What is Asperger Syndrome? ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் (மனித நரம்பில் ஏற்படும் செயற்பாட்டு குறைவு நோய்) என்றால் என்ன? Asperger’s syndrome is a developmental disorder characterized by problems with language and communication skills as well as repetitive, stereotyped and restricted thoughts and behavior.
- ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் (மனித நரம்பில் ஏற்படும் செயற்பாட்டு குறைவு நோய்) என்றால் என்ன?
ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என்பது மொழி மற்றும் தொடர்பு கொள்ளும் திறனில் சிக்கல்கள் ஏற்படுவதுடன் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணங்களையும் நடத்தையையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சி குறைபாடாகும். இது ஒரு குறைவான நோய்த்தாக்கம் உள்ள ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் ஆகும் மற்றும் நரம்பியல் எதிர்மறைச் செயல்பாட்டின் குணாதிசயத்தை கொண்ட இது வழக்கமாக ஒரு பள்ளி-செல்லும் குழந்தையிடம் காணப்படுகிறது.
ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமின் முக்கிய அறிகுறிகள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன?
மற்ற அனைத்தையும் தவிர்த்துவிட்டு ஒரே பொருளிலோ அல்லது விஷயத்திலோ தீவிரமான ஆர்வம் காட்டுவது ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமின் ஒரு வழக்கமான அறிகுறியாகும்.
- மற்ற பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் சிரமங்கள்.
நல்ல தொடர்பு கொள்ளும் திறனிருந்தும் தொடர்பு கொள்வதில் சிக்கல்.
முறையில்லாத சமூக மற்றும் உணர்வு ரீதியான நடத்தை.
மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளுக்கு வலியுறுத்துதல்.
மோசமான இயக்க ஒருங்கிணைப்பு (உடலின் பாகங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் சிக்கல்).
- ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமின் முக்கிய காரணங்கள் என்ன?
மரபணு, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட உடன்பிறப்புகளை கொண்ட குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்த குறைபாடு இருக்கக்கூடும்.
சில மருந்துகளின் பயன்பாட்டுடன் ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, உதாரணத்திற்கு வால்புரோயிக் அமிலம் மற்றும் தாலிடோமைடு போன்ற மருந்துகளை பிரசவத்தின் போது எடுத்துக்கொள்வது.
தாமதமான பிரசவம் குழந்தைக்கு ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
(மேலும் படிக்கவும்: டவுன் சிண்ட்ரோம் ஏற்படுவதின் கரணங்கள்)
- ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
இதை கண்டறிதல் என்பது பேச்சு சிகிச்சையாளர் மற்றும் மனோதத்துவ நிபுணர் கொண்ட ஒரு குழுவுடன் ஒன்றாக சேர்ந்து குழந்தைகள் நல மருத்துவரால் குழந்தையின் திறமை மற்றும் திறன்களை மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது.
இதில் சமூக மற்றும் உணர்வுரீதியான திறன்கள்,தொடர்பு கொள்ளும் திறன்கள்,கற்கும் திறன்கள்,இயக்கத்திறன்கள் மற்றும் பிரத்யேக ஆர்வங்கள் பற்றிய கேள்விகள் அடங்கியிருக்கும்.

ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமால் பாதித்த குழந்தைகளை வித்தியாசப்படுத்தி காட்டுவது என்னவென்றால் அவர்கள் தங்கள் மொழித்திறன்களை தக்க வைத்துக்கொள்வதோடு மற்ற ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அவர்களின் நுண்ணறிவு ஈவு சராசரியாக அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது.
இந்த நோய்க்கேற்றவாறு அதன் சிகிச்சையும் ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமின் மைய அறிகுறிகளை கவனத்தில் கொண்டு செயல்படுவதை வலியுறுத்துகிறது. அவை கீழ்கண்டவாறு
பேச்சு பயிற்சியுடன் கூடிய தொடர்பு திறன்கள்.
தொழில்சார் பயிற்சியுடன் இயக்க ஒருங்கிணைப்பு.
தீவிரமான, ஒரே விதமான நடைமுறைகளில் கவனம் செலுத்துதல்.
சமூக திறன்களின் பயிற்சி, அறிவாற்றலுள்ள நடத்தை பயிற்சி மற்றும் பதட்டம் மற்றும் கவனம் ஈர்ப்பது தொடர்பான பிரச்னைகளுக்கான மருந்துகள் ஆகியவை அடங்கிய பயனுள்ள சிகிச்சை.
ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோமை முழுமையாக குணப்படுத்த முடியாது, ஆனால் ஆதரவு, புரிந்துகொள்ளுதல் மற்றும் பயிற்சி போன்றவை வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் நீண்ட கால பயனை அளிக்கும்.
(மேலும் படிக்கவும்: ஏடிஹெச்டி சிகிச்சை)
Read More:
What are the benefits of papaya?
பப்பாளிப் பழத்தால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன?
Body Health important tips
உடல் ஆரோக்கிய குறிப்புகள்: தினமும் காலையிலும் மாலையிலும்!
What to do dark circles around the eyes?
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?