Diarrhea, (பேதி (வயிற்று போக்கு) அறிகுறிகள் என்ன)commonly known as loose or watery stools, is a symptom of a digestive tract disorder. If he/she passes three or more (or more than usual), liquid or watery stools in a day then the person is said to have bethi (diarrhoea).
தளர்வான அல்லது நீர் போன்ற மலம் எனப் பொதுவாக அறியப்படும் பேதி (வயிற்று போக்கு), ஒரு செரிமானப் பாதை கோளாறின் ஒரு அறிகுறியாகும். ஒரு நாளில் அவர்/அவள் மூன்று அல்லது அதற்கு மேல் (அல்லது வழக்கத்தை விட அதிகமாக), திரவ அல்லது நீர் போன்று மலம் கழித்தால் அந்த நபருக்கு பேதி (வயிற்று போக்கு) இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.7 பில்லியன் குழந்தைப்பருவ பேதிகள் (வயிற்று போக்கு) ஏற்படுகின்றன. எனவே, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு, குழந்தைப்பருவ பேதி (வயிற்று போக்கு) ஒரு முக்கிய காரணமாகும்.
இந்தியாவில், குழந்தைகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பேதி (வயிற்று போக்கு), வருடந்தோறும் 3,00,000 இறப்புகள் (ஒத்த வயதுப் பிரிவு குழந்தைகளின், மொத்த இறப்பில் 13%) ஏற்படுத்துகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. வழக்கமாக, தீவிரமான பேதி (வயிற்று போக்கு), வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
பேதியை (வயிற்று போக்கு) ஏற்படுத்தும் நோய்த்தொற்று வழக்கமாக, அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதாலும், உணவுகளை முறையாகக் கையாளாததாலும் பரவுகிறது. இதனால், நோய்த்தொற்று பரவுவதில், மோசமான சுய மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பேதியின் (வயிற்று போக்கு) கடுமையான நிலைகள், நீர் வற்றிப்போதலை ஏற்படுத்தும், நீர் மற்றும் எலெக்ட்ரோலைட்களின் விரைவான இழப்புக்குக் காரணமாகக் கூடும். அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடுமையான பேதி (வயிற்று போக்கு) உயிருக்கு அச்சுறுத்தலாகக் கூடும்.
எச்.ஐ.வி. நோய்த்தொற்று இல்லாத குழந்தைகளுக்கு வரும் பேதியின் (வயிற்று போக்கு) இறப்பு விகிதத்தை விட, கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறதோடு, எச்.ஐ.வி. நோய்த்தொற்று உள்ள குழந்தைகளுக்கு வரும் பேதியில் (வயிற்று போக்கு), உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது.
தடுப்பு மருந்துகள் சிகிச்சையின் (ரெட்ரோவைரஸ் தடுப்பூசி அளித்தல்) முன்னேற்றங்கள், தாய்ப்பால் கொடுத்தல், மேம்படுத்தப்பட்ட துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகியவை குழந்தைப்பருவ பேதி (வயிற்று போக்கு) நிகழ்வுகளைக் குறைக்க உதவுகின்றன.
- பேதி (வயிற்று போக்கு) என்ன
பேதி (வயிற்று போக்கு) என்பது, ஒரு இரைப்பை நோய்த்தொற்றை சுட்டிக் காட்டும் ஒரு அறிகுறியாகும். இது, நுண்ணுயிரிகள், வைரஸ்கள், அதே போன்று ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடும். இருப்பினும், மற்ற உடல் நலப் பிரச்சினைகளும் பேதிக்கு காரணமாகலாம்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், வருடத்திற்கு 5,00,000க்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்பட, பேதி (வயிற்று போக்கு) நோய்கள் காரணமாக இருக்கின்றன, இதனால், உலகளவில் குழந்தைகள் இறப்பிற்கான பெரிய காரணங்களில், இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது. பேதி (வயிற்று போக்கு), ஒரு நாளுக்கு 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்பிற்குப் பொறுப்பாகிறது.
இது, மலேரியா, தட்டம்மை மற்றும் எய்ட்ஸ் ஆகியவை இணைந்து ஏற்படுத்தும் குழந்தைப்பருவ இறப்புக்களை விட அதிகம். தீவிர பேதி (நோய்த்தொற்று), பல நாட்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு நீடிக்கக் கூடும். இது, கடுமையான திரவ இழப்பு அல்லது நீர் வற்றிப்போதலுக்கு வழிவகுக்க கூடும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கா விட்டால், மரணத்தையும் ஏற்படுத்தலாம். .
- பேதி (வயிற்று போக்கு) என்றால் என்ன?
பேதி (வயிற்று போக்கு) என்பது, ஒரு இரைப்பை கோளாறின் ஒரு அறிகுறியாகும். I இது, ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தளர்ந்த மலம் கழிக்கும் போக்கு என வரையறுக்கப்படுகிறது. சிலர் ஒரு நாளில் இயல்பாகவே அடிக்கடி குடல் செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பேதி (வயிற்று போக்கு) இருக்கிறது என அர்த்தம் இல்லை.
- பேதி (வயிற்று போக்கு) அறிகுறிகள் என்ன
பேதி (வயிற்று போக்கு), ஒரு மறைந்திருக்கும் இரைப்பை கோளாறின் காரணமாகத் தோன்றுகிற ஒரு அறிகுறியாகும். இருப்பினும், அது இவை போன்ற மற்ற அறிகுறிகளோடு இணைந்து இருக்கக் கூடும்:
வயிற்றுப் பிடிப்புகள்.
வயிற்று வலி.
வயிறு வீங்குதல்.
அதிகரித்த தாகம்.
எடை இழப்பு.
காய்ச்சல்.
குமட்டல்.
குடலை சுத்தப்படுத்துவதற்கு திடீர் உந்துதல்.
தளர்வான மலத்துடன் சேர்ந்து மற்ற தீவிரமான அறிகுறிகளும் இருக்கக் கூடும். அவற்றுள் அடங்குபவை:
மலத்தில் இரத்தம் தோன்றுதல்
தொடர்ந்த வாந்தி.
நீர் வற்றிப்போதல்.
ஒரு மருத்துவரைப் பார்ப்பது மிகவும் நல்லது, ஒருவேளை:
பேதி (வயிற்று போக்கு) இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால்.
நீர் வற்றிப்போதலின் அறிகுறிகள் காணப்பட்டால்.
அடிவயிறு அல்லது ஆசனவாயில் கடுமையான வலியிருந்தால்.
மலம் கறுப்பாக அல்லது இரத்தத்துடன் இருந்தால்.
102° ஃபாரன்ஹீட்களுக்கு மேல் காய்ச்சல் தோன்றினால்.
மிகவும் இள வயதுக் குழந்தைகளுக்கு, பேதி (வயிற்று போக்கு) விரைவாக நீர் வற்றிப்போதலுக்கு வழிவகுக்கக் கூடும். அதனால், 24 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் நன்றாகவில்லை என்றால், ஒரு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
- பேதி (வயிற்று போக்கு) சிகிச்சை
பல்வேறு வகை பேதி (வயிற்று போக்கு)க்கான சிகிச்சை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தீவிரமான பேதி (வயிற்று போக்கு)க்கு மருந்துக்கடை மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்க இயலும். இருப்பினும், பேதியுடன் (வயிற்று போக்கு) கூடவே இரத்தம் கலந்த மலம் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள், மருந்துக்கடை மருந்துகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. பேதி (வயிற்று போக்கு) 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், ஒரு மருத்துவரிடம் செல்வது மிக நல்லது.
- குழந்தைகளுக்கு வரும் தீவிரமான பேதி (வயிற்று போக்கு)
குழந்தைப்பருவ, குறிப்பாக சிசுக்கள் மற்றும் தவழும் குழந்தைப் பருவ, பேதி (வயிற்று போக்கு)க்கு, மருந்துக்கடை மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிப்பது தீங்கு விளைவிக்கக் கூடும். மருந்தைக் கொடுப்பதற்கு முன்னால், ஒரு மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவ ருடன் பேசுங்கள். ஒருவேளை, அறிகுறிகள் 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், ஒரு மருத்துவரை சந்தியுங்கள்.
- நாள்பட்ட மற்றும் தொடர்ந்த பேதி (வயிற்று போக்கு)
நாள்பட்ட மற்றும் தொடர்ந்த பேதி (வயிற்று போக்கு)க்கான சிகிச்சை, காரணத்தைப் பொறுத்து இருக்கிறது. ஒட்டுண்ணிகள் மற்றும் நுண்ணுயிரிகளைக் கொல்கிற அல்லது தடுக்கிற, கடுமையான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. க்ரோனின் நோய், பெருங்குடல் அழற்சி மற்றும் எரிச்சலான குடல் கோளாறு போன்றவற்றால் ஏற்படும் பேதி (வயிற்று போக்கு)க்கு, பிரத்யேகமான மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களால், பேதியின் (வயிற்று போக்கு) அறிகுறிகளை விரைவாகக் குறைக்க மற்றும் எதிர்காலத்தில் வராமல் இருக்குமாறு தடுக்க முடியும். அவற்றுள் அடங்கியவை:
- இவற்றின் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளைக் குறைத்தல்:
கழிவறையை உபயோகித்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுதல்.
சமைப்பதற்கு முன்பும் பின்பும் மற்றும் டையப்பர்களை மாற்றிய பிறகும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல்.
கொதிக்க வைத்த அல்லது புட்டியில் அடைத்த தண்ணீரைக் குடித்தல்.
சூடான பானங்களைக் குடித்தல்.
வயதுக்குப் பொருத்தமான உணவுகளை, சிசுக்களுக்கும் குழந்தைகளுக்கும் வழங்குதல்.
ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுதல்.
உணவுகளை முறையாக சேமித்தல் மற்றும் கையாளுதல்.
தவிர்க்க வேண்டியவை:
குழாய் தண்ணீரைக் குடிப்பது.
குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் பனிக்கட்டி செய்வதற்கு குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவது.
பதப்படுத்தப்படாத பாலை அருந்துவது.
தெருவோர உணவுகளை சாப்பிடுவது.
பச்சையான, சமைக்காத உணவு மற்றும் கறியை உண்பது.
மது அருந்துதல்.
காரமான உணவு.
ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்கள் போன்ற பழங்கள்.
காஃபின் உள்ள பானங்கள்.
பால் உணவுகள்.
சர்க்கரை இல்லாத கோலா பானங்கள், மிட்டாய்கள் மற்றும் பிசினைக் கொண்டிருக்கும் செயற்கை இனிப்பூட்டிகள்.
இவற்றின் மூலம் நீர் வற்றிப்போதலைத் தவிர்த்தல்:
வாய்வழி மறு நீர்ச்சத்து கரைசல் (ஓ.ஆர்.எஸ்)
(ஓ.ஆர்.எஸ்) கரைசல் என்பது, பேதியால் (வயிற்று போக்கு) நீர்ச்சத்தை இழந்த ஒரு நபருக்கு, அதைத் திரும்பத் தர வழங்கப்படும், தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் கலந்த ஒரு கலவை ஆகும். எந்தவித காரணத்தால் ஏற்பட்டதாக இருந்தாலும், பேதி (வயிற்று போக்கு) நோய்களுக்கு, இது சிறந்த மருத்துவமாகும்.
தயாராக இருக்கும் ஓ.எஸ்.ஆர் பொட்டலங்கள், மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால், ஒருவேளை அவை இல்லையென்றால், 6 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பை, ஒரு லிட்டர் குடி தண்ணீரில் (கொதிக்க வைத்து ஆற வைத்தது) கலந்து, வீட்டிலேயே ஒரு ஓ.எஸ்.ஆர். கரைசலைத் தயாரிக்க முடியும். 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒவ்வொரு முறை தளர்ந்த மலம் கழித்தலுக்குப் பிறகும், 1/4லிருந்து 1/2 குவளை வரை ஓ.ஆர்.எஸ். கரைசலைக் குடிக்க வேண்டும். 2வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், ஒவ்வொரு முறை மலம் கழித்தலுக்குப் பிறகும், 1/2லிருந்து ஒரு முழு குவளை வரை ஓ.ஆர்.எஸ். எடுத்துக் கொள்ளலாம்.
6 மாதங்கள் முதல் 5 வயது வரையுள்ள, எச்.ஐ.வி நோய்த்தொற்றுள்ள குழந்தைகள் பேதி (வயிற்று போக்கு)க்கு, வைட்டமின் ஏ நிரப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பேதியை (வயிற்று போக்கு) தடுக்க, குழந்தைகளுக்கு, வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் மற்ற வைட்டமின்களின் கலவை பரிந்துரைக்கப்படலாம்.
- ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்து கொடுத்தல்
பேதி (வயிற்றுப்போக்கு) நோய்களைத் தடுக்க, பலவித அளவுகளில் வாய்வழி ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்துகள், குழந்தைகள் ரோட்டாவைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிகழ்வுகளைக் குறைக்க உதவுகின்றன.
Read More:
How to know symptoms of Phlegm?
Phlegm அறிகுறிகள் என்ன?
How to know symptoms of Dengue Fever
டெங்கு என்றால் என்ன?
How to know symptoms of bone cancer?
எலும்பு புற்று நோய் என்றால் என்ன?