What are the symptoms of Colorectal Cancer
What are the symptoms of Colorectal Cancer
Listen to this article

What is Colorectal cancer? பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? Colorectal cancer affects parts of the colon, the colon or rectum, or both, and begins by forming a lump on the inner edge of the colon or rectum.

  • பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?

பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலின் பகுதிகள், முன்பெருங்குடல் அல்லது மலக்குடல் அல்லது இரண்டுக்குமே பாதிப்பினை ஏற்படுத்துகின்றது, மேலும் இது முன்பெருங்குடல் அல்லது மலக்குடலின் உட்புற விளிம்பில் ஒரு புடைப்பினை உருவாக்க துவங்குகிறது. முன்பெருங்குடல் மலத்தில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சிகிறது மற்றும் மலக்குடல் மலம் கழிக்கும் வரை அதனை தேக்கி வைத்துக்கொள்கிறது.

உணவு பழக்கம் மற்றும் குறைந்த உடல் பருமன் விகிதங்களின் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த விகிதத்திலேயேக் காணப்படுகிறது, ஆனால் உயிர் பிழைப்பதற்கான விகிதம் ஐந்து ஆண்டுகளும் மிக குறைவாகவே உள்ளது.

  • இதில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

மலங்கழிக்கும் பழக்கத்தில் மாறுதல்கள் அதாவது வயிற்றுப்போக்கு அல்லது நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்க கூடிய மலச்சிக்கல்.

சரியாக மலம் கழிக்காததை போன்ற உணர்வு.

குறுகிய-அளவிலான மலம்.

பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும் இரத்தக்கசிவின் காரணமாக இருண்ட- நிறத்தில் மலம் கழித்தல்.

வயிற்று வலி.

பலவீனம்.

எதிர்பாராவிதமான எடை இழப்பு.

பொதுவாக, அறிகுறிகள் நோயின் பிற்பகுதியிலேயே தோன்றத் துவங்குகிறது மேலும் இது ஒவ்வொருவரின்  உடல்வாகினை பொறுத்தும் அதேப் போல நிலைமையின் தீவிரத்தை பொறுத்தும் வேறுபடுகின்றது.

இந்த அறிகுறிகள் குரோன்’ஸ் நோய், பெருங்குடல் அழற்சி/புண், மூல நோய் மற்றும் நோய்த்தொற்று போன்ற நிலைகளிலும் காணப்படுகின்றன.

  • நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பெருங்குடல் புற்றுநோய் வளர்வதற்கான ஆபத்து பின்வரும் கரணங்களினால் அதிகமாக இருக்கலாம்:

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்.

பெருங்குடல் புற்றுநோயானது குடும்பத்தில் ஒரு தனிநபருக்கு இருக்கும் போது.

உடல் பருமனான மக்கள்.

சிகரெட் புகைப்பவர்கள்.

மது அருந்துபவர்கள்.

சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்பவர்கள்.

நார் சத்து குறைந்த உணவு பழக்கத்தை மேற்கொள்பவர்கள்.

உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையை கொண்டவர்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் நோய்த்தடுப்பு மருந்துகளை உட்கொண்ட மக்கள்.

இன்சுலின் எதிர்ப்பு கொண்ட நீரிழிவு நோய் மற்றும் ஹெச்.ஐ.வி தொற்று போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

கதிர்வீச்சு சிகிச்சையை முன்னரே எடுத்துக் கொண்ட ஒருவர், எ.கா., ப்ராஸ்டேட் புற்றுநோய்.

பித்தப்பை நீக்கம் செய்த வரலாற்றை கொண்டவர்கள்.

இரத்தக் குழாய் சார்ந்த இதய நோய் வரலாற்றை கொண்ட நபர்கள்.

இந்த ஆபத்து விளைவிக்கும் காரணிகள் இருந்தாலே உங்களுக்கு புற்றுநோய் உருவாகிவிடும் என்பது இல்லை; இருப்பினும், இத்தகைய ஆபத்து காரணிகள், நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்க செய்கின்றன.

  • இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

இரத்தம் கலந்த மலம் அல்லது மலக்குடலில் இரத்தக்கசிவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் ஏனெனில், இது பொதுவான நிகழ்வு இல்லை.

மலக்குடலில் ஏதாவது கட்டியோ அல்லது குறைபாடுகளோ இருப்பதை கண்டறிய, உங்கள் மருத்துவர்  மலக்குடலில் பரிசோதனைகளை மேற்கொள்வார்.

Colorectal Cancer

ஹீமோகுளோபின், இரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை (இரத்த இழப்பு காரணமாக குறையலாம்), மற்ற உயிரணுக்களின் எண்ணிக்கை போன்றவற்றை சரி பார்க்க இரத்த பரிசோதனைகள்,  கல்லீரல் சோதனைகள் மற்றும் சிறுநீரக சோதனைகள் ஆகியவற்றை அவர்/அவள் மேற்கொள்ள நேரிடும்.

ஒருவேளை மீண்டும் மீண்டும் இந்நிலைமை நீடித்திருந்தால், இரத்தத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜெனின் அளவுகளைக் கண்டுபிடிக்க சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெருங்கடல் புற்றுநோய்க்கான கோலனோஸ்கோபி எனும் ஸ்க்ரீனிங் சோதனை சிறு சிறு கட்டிகள் இருக்கிறதா என்பதை கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது.

சில நேரங்களில் மார்பு எக்ஸ்-கதிர்கள் சோதனை, அல்ட்ராசோனோகிராபி/புறவொலி வரைவியல் மற்றும் சி.டி. ஸ்கேன் போன்றவைகள்  புற்றுநோய் மற்ற உறுப்புகளையும் பாதித்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க செய்யப்படுகின்றன.

அறுவை சிகிச்சையே இதற்கான முதன்மை சிகிச்சை தேர்வாகும். சிகிச்சையளிப்பதற்காக வேதிமுறை நோய் நீக்கம்  சார்ந்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. கதிரியக்க சிகிச்சை குறிப்பிட்ட சில நிலைமைகள் தவிர, பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை. புற்றுநோயின் மேம்பட்ட நிலைகளில் நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

Read More:

What are the main reasons rickets disease

What is rickets? என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்)