What are the symptoms of bone cancer?
What are the symptoms of bone cancer?
Listen to this article

What is bone cancer? எலும்பு புற்று நோய் என்றால் என்ன? Bone cancer is a common type of cancer. It is noted that it is caused by abnormal growth in the bones.

  • எலும்பு புற்று நோய் என்றால் என்ன?

எலும்பு புற்று நோய் என்பது ஓர் அறிய வகை புற்று நோய். அது எலும்புகளில் அசாதாரணமான வளர்ச்சியால் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு புற்று நோய் எப்படி ஏற்படுகின்றது என்றால் எலும்பில் உள்ள சாதாரண செல்கள் புற்று நோய் செல்களாகவோ அல்லது கொடிய செல்களாகவோ மாறும்போது அல்லது உடலின் பிற பகுதிகளான நுரையீரல், மார்பகம் அல்லது புரோஸ்டேட் சுரப்பி போன்ற புற்று நோய் பாதித்த பகுதிகளில் இருந்து புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு பரவும்போது உண்டாகிறது. எலும்பு புற்று நோய் முக்கியமாக குழந்தைகளையும் இளம் பருவத்தினரையும் பாதிக்கின்றது, இது உலகில் 0.2% புற்று நோய்க்கு காரணமாகும்.

  • நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

எலும்புகளில் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுவது ஒரு சாதாரணமான அறிகுறி. ஒவ்வொரு நபருக்கும் ஏற்படும் அறிகுறிகள், பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் புற்று நோய் கட்டியின் அளவை பொறுத்து ஏற்படும். மற்ற அறிகுறிகள்:

எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம்.

உடல் இயக்கத்தில் சிரமம்.

எலும்பு முறிவு ஏற்படுதல்.

பல முறிவுகள்.

பலவீனமான எலும்புகள்.

மற்ற அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்:

விளக்க முடியாத எடை இழப்பு.

காய்ச்சல்.

வியர்வை வடிதல்.

சோர்வு.

குறைந்த அளவு செந்நிற இரத்த அணு (இரத்தச் சோகை).

  • நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதன் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. எலும்பு புற்றுநோயை உண்டாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய சில ஆபத்து காரணிகள்:

ரெட்டினோபிளாஸ்டோமா (கண் புற்றுநோய்), கொண்ட்ரோசர்கோமாஸ் (குருத்தெலும்புகளின் புற்றுநோய்) மற்றும் கார்டோமாஸ் (புற்றுநோய் அல்லாத குருத்தெலும்பு கட்டி) போன்ற பரம்பரை வியாதிகள்.

கதிர்வீச்சு சிகிச்சையின் வெளிப்பாடுக்கு உண்டாகுதல்.

கீமோதெரபி.

பாகட் நோய் போன்ற புற்றுநோய் அல்லாத புற்றுநோய் கட்டிகளின் வரலாறு.

எலும்புகளில் ஏற்படும் காயம்.

எலும்பு மஜ்ஜை மாற்றுதல்.

எலும்பு மாற்றுகள்.

bone cancer
  • இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உடல் பரிசோதனை மற்றும் முழு குடும்ப மற்றும் தனிப்பட்ட மருத்துவ வரலாறு அறிந்தபின், மருத்துவர் பின்வரும் சோதனைகளில் ஒன்றை அல்லது அனைத்து சோதனைகளையும் மேற்கொள்வார்.

இரத்தத்தில் அளவுக்கு மீறிய அல்கலைன் பாஸ்பேட்ஸ் போன்ற நொதிகளை எலும்பு உற்பத்தி செய்கின்றதா என்று கண்டறிய இரத்த மருத்துவர் பரிசோதனை செய்வார். எனினும் இது எலும்பு புற்று நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தாது.

எக்ஸ்ரே,எலும்பு ஸ்கேன், எம்.ஆர்.மற்றும் சி.டி ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் புற்று நோய் எங்கிருக்கிறது மற்றும் அதன் அளவை தெரிந்துக்கொள்ள மேற்கொள்ளப்படுகிறது.

பயாப்ஸி – இதில் எலும்புகளில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு எதாவது பாதிப்பு உள்ளதா என்று ஆராயப்படுகிறது.

புற்று நோய் உடம்பில் உள்ள மற்ற பாகங்களுக்கு பரவி உள்ளதா என்பதை கண்டறிய பி.இ.டி ஸ்கேன் செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை எலும்பு புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சையாக இருக்கிறது. மற்ற சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை நோயாளியின் நிலைமையை பொறுத்து வழங்கப்படும்.

Read more:

what are Postpartum Diet?

பிரசவத்துக்குப் பின் உள்ள பத்தியம் உணவுமுறை: பிள்ளையை பெற்றெடுத்த பின் என்ன என்ன சாப்பிட வேண்டும்?

Postnatal diet after normal delivery!

சாதாரண பிரசவத்திற்குப் பின் உணவு!

Postnatal diet after caesarian delivery!

சிசேரியன் பிரசவத்திற்குப் பின் பிரசவ உணவு!