How to know Irritable Bowel Syndrome?

How to know Irritable Bowel Syndrome?
How to know Irritable Bowel Syndrome?
Spread the love
Listen to this article

A Bowel syndrome (syndrome) எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்ன? is a collection of interrelated clinical symptoms and is often associated with a specific disease or disorder. Irritable Bowel Syndrome (IBS) is a colon disorder that causes changes in normal bowel function.

ஒரு நோய்அறிகுறி(சின்ரோம்) என்பது ஒன்றோடொன்று தொடர்புடைய மருத்துவ அறிகுறிகளின் தொகுப்பு மற்றும் அது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது ஏதேனுமொரு கோளாறுடன் தொடர்புடையது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS -இர்ரிடபில் பௌவல் சின்ரோம்) என்பது சாதாரண மலக் குடல் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு பெருங்குடல் குறைபாடு ஆகும்.

இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் சில வல்லுநர்கள் இதற்கு உடல் ரீதியான காரணங்களை விட முக்கியமாக இருப்பது மன ரீதியான காரணங்களே என நம்புகிறார்கள். இரத்த பரிசோதனை அல்லது இமேஜிங் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியாத காரணமில்லா வயிற்று வலியுடன் மலச்சிக்கல் முதல் வயிற்றுப்போக்கு வரை இதன் அறிகுறிகள் வேறுபடுகின்றன.

நோயாளிகள் பல்வேறு அறிகுறிகளையும் அவற்றின் சிகிச்சை பலனையும் வெவ்வேறு விதமாக விவரிப்பதால், சிகிச்சை முறைகள் அறிகுறிகளைப் பொறுத்தும் அதனால் கிடைக்கும் நிவாரணங்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்ன

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி அல்லது IBS என்பது ஒரு நாள்பட்ட (நீண்ட கால) நோய் ஆகும், இது செரிமானப் பாதை (இரைப்பை) குறிப்பாக பெருங்குடல் பகுதி செயல்பாட்டை பாதிக்கிறது. இரைப்பை குடல் பாதை என்பது உணவு கடந்து செல்லும் முழு பாதை(வாய், உணவு குழாய், வயிறு, சிறு குடல், மற்றும் பெருங்குடல்) மற்றும் செரிமான நொதிகளை பிரிக்கக்கூடிய கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் போன்ற தொடர்புடைய உறுப்புகளை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல். IBS பெருங்குடலின் மலம் கழிக்கும்  செயல்பாடுடன் தொடர்புடையது. இதில் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் (மலத்தை வெளி தள்ளுவதில்  சிரமம்) அல்லது இரண்டும் இருக்கலாம். இது வீக்கம்(வாயுவால் வயிறு நிரம்பியவாறு உணர்வது) மற்றும் வயிற்று வலிக்கு தொடர்புடையது.

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி அறிகுறிகள் என்ன

IBS இன் பொதுவான அறிகுறியானது வயிற்று வலி ஆகும். வயிற்று வலி, அடி வயிற்றில் வயிற்றுப் பிடிப்பு(கிரம்ப்ஸ்) போல இருக்கும். இந்த வலி வழக்கமாக மலம் கழிப்பதன் மூலம் குறைகிறது. அடிவயிற்று வீக்கம் (அதிகமான வயிற்றில் வாயு உற்பத்தி காரணமாக வயிறு முழுமையாக உணரப்படுகிறது) நாள் முழுவதும் மோசமாகிறது, ஆனால் இதற்கான காரணம் தெரியவில்லை(மேலும் படிக்கவும் – வீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் வீட்டு வைத்தியம்).

 IBS-C உடையவர்கள் வயிற்று வலியுடன் கூடிய கடினமான உருண்டை(சிறிய கூழாங்கல்-வடிவ மலம் – பெரும்பாலும் கடினமாக இருக்கும்) போல மலம் கழிக்கின்றனர். மலம் கழிக்க கடினமாக முக்க வேண்டியிருக்கும். IBS-D உடையவர்கள் நீராக சிறிய அளவில் மலம் கழிக்கின்றனர். முழுமையாக மலம் கலழிக்காதது போலவே எப்போதும் உணர்வு இருக்கும். மலத்துடன் சளி வெளியேறுவது பொதுவானது ஆனால் இரத்தப்போக்குடன் இருக்காது. எடை இழப்பு எதுவும் இருப்பதில்லை. போஸ்ட் டைவர்டிகுலிடிஸ் IBS முக்கியமாக இடது பக்க வயிற்று வலியை காய்ச்சளுடன் ஏற்படுத்துகிறது. IBS-M உடைய நோயாளிகள் IBS-C மற்றும் IBS-D ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் கொண்டிருப்பத்தாக கூறுகின்றனர்.(மேலும் படிக்கவும் – வயிற்று வலியின்  காரணங்கள் மற்றும் சிகிச்சை)

எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி சிகிச்சை

நோயாளியிடம் உறுதியாக அறிகுறிகளுக்கான விளக்கம் கேட்டறியப்பட வேண்டும். IBS க்கான சிகிச்சை நோயாளியின் IBS வகையினை பொறுத்தது:

வலி

வலியைத் தானாகவே சரியாகவில்லை என்றால், ஆன்டிகோலினெர்ஜிக்(டைசைக்ளோமைன் 10 மி.கி.) மருந்து குறிப்பிட்ட நாட்களுக்கும் அல்லது ஒரு ஆன்டிஸ்பாஸ்மோடிக் (மெபிவெரைன் 135 மி.கி.) மருந்தை ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கப்படலாம்.

IBS-D

உணவில் அதிக நார்ச்சத்து, தோளுடன் பழங்கள், காய்கறிகள், மெத்தில்செல்லூலோஸ் அல்லது ஈசாப்கோல் உமி போன்ற மலமிளக்கிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் லோப்பிரமைடு போன்ற மருந்துகள் (ஒரு நாளைக்கு 2-4 மில்லி, 4 முறை) அல்லது கொலஸ்டிரமமைன் (1 சிறு பாக்கெட் தினசரி) அல்லது கோடெய்ன் பாஸ்பேட் (30-90 மில்லி தினம்) போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அமிட்ரிபீலினை (10-25 மி.கி.) போன்ற மனநோய்க்குரிய மருந்துகள் இரவில் ஒருமுறை தீவிர நிகழ்வுகளில் பரிந்துரைக்கப்படலாம்.

IBS-C

மலத்தை இலக்குவதற்கு தண்ணீர் ஏராளமாக குடித்து, ஓட்ஸ், பருப்பு, கேரட், உரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள பொருட்களால் அறிகுறிகள் குறையவில்லை என்றால் சிகிச்சை திட்டத்தில் மக்னீசியாவின் பால் சேர்க்கப்படலாம்

IBS –க்கு பிந்தைய தொற்று

IBS –க்கு பிந்தைய தொற்றுக்கு துல்லியமான ஆண்டிபயாடிக் மருந்துகள் தொற்றினை குணப்படுத்துவதோடு அறிகுறிகளையும் அழிக்க வேண்டும்.

IBS-ல் மன அழுத்த தடுப்பான்கள்

முற்சுழற்ச்சி(ட்ரைசைக்ளிடிக்) மன அழுத்த குறைப்பு சிகிச்சை எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி  நோயாளிகளின் நிலைமையிலிருந்து மீண்டு வர உதவுகிறது. வலி, வயிற்றுப்போக்கு, மற்றும் மலச்சிக்கல் போன்ற முக்கிய அறிகுறிகள் நன்கு இந்த சிகிச்சையால் குறைகின்றது.

Bowel Syndrome

IBS-முழுமையாக குணப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கைகளும் மருந்துகளும் இல்லை. இருப்பினும், தினசரி உணவிலும், வாழ்க்கை முறையிலும் முறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிகுறிகளை தவிர்க்கலாம்.

சிறந்த தரமான பொருட்கள் உபயோகப்படுத்தி வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் உண்பது மேலும் எந்த உணவுகள் உண்ணும்போது அறிகுறிகள் குறைகிறது மற்றும் எந்த உணவுகள் உண்ணும்போது அறிகுறிகள் அதிகமாகிறது என்பதை டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுதல் ஒரு சீரான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவும்.

தினசரி உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த அறிகுறிகளை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சினைக்கு  போதுமான தண்ணீர் குடித்தல், வயிற்றுப் பிரச்சினைக்கு  நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுதல், மற்றும் ஆரோக்கியமான புரோபயாடிக் பானங்கள் குடிப்பதால் குடலில் நல்ல பாக்டீரியா அதிகரிக்கிறது மேலும் சிறந்த செரிமான தன்மையை பெற உதவும்.

IBS உடையவர்கள் உணவு உண்ணாமல் தவிர்க்கக் கூடாது, சிறிய அளவில் உணவு உண்ண வேண்டும். சிப்ஸ் மற்றும் பிஸ்கட் போன்ற கொழுப்பு மற்றும் பேக்கெட் உணவுகளைத் தவிர்க்கவும். புகை பிடித்தல், ஆல்கஹால் மற்றும் காஃபின் (டீ, காபி ஆகியவறை) ஆகியவற்றை தவிர்க்கவும்.

மன அழுத்தம் இந்த நோயின் அறிகுறிகளை மோசமாக்குகிறது. எனவே விளையாட்டுத்தனமான நடவடிக்கைகள் மூலம் அழுத்தத்தை குறைத்தல் மற்றும் தியானம் போன்ற மன அமைதி தரும் நடவடிக்கைகள் ஆகிய செயல்கள் அவசியமாகிறது.

Read More:

How to know symptoms of facial swelling?

What is facial swelling? முக வீக்கம் என்றால் என்ன?

How to know symptoms bone fracture?

What is a bone fracture? எலும்பு முறிவு என்றால் என்ன?

How to know symptoms of Hepatitis disease

What is Hepatitis C? கல்லீரல் அழற்சி வகை சி (ஹெபாடைடிஸ் சி) என்றால் என்ன?

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *