலம் இதனைத் தடுப்பது சாத்தியமாகிறது.

விரிவான மருத்துவ சரித்திரம், உடல் பரிசோதனை மற்றும் சில சோதனைகள் வழியாக நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. கையாள்வது, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளோடு, போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதோடு தொடர்புடையது. சிலநேரங்களில், மறைந்திருக்கும் காரணத்தைச் சார்ந்து ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில், அந்த மறைந்திருக்கும் காரணம், விரைச்சிரைகளின் நிரந்தர இழப்பு, மலட்டுத்தன்மை மற்றும் உடல் முழுவதும் நோய்த்தொற்று பரவுதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

விரைச்சிரை வலி என்பது, இனப்பெருக்க அமைப்பு முறையாக இயங்குவதற்கான விந்தணுக்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும், ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியான, விரைச்சிரைகளோடு தொடர்புடைய ஒரு அறிகுறியாகும். இந்த வலி ஒரு மறைந்திருக்கும் காரணத்தினால் ஏற்படக் கூடும், இது அரைகள், விரைச்சிரைகள் அல்லது அதன் பக்கத்து உறுப்புகளில் இருந்து ஏற்படக் கூடும்.

விரைச்சிரைகள், ஆண் இனப்பெருக்க அமைப்பின் அனுகூலமான இயக்கத்திற்கு முக்கியமான ஹார்மோனான டெஸ்டோஸ்டெரெனையும் உற்பத்தி செய்கின்றன. மருத்துவ சொற்களில் ஆர்ச்சியாலஜியா எனவும் அறியப்படும் விரைச்சிரை வலி, அடிவயிறு அல்லது அரைகள் பகுதியில் உணரப்படும் வலியாகும்.

அரைச்சிரை வலி, வயிறு வலி அரைகளுக்குப் பரவுவதால் அல்லது அரை வலி, இடுப்பு மற்றும் முதுகுப் பகுதிகளுக்குப் பரவுவதால் ஏற்படலாம். வலி, அரைச்சிரைகளின் ஒரு பக்கமாக அல்லது இரண்டு பக்கமும் ஏற்படலாம். அரைச்சிரை வலி, எந்த வயதினருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் ஏற்படலாம். ஆனால் மிகப் பெரும்பாலும் மத்திய-30 வயதுப் பிரிவினருக்கே ஏற்படுகிறது.

அரைச்சிறையில் வலியை நீங்கள் உணர்ந்தால், ஏதேனும் தீவிரமான மறைந்திருக்கும் காரணம் இருந்தால் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெற, உடனடியாக உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

விரைச்சிரை வலி ,வழக்கமாக ஒரு மறைந்திருக்கும் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கிறது. அந்த காரணத்தினைப் பொறுத்து, அது, இவை போன்ற மற்ற அறிகுறிகளோடு இணைந்து இருக்கலாம்:

குமட்டல் மற்றும் வாந்தி

விரைச்சிரை கடுகடுப்பு மற்றும் வயிறு அசௌகரியத்தினால் குமட்டல் மற்றும் வாந்தி உணரப்படக் கூடும்.

காய்ச்சல்

நோய்த்தொற்றின் காரணமாக வலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படலாம்.

வயிற்று  வலி

இது, விரைச்சிரை அல்லது அரையில் இருந்து வரும் ஒரு சுட்டிக்காட்டும் வலியாக (வலியின் ஆதாரமான இடத்தைத் தவிர்த்து வேறு ஒரு இடத்தில் வலியை உணருதல்), மேலும், விரைச்சிரை வலி ஆரம்பமாவதற்கு முன்னர், ஆரம்ப அறிகுறியாகத் தோன்றலாம். (மேலும் படிக்க – வயிற்று வலியின் காரணங்கள் மற்றும் சிகிச்சை)

சிவந்து போதல் மற்றும் அந்தப்பகுதியில் அதிகரித்த வெப்பநிலை

விரைச்சிரைகளின் நோய்த்தொற்று அல்லது அழற்சி விரை சிவந்து போதலுக்கு வழிவகுக்கக் கூடும், மேலும் தொடும் போது வெப்பநிலை அதிகரித்திருப்பதை உணர முடியலாம்.

வீக்கம் அல்லது கட்டி

விரை பகுதியில் வீக்கமானது, நீர்க்கட்டி, புரைக்கட்டி அல்லது ஹெர்னியா (குடலிறக்கம்) காரணமாகத் தோன்றலாம்.

மறைந்திருக்கும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை அமைகிறது. எனவே, சிலநேரங்களில், காரணம் என்னவென்று தெரியாமல் இருப்பதால், காரணத்தைக் கண்டுபிடித்து அந்த காரணத்துக்கு ஏற்ப நிர்வகிப்பது, சிகிச்சையில் முக்கியமானதாகும். சிகிச்சை நடைமுறைகளில் அடங்கியவை:

ஓய்வு

சில சிறிய காயங்களால் வலி ஏற்படும் நிலையில், சிகிச்சை தேவைப்படாது. உங்கள் உடல், காயத்தை  குணமாக்கி வலியிலிருந்து விடுபட, ஓய்வு எடுப்பது மட்டுமே போதுமானது. ஆனால், பெரிய காயம் அல்லது நோய்த்தொற்றினால் வலி ஏற்படும் பொழுது,ஓய்வுடன் கூடவே மற்ற வைத்தியங்களும் தேவைப்படுகின்றன..

பனிக்கட்டி

பனிக்கட்டி பைகள், நீங்கள் சிகிச்சைக்காக உங்கள் மருத்துவரிடம் போகும் வரை, தற்காலிகமாக வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

வலி நிவாரணிகள்

ஐபுப்ரோஃபென் போன்ற, ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு (என்.எஸ்.ஏ.ஐ.டி.எஸ்க்கள்) மருந்துகள் மாதிரி, மருந்துக்கடைகளில் கிடைக்கும் மருந்துகளை வலியிலிருந்து விடுபட உபயோகப்படுத்தலாம்.

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்

இந்த மருந்துகள் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சந்தேகப்படும் நோய்த்தொற்றின் வகையைப் பொறுத்து, உங்கள் மருத்துவர், முழுமையாக நோய்த்தொற்றை குணமாக்கி வலியிலிருந்து விடுபட வைக்கும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை உங்களுக்கு வழங்குவார்.

அழற்சி-எதிர்ப்பு இயற்றிகள்

அடிபடுவதால் ஏற்படும் அல்லது எந்த வகை காயத்தாலும் ஏற்படும் நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாக சந்தேகித்தால், உங்கள் மருத்துவர் இந்த வகை மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்.

அரைகள் பாதுகாப்பு சாதனம்

விளையாட்டுகளின் போது காயங்களைத் தடுக்கவும் சிகிச்சையின் போது மீண்டு வருவதற்கும், பல்வேறு அரைகள் பாதுகாப்பு சாதனங்களும் உபகரணங்களும் சந்தையில் கிடைக்கின்றன.

கதிரியக்க அலைவரிசை

நாள்பட்ட வலியாக இருந்தால், உங்கள் மருத்துவரால் கதிரியக்க துடிப்பு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை ஒரு கடைசி முயற்சியாக வைக்கப்பட்டிருக்கிறது, மேலும் வலிக்கு சிகிச்சையளிப்பதில் மரபான சிகிச்சைகள் தோல்வியுறும் போது அல்லது ஒரு புரைக்கட்டி காணப்படும் போது  பரிந்துரைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை நடைமுறைகளில் அடங்கியவை:

விரைச்சிரைகளுக்கு வலியை அளிக்கிற நரம்பை நீக்குவதன் மூலம் வலியிலிருந்து விடுபடச் செய்யும் நுண் அறுவை நரம்பு நீக்கம்.

தசை பலவீனத்தினால் ஏற்படும் வீக்கத்தினால் உண்டாகும், குடலிறக்க பழுதை சரி செய்யும், துவாரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை.

புரைக்கட்டிகள் இருக்கின்ற நிலைகளில் விரைச்சிரைகளை நீக்குவது அவசியப்படலாம்.

Testicular Pain

விரைச்சிரை புற்றுநோய் அபாயம் உள்ள நபர்களுக்கு, வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கியமானவை. ஒருவேளை இது மரபணுரீதியானதாக இருந்தால் வராமல் தடுக்க முடியாது. விரைச்சிரை வலியின் அபாயத்தை, பின்வரும் அளவீடுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குறைக்க முடியும்:

விரைச்சிரை புரைக்கட்டி அபாயத்தைக் குறைக்க, அதிகமான இரசாயனங்கள் மற்றும் அதிக வெப்பம் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்வது போன்ற, தொழில் சார்ந்த அபாயங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அது போன்ற பாதிக்கக் கூடிய விஷயங்கள் படாமல் இருக்க, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இதனை செய்ய முடியும்.

எந்தவிதமான விளையாட்டாக இருந்தாலும் அரைகள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, விரைச்சிரை காயங்களைத் தடுக்க முடியும்.

ஆணுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதால் பால்வினை நோய்களைத் தவிர்க்க முடியும்.

Read More:

How to know Symptoms of Loose Motions

பேதி (வயிற்று போக்கு) அறிகுறிகள் என்ன?

How to Know symptom Urinary Tractinfection

சிறுநீர் பாதை நோய் தொற்று அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Muscle Pain

தசை வலி அறிகுறிகள் என்ன?