How to know symptoms of facial swelling?

What are the symptoms of facial swelling?
What are the symptoms of facial swelling?
Spread the love
Listen to this article

What is facial swelling? முக வீக்கம் என்றால் என்ன? Facial swelling is a symptom that can be caused by many diseases and their conditions. The face looks swollen and puffy. Acne can occur as an allergic reaction to any insect bite or chronic kidney disease such as gonorrhea.

முக வீக்கம் என்பது பல நோய்கள் மற்றும் அவற்றின் நிலைமைகள் காரணமாக ஏற்படக்கூடிய அறிகுறியாகும். முகம் வீங்கி மற்றும் புடைத்தும் காணப்படும். ஏதேனும் ஒரு பூச்சி கடியினாலோ அல்லது முடிச்சச்சிறுநீரகவழற்சி போன்ற நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையின் எதிர்வினையாக முகவீக்கம் ஏற்படும்.

  • முகவீக்கத்திற்கான சில பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளாவன:

தொடர் நமைச்சல்.

முகத்தில் தொடர் இறுக்கம்.

முகம் வீங்கி சிவந்து காணப்படுதல்.

கண்களை மூடவும் திறக்கவும் சிரமமாக இருத்தல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

முக வீக்கத்திற்கான சில பொதுவான காரணங்கள்:

ஒவ்வாமை வெண்படலம்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக புரதச்சத்து காரணமாக ஏற்படும் முன்சூல் வலிப்பு.

உடலில் உள்ள வெட்டுக்கள் மற்றும் திறந்த புண்களின் வழியாக பாக்டீரியா அல்லது புஞ்சைகள் உள்ளே நுழைவதினால் ஏற்படும் செல்லுலீடிஸ்.

சில மருந்துகள் மற்றும் மாத்திரைகளினால் ஏற்படும் ஒவ்வாமை.

படை நோய் (ஹைவ்ஸ்).

உணவினால் ஏற்பாடு ஒவ்வாமை.

உடைந்த மூக்கு, அதவாது மூக்கில் உள்ள எலும்பு அல்லது குருத்தெலும்பு உடைவதினால், முகத்தில் ஏற்படும் வீக்கம்.

கண்ணிமையில் ஏற்படும் கண்கட்டி.

புரதக்குறைபாடு காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு.

சிறுநீரக நோயினால் ஏற்படும் புரத குறைபாடு.

அறுவை சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

ஹைப்போதைராய்டிசம்.

facial swelling
  • இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

முக வீக்கத்தை சுலபமாக கண்டறியலாம். எனினும், முக வீக்கத்திற்கான காரணத்தை மருவரிடம் சென்று அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

துல்லியமான நோய் கண்டறிதலுக்காக, மருத்துவர் உடல் பரிசோதனைகளை மேற்கொள்வார். பெரும்பாலும், ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக ஏற்படுகிறது. வீக்கத்தின் தீவிரத்தை பொறுத்து, மருத்துவர் ஒவ்வாமை எதிர்வினையை உறுதிசெய்ய ஒவ்வாமை பரிசோதனைகளை பரிந்துரைப்பார்.

எனவே, மருத்துவர் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் சில பொருட்களை தவிர்க்க கூறுவார். ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்க்க ஒரு பயனுள்ள பயிற்சி வேண்டும். தானியங்கள் மற்றும் பொடி உணவுகளை அதிகம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

நோய் ஏற்பட்ட காரணங்களை பொறுத்து, ஆண்டிபயாடிக், நீர்பெருக்கிகள் அல்லது அதிக புரதசத்துடைய உணவுமுறைகள் அறிவுறுத்தபடலாம்.

Read More:

Some tips to have a healthy delivery

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்

கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *