symptoms of Knee Pain
symptoms of Knee Pain
Listen to this article

Joint knee pain is very common (மூட்டு வலி காரணங்கள் என்ன?) in the elderly. It is pain in the leg joints while doing daily activities, resting or walking. Most of the time, aging causes damage to the tissues surrounding the joint as it weakens, which is the cause of joint stiffness. An accident or overwork can cause joint pain.

முதியவர்களுக்கு மூட்டு வலி மிகவும் பொதுவானது. இது தினசரி  வேலைகள் மேற்கொள்ளும் போதொ, ஓய்வு அல்லது நடைபயிற்சி செய்யும் போதோ கால் மூட்டுகளில் தோன்றும் வலி ஆகும். பெரும்பாலான நேரங்களில், முதுமையில் மூட்டை சுற்றியுள்ள திசுக்கள் பலவீனமாவதனால் சேதம் அடைகிறது, இதுவே மூட்டு வழிக்கு காரணம். ஒரு விபத்து அல்லது அதிகப்படியான வேலையினாலும் மூட்டு வலி வரலாம்.

மூட்டுவலியை கண்டறிய  ஒரு மருத்துவர் நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாறு, இரத்த பரிசோதனைகள், எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ராசோனோகிராஃபி போன்ற சில கதிரியக்க சோதனைகள் உட்படுத்தலாம்.மூட்டு வலியின் அடிப்படை காரணத்தை கண்டறநிது சிகிச்சை அளிக்கப்படும்.உதாரணமாக பருமனாக உள்ளவர்களுக்கு இடை குறைத்து, மீதமுள்ள அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் ஐஸ்க்கட்டிகள் ஒத்திடம் மற்றும் ஒய்வு தேவை படலாம் .

பிசியோதெரபி மற்றும் குத்தூசி மருத்துவம் போன்ற சிகிச்சைகள் மூட்டுவலிக்கு பரிந்துரைக்கப்படலாம். அதையும் தாண்டி மூட்டுவலி நீடித்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூட்டு வலியின் முன்கணிப்பு மிகவும் நல்லது. என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியா விட்டால், வலி மோசமாகும் அல்லது மூட்டை முழுமையாக சேதப்படுதிவிடும்.

நடப்பது, ஓடுவது, விளையாடுவது மற்றும் அன்றாட வேலைகள் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு மூட்டு மிக முக்கியம். ஆகவே முழங்காலுக்கு நிரந்தர சேதத்தை தடுக்க டாக்டரை உடனடியாக அணுகுவது நல்லது

மூட்டு வலி காரணங்கள் என்ன

மூட்டு வலி கூடுவதற்கு பல காரணங்கள்  மற்றும் காரணிகள் உண்டு. பெரும்பாலான காரணங்கள் சரிசெய்ய கூடியவை, மீதமுள்ளதற்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன.மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினால் மூட்டு வலி முழுமையான நிவாரணம் ஆகும் .

உடல் காயம்

சாலை விபத்து அல்லது கடுமையான உடற்பயிற்சி காரணமாக காயம் அடைந்தால், மூட்டை சுற்றியுள்ள மென்மையான திசு சேதமடைகின்றன, அல்லது எலும்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிறது. அத்தகைய காயங்களினால்  மூட்டு வலி ஏற்படலாம். தடகள வீரர்கலளுக்கு முழங்கால் மூட்டை தாங்கும் மென்மையான சதை கிழிவதனால் மெனிசிகல் கிழிசல் என அழைக்கப்படும் உபாதை உருவாகும். இதுவும் மூட்டு வலிக்கு பொதுவான காரணங்கள் ஒன்றாகும்

மூட்டில் தொற்று ஏற்பட்டால் மூட்டு வலி வரலாம்.

பேக்கர் நீர்க்கட்டி

வழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் மூட்டுகளில் இருக்கும். இந்த திரவத்தின் பெயர் சினோவியியல் திரவியம், இது உராய்வைத் தடுத்து மூட்டு இயக்கத்தை  எளிதாக்குகிறது. சில சமயங்களில் முழங்காலின் பின்புறத்தில் இது அதிக உற்பத்தியாகி குவிந்து போகும். இந்த திரவ குவிப்பு நீர்க்கட்டி உண்டாக்கும். அதன் பெயர் பேக்கர் நீர்க்கட்டி. இதனால் மூட்டு இறுக்கமாகி வலி தோன்றும் 

கீல்வாதம்

இந்த மருத்துவ நிலைமையில், முழங்கால்களின் குருத்தெலும்பு சேதமடைதல் மற்றும் திசுக்கள் தடிமனாகுதல் போன்ற காரனத்தால் மூட்டு வலி வரக்கூடும்.

முடக்கு வாதம்

சில சமயம் தானியங்கும் எதிர்ப்பினால்,உடலின் நோயெதிர்ப்பு அம்மைப்பு தன்னுடய திசுக்களையே செதபட்டுத்தி வலி உண்டாக்கி மூட்டில் சிதைவு ஏற்படுத்தும். இந்த நிலையில் இரு மூட்டுகளின் ஈடுபாடும் உள்ளது. பெரும்பாலும் விரல்களில் உள்ள மூட்டுகள் (உடற்கூறு மூட்டுகள்) முதலில் பாதிக்கப்படுகின்றன, மேலும் நோய் அதிகரிக்கும்போது, முழங்கால்களின் மூட்டுகள், கணுக்கால் மற்றும் மணிக்கட்டு ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன

கவுட்

கவுட் என்பது உடலின் யூரிக் அமில அளவுகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் மூட்டுகளின் ஒரு வலிமையான நிலை.

மூட்டு வலியை சமயத்தில் சரி செய்யாவிட்டால் அது மோசமடைந்து விடும், எனவே உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிந்து சிகிச்சையை துடன்கவும்.மருத்துவரை அணுகும் முன் சில வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம், அது வலியை குறைக்குமே ஒழிய வலியை குண படுத்தாது  

சில தற்காலிக வீட்டு வைத்தியத்தினால் லேசானதலிருந்து  மிதமான வலி வரை  நிவாரணம் பெறலாம். இதில் RICE சிகிச்சை எனப்படும் ஓய்வு, ஐஸ், அழுத்தம்  மற்றும் ஏற்றம்  அடங்கும்

ஒய்வு

மூட்டு வலியின் சிசிச்சைக்கு ஒய்வு என்பது மிகவும் முக்கியம். ஏதேனும் செயலில் ஈடுபடும் பொது மூட்டு வலி ஏற்பட்டால் அந்த வேலையே அப்படியே நிறுத்திவிட்டு ஒய்வு எடுக்கவேண்டும், இதனால் மேற்கொண்டு சேதம் ஆவது குறையும்

ஐஸ் பைகள்                                      முழங்காலில் மூட்டு சுற்றி ஏற்படும் வலி மற்றும் ரத்தக்கட்டு குறைக்க நாள் முழுவதும் இடைவெளி விட்டு மற்றும் படுக்கை நேரத்திற்கு ஐஸ் பைகள் உபயோகிக்கலாம் 

அழுத்த கட்டு

மூட்டு பகுதி முழுவதும் (இறுக்கமாக இல்லாமல் மிகவும் தளர்வானதும் இல்லாமல்) ஒரு கட்டுப்பினைப் இட்டு, தசைநார் அதனிடத்தில் வைத்திருப்பதற்கும் வலியை நிவாரணமாகும். இது நாள் முழுவதும் பயன்படுத்தலாம், ஆனால் இரவில் அகற்றப்பட வேண்டும்.

மூட்டு கீழ் தலையணைகள் வைப்பதன் மூலம் மூட்டு வலி நிவாரணம் ஆகும் 

வீடு வயித்தியத்திநால் வலி நிவாரணம் ஆகவில்லை என்றால் மருத்துவர் கீழ் குறிப்பிட்டுள்ளதை பரிந்துரைக்கலாம்

ஒய்வு

மருத்துவர் மருந்துகள் எடுத்துக் கொள்வதுடன் ஒய்வு எடுக்க பரிந்துரைப்பார். மூட்டிக்ற்கு ஒய்வு குடுத்தால் சிறுது ஆசுவாசம் தோன்றும், அத்துடன் சேதம் அல்லது தொற்றிலுருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

வலி நிவார்ணி  பெரசிட்டமோல் மற்றும் இபுப்ரூபான் போன்ற ஸ்டெராய்ட்சில்லா அழற்சி எதிர்ப்பு (NSAID கள்) மருந்துகள் லேசானதிலிருந்து இருந்து மிதமான வலியிலுருந்து நிவாரணம் பெற  உதவும். கடுமையான வலி என்றால் , மருத்துவர் ஊசி அல்லது மருத்துவமனையில் சேர்க்கை போன்ற ஆலோசனை கூறுவார்.

பிசியோதெரபி

ஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டரால் வழிநடத்தப்படும் உடல் சிகிச்சை முழங்கால் வலி குறைக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியான சிகிச்சை மூட்டுவலியை முழுமையாக குணப்படுத்தி விடும்.

அக்குபங்க்சர்

அக்குபங்க்சர் எனப்படும் குத்தூசி மருத்துவத்தில் வலியை போக்குவதற்காக  அதற்குரிய நரம்புகளின் உணர்ச்சி  தூண்டப்படும் ஒரு முயற்ச்சி ஆகும். பெரும்பாலும் நாள்பட்ட நோய்க்கு நிவாரணம் அளிக்க கூடிய ஒரு மாற்றுமருத்துவ சிகிச்சை ஆகும்

அறுவை சிகிச்சை

உடல் சிகிச்சை அல்லது மருந்துகள் மூட்டு வலிக்கு  நிவாரணம் அளிக்காதபோது, ​​ மருத்துவர் அடிப்படை காரணத்தை பொறுத்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பார்  மூட்டு வலி சரிசெய்ய சில அறுவை சிகிச்சை முறைகள்:

முழங்கால் மூட்டு தசைநார்கள் தடிமனான பட்டை போன்ற அமைப்புகளால் தாங்கப்பட்டுள்ளது . அடிபட்டால், இந்த கட்டமைப்புகள் சேதமடைந்து மூட்டு வலிக்கு வழிவகுக்கலாம். இந்த தசைநார்கள் அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்படுகின்றன.

முழு மூட்டுமாற்று அறுவைசிகிச்சை

தசைநார்கள் பழுதினாலான மூட்டு சேதத்தை  மருந்தினாலோ அல்லது எந்தவித சிகிச்சையினாலும் சரி செய்ய முடியவில்லை என்றால், மருத்துவர் மூட்டில் சேதமடைந்த பகுதிகளை உலோகம் அல்லது  பிளாஸ்டிக் மாற்றுகள் பயன்படுத்தி மொத்த முழங்கால் மாற்று செய்ய கூடும்.

இது ஒரு அறுவை சிகிச்சை செயல்முறை என்பதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது 2-3 மாதங்கள் முழுமையாக படுக்கை ஓய்வு எடுக்க வேண்டும். செயற்கை முழங்கால்களைப் பயன்படுத்துவதற்குப் சகஜம் ஆகும் வரை அதை அதிகம் பயன் படுத்த கூடாது. மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை வலியை குறைக்கவும்  இயக்கத்தை  மேம்படுத்தவும்  உதவும் .

சேதமடைந்து  இறந்த திசு நீக்கம்

இந்த சிகிச்சையில், ஒரு சிறிய துளையிட்டு ஆர்த்தோஸ்கோப் என்றழைக்கப்படும் ஒரு கருவியை முழங்கால் மூட்டுகளில் செலுத்தி உதிரி கழிவுகளுடன்(சிறிய கழிவு திசுக்கள்) மூட்டியில்  ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால் அவைகளும் அகற்றப்படும். இந்த ஒட்டுண்ணிகள் என்பவை இழைம பையுடன் இணைந்த திசுக்கள் ஆகலாம், திசுக்களின் இணைப்புகளாக இருக்கலாம் விபத்து அல்லது அதிர்ச்சி காரணமாக எலும்பும் தசைநாரும் இணைந்ததாக இருக்கலாம். இந்த சிகிச்சையினால் மூட்டு சரியாக செயல்படுகிறது.

Knee Pain

மூடுவலியை தடுப்பதற்கு வாழ்க்கைமுறை மேலாண்மை ஓரளவுக்கு உதவும் என்றாலும், முதுமை போன்ற காரணிகளை மாற்றமுடியாது. அதனால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது பயனுள்ளதாக இருக்கும். மூடுவலியை குறைக்க தினசரி வாழ்க்கையில் செயல் படுத்தகூடிய சில குறிப்புகள்.

எடை குறைப்பு                                            

பருமனாக இருப்பவர்களுக்கு, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற எடை இழப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடை குறைய்க்க, குறைந்த கார்போஹைட்ரே-ட்டுகள் மற்றும் அதிக புரதங்களைக் கொண்ட ஆரோக்கியமான உணவு திட்டத்தை பின்பற்ற வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 8-10 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். (மேலும் படிக்க – எடை இழப்பு உணவு விளக்கப்படம்)

பலபடுத்தும் உடற்பயிற்சிகள்

கடுமையான உடற்பயிற்ச்சி எடுப்பதற்கு பதிலாக பலபடுத்தும் உடற்பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் மூட்டின் பலத்தை அதிகரிக்கும். உதரணமாக உடலின் கீழ் பாகத்திற்கு உடற்பயிற்சிகள். முறையான உடற்பயிற்சி நுட்பத்தை பின்பற்ற ஒரு பயிற்சி நிபுணரின் ஆலோசனை அவசியம்.

Read More:

How to know Symptoms of Loose Motions

பேதி (வயிற்று போக்கு) அறிகுறிகள் என்ன?

How to Know symptom Urinary Tractinfection

சிறுநீர் பாதை நோய் தொற்று அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Muscle Pain

தசை வலி அறிகுறிகள் என்ன?