symptoms of Ringworm
symptoms of Ringworm
Listen to this article

Ringworm is படர்தாமரை அறிகுறிகள் -சிகிச்சை என்ன ? a common skin infection in children and adults. Ringworm is caused by a fungal infection called dermatophyte. Tinea is medically known as tinea.

படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தோல் நோய் தொற்றாகும். டெர்மடொஃப்ட் என அழைக்கப்படும் ஒரு பூஞ்சை தொற்றினால், படர்தாமரை ஏற்படுகிறது. படர்தாமரையை மருத்துவ ரீதியாக டினியா என அழைக்கப்படுக்கிறது.

இது மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்ககூடியது. படர்தாமரைத் தொற்றானது பொதுவாக சூடான மற்றும் ஈரப்பதமான தோல் பகுதிகளில் ஏற்படும். ஆதாவது, இடுப்பு பகுதி, உச்சந்தலையில், விரல்களுக்கு இடையில் உள்ள மடிப்பு போன்ற தோல் பகுதிகளில் படர்தாமரை தோன்றலாம். பல்வேறு வகையான படர்தாமரைகளுக்கு, அது ஏற்படும் தோல் பகுதியினை பொறுத்து பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, இடுப்பு மற்றும் தொடை சேருமிடத்தில் ஏற்படும் படர்தாமரையை தொடையிடுக்குப் படை எனப்படும், உச்சந்தலையில் ஏற்படுவது தலைப்படை, கால் விரல்களில் ஏற்படுவது நகப்படை, கால்களில் ஏற்படுவது (தடகள அடி)சேற்றுப் புண் மற்றும் கைகளில் ஏற்படுவது டினியா மானுமம் ஆகும். உடலில் தோன்றும் பூஞ்சை தொற்றுக்களை உடற்படை என பொதுவான பெயரில் அழைக்கப்படுக்கிறது.

படர்தாமரையானது, ஒரு தெளிவான பகுதியின் மையத்தில் வளையம் போன்ற வடிவத்தில் தோற்றமளிக்கும். வளையத்தின் விளிம்புகளில், சிவப்பு நிறமாக மற்றும் செதில் போன்று கானப்படும். படர்தாமரையானது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான அரிப்பை ஏற்படுத்தும். டினியா என்ற சொல்லுக்கு ‘படர்தாமரை’ என பெயர் ஏற்படுவதற்கு, அதன் வளையம் போன்ற வடிவமே காரணமாகும்.

படர்தாமரையானது எளிதில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்தோ, விலங்குகளிலோ அல்லது செல்லப் பிராணிகளிலிருந்து மற்றும் பூஞ்சைத் தொற்றுக் கொண்டிருக்கும் மண் பரப்புகளிலிருந்தும் எளிதாக பரவுகிறது. இது பொதுவாக எச்.ஐ.வி, நீரிழிவு, மற்றும் புற்றுநோய் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு ஏற்படுவதை காணலாம். உடலில் பாதிக்கப்பட்ட தோலின் மாதிரிகள் மற்றும் நுண்ணோக்கி பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர்கள் படர்தாமரையை கண்டறிக்கின்றனர்.

மிதமான படர்தாமரைகளுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் லோஷன்ஸிகளின் வெளிப்புற பயன்பாடினால் தீர்க்கப்படுகின்றன. இருப்பினும், கடுமையான படர்தாமரை கொண்டவர்களுக்கும் இந்த பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. கூடுதலாக, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான பழக்க வழக்கங்களினால் தோலினை சுத்தமாகவும், படர்தாமரை ஏற்படுவதை தடுக்கவும் முடிக்கிறது.

  • படர்தாமரை அறிகுறிகள் என்ன

ஒரு குறிப்பட்டத்தக்க படர்தாமரையானது தோலில் வளையம் அல்லது வட்டம் போன்ற வடிவத்தில் வடு அல்லது வெடிப்பினை ஏற்படுத்தும். அதன் வளையத்தின் விளிம்புகளில் சிவப்பாக மற்றும் வெள்ளி செதில்களை கொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட வளையப்பகுதியின் மையத்தில் தெளிவாக மற்றும் தொற்றினால் பாதிக்கப்படாமலும் இருக்கலாம்.

இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் தோலில் கடுமையான அரிப்புகளுடன் அதன் அளவுகள் மற்றும் அதிகமான எண்ணிக்கையில் வளர தொடங்கிவிடும். வழக்கமான தோல் தொற்றுகளை தவிர, வேறுபட்ட தோல் பகுதிகளில் ஏற்படும் படர்தாமரைக்கான அறிகுறிகள் கீழே விளக்கப்படுள்ளது:

உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானலும் ஏற்பட கூடிய உடற்படை அல்லது படர்தாமரைகள்

படர்தாமரை வளையத்தின் வெடிப்பில் சுற்றியுள்ள ஓரங்களில் உயர்த்தப்பட்ட மற்றும் அதன் மையத்தில் ஒரு பரந்த தெளிவான பகுதியாக இருக்கும்.

படர்தாமரை வளையத்தின் வெடிப்பானது சிவப்பு, இளஞ்சிவப்பு, சாம்பல் அல்லது பழுப்பு நிறமாக தோன்றும்.

பல வளைய வடிவங்களை கொண்ட படர்தாமரை வெடிப்பானது ஒன்றாக இணைந்து ஒரு பெரிய பகுதியாக பரவலாம்.

சில நேரங்களில், சீழ் – நிறைந்த கொப்பளங்களும் தோலில் தோன்றலாம்.

இடுப்புப் பகுதியில் ஏற்படும் தொடையிடுக்குப் படை அல்லது படர்தாமரை (கழிப்பறைப்படை நமைச்சல்)

இடுப்பு பகுதியில் வீக்கம் மற்றும் சிவப்பு நிற தோற்றம் ஆகியவை நோய் தொற்றுக்கான ஆரம்ப கட்டங்களாகும்.

சொறியானது படிப்படியாக அளவில் அதிகரித்து மற்றும் உள் தொடைகள், இடுப்பு மற்றும் அமரும் இடம் வரை நீட்டிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தோலானது செதில்களாக உருவாகிய பின், உரிந்துதோ அல்லது வெடிப்புகளாகவோ உருவாக்கலாம்.

நோய்த்தொற்று வளையத்தின் ஓரங்களில் உயர்த்தப்பட்ட மற்றும் சீழ் நிறைந்த கொப்பளங்களை கொண்டிருக்கலாம்.

இந்த தொற்றானது கடுமையான அரிப்புகள் உடையது.

கால்களில் ஏற்படும் சேற்றுப் புண் (தடகள காலில்) அல்லது படர்தாமரைகள்

உள்ளங்கால் மற்றும் கால் விரல்களுக்கு இடையே உள்ள தோலானது எளிதாக உரிய கூடிய காய்ந்த செதில்களாக இருக்கும்.

வறண்ட சருமமானது வெடிப்புகளை உருவாக்கி இரத்த வடித்தலையும் ஏற்படுத்தும்.

இந்த தொற்றானது மற்ற கால் பகுதிகளிலும் பரவி தீவிரமான நமைச்சல் மற்றும் வலி உடைய சீழ் நிறைந்த கொப்பளங்களாக உருவாக்குகிறது.

கால் விரல்களுக்கு இடையில் உள்ள தோல் வெள்ளையாகவும், மென்மையானதாகவும் மற்றும் பஞ்சு போலவும் தோன்றும்.

கடுமையான தொற்று காரணமாக, காலில் உள்ள தோலானது, குறிப்பாக கால் விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் துர்நாற்றங்களை ஏற்படுத்தும்.

நகங்களில் ஏற்படும் நகப்படை அல்லது படர்தாமரை

இந்த தொற்றானது ஒன்று அல்லது பல நகங்களிலும் ஏற்படலாம்.

வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியன இந்த நோய் தொற்றின் ஆரம்ப கட்டங்களாகக் காணப்படுகிறது.

நகங்களின் நிறமானது கருப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் மாறும்.

இந்த தொற்று நோயானது மேலும் முன்னேற்றம் அடையும்போது கால்களில் உள்ள நகங்கள் தடிமனாகவும் உடைய கூடியதாகவும் மற்றும் விரல்களிருந்து இருந்து பிரிய கூடியதாகவும் இருக்ககூடும்.

Ringworm

பொதுவாக இது தடகள பாதம் உடையவர்களுக்கு ஏற்படுக்கிறது.

உச்சந்தலையில் ஏற்படும் தலைப்படை அல்லது படர்தாமரைகள்

உச்சந்தலையில் உள்ள சொறியானது பட்டையாக உருவாக்குகிறது.

முடி உதிர்ந்து பின்னால் ஒரு வழுக்கையாக தோன்றுகிறது.

வழுக்கையில் கருப்பு புள்ளிகள் காணப்படலாம்.

உச்சந்தலையில் பாதிக்கப்பட்ட தோல்களில் சிவப்பு மற்றும் வீக்கங்கள் ஏற்படலாம்.

உச்சந்தலையில் கடுமையான அரிப்பு ஏற்படும்.

தாடிகளினால் ஏற்படும் முகப்படை அல்லது படர்தாமரைகள்

தடிமனான முடி வளர்ச்சியினால் தாடி மற்றும் மீசையின் பகுதிகளில் படர்தாமரை உருவாக்கிறது.

தோலில் சிவத்தல், வீக்கம், மற்றும் திரவ வெளிப்பாடுகள் ஏற்படும்.

பாதிக்கப்பட்ட சருமத்தில் சீழ் நிறைந்த  கொப்பளங்களும் இருக்கலாம்.

மயிர்க்கால்களின் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள முடி உதிரலாம்.

பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும்.

கைகளில் ஏற்படும் மானுமம் படை அல்லது படர்தாமரைகள்

உள்ளங்கைகளில் உள்ள தோல்களின் இடையில் பிளவுகளை ஏற்படுத்தும்.

தொற்றுநோய் வளையமானது பொதுவாக கைக்களுக்கு பின்னால் காணப்படுகிறது.

முகத்தில் ஏற்படும் ஃப்சியே படை அல்லது படர்தாமரைகள்

முகத்தில் உள்ள தோல்கள் (தாடி பகுதியை தவிர) சிவப்பு நிறமாக காணப்படும்.

கடுமையான அரிப்பு மற்றும் முகத்தில் எரிச்சல் உண்டாகும், குறிப்பாக சூரிய ஓளிப்படும்போது.

தொற்றுநோயின் தோல் வடிவமானது வழக்கமான வடிவில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

  • படர்தாமரை சிகிச்சை

படர்தாமரையின் சிகிச்சையானது சீக்கிரமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியான மருத்துவரின் ஆலோசனைகளின் மூலம் நோய் பரவுவதல் மற்றும் தொடரத்தலிருந்து தற்காத்து கொள்ளலாம். இதற்கான சிகிச்சையானது அதன் தீவிரம் மற்றும் நோய்த்தாக்கின் இடத்தைச் சார்ந்துள்ளது. பூஞ்சுத்தொற்று எதிர்ப்பிகள் பூஞ்சாணத்தின் வளர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றை நிறுத்தி, தொற்றிலிருந்து முழுவதுமாக குணப்படுத்த உதவுகிறது.

  • மேற்பூச்சு பூசண எதிர்ப்பி மருந்துகள்

பெரும்பாலான சமயங்களில், பூசண எதிர்ப்பி கிரீம்கள், பொடிகள், ஸ்ப்ரேகள், அல்லது ஆயின்மென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதின் மூலம் 2 முதல் 4 வாரங்களில் தொற்றுநோயைத் சரி செய்யலாம். கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள படர்தாமரை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பொதுவான பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள், பொடிகள் அல்லது ஆயின்மென்ட் போன்ற மருந்துகள் உள்ளன அவைகள்:

க்லோடரைமசோல்

மைகொனசோல்

டரிபினாஃப்ன்

கேடோகோனசால்

ஸைக்லோபைரக்ஸ் என்றழைக்கப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தானது நகப்பூச்சில் இருப்பதனால் நகத்தில் ஏற்படும் படர்தாமரைக்கு அது சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

Ringworm
  • வாய்வழி பூசண எதிர்ப்பு மருந்துகள்

படர்தாமரையானது ஒரு பெரிய பகுதியாக பரவியிருந்தால் நோயாளிகளுக்கு வாய்வழி சிகிச்சை மருந்துகள் அவசியமாகும். உச்சந்தலையில் ஏற்படும் படர்தாமரைக்கு பூசண எதிர்ப்பி கிரீம்கள் அல்லது பொடிகள் ஆகியவைனால் குணப்படுத்த இயலாது. நோய்த்தொற்றரை முற்றிலுமாக குணப்படுத்த வாய்வழி மருந்துகள் 1 முதல் 3 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். சில வாய்வழி மருந்துகள்:

கிரிசியோபல்வின்

டர்பின்னாஃப்ன்

இட்ராகோனாசோல்

ஃப்லுகோனாசோல்

ஸ்லெனியம் சல்பைடு மற்றும் கெட்டோகொனசோல் ஆகியவற்றைக் கொண்ட பூசண எதிர்ப்பி ஷாம்போக்கள், விரைவான சிகிச்சைக்காக வாய்வழி மருந்துகளுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சை உத்திகளை தவிர, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலமாகவும் படர்தாமரையை சரி செய்யலாம். அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் சுகாதாரமான பராமரிப்புகளினால்  மற்ற உடல் பாகங்கள் அல்லது பிற மக்களுக்கு எற்படும் படர்தாமரை பரவுதல்களை தடுக்கலாம்.

மற்ற உடல் பாகங்களில் தொற்று பரவுதலை தடுக்க பாதிக்கப்பட்ட பகுதியை தொட்ட பின்னர் சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளை சுத்தம் செய்யவும்.

பாதிக்கப்பட்ட பகுதியை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

தடகள பாதம் உடையவராக இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதி உலரும் வரை சாக்ஸ் அல்லது காலணிகள் அணிவதைத் தவிர்க்கவும்,ஏனெனில் சூடான மற்றும் ஈரப்பதமாக இருந்தால் பூஞ்சை வளர்ச்சி மற்றும் அதன் பெருக்கங்கள் ஏற்படலாம்.

மேலும், ஈரமான அறைகள், லாக்கர் அறைகள் மற்றும் வெறுங்காலில் பொதுகழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மற்றும் செருப்புகளைப் பயன்படுத்துவதினால் மற்றவர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்று பரவுதலை தடுக்கலாம்.

சுத்தமான மற்றும் உலர்ந்த ஆடைகள் (குறிப்பாக பருத்தி துணி) மற்றும் உள்ளாடைகளை அணியவும்.

உங்கள் தனிப்பட்ட உடமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்.

Read More:

How to know symptoms of Sciatica?

Sciatica is a painful condition சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) அறிகுறிகள் என்ன?

How to know Irritable Bowel Syndrome?

A syndrome (syndrome) எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்ன?

how to know to Anal Cancer?

What is anal cancer? ஆசன வாய் புற்றுநோய் என்றால் என்ன?