symptoms of Leg Pain
symptoms of Leg Pain
Listen to this article

Leg pain கால் வலிக்கான‌ கை வைத்திய குறிப்புகள்? is a discomfort between the hip and ankle. Leg pain is not a disease in itself but a symptom of other conditions such as circulation problems, muscle injuries, bone fractures or nerve problems. There are different ways to find the exact cause of leg pain.

கால் வலி என்பது இடுப்பு மற்றும் கணுக்கால் இடையே ஏற்படும் அசௌகரியம் ஆகும். கால் வலி, தனிச்சையான ஒரு நோய் அல்ல அது இரத்த ஓட்டம் பிரச்சினைகள், தசை காயங்கள், எலும்பு முறிவு அல்லது நரம்பு பிரச்சனைகள் போன்ற மற்ற நிலைமைகளின் அறிகுறி ஆகும். கால் வலியின்  சரியான காரணத்தை கண்டறிய பல்வேறு வழிகள் உள்ளன.

அதில்  இரத்த பரிசோதனை, (CT ஸ்கேன்) மற்றும் எக்ஸ்-ரே போன்ற உருவரைவு பரிசோதனை ஆகியவை அடங்கும். இதன்  சிகிச்சை ஆனது கால் வலியின் அடிப்படைக் காரணத்தை பொருத்து தீர்மானிக்க படுகிறது. போதுமான ஓய்வு, மருந்துகள், அறுவை சிகிச்சை, பிசியோதெரபி, கால் வார்ப்பு அணிவது அல்லது நடை-காலனி  ஆகியவை இதன் சிகிச்சையின் பட்டியலில் அடங்கும். சோர்வு அல்லது சதைபிடிப்பு போன்ற தற்காலிக நிலைமைகளினால் ஏற்படும் வலி  ஓய்வு எடுத்து மற்றும் ஐஸ் கட்டி ஒத்தடத்தை பயன்பதுத்தி சரி செய்து விடலாம்

எதோ ஒரு சமயத்தில் சில காரணங்களால் ஒவ்வொரும் அனுபவித்திருக்கக்கூடிய பொதுவான உடல் நலப் பிரச்சனை கால் வலி. காயத்தினால் ஏற்பட்டிருந்தாலோ அல்லது ஒரு நாளில் குறையவில்லை என்ற நிலைமையை தவிர, கால் வலி அரிதாக தீவிரம் அடையும். கால் வலி,  இடுப்பு மற்றும் கணுக்கால் இடை-பகுதியில் தோன்றும் அசௌகரியத்தை குறிக்கிறது. காலில் ஒரு பகுதியில் வலி என்றால் அதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம் மற்றும் ஒரு அடிப்படை நோயின் அறிகுறியாக கூட இருக்ககூடும்

  • கால் வலி அறிகுறிகள் என்ன

கால் வலிக்காண பல்வேறு அறிகுறிகளை மக்கள் அனுபவித்து கொண்டிருக்கலாம்கால் வலியின் காரணத்தை பொறுத்து, ஒரு கூரிய துடிக்க வைக்கும் வலி ஏற்படலாம் (கால் காயங்களின் பொது) அல்லது ஒரு மந்தமான பரவும் வலி (சோர்வினால் ) இருக்கலாம்.  நடக்கும் போழுதோ அல்லது உட்கார்ந்திருக்கும் பொழுது வலி அதிகரித்து மோசமாகலாம் கூடும்.

முழங்காலில் ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாடி ஏற முயல்கையில் அல்லது உட்காரரும்போது கால் வலி ஏற்படலாம்

தசை பிடிப்பினால் ஏற்படும் கால் வலியினால் காலில் முடிச்சு போல் தோன்றும், நாள் அடைவில் அது இறுக்கமாகி வலியை பரவ செய்யும் 

இரத்த் ஓட்ட சிக்கல்களின் காரணமாக தோல் சிவந்து வீக்கம் உண்டாகி கால் வலி ஏற்படலாம்

ஸ்கியாடிக்கா காரணாமாக உண்டாகும் கால் வலி  கீழ் நோக்கி பரவி அதனுடன் எரிச்சல், அசைவின்மை போன்ற பிற அறிகுறிகளை உண்டாக்குகிறது

இதய நோய்கள் அல்லது அதுபோன்ற பிரச்சினையினால்  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடற்பயிற்சி அல்லது ஓடும்போது கால் வலி ஏற்படலாம். இந்த வகையான வலி ஓய்வு எடுத்துக் கொண்டால் குறைந்துவிடும்

  • கால் வலி சிகிச்சை

கால் வலி சிகிச்சை அதன் காரணத்தை பொறுத்தது

கால்களில் சதை பிடிப்பு மற்றும் மிதமான தசை சுளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து சரி சேய்துவிடலாம்

அதிகப்படியான, திடீர் உடல் செயல்பாடு காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்புகள், தசைகள் மீது அழுத்தம் கொடுக்கிறது. இதுபோல் நீரிகற்றம் காரணமாக வரும் கால் வலியை சுய பராமரிப்பினால் சரிசெய்துவிடலாம். கால் வலி உணரும் பொது முதலில் செய்ய வேண்டியது, வலிக்கு வழி வகுக்கும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை குறைத்து அல்லது இயலுமானால் முற்றிலும் நிறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக மென்மையான அழுத்தம் குடுத்து வலியை குறைக்க முடியும்

வெப்பத் திண்டு அல்லது ஐஸ் பைகளின் பயன்பாடு, வலியைக் குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும், வெப்பத் நிவாரணிகள் ஐஸ் ஒத்திடத்தை விட விரைவாகவும், திறம்படமாகவும் வேலை செய்வதாக பலரும் உணருகிறார்கள்

வெப்பத் திண்டு அல்லது ஐஸ் பைகளின் பயனளிக்க வில்லை என்றால் கால் வலி குறைக்க உதவும் ஸ்டெராய்சில்லா அழற்சி மருந்துகளை (NSAIDகள்) தேர்வு செய்யலாம். உடனடியாக வலி நிவாரணத்தை வழங்குவதற்காக மருத்துவர் இசிவகற்றி மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

கால் காயங்கள் ஏற்பட்டால், சேதமடைந்த பகுதியில் திடீரென இயக்கம் மற்றும் கஷ்டத்தை தவிர்க்க ஒரு தற்காலிகமான கால் வார்ப்பு அல்லது ஒரு ஊன்றுகோலை மருத்துவர் பரிந்துரைக்கலாம். வார்ப்புகள் நீக்கப்பட்ட பிறகு அதை சரிபடுத்த சில செயல்கள் பின் வருபவை. உதாரணமாக, கணுக்கால் சுளுக்குகள் ஏற்பட்டால், மீட்பு மூன்று கட்டங்களில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

கட்டம் 1 ஓய்வு எடுத்து, காயம அடைந்த கணுக்கால் வீக்கத்தை  குறைக்கவும்.

கட்டம் 2 கணுக்காலின் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் மீட்டெடுக்கவும்

கட்டம் 3 கணுக்கால் முழுமையாக குணமடைந்த பிறகு விளையாடுவது மற்றும் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளுக்குத் திரும்பவும்.

நரம்பு சம்பந்தமான பிரச்சனையிலிருந்து தோன்றும் கால் வலி, பிசியோதெரபி உடன் இணைந்து வலி நிவாரண மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிசியோதெரபி; வலி மற்றும் வீக்கம் குறைக்க உடற்பயிற்சி மற்றும் மசாஜ் நுட்பங்களை பயன்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், அறுவைசிகிச்சை மூலம் நிரந்தர நிவாரண பெறலாம்.

ஆழமான நரம்பு இரத்த உறைவினால் கால்களில் ஏற்படும்  இரத்த நாளங்களின் சிக்கல்கள் கால் வலியை ஏற்படுத்தலாம். இதற்க்கு சிகிச்சை- இரத்தத்தைத் மேலிதாக்கும் மருந்துகள் மற்றும் இரத்தத்தின் உறைவை கரைப்பதர்க்குறிய மருந்துகள். இந்த மருந்துகள் எதிர்காலத்தில் இவை வளர்வதையும் தடுக்க உதவும் . அழுத்த- காலுறைகள் வலி குறைக்க உதவும்.

Leg Pain

கால் வலியை குறைக்க, பல நிலைகள் உள்ளன. இருப்பினும் சுய அக்கறை குறிப்புகள் கால் வலியின் காரணத்தை பொருத்தது

கணுக்கால் சுளுக்கு அல்லது வேறு ஏதாவது தசை சிக்கல் காரணமாக கால் வலி வந்தால், முதலில் ஓய்வு எடுக்க வேண்டும். காலில் காயம் ஏற்பட்டால், சேதம் அடைந்த பகுதி மீது அழுத்தம் குடுக்காமல், அதை அசைக்காமல் வைக்கவும். சரியாக கவனிக்கவில்லை என்றால், அது மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஐஸ் பைகள் மற்றும் ஐஸ் அழுத்தங்களின் பயன்பாடு எழுர்ச்சி மற்றும் வீக்கத்தை  குறைக்கலாம். வலி நிவாரண மருந்துகளும் வழங்கலாம்

கால் காயங்களுக்கு, நிறைய ஓய்வு தேவைப்படுகிறது. இது தவிர, இயக்கம் பெற மற்றும் இறுக்கத்தை குறைக்க; மருத்துவர் பிசியோதெரபியை பரிந்துரைக்கலாம். காலில் காயத்தினால் இயல்பாக நடக்க முடியவில்லை என்றால், காயம் ஏற்பட்ட முதல் சில நாட்களில் ஊன்றுகோல் வழங்கப்படலாம்

முதுகெலும்பு நரம்பு அழுத்தம் காரணமாக வலி ஏற்படுகிறது என்றால் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மீக வேகமாக நிவாரணம் பெற, வெப்பமூட்டும் பட்டைகள் பயன் படுத்தி வீக்கத்தை குறைக்கலாம். தொடர்ந்து படுக்கையில் இருக்காமல் எளிதான சில உடற்பயிற்சி ச்சியாடிக்கா நிலைமையில் பரிந்துரைக்கபடுகிறது. வலி நிவாரண களிம்பை பயன்படுத்தினால் கால் வலி குறையும். வலி நிவாரணத்திற்காக ஐபூபுரோபன் போன்ற NSAID க்களை தேர்ந்தெடுக்கலாம்.

How to Know the Treatment of Obesity?

When is obesity treatment needed? உடல் பருமன் சிகிச்சையை எப்படி அறிவது?

How to know symptoms Erectile Dysfunction?

Erectile Dysfunction (ED) (விறைப்பு செயலிழப்பு அறிகுறிகள் என்ன)

How to know symptoms of bone cancer?

What is bone cancer? எலும்பு புற்று நோய் என்றால் என்ன?