How to know symptoms of Obesity?
How to know symptoms of Obesity?
Listen to this article

Obesity is (உடல்பருமன் என்ன )a neglected and underestimated medical condition affecting the global population. It tends to store more fat in the body and is commonly seen in children and adults.

உடல் பருமன் என்பது உலகளாவிய மக்களை பாதிக்கும் ஒரு புறக்கணிக்கப்பட்ட மற்றும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள மருத்துவ நிலை ஆகும். இது உடலில் அதிக கொழுப்பை சேமிக்கும் தன்மையுடையது மற்றும் இது பொதுவாக குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோரிடம் காணப்படுகிறது.

உடல் பருமன் கொண்டவர்களின் மக்கள்தொகையில், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என கருதப்படுகிறது. உடல் பருமன் என்பது ஒரு பொது சுகாதார நிலையாகும், அது தொடர்பான அபாய காரணிகள் இதய நோய்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்), கீல்வாதம் மற்றும் சிறுநீரக நோய்கள் ஆகியவை ஆகும்.

உடல் பருமனில் உள்ள நல்ல செய்தி என்பது, உடல் பருமனை தடுக்கக்கூடிய ஒரு நிலையாகும், மேலும் திறம்பட அதை மாற்றிக்கொள்ளலாம். வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவு மாற்றங்கள், உடற்பயிற்சிகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் நாள்பட்ட உடல்பருமனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் திருத்தியமைக்க முடிகிறது.

உடல்பருமன் என்ன

உடல் பருமன்: இந்த நிலை பற்றி நம் மனதில் வரும் முதல் விஷயம், கலோரிகளால் உருவாகிய மடிப்பு விழுந்த சதைகள் ஆதவது “கொழுப்பு நபர்” என்றும், அவரால் உடல்ரீதியான நடவடிக்கைகளை செய்ய இயலாது போன்றவையாகும். இது தான் நம்ம மனதில் தோன்றும் உடனடி எண்ணங்கள் இல்லையா? ஆமாம், உடல் பருமன் என்றாலே அதிக எடையைக் குறிப்பதாகும், ஆனால் இது ஒரு மருத்துவ நிலை என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் இருப்பதில்லை, இது உடலின் பல்வேறு பாகங்களில் அசாதாரண கொழுப்புகளை குவிப்பதால் உடல் எடையைகள் அதிகரித்து, மிகவும் எதிர்மறையான தாக்கத்தை உடலில் ஏற்படுத்துகிறது.

ஒரு நபருக்கு அதிக எடை அல்லது பருமனாக உள்ளதா என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பீர்கள்? இதற்கான பதில், உடல் எடை குறியீட்டு (பி எம் ஐ) ஆகும்.  பிஎம்ஐ என்பது உங்களின் உயரம் மற்றும் எடையிலிருந்து பெறப்படும் புள்ளிவிவர அளவீடு ஆகும். ஒரு நபரின் உடல் பருமனை கணக்கிட இந்த பிஎம்ஐ அளவீடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உடல் எடை குறைந்தது 20 சதவிகிதம் அதிகமாக இருக்கும் போது அந்த நபரை உடல் பருமன் உடையவர் என்று கருதப்படுகிறார். உங்கள் பிஎம்ஐ 25 மற்றும் 29.9 க்கு இடையே இருந்தால் நீங்கள் அதிக எடையுடன் இருப்பதாக கருதப்படுவீர்கள் மற்றும் உங்கள் பிஎம்ஐ 30 அல்லது அதற்கும் மேல் இருந்தால் நீங்கள் உடல் பருமன் உடையவர் என கருதப்படுவீர்கள்.

உங்கள் பிஎம்ஐ ஆனது 25 க்கு மேல் இருந்தால், எடை இழப்புத் திட்டங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் பிஎம்ஐ 30 க்கு மேல் இருந்தால், கண்டிப்பாக எடை குறைப்புக்கு ஒரு மருத்துவரின் ஆலோசனையை எடுத்துக்கொள்ளுவது அவசியமாகும்.

சர்க்கரை நோய், இரத்தக் குழாய் சார்ந்த இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், தூக்க தடைப்பாடு சீர்குலைவுகள், மூட்டுகளில் கீல்வாதம் போன்ற பல மருத்துவ நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது என்பதால் தான் உடல் பருமன் முக்கியமானது என கருத்தப்படுகிறது.

இது போன்ற நிலைமைகளை கையாள்வதின் முதல் படி உங்கள் உடல் பருமனே ஆகும். அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறையை கவனிப்பதன் மூலம் அல்லது மருத்துவர் மற்றும் ஒரு ஊட்டச்சத்து ஆலோசகரின் மூலம் இதை சரி செய்ய முடியும்.

ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் உங்களின் இடுப்பு சுற்றளவு மிகவும் முக்கியமனதாகும். இதனால் உங்களின் உடல்நலம் ஆபத்தில் இருந்தாலும் இருக்கலாம்: நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் உங்களின் இடுப்பு அளவீடு 94 சென்டிமீட்டர் (37 அங்குலம்) அல்லது அதற்கும் அதிகமாக மற்றும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்களின் இடுப்பு அளவீட்டு 80 சென்டிமீட்டர் (31.5 அங்குல) அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் ஆபத்து உள்ளவை ஆகும்.

பருமனாக இருப்பதால் நீங்கள் மிகவும் சங்கடமாக உணர்வீர்கள் மற்றும் உங்கள் தினசரி வாழ்க்கையில் தடைகள் ஏற்படலாம்.உங்களுக்கு சுவாசித்தில் மற்றும் நடப்பதில் அல்லது சுறுசுறுப்பாக வேலை செய்வதில் சிரமம் அடையலாம். உங்கள் உடல் வகைக்கு ஏற்ப வசதியான ஆடைகளை பெற கடினமாக இருக்கலாம்.

உடல் பருமன் உடையவர்கள் குறைந்த பட்ச வேலை செய்த பிறகு அதிகப்படியான வியர்வை ஏற்படலாம்.  நீங்கள் உடல் பருமனாக இருந்தால், இது போன்ற பாதிப்புகளை உணரந்து இருக்கலாம். இதனால் உங்கள் சுய மரியாதை மற்றும் நம்பிக்கைகள் குறையலாம். சிலர் உடல் பருமனை மிகவும் எதிர்மறையாக சுட்டிக்காட்டுவதினால், நீங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், குற்ற உணர்வுடனும், வெட்கப்பட்டு, மனச்சோர்வடைந்து கானப்படலாம்.

இந்த சமூக புலனுணர்வு அனைத்தையும் சமாளிப்பதற்காக, அடுத்த வரும் கட்டங்களில் அதன் காரணங்கள் மற்றும் தடுப்பு பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த நாங்கள் இங்கே இருக்கிறோம், இதனால் உங்கள் சூழ்நிலையிலிருந்து நீங்கள் மேலே வரவும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் நீங்கள் வாழலாம்.

  • உடல்பருமன் அறிகுறிகள் என்ன

உடல் பருமனின் மிகவும் பொதுவான அறிகுறிகள்:

பயங்கரமான உடல் எடை அதிகரிப்பு.

அதிக எடை காரணமாக கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் மற்றும்  மன அழுத்தம்.

தினசரி நடவடிக்கைகளைச் செய்யும் போது சுவாச பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல்.

அதிக உடல் எடை காரணமாக மூட்டு வலிகள்.

அதிக அளவில் கொழுப்பு ஏற்படல்.

கட்டுப்பாடற்ற பசி வேதனைகள்

தீவிர சோம்பல்

Obesity

உடல் பருமன் என்பது மருத்துவ ரீதியான அவசர நிலை கிடையாது. ஆனால் சில காரணிகள் மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து, நீங்கள் எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு தேர்வு செய்யவும். பெரும்பாலான மக்கள் உளவியல் மற்றும் சமூக காரணங்களால் மருத்துவரிடம் செல்வதை புறக்கணிக்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், இந்த நோயை மேலும் முன்னேற்றுவதற்கு அவர்களே உதவி செய்கின்றனர்.

உடல் எடை காரணத்தினால், படி ஏறும்போது, நடைபயிற்சி, ஓடுதல், அன்றாட வேலை செய்ய இயலாமை போன்ற தினசரி வாழ்க்கையில் உடல் ரீதியான சிரமங்களை எதிர்கொண்டால் ஒரு ஆரோக்கியமான பயிற்சியாளரை உடனடியாக சந்தித்து உங்கள் உடல் பருமன் பற்றி பேச வேண்டும்.

நீங்கள் பின்வரும் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவும்:

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச குறைபாடுகள்

உணவு உட்கொண்ட பிறகு தூங்குவதை குறைக்கவும்

இதயத்தில் படபடப்புடன் சேர்ந்த வலி ஏற்படல்

அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவுகள் அல்லது நீரிழிவு

மன சோர்வு மற்றும் அதிக அளவிலான மன அழுத்தம்

இரைப்பை, கல்லீரல் மற்றும் பித்தப்பைகளில் பிரச்சினைகள்

அதிக கொழுப்புச்ச்த்து

முழங்கால் மற்றும் பின் முதுகில் வலி

தகுதியற்ற போல் ஒரு உணர்வு மற்றும் தனித்து இருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் ஏற்படல்.

Read More:

Useful tips for hair growth

முடி வளர்ச்சிக்கு பயனுள்ள குறிப்புகள்

Do you get headaches often?

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா?

Diets for Patients with Kidney Stones

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு பொதுவான உணவுத் தொகுப்புகள்!