Fatty liver {கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன? } is a disease caused by excessive accumulation of fat in the liver. These are of two types, alcoholic liver disease caused by excessive alcohol consumption and fatty liver disease.
கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிற ஒரு நோய். இவை இரண்டு வகைப்படும், அளவுக்கு அதிகமாக மதுஅருந்துவதன் மூலம் ஏற்படும் அல்ககாலிக் பேட்டீ லிவர் நோய் மற்றும் கல்லிரலில் கொழுப்பு படிவம் மேலும் படிவதனால் ஏற்படும் “நான் அல்ககாலிக் பேட்டீ லிவர்” (மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல்) நோய் (NAFLD). NAFLD இன் சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், இது இன்சுலின் எதிர்ப்பு தன்மை மற்றும் வளர்சிதை மாற்ற குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
பொதுவாக உலகின் மேலை நாடுகளில் மக்கள் NAFLD- யால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்க்கு கல்லீரல் அளவில் பெரிதாவதை தவிர மற்ற எந்த அறிகுறியும் இல்லாமலே நீண்ட காலமாக இருக்கலாம் அல்லது திடீரென உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படக்கூடிய மற்றும் முழுமையாக கல்லீரல் செயலிழப்பு ஏற்படம் அளவு தீவிர அறிகுறிகளுடனும் வெளிப்படலாம்.
தற்போது, இந்நோய்க்கான சிகிச்சை எடை குறைப்பு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் கல்லீரல் சுகாதார பராமரிப்பை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நோய்க்குபல நம்பிக்கைக்குரிய மருந்துகள் இருப்பினும் எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. மிகவும் தீவிரமான நிலைமைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
கொழுப்பு கல்லீரல் என்ன
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்கள் அதிகமாவதால் “மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல் (NAFLD) நோய்” பொதுவான ஒரு நோயாக உருவாங்கியுள்ளது. இந்த நோயால் இந்திய மக்கட்தொகையில் 9 முதல் 32 சதவிகிதம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்கள் அதிகமாக உள்ளது. முதிர்ந்த வயதினரிடையே இந்த நோய் மிகவும் பொதுவானது.
இந்திய மக்கள் தொகையில் ஒரு ஆய்வில், 61.8% நோயாளிகள் மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல் (NAFLD) நோயால் 61 முதல் 70 வயதினரே பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எடை குறைப்பு, உடல் செயல்பாடு அதிகரிப்பு மற்றும் உணவு மாற்றங்கள் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்ற கட்டுப்பட்டு முறைகள் வழக்கமாக பரிந்துரைக்கப்படுவதால், NAFLD-யை கையாள்வது தனித்துவமான ஒன்று.
இதற்க்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்று எதுவும் இல்லை. உடல் செயல்பாடுகளில் குறைந்தபட்ச அதிகரிப்பு கூட இந்த நோயை குணப்படுத்த சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஏரோபிக் செயல்பாடு மற்றும் எதிர்ப்பு பயிற்சி அல்லது பல பயிற்சி கூட பயனுள்ளதாக இருக்கும்.
- கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன?
கல்லீரல் மிகப்பெரிய உள் உறுப்புகளில் ஒன்றாகும். இது உணவுகளை ஜீரணிக்க உதவுகிறது, நச்சுத்தன்மையை நீக்குகிறது, உடலில் உள்ள விஷங்களை நீக்கவும் மேலும் நமது உடலில் ஆற்றலை சேமிக்கவும் உதவுகிறது. கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பது கல்லீரல் கொழுப்பு நோய் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது.
நம் கல்லீரலில் இயற்கையாகவே சிறிது கொழுப்பு உள்ளது மற்றும் அந்த கொழுப்பு உடலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. எனினும், கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதால், கல்லீரல் வீக்கம் ஏற்படலாம். இந்த நிலை கல்லீரல் கொழுப்பு நோய் என அழைக்கப்படுகிறது.
- கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள் என்ன
கொழுப்பு கல்லீரல் நோய் பொதுவாக ஒரு அமைதியான நோய் மற்றும் எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. பொதுவாக சோர்வு மற்றும் அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் ஒரு சிறிய அசௌகரியம் இந்த நோய் கொண்டவர்களுக்கு இருக்கலாம். பொதுவாக பெரும்பாலான இந்த நோய்யுடைய மக்கள் எந்த ஒரு மருத்துவ அறிகுறிகளை குறிக்கும் அறிகுறிகளை கவனத்தில் கொண்டு இருப்பதில்லை.
கல்லீரலில் வீக்கம், அழற்சி மற்றும் கல்லீரல் சேதம் போன்றவற்றிற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கும் போது மட்டுமே, கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள் வெளி காட்ட ஆரம்பிக்கிறது. இந்த நோய் அறிகுறிகள் வடுக்களுடன் கூடிய கல்லீரல் சேதம் (சிர்ஹோசிஸ்) போன்ற மஞ்சள் காமாலையின் அறிகுறிகளைக் போலவே இருக்கலாம். தோலும், கண்களின் வெள்ளை நிறமும் மஞ்சள் நிறமாக மாறுவது இந்த நோய் இருப்பதை குறிக்கும். கல்லீரல் சேதத்தின் மற்றொரு அறிகுறியாக நீர்கோர்த்தல் மற்றும் வீக்கம் உள்ளது, இது உடலின் திசுக்களில் அசாதாரண திரவங்களின் குவியலாகும்.
உங்கள் மருத்துவர் ஒரு உடல் பரிசோதனையின் போது கல்லீரல் விறைப்பை கவனிக்க முடியம். இந்த கல்லீரல் விறைப்பு, ஃபைப்ரோஸிஸ் அல்லது கல்லீரலில் வடுக்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்பு கொண்ட ஒரு நபர் சிராய்ப்பு புண் மற்றும் அதிக மன குழப்பம் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
கொழுப்பு கல்லீரல் சிகிச்சை
கொழுப்பு கல்லீரல் நோயின் வகையை பொறுத்து, சிகிச்சைகள் பின்வருமாறு:
நான் அல்ககாலிக் பேட்டீ லிவர் (மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல்) நோய்
NASH-நான் ஆல்கஹாலிக் ஸ்டீடாஹிபேடிடிஸ் அல்லது NAFLD- நான் அல்ககாலிக் பேட்டீ லிவர் (மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல்) நோய்க்கான நிலையான மருந்துகள் இல்லை.
• இந்த நிலையில் நோயாளிகளுக்கு எடை குறைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. எடை குறைப்பு கல்லீரலில் கொழுப்பு சேர்வதை, வீக்கம் மற்றும் ஃபைப்ரோசிஸ் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
• உடல் செயல்பாட்டினை அதிகரிப்பது கல்லீரலில் கொழுப்பு உட்பட, உடலின் மொத்த கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. செயல்பாட்டு அளவு பரிந்துரைக்கப்பட்ட மட்டத்திற்கு கீழே இருந்தாலும் கூட, சுறுசுறுப்பாக இருப்பது என்பது NALFD மீது ஒரு பயனுள்ள விளைவைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
• நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை டாக்டர்கள் மதிப்பீடு செய்யலாம், சில மருந்துகளை மாற்றவோ அல்லது நிறுத்தவோ கூறலாம். உங்கள் மருத்துவரின் அனுமதியின்றி நீங்களே எந்தவொரு மருந்துகளையும் எடுத்துக் கொள்வதை நிறுத்தாதீர்கள், ஏனெனில் அது மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கு அது ஆபத்தானது.

• சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது, ஆனால் நீரிழிவு மற்றும் வைட்டமின் மருந்துகள் இந்நோய்க்கு (NAFLD) சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்துவது இந்த நோய்க்கு நிவாரணம் அளிக்க உதவும் என்பதற்கு அதிகமான சான்றுகள் உள்ளன. எவ்வாறாயினும், எந்தவொரு முடிக்கு வருவதற்கு முன்பும் மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
ஆல்கஹால் (மது அருந்தாவதினால்) மூலம் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு நோய்
• முழுமையாக குடிப்பழக்கத்தை நிறுத்துவது என்பது மது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிக முக்கியமான பாகமாகும். குடிப்பழக்கத்தை நிறுத்துவதில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, மது பழக்க ஒழிப்பு சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
• மது பழக்க ஒழிப்பு மருந்துகள், மது குடிக்கும் எண்ணத்தை குறைப்பதற்கும் அல்லது மது குடித்தால் உடம்பு சரியில்லாமல் போவது போன்ற எண்ணங்களை ஏற்படுத்துவதன் மூலம் மது அருந்துவதை நிறுத்தவும் உதவும்.
வாழ்க்கைமுறை மேலாண்மை
நீங்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டால், மேலும் திறம்பட அதை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டியது வரும். அவை பின்வருமாறு:
• உங்கள் உணவில் புதிதான பழங்கள் மற்றும் காய்கறிகளை நான்கில் மூன்று பங்கு அடங்குமாறு சேர்த்துக்கொள்ளவும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்வதைத் தடுக்கவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பதிலாக முழு தானிய உணவுகளை தேர்வு செய்யவும்.
• நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வதற்கு பதில், மொனொஸெசுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஸெசுரேட்டட் கொழுப்புகள் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை கொண்ட உணவுகளை உட்கொள்வது NAFLD உடன் தொடர்புடைய இருதய நோய்கள் heart diseases வரக்கூடிய வாய்ப்புகளை குறைக்க உதவும்.
• உங்கள் எடையைச் சரிபார்த்து, கல்லீரலில் திரட்டப்பட்ட கொழுப்பைக் குறைப்பதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
• வைட்டமின்கள், அல்லது மாற்று மூலிகை மருந்துகள் போன்ற உணவுப் பொருள்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசவும், அவருடைய ஆலோசனை படி மருந்துகள் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். சில மூலிகை மருந்துகள் உங்கள் கல்லீரலுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.
• கல்லீரல் சேதம் கொண்டவர்கள் குறிப்பன சில நோய்த்தொற்றுக்கள் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெபடைடிஸ் A hepatitis A மற்றும் B, காய்ச்சல் flu, மற்றும் நியூமோகோகால் நோய்களுக்கான தடுப்பூசியை பெற வேண்டியது அவசியம். கல்லீரலில் கொழுப்பு உள்ள நபர்களுக்கு ஹெபடைடிஸ் மிகவும் ஆபத்தானது மேலும் அது கல்லீரல் செயலிழப்புக்கு liver failure வழிவகுக்கும்.
Read More:
How to know symptoms of facial swelling?
What is facial swelling? முக வீக்கம் என்றால் என்ன?
How to know symptoms bone fracture?
What is a bone fracture? எலும்பு முறிவு என்றால் என்ன?
How to know symptoms of Hepatitis disease
What is Hepatitis C? கல்லீரல் அழற்சி வகை சி (ஹெபாடைடிஸ் சி) என்றால் என்ன?